பக்கங்கள்

வெள்ளி 11 2017

பாரத் மாதாகி ஜே!!! என்றால் ...............

அது பாரத பண்பாடும் கலாச்சாரமு் கொண்டது.அந்தப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்  பற்றி படித்து விடுங்கள்...!!!

ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒருக் கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.. அதற்கு அந்த காதலர்கள் தங்கள் ஜாதியினை சொல்கிறார்கள் .

உடனே அந்தக் கும்பல் அந்த காதலர்களின் உடைகளை முழுமையாக களைகிறார்கள்.. காலணிகளையும் கழட்டச் சொல்கிறார்கள்.. அவர்கள் இருவரும் முழு நிர்வாணம் ஆகிறார்கள்.. சுட்டெரித்து கொளுத்தும் வெயில்!!!

பிறகு நிர்வாணமான இருவரையும் அந்தக் கும்பல் கம்பு மற்றும் தடியால் பலமாக தாக்குகிறார்கள்.. கூட்டத்தில் சிலர் தாரை, தப்பட்டை அடித்து உற்சாகம் அளிக்கிறார்கள்,, கோஷம் எழுப்புகிறார்கள்..

பிறகு,

காதலனை அந்த முழு நிர்வாணப் பெண்ணை துக்கி தோளில் வைத்து நடக்கச் சொல்கிறார்கள், அவனும் நடக்கிறான், ஒரு கும்பலுக்கு நடுவே தன் முழு நிர்வாண காதலியை சுமந்து தானும் நிர்வாணமாய் கொளுத்தும் வெயிலில் நடக்கும் அவனை அந்த கும்பல் கம்புகளால் கோஷம் எழுப்பியபடி தாக்குகிறார்கள்..

அவள் அவமானம் மற்றும் வலியால் கதறுகிறாள்.. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் அவனை சுமக்க சொல்கிறார்கள்.. அவளும் தன்னுடைய முழு நிர்வாண காதலனை தனது தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறாள்.. அப்போது அந்தக் கும்பல் அவளுடைய முழு நிர்வாண உடலில் தாக்குகிறார்கள்..

பாவம் அவள் பெண் என்ன செய்வாள்!!!  சிறிது தூரம் தூக்கி சென்று பின்பு சுருண்டு விழுந்துவிட்டாள்.. கீழே விழுந்த அவர்களை அந்த கும்பல் மீண்டும் கொடூரமாக தாக்குகிறது.. தாரை, தப்பட்டை அடிக்கிறார்கள், கோஷம் எழுப்பி ஆனந்தம் கொள்கிறார்கள்..

இந்த முழு சம்பவத்தையும் அதே கூட்டத்தில் இருந்த சிலர் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு விட்டனர்!!!
தன் காதலியை சுமந்த அவனை அவனுடைய ஆணுறுப்பில் கம்பினை வைத்து தாக்கினார்கள்,, அவளையும் விடவில்லை, அவளது பெண்ணுறுப்பிலும் தாக்கினார்கள்..

வீடியோவை முழுவதும் பார்த்தேன். கண்ணீருடன் கலந்த அளவுக்கதிகமான கோபம்.. வீடியோவையே பதிவிடலாம் என்றே நினைத்தேன்.. ஆனால் ஏனோ மனம் ஏற்கவில்லை, நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்று!!!

அவளுடைய தற்போதைட மன நிலை எப்படி இருக்கும், உயிரோடு இருக்கிறாளா அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டாளா என்று தெரியவில்லை..

காரணம் அப்படியொரு கொடுமையான சம்பவம் அது..

நிச்சயம் இப்படியொரு மனசாட்சியில்லா கொடூரத்தை நிகழ்த்திய அக்கும்பல் மனித ஜென்மங்களாக இருக்க முடியுமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

சம்பவம் நடந்த இடம்:- 

BharatiyaJanataParty (BJP) கட்சியின் MYogiAdityanath ஆளும் உபி யில்...
அவர்கள் தாக்கபட்ட காரணம்:- தலித்..
அந்த கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!

பாரத பண்பாடு & கலாச்சாரம் என்ற மயிறு இதுதான்.....

வியாழன் 10 2017

தமிழகத்தின் மர்ம தேசங்கள்...!!!

எட்டு மத்திய சிறைகள்
ஒரு இளையோர் சிறை
மூன்று பெண்கள் சிறப்பு சிறைகள்
மூன்று திறந்த வெளி சிறைகள்
ஒன்பது மாவட்ட சிறைகள்
என்பத்தி ஏழு ஆண்கள் கிளைச் சிறைகள்
எட்டு பெண்கள் கிளைச் சிறைகள்
பதிணோருசீர்திருத்தப்பள்ளி சிறைகள்
பத்து பண்ணை சிறைகள்
இத்தனை சிறைகள் தமிழகத்தில்
எந்த தமிழர்களை காக்கா...!!!!!

புதன் 09 2017

மூதேவி பெற்றெடுத்த நானூறு கொள்ளையர்கள்

அந்தக் காட்டை
ஆட்சி செய்த
கோமாளி ஒரு
கட்டத்தில் பேச
முடியாத ஊமையாகி
செத்த போன
பிறகு கோமாளியின்
அந்தப்புர நாயகிகளில்
இருவரில் முதலில்
வந்தவர் அந்தக்
காட்டின் ஆட்சி
கட்டிலில் அமர்ந்த
சில நாளில்
கோமாளியின் இரண்டாவது
அந்தப்புர நாயகி
ஆன மூதேவி
முதல் நாயகியின்
கட்டிலை கவிழ்த்து
தானே கோமாளியின்
உண்மை நாயகி
என்று அறிவித்து
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து நாட்டின்
குடி மக்களை
குடிகார மாக்களாக
ஆக்கியதோடு தன்
பங்கிற்காக நானூறு
கொள்ளையர்களை பெற்று
திடிரென்று செத்து
போனது இன்று
அந்தக் காட்டை
நானூறு கொள்ளையர்களும்
நானூறு பிரிவாக
பிரிந்து வட்டம்
குட்டம் என
ஆட்சி செய்து
கொண்டு இருக்கிறார்கள்.
செருப்பு  ஆண்டு
பின் கோமாளி
வந்து அடுத்து
மூதேவி போன்றவை
ஆண்ட போது
பெருமையாக பூரித்து
புளகாங்கிதம் அடைந்து
 கொண்ட அந்தக்
காட்டில் வாழும்
காட்டுவாசிகள்
பெரும்பானோர்  நானூறு
கொள்ளையர்கள் ஆள்வதையும்
கண்டும் கேட்டும்
மௌனமாக ரசித்துக்
கொண்டு இருக்கிறார்கள்





செவ்வாய் 08 2017

இந்துத்துவாக்குக்கு பயப்படும் கம்பெனி...

அனைத்து வகையான
முதலாளிகள் நடத்தும்
தொலைக் காட்சிகளில்
விளம்பரமாக வரும்
எங்கள் கம்பெனி
சானிட்டரி நாப்கினை
பயன் படுத்தினால்
மாதவிடாய் காலத்தில்
பெண்கள் ஆடலாம்,
ஓடலாம் குதிக்கலாம்,
உயரம் தாண்டலாம்
என்று விளம்பரம்
செய்யும்  கம்பெனி


நாப்கீன் சுத்தத்தை
தருவதால் பெண்கள்
கோயிலுக்கு போகலாம்
சுப மங்கள காரியங்களில்
ஈடுபடலாம் என்று
விளம்பரம் செய்வதில்லை

ஏனென்றால்... அந்த
கம்பெனி இந்துத்துவாக்குக்கு
பயப்படும் கம்பெனி

ஞாயிறு 06 2017

அந்த இரகசியம் தான் என்ன...??

அந்தக் காவல்
நிலையத்தில் உள்ள
ஆண் காவலர்கள்
இரண்டு மூன்று
தடவை சிறு நீர்
கழிக்கச் சென்றார்கள்

பிடித்து வரப்பட்ட
குற்றவாளிகளில் சிலரும்
ஓரிரு தடவை
சிறுநீர் கழிக்கச்
சென்று வந்தார்கள்..

அந்தோ..அந்த
பெண் காவலர்கள்
யாரும் சிறுநீர்
கழிக்கச் செல்லவே
இல்லையே எப்படி
அவர்களால் தாக்கு
பிடிக்க முடிகிறது
அந்த இரகசியம்
தான் என்ன.......
பொய்ப் புகாரில்
குற்றவாளியாக உட்கார
வைக்கப்பட்டவனின் சந்தேகக்
கேள்வி இது...


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...