சனி 12 2019
வியாழன் 10 2019
நினைவலைகள்-45.
பார்த்ததில் கேட்டதில் ரெம்ப பிடித்தது.
பாடல் வரிக்கேற்ற படமும் அருமை..
நடந்த-நடக்கின்ற- நிகழப்போகிற சம்பவங்களை படம்பிடித்து காட்டும் பாடல்
பாடல் வரிக்கேற்ற படமும் அருமை..
நடந்த-நடக்கின்ற- நிகழப்போகிற சம்பவங்களை படம்பிடித்து காட்டும் பாடல்
நன்றி ! வினவு
செவ்வாய் 08 2019
ஞாயிறு 06 2019
நினைவலைகள்-42.
ராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுபவர்கள்..........


ராஜராஜன் 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு தேவரடியார்களாக மாற்றினான். இப் பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாக பிணைக்கப்பட்டனர். இறைவன் பெயரால் விபச்சாரத்தை புனிதமாக்கி தஞ்சையில் தனிச் சேரியை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள். அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசாரிகள், பெரும்நிலவுடமையாளர்களின் காம வெறிக்கு பலி கொடுக்கப்பட்ட தேவரடியார் குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகால கொடுமையை 1929-ல் சுயமரியாதை இயக்கமும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தனர்.
தமிழ்மறை மீட்டான் என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன். தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால் தருவோம் என தில்லை தீட்சிர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கிய சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்கு தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச் சேரிப் பெண்டீர் மீது சூடு போட்ட வீரத்தை தீட்சிதரிடம் காட்டவில்லை.
தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ாஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்தான் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும்,பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால் ,சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதில்லை.. காவிகளுடன் சேர்ந்து இவர்களும் ராஜராஜனை கட்டி அழுகிறார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...

