பக்கங்கள்

வெள்ளி 27 2012

நிழல் கதையும் ஒரு நிஜக்கதையும்



நதியை கடப்பதற்காக படகு ஒன்று நதியில் சென்று கொண்டு இருக்கிறது. திடிரென்று ஒரு பெரும் புயல் வீசுகிறது. படகு த்ததளிக்கிறது.

யாரோ ஒருவர் கடவுளுக்கு ரிய நேர்த்திக்கடனை செலுத்தாதால் புயலில்படகு தத்தளிக்கிறது. அதைச்செய்தால் நாமெல்லாம் உயிர் பிழைக்க முடியும் என்றார் படகோட்டி.

படகு நதியில் சென்ற போது துவக்கத்தில். ஒரு பெண் தன் குழந்தையின் சுட்டி தனத்தை அடக்குவதற்காக.தண்ணிரில் துாக்கிபோட்டுவிடுவதாக மிரட்டுகிறாள்.

அந்தப் பெண்,தான் குழுந்ததை மிரட்டுவதற்காக சொன்னதை கேட்ட பிற பயணிகள் தாங்கள் உயிர் பிழைப்பதற்க்காக குழந்தயை தண்ணிரில் வீசச் சொல்கிறார்கள்.

தன் குழந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தி தன்நிலையைக்கூறி பரிதவிக்கிறாள் அந்தத்தாய்.





இப்படித்தான் நிஜ கதையில் படகோட்டி மண்மோகன் மின்சார பற்றாக்குறையை தீர்க்க அனு உலைதான் தீர்வு என்று சொல்ல பயணிகளான
காங்கிரசு.பிஜேபி,மற்றும்அரசும், அரசு அதிகாரிகளும் அனு உலையை நிறுவி திறப்பதற்கு இருக்க,

பரிதவிக்கும் தாயாக கூடங்குளம் அனுஉலையை எதிர்க்கும் மக்கள்.
நிழலையே நம்பி ஏமாந்த மக்கள், நிழலை புறந்தள்ளி நிஜத்தை நம்பும்
 காலம் எல்லாம் அழிந்த பிறகுதான் வருமா????.......

இல்லாத ஒன்றிடம்................!!!

விலைவாசியும் ஏறிப்போச்சு
பஸ்பயணசீட்டும் உயர்ந்து போச்சு
கிடைத்த வேலையும் இல்லாம போச்சு

அநியாயத்தை எதிர்த்து கேட்டவர்களை
விடுவிக்க வக்கலின் பீஸூம் கூடிப்போச்சு
நீதியும் துாரமாய் ஓடிப்போச்சு

வாழவும் வழியில்லை
வளமும் நிலைக்கவில்லை
உயிரைமாய்க்கவும் மனமில்லை
 போராடாவும் வீரமில்லை

கொலை கரார்களின் மனம் மாற
பட்டினியால் வருத்தியும் பயனில்லை

வளமான வாழ்வையும்
மண்டியிடாத வீரத்தையும்
கேட்டு இல்லாத ஒனறிடம்
வேண்டி நிற்கிறோம்.

செவ்வாய் 24 2012

அடி விழுந்ததால் கம்யுனிசத்தை கை கழுவிய முன்னால் திரைப்பட டைரக்டர்.





முதன்முதலாக நடிகை தேவிகாவை அறிமுகப்படித்தியவர்.திரைப்படத்திற்கு கதைவசனம் எழுத பாலசந்தரை இறக்குமதி செய்தவர்.கருரில் வசித்துவந்த நாகேஷ்சை திரைப்படத்துக்கு இழுத்துவந்தவர். சீறிரங்கத்தில் ரங்கநாதனின் மனைவியை வர்ணித்துக் கொண்டு இருந்த வாலியை சினிமாவில் பாட்டெழுதஅழைத்துவந்தவர்.நாற்பதுபடங்களுக்குமேல்இயக்கி,அய்ம்பதுக்கு மேற்ப்பட் புத்தகங்களை கிறுக்கி தள்ளி,82 வயதாகும முன்னால் டைரக்டர்தான் முக்தா என்ற அடைமொழியுடன் கூடிய முக்தா சீனிவாசன் என்பவர்

படிப்பதற்கு பணம் இல்லாமல்,வாழ வழியில்லாமல்,வேலை கிடைக்காமல் ரெம்பவும் கஷ்டப்பட்டராம்.இந்த கஷ்டத்தால் பணக்காரர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டு கம்யுனிசத்தை நோக்கி வந்தாராம்.

அன்றைய நாளில் கம்யுனிசக்கட்சி தடை செய்யப்பட்டதால் இவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டாராம். சேலம் சிறைக் கலவரத்தில் 13 கம்யுனிஸ்டுகள் கொல்லப்பட்டபோது உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருத்தராம்.

நாற்பது படங்களை இயக்கியும் பல படங்களை தயாரித்தும் அன்னதானம்  செய்ய வசதியில்லாததால், அம்பது க்கு மேற்ப்பட்ட புத்தகங்களிலும் இனிஎழுதுகின்ற புத்தகங்களிலும் அறிவுத்தானம் செய்கிறாராம்.

இவரின் சகோதரர் மூலமாக டி.ஆர். சுந்தரத்தின் அடிதாழாமல் இனிமேல் கம்யுனிஸ்டு கடசி நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்று  போலீஸ் ஸ்டேசனில் எழுதி கொடுத்துவிட்டு விடுதலை அடைந்தாராம். கன்னத்தில்  விழுந்த டி்.ஆர். சுந்தரத்தின் அடியோடு கம்யுனிசத்தை கை கழுவினராம்

இவர் முதன்முதலாக இயக்கிய முதலாளி திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு முதலாவதாக கிறுக்கி தள்ளிய புத்தகத்தையும் படித்தவர்களுக்கு முன்னால் டைரக்டரை தெரிந்து இருக்கும.

திங்கள் 23 2012

பா...ர்...ரா.....?(பார்ரா)

“மைனா”அமலாபால் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜாலியான போட்டிகளோடு செமையா கொண்டாடிச்சாம். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்துல “வேட்டை” ஆர்யா தலைமையிலான புஜபல ஆண்கள் அணியை கயிறு திரிக்கும் போட்டியில்.கயிறு இழுக்கும் போட்டியில பிரமாதமாக தோற்கடிச்சு வெற்றியை நிலைநாட்டச்சாம்.

இத பத்தி ஆத்தாவிடம் சொல்லலைன்னா,எதாவது கேஸ்ல என்னைய உள்ளே புடுச்சு போட்ரும்ல.........

ஆத்தா,நீங்க பொங்கலத்தானே கொண்டாடச் சொன்னீங்க,இந்த அமலாபால்லு புத்தாண்டை கொண்டாடுது த்தா!!!!!!

அடுத்த ஆட்சி யாருன்னு தெரியல. மக்கள் வருத்தப்படுறாங்கன்னு டாக்டர் கலைஞர் சொல்லிட்டாரு? எதுக்கும் அவரிடம் சிபாரிசு செய்திட வேண்டியது
தான் நாளபின்னகிக்கு உதவும்ல....??????

உலகத் தமிழர்க்கெல்லாம் ஒரே கலைஞர் அவர்களே, நீங்கள் தோன்றிய பிறகு
நீங்கள் தோற்றுவித்த தமிழ்ப்புத்தாண்டு விழாவினை  கொண்டாடிய தமிழ் பெண் மணி ,. புஜபல ஆண்களை தோற்க்கடித்த வீரப்பெண்மணி அமலாபால்க்கு வீரத்தமிழச்சீ என்ற பட்டத்தை வழங்கி. மகளிர் அணி குஸ்புக்கு துணையாக பதவி வழங்கி தமிழ் இனத்திற்கு பெருமை செர்க்க வேணுமாய் வேண்டப்படுகிறது.

வாழ்க! அமலாபால்...
வாளர்க! வீரத்தமிழச் சீ .....மரபு...?

ஞாயிறு 22 2012

மெய்(வி)ஞ்ஞானமா? அஞ்ஞானமா?...

(1)தினமணி ஞாயிறு கொண்டாட்டத்தில் படித்தது.
*பவ்டக் என்ற பர்மியச்செடி மூன்றுமுறை
தொடர்ந்து புாத்தால் பருவமழை தொடங்குமாம்



*வெதர் கிஸ்சில் என்ற புாஞ்செடியின்
இதழ்கள் மூடினால் மழை வருமென்றும்
திறந்தால் தெளிவான வானிலை என்று
பொருளாம்.
*ஜாவாவில் காணப்படும் ராயல் கொஸ்லிம்
என்ற புாஞ்செடி புாக்க தொடங்கினால்
எரிமலை வெப்பத்தைக் குறிக்குமாம்

(2) எடுப்பான மார்பகங்கள்.
.


*100 சதம் ஆயுர் வேத சிகிச்சை உங்கள் மார்
பங்களை அழகாக,கவர்ச்சியாக,நளினமிக்க
தாக ஆக்குகிறது.


(3)

*காலையில்எலும்பிச்சைஜூஸ் பருகினால்
நேர்த்தியான மெலிந்த உடல்வாகைப் பெற
லாம்---

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...