பக்கங்கள்

சனி 09 2016

அமாவசை .... நம்பிக்கை.....


படம் -அமாவசை



என்னா மச்சான்..... ஒஙக வீட்டில...இன்னிக்கு என்னா விசேசம்......

“ அது ஒன்னுமில்லடா..இன்னிக்கு அமாவசையா....கறி எடுத்து சாப்பிட்டால் வருசம் முழுவதும் கறி எடுத்து சாப்பிட வழி பொறக்குமுன்னு   நம்ம்வூரு பெரிசுசொல்லிச்சா....... அதான் இன்னிக்கு கறிக் கொழம்புடா...மச்சான்....


“ அப்படியா......மச்சான்.....அப்போ...இன்னிக்கு உங்க வீட்டில  நான் சாப்பிட்டால்.. வருசம் முழுக்க..எனக்கு கறி சோறு கிடைக்குமுல மச்சான்...


ஆமாடா...மச்சான்..... ஆனா...எங்க வீட்டில   உனக்கு கறி சோறு போட மாட்டாடா மாச்சான்.......”

“ஏண்டா...மச்சான்.....

வருசம் பூரா ஒன்க்கு ஓசியில சோறு போடனும்னு நிலமை வந்திருமுனு எம் பொண்ணடாட்டி போட மாட்டாடா..... மச்சான்.....

“ஒங்கள மாதிரியே  எல்லாரும் ...அமாவாசை நம்பிக்கை படி நடந்தால் என்னடா மச்சான் ஆகும்........


நம்ம  நாடு  சூப்பார  செவ்வா கிரக உயரத்துக்கு வளர்ந்திடும்டா மச்சான்....

“ எப்படிடா.....”

லஞ்சம் வாங்கிறவன்  இந்த அமாவசையிலே வாங்கினால் வருசம் பூரா லஞ்சப் பணம் கொட்டோன்னு கொட்டு மடா......திருட்டு பயல்க...இநத அமாவசையிலே திருடுனா..... ஒரு பயலும் கண்டுபிடிக்க முடியாதுடா....!!!! வருச முழுவது் அவன் திருடிகிட்டே இருக்கலாம்டா......இப்படி ஒவ்வொருத்தனும் அவனவனுக்கு தெரிந்த  அயோக்கிய தனங்களை இந்த அமாவசையிலே செய்தால் வாழையடி வாழையாக  அவிங்க குடும்பம் புகழின் உச்சிக்கே போயிடும்டா   மச்சான்....

“ அப்படினாக்கா........டாஸ்மாக்ல..ஓசியில வாங்கிக் குடிச்சா........

” அவிங்க...ஓசியில தரமாட்டாங்கல்ல.......100ரூபாய்க்கு விக்கிர சரக்க  150 ரூபாக்கு அவிங்க விபப்பாங்கல்ல......மச்சான்...


“ அப்போ...அமாவசை ...நல்லவிங்களுக்கு  இல்ல.....அப்படித்தானே மச்சான்..

“ புரிஞ்சிகிட்டா..... சரிதான் மச்சான்.......

வியாழன் 07 2016

கன்னடத்து பைங்கிழங்கள் ஆடிய கபடி ஆட்டம்..

வாடியம்மா வாடியும்..... 
நாந்தாண்டி காத்தியும் தமிழகத்தில் நடந்த கபடி போட்டியில்
வென்றது யாருன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்..











புதன் 06 2016

“காதல்” கைகூட............

priyamani1
படம்-தங்க மோகம்
“அண்ணே... நான்   ஒன்னு கேட்டா...தப்பா நிணச்சுகிற மாட்டீங்களே”...!!

“ கேட்பதை.. சொன்னாதானே  தப்பா...நிணைக்கிறதா..? இல்லையான்னு ? முடிவு செய்யனும்...”

“அது வந்துண்ணே....”

“ அதான் வந்திட்டேல...சொல்லு”.......

“ அது  வந்து..”...

“ என்னடா...வந்து...போயின்னு,   பயப்படாமா சொல்லுடா...”

“ அண்ணே.....”

“ சொல்லுடா... வெண்ணெ...”

“அண்ணே,   நான் ஒரு  பொண்ண  சின்சியரா லவ் பண்றேண்ணே.... அந்தப் பொண்ணுகிட்ட  என்காதல எப்படிண்ணே  சொல்றது...”

“ அடப்பாவி, இத என்கிட்ட கேட்கச் சொன்னவன் எவன்டா,? அவன்...”

“யாருமில்லண்ணே..”

“யாருமில்லையா...!! ஒனக்கு எப்படிடா....? என்னிடம் கேட்கத் யோசன வந்துச்சு...”

“ நீங்க காதல்ல பெயிலர் ஆனவராம்.... ஒங்க காதலி உங்களவிட்டு இறந்துபோனதால்தான்...நீங்க கல்யாணமே முடிக்காம இருக்கீங்கன்னு தெருவுல உள்ள எல்லாரும் பேசிகிட்டாங்கண்ணே......”

“அடப் பாவிகளா....!!! என்னயப்பத்தி இப்படி ஒரு கதை உலாவுதாடா...”

“ ஆமாண்ணே....அதவச்சுதான் உங்களுக்கு காதல் அனுபவம்..இருக்குமுன்னு உங்களிடம் கேட்டேண்ணே.....”

எனக்கு அப்படியான எதுவும் இல்லடா.......   படிக்கும் காலத்தில..வாத்தியாரு சொன்னாரு...நீ எருமை மேய்க்கத்தாண்டா லாயிக்குன்னு...... உண்மை என்னான்னா... எனக்கு எருமை மேய்க்க கூட லாய்க்கு இருந்திருந்தில்லடா...

போங்கண்ணே........ சும்மா பொய்...பொய்யா... சொல்லிகிட்டு.......

உண்மையைச் சொன்னா உலகமே  மறுக்கும்போது...நீ..என்ன ஒத்துகிறவா போற.... சரி ..பார்த்த  சொல்றேன்  கேளு...

“சரி சொல்லுங்க..........

ஒன்னு.....


 “ உங்கள் காதலைத் தெரிவிக்க தங்கத்தைக்
காட்டிலும் வேறேன்ன இருக்கிறது ”

ஆ........ஆ........ஆ....

வாய...பொளக்காதடா......  உண்மைதான்டா....”


அடுத்து.....
“ அருள் இல்லாருக்கு அவ்வுலகமில்லை
 தங்கம் இல்லாருக்கு காதல்  இல்லை..”

“...............”

என்ன ஊமையாகிட்ட.....செயல் படுத்தி பாரு.....தங்கத்தால்தானடா உன் காதல் சக்சஸ் ஆகும் பாரு.....காதல்..சக்சஸ். ஆகிட்டா  குரு காணிக்கை செலுத்த வேண்டும்.. அதை நிணைவில் கொள்ள வேண்டும்.....அப்போதுதான் காதல் கல்யாணத்தில் முடிந்து  நிலைத்து  இருக்கும்.....


செவ்வாய் 05 2016

மீண்டும பணிரெண்டாக இருக்கிறேன் .........


Image result for மர்மக்காய்ச்சல்
படம்-


முடிந்தது  என்று நிணைத்தேன்
முடியவில்லை இன்னும் பாக்கி
இருக்கிறது என்று இயற்கை
விட்டு வைத்து இருக்கிறது.

இருப்பதற்குள் பாக்கியை அடைக்க
முடியாது என்று தெரிந்து இருந்தும்
எதோ ஒரு காரணத்திற்காக..என்
வாழ்நாள் நீட்டிக்கப் பட்டு இருக்கிறது
அந்தக் காரணம் எதுவென்று தெரியவில்லை
பத்தோடு பதினொன்றாக இல்லாமல்
பணிரெண்டாக இருக்கிறேன் என்று
மீண்டும்  அனைவருக்கும் தெரியப் படுத்திக்
கொண்டு தொடருகிறேன். நன்றி!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...