பக்கங்கள்

சனி 20 2013

கொள்ளைக்காரர்களை பயமுறுத்த பூச்சாணடி வேஷம் காட்டும் வருமான வரித்துறை



இந்திய நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் பலர் வருமானவரி கட்டாமல் இருப்பதும்,அவர்களை வரி கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்புவதும்,  அந்த நோட்டீஸை கொள்ளைக்காரர்கள் குண்டி துடைக்க பயன்படுத்துவதும் ஆண்டு தோறும் செய்துவரும் வேலைகளில் வருமானவரித்துறைக்கு ஒரு வேலையாக இருந்து வந்துள்ளது. இந்த வேலையில்  சலிப்படைந்துள்ள வருமானவரித்துறை.

பல்வேறு துறைகளில் உள்ள கொள்ளையர்கள் வருமானவரி கட்டாமல் இருப்பதும், கட்டாமல் இருக்க பலப்பல புதிய உத்திகளை கையாண்டு வருமானத்தைக் குறைத்து காட்டுவதும் அதற்கு தோதாக ஆளுங்கட்சியும் ஆளாத கட்சியும் கொள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசுவதும் இதுவும் தொடர்கதையாகவே தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையை நீடிக்க விரும்பாத வருமானவரித்துறை. வருமானவரி கட்டாதவர்களை, பயமுறுத்துவதற்க்காக ஒரு பூச்சாண்டி வேஷத்தை காட்ட முடிவு எடுத்துள்ளது. வருமாணவரி கட்டாதவர்களின் விபரங்களை முதலில் வருமானவரித்துறையின் இணையதளத்திலும், அதன்பின் காவல்துறை,சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரனை அமைப்புகளிடமும் தேடுதல் வேட்டை பட்டியலிலும், வெளியிட்டு இறுதியாக நாளேடுகளில் வெளியிடப்படும் என்று முடிவு எடுத்துள்ளது.

2012-13-ன் நிதியாண்டில் வருமானவரியாக 41.115 கோடி கிடைக்கும் என்று வாய்பொளந்து  காத்திருந்த எதிர்பார்ப்பில் மண்விழுந்து 13.423 கோடிதான் வசூலானதால் புதிய பூச்சாண்டி வேஷம் காட்டுவதின் காரணமாகும்.

வாய்யா...வா.... வந்து அள்ளிட்டுப்போ.......... வாங்க சார்......வாங்க... வந்து அள்ளிட்டு போங்க சார்......... எதித்து கேட்டா ஒருபயலும் இருக்க மாட்டானுக, போலீசும்,இராணுவமும் தீனி போட்டு வளத்து வச்சுருக்கோம். எங்களுக்கு ஒங்க கையில கண்டத கொடுத்துங்க போங்கன்னு................

உள்ளுர் கொள்ளைக்காரனுக்கும்,பன்னாட்டு கொள்ளைக்காரனுக்கும் வரியைக் குறைத்து ஏகப்பட்ட சலுகைகளையும் அளித்துவிட்டு வருமானவரியை எதிர்ப்பது என்ன எழவோ........

அண்டாக்கசம் அபுக்காகசம்  போன்ற எல்லாத்தையும் பார்த்த கொள்ளைக்காரர்கள் வருமானவரித்துறை காட்டும் பூச்சாண்டி வேஷத்துக்காக பயந்துவிடப்போகிறார்கள்.


,

வியாழன் 18 2013

தனியாக கத்தினால் கழுதை!!! சேர்ந்து கத்தினால் சங்கீதம்!!!


 இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று புறுச்சி தலவிக்காக 2009ல் சீமான் பேசினார். இப்போ இலை மலர்ந்து காய்த்து கனியாக தொங்குகிறது. ஈழம் எங்கே? 
ஜெயலலிதாவை வழியில் பார்த்த வைகோ,“ அந்த அம்மா நேர்மையாக போராடுறாங்கஎன்கிறார். அந்த அம்மா நேர்மையாக என்ன போராடினாங்க ? என்ன கிடைத்திருக்கிறது ஈழத் தமிழ் மக்களுக்கு??

இதையெல்லாம் பார்த்த கருணாநிதியும் “நம்ம மட்டும் எதுக்கு சும்மா இருக்கனும்னு டெசோவை ஆரம்பித்து இருக்கிறார்.மகன் ஸ்டாலினை கூப்பிட்டு,அமெரிக்காவில் மனு கொடு,ஜப்பானில் மனுகொடு என்று சொல்லிவிட்டு ஒரு வேலை நிறுத்தம் நடத்தி அவரும் களத்தில் இறங்கிவிட்டார்.

2009 தேர்தலில் திருமா திமுகாவோடு போய்விட்டார் “இனத்துரோகிஎன்று மற்றவர்கள் சொன்னால். நீங்கள் ஜெயல்லிதாவோடு போயீட்டிங்க, நீங்தான் “இனத்துரோகிதிருப்பி சொல்கிறார்.

இப்படி ஒவ்வொருவரைப்பற்றியும் சொல்வதற்கு அவர்களே ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.


 மேற்க்கண்ட வெளியீட்லிருந்து


புதன் 17 2013

மரியாதை தெரியாத புண்ணாக்குக்கு முதல் மரியாதையாம்...!!!


என் இனிய தமிழ் வலைத்தள மக்களே!!
கிராமத்தின் தெருக்களையே சுத்தி சுத்தி வந்த இந்த பாரதிராஜா,சென்னை பட்டணத்து தெருக்களையும் பலமுறை சுத்தி சுத்தி வந்ததினால் இயக்குநரான இந்த பாரதிராஜா,கிராமத்தின் நிகழ்வுகளை ஒரு பக்க சார்பாக படம்பிடித்து தமிழ்நாட்டு தியேட்டர்களில் ஓடவிட்டு காசு பார்த்த இந்த பாரதிராஜா, காலவேகத்தில் சொந்தமாக படம்பிடித்தும் போணியாகமல் ஓய்வெடுத்த இந்த பாரதிராஜா,

 திடீரென்று கஞைரின் சின்னத்திரையில் முகம்பதிக்க எத்தணித்து காணாமல் போன இந்த பாரதிராஜா ..

நீண்ட இடைவெளிக்குப்பின் கைக்காசைப்போட்டு“ அன்னக்கொடியும் மின்னல் இடையும்என்ற படத்தை எடுத்துஇயக்கிய இந்த பாரதிராஜா,“அன்னக்கொடியும் மின்னல்இடையும்படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழாவை படம்பிடித்து,அதை விஜய் டாக்ஸின் சின்னத்திரையில் “ மரியாதை தந்த இமயத்துக்கு முதல் மரியாதைஎன்று வெளியிட்டு காசு பார்த்த  இந்த பாரதிராஜா,

“அன்னக்கொடியும் மின்னல் இடையும்படத்தில் நடித்த இளஞ்சிட்டு நடிகையை அவள் நன்றாக நடித்திருக்கிறாள் என்று விளித்தும்( இந்த நடிகையின் அம்மாவை இவர்தான் முதன்முதலாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தினராம்)

இசையமைத்த இளம் இசையமைப்பாளரை “அவன் நன்றாக இசையமைத்துள்ளான்என்றும் விளித்தும்,அவள்,அவன் என்று மரியாதைக்குறைவாக பேட்டி அளித்த இந்த மரியாதை தெரியாத புண்ணாக்குக்கா முதல் மரியாதை!!!!!!!!.

மதுரையில் நடந்தாக கூறப்படும் திருவிளையாடல் பட புராண புரட்டில்கூட,

“ இந்தப் புலவன் கொண்டுவந்த பாட்டில் குற்றம் சொன்னவன் எவன் அவன்? என்று சிவன் கேட்க..,

சிவனின் பக்தரான நக்கீரன்,“ அவன் இவன், என்று ஏக வசனம் வேண்டாம். அவை அடக்கத்துடன் கேட்டால், பதில் சொல்லப்படும்“ என்பார்.

கோபத்துடன் வந்த சிவனுக்கே ,பக்தனால் அந்த எதிர்ப்பு .....இருந்தது.

அப்பேர்பட்ட மாமதுரையில் இசை வெளியீட்டு விழாவில், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் மரியாதைக்காட்டி பேசத்தெரியாத இந்த இமயத்துக்கா முதல் மரியாதை.???

வயதாகி கிழடு தட்டிவிட்டதினால் ,அவள்,இவன் என்று பேசி விட்டாரென்று ஒதுக்கி தள்ளிவிடமுடியுமா,?ஃ? இயக்குநர் இமயமாச்சே...!!!!

இந்த இமய புண்ணாக்குக்கு அவரது ஒடம்பில் ஓடுவது, மண்ணோடு கலந்த ஆதிக்கச்சாதிவெறி இரத்தம். அந்த ஆதிக்க சாதிவெறியின் இரத்த்ததின் வடிவம்தான். தனக்கு கீழ் உள்ளவர்களை, “அவள்,அவன் என்று ஏக வசனத்தில் கூறுவது. புரட்டிப் பாருங்கள் ஒருமுறை, ஆதிக்கசாதிவெறியின் வரலாற்றை

செவ்வாய் 16 2013

பன்றிகளின் கூச்சல் கூக்குரலினால் சலனமற்றுப்போன மரங்கள்..... உருவகக் கதை..



மனிதர்களை தவிர்த்து மற்ற எல்லா விதமான விஷஜந்துகள் நிறைந்த காடு அது. அந்தக் காட்டிலே. சிறிய உருவமான கொசுவிலிருந்து பெரிய உருவமான யானை வரை அதிகாரம் செய்வதில் பஞ்சமே இருந்ததில்லை.

தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அந்தக் காட்டில் ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. அந்த காடு தோன்றியதிலிருந்து அமைதியாக இருந்ததாக வரலாறே கிடையாது.

அப்பேர்பட்ட பெருமையுடைத்த கூச்சலும் கூக்குரலும் குழப்பமும் உள்ள அந்தக் காட்டில் வாழும் பன்றிகூட்டத்திலுள்ள ஒரு பன்னிக்கு கல்யாண ஆசை ஊற்றேடுக்க.. அந்தப் பன்னிக்கு ஏற்ற ஜோடி பார்க்கப்பட்டது.

பன்னியின் கல்யாண நாளைப் பற்றி கூச்சலிட்ட பன்னிகள்,தீடிரென்று வேறு ஒரு பிரச்சனையில் கூச்சலிட்டன.

அந்தக் கூச்சலுக்கு காரணகர்த்தாவான பன்னியின் கூட்டாளி குள்ள நரி ஒனறு.  கல்யாணத்துக்கு முந்தி பன்னியின் ஜோடி முகத்தை ஒருவாட்டி பார்த்த பிறகுதான். நான் மாப்பிள்ளை பன்னிக்குதோழனாக இருப்பேன்.னு சொல்லிச்சு.......

உடனே, பன்னியின் குடும்ப தலைவராக இருக்கும் இன்னொரு பன்னி கூக்குரலும்,கூச்சலுமாய் இருந்த நேரத்திலும் புதிய ஜோடி பன்னியை காட்டும் முடிவை காட்டிலுள்ள ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்று அறிவித்தது.

பன்றியின் கூட்டாளி குள்ளநரியும்,மற்றும் காட்டிலுள்ள மற்ற விஷஜந்துகளும் தனித்தனியாக கூட்டம் அமைத்து கூச்சலும் கூக்குரலும் குழப்பமாய் ஓலமிட்டன. காடும்,காட்டிலுள்ள மரங்களும் இந்த பன்னிமற்றும் விஷஜந்துகளின் கூச்சல் குழப்பங்களை கண்டு அசராமல் எனக்கென்ன என்று சலனமற்று இருந்தன.

நகைச்சுவை,அரசியல்,சமூகம்,அனுபவம்,சிறுகதை,பொது,செய்திகள்,உருவகக்கதை,

திங்கள் 15 2013

பெண்களின் அழகை ரசிக்கும் கிழட்டு அமைச்சர்..........


உத்தர பிரதேசத்தில் கதர்துறை அமைச்சராக இருப்பவர். ராஜா பாண்டே இவர் அழகிய பெண்களை ரசிப்பதிலும். வர்ணிப்பதிலும் பிரியமானவர்.

கள்ளத்தனமாக ரசிக்கும் கேடி,கில்லாடி அமைச்சர்களைப்போல் அல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பகிங்கரமாக அழகிகளின் அழகை ரசித்து வர்ணித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் சினிமா அழகிகளான.இப்போது கிழவிகளான ஹேமாமாலினி,மாதூரி தீட்சித் நடிகைகளின் அழகை பழைய நிணைப்பில் ரசித்து வர்ணித்துள்ளார்.

சினிமா நடிகையை மட்டும் அல்லாமல் அரசு உயர் பதவிகளிலுள்ள பெண் ஆட்சியர்களின் அழகையும் வர்ணித்துள்ளார். காசும் பதவியும் கிடைத்த கொழுப்பால் மிதமிஞ்சி வயதானலும் தன் சபலபுத்தியை நாசூக்காக வெளிப்படுத்தி வந்துள்ளார். மானமிகு அமைச்சர்.

       

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...