பக்கங்கள்

வெள்ளி 09 2012

அண்டா சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

பானையில் வெந்தாலும்,அணடா,குண்டாவில் வெந்தாலும் அரிசி வெந்தததை பார்க்க ஒரு சோறுதான் பதம். அந்தவிதிப்படியே தமிழகத்தை ஆளும் ஆத்தா ரங்கநாயகியின் மகத்தான மூன்றாவது இருண்டகால ஆட்சியின் பதம்.....

ஆத்தா இரு முறை தமிழகத்தை ஆண்ட போது இருண்காலத்துக்கு அழைத்து சென்றதற்க்கான பரிசாக 42 லஞ்ச ஊழல்- அதிகார முறைகேடு வழக்குகளை பெற்றார். அந்த வழக்குகளை தன் அதி நவீன யுக்தியால் சமாளித்து பதிணைந்து ஆண்டுகளாக மாபெரும் நீதிதுறைக்கே தண்ணீர் காட்டி,அந்த மாபெரும் நீதி
துறையே ஆத்தா காட்டிய தண்ணீயை மோண்டு குடித்தும் இன்னும் தாகம் அடங்காமல் தவிக்கவிடும் ஆத்தாவின் மகிமையே மகிமை....


இதோடு நின்றுவிடாமல்தன் அரசவை அடிமை அமைச்சர்களான.
ஓஓஓஒ..பன்னீர் செல்வம்,செங்கோட்டையன் இவர்களைக்கொண்டு காமாட்சிகோயில்தேவநாதன் புகழ் காஞ்சிபுரத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் “சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுபட சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. ஆத்தா வழக்கிலிருந்து விடுபட்டால், அதற்கு பரிகாரமாக கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்க. கோரிக்கை அமைச்சர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 மூன்றாவது முறையாக தன் இருண்டகால ஆட்சியில் ஓட்டு போட்டு ஏமாறுவதையே பொழப்பாக கொண்ட மக்களை இன்னும் எப்படி ஏமாற்றலாம் என்பதை தன்னுடைய போலிசு படையின் உளவுத்துறையைமுடுக்கிவிடாமல்
வழக்கறுத்தீஸ்வரனிடம் வேண்டிய செங்கோட்டையனுக்கும்.செங்கோட்டை
உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் கள்ள உறவு இருப்பதாக செங்கோட்டையனின் மகன் ஆத்தாவிடம் பத்த வைக்க....ஆத்தா தன் உளவு படையை ஏவி ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டி வைத்து ஆறுமுகத்தை கைது செய்தது.

ஆத்தாவின் பொற்பாத ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழும் கார்ப்பரேட் மாக்கள் போல் ஆத்தாவும் ஆத்தாவின் பாதங்களும் பெரு வாழ்வு வாழ்வதே! அண்டாச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உள்ளது.

ஞாயிறு 04 2012

தலைக்கவசம் வாங்கலையோ.........தலைக்கவசம்....?

வாங்க சார்,வாங்கசார்.
தலைக்கவசம் மாட்டலைன்னா
அபதாரம் உண்டு சார்......
முதல்வாட்டி அய்ந்து நுாறு
அடுத்தவாட்டி பத்து நுாறு

என்னதான் யோசிச்சாலும்
தலைக்கவசம் வாங்காமல்
அபதாரம் கட்டாமல்
அவதாரம் முடியாது சார்

நடுரோட்டிலும் நடு காட்டிலும்
வழிமறிப்பார்கள்....................
இல்லையென்றலலும் எதுவும்
நடக்காது சார்.......................

தலைக்கவசம் உங்களுக்கு
விற்பனை கலெக்சன் கம்பெனிக்கு
அபதாரம் காவலர்களுக்கு

பயணச்சீட்டும் ஏறிப்போச்சு
பெட்ரோல் விலையும் ஏறப்போகுது
விலை ஏறுவதற்குள் வாங்கு சார்
தலைக்கவசம்..................??????????
----------------------------------------------------------

பாண்டி நாட்டில் தலைக்கவசம்
வாங்கியவர்களுக்கு ஓர் நற்செய்தி

தவலைக்கவசம் திருடப்பட்டால்
வாங்கிய பில்லுடன் புகார்
கொடுத்தால்,தலைக்கவசம்
கண்டுபிடித்து தரப்படும்.
திருடியவர்கள் அடுத்து திருட
முடியாதவாறு போட்டத்
தள்ளப்படும







ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...