பக்கங்கள்

வெள்ளி 16 2011

பரமக்குடி சம்பவம்-அரசபயங்கரவாதம்

பரமக்குடி சம்பவமானது போலீஸின் திட்டமிட்டசெயல்
என்பதற்கு உதாரணம்.டி.அய்.ஜி.சந்தீப் மிட்டல் 10.9.11ல்
இரவு 10மணிக்கு கடையை திறக்கச் சொல்லி கிரிகெட்
கெல்மட் வாங்கியுள்ளார்.டி.அய.ஜி பொருப்பில் உள்ளவர்
முனனெச்சரிக்கையுடன் கலவரத்தை எதிர் பார்த்திருக்கிறார்.

சென்னையில் துனை ஆனையர் பொருப்பில்உள்ள செந்
தில் வேலன் அய்.பி.எஸ. பரமக்குடிக்கு அழைக்கப்பட்டு
இருக்கிறார்.இந்த செந்தில் வேலன் போகுமிடமெல்லாம்
உடனடி துப்பாக்கி சூடுதான்.

இது மாதிரித்தான் திட்டமிட்டு மதுரை சிந்தாமணியிலும்
,இளையான்குடியிலும்ப்பாக்கி சூடு நடந்துள்ளது.

எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் ஏழு பேரை
சுட்டுக்கொன்று 100க்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்ப்
படுத்திய போலீசுக்கு சாதாரண சிறு காயங்கள்தான்.
சந்தீபமிட்டலாம் சும்மா ஒப்புக்கு ஆஸ்பத்தியில் படுத்தவர்

இண்டர்போல் போலீசுக்கு இணையானது தமிழக போலீசு
என்று சொல்பவர்களே அது இந்த சாதுர்யம்தான். இப்படி
தமிழக போலீசு மாதிரிதான் இந்தியாவிலுள்ள எல்லா
போலீசும் தலித்துகள்,பழங்குடியினர்.இனவிடுதலை
போராளிகள் மற்றும் அப்பாவிகளையும் ஒதுங்கிச்
செல்லும் நடுத்தர வர்க்கத்தையும் இப்படித்தான் ஒடுக்
கிறது..நாட்டைகாப்பதாக சொல்லிக்கொண்டு
முதலாளிகளை காக்கும் இராணுவமும் இப்படித்தான்

போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஆதிக்கசாதியைச்
சேர்ந்த ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து
கிராம பகுதிகளில் உள்ள தலித் சமுக மக்களை
வேட்டையாடுகின்றனர்.

ஏழு பேரை கொன்றதோடு வெறி அடங்காமல் 144 தடை
உத்தரவு போட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை
கைது செய்ய வேண்டும் என்று இலக்கு போட்டு அடுத்த
வருடம் இம்மானுவேல் விழாவுக்கு யாரும் வரவிடக்கூடாது
என்று நீண்ட கணக்கு போட்டு கிராமம் கிராமாக
வீடு வீடாக போலீஸ் அலைகிறது

இதனால் கிராமங்களில் ஆண்கள் யாருமே இல்லை.
போலீஸீன் ரத்தவெறிக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளனர்
ஓட்டுகடசிகளின் தலித்தலைவர்களோ அடக்கி வாசிக்
கின்றனர்.ரெண்டு மூணு சீட்டுக்காக.

தன்னை பாப்பாத்தி என்று அறிமுகம் செய்து கொண்ட“ஜெ”
ஆட்சிகட்டிலில் மூன்றுமுறை அமர்ந்திருந்த காலங்களில்
போலீசின் அடவாடித்தனமும் அத்துமீறலும் கணக்கில்
அடங்காதவை..இந்த பாப்பாத்திக்கு ஆட்சிகட்டிலில்
அமர்வதற்கு பெரும்பாண்மையாக ஓட்டு போட்டவர்கள்
இந்த தலித்மக்கள்தான்.எம்.ஜியார் என்ற பித்தம் பெரும்
பாண்மை தலித் மக்களுக்கு இன்னமும் கலையவில்லை.

தலித் அமைச்சர் இருந்த விமானத்தில் ஏற மறுத்தவர்தான்
சாதி வெறிபிடித்த இந்த ரங்கநாயகி.இவர் ஆட்சிக்கு வரும்
போதெல்லாம் சாதிவெறி ஆதிக்க போலீசும் ஆட்டம் போடும்

இப்படி ஆட்டம் போட்ட,போடும் போலீசை தண்டிக்கவோ,
அடக்கவோ எந்தவொரு கட்சிக்கும் ஆடசிக்கும் நீதீ
மன்றதுக்குக்கூட துப்புமும்இல்லை துரவுமில்லை
மனமுமில்லை தைரியமும் இல்லை.ஒவ்வொரு
தடவை வரும் ஆளும் கட்சியெல்லாம்போலீசுக்கு
சலுகைகள் செய்வதிலும் அதிகாரம் கொடுப்பதிலும்
போட்டிபோட்டு வாரி வழங்கியுள்ளன.

இதனால் இந்த போலீசு, அவர்களே சொல்லக்ககூடிய
சட்டத்துக்கும் ஞாயத்துக்கும் கட்டுப்படாமல் கொழுப்பு
அதிகமாகி திமிறெடுத்து அலைகிறது.

இப்படி போலீசின் அதிகமான கொழுப்பை சூடு வைத்து
அழிப்பவர்கள்உண்டென்றால் அவர்கள்தான் .அரச
பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். உழைக்கும்
மக்களை நேசிக்கக்கூடியவர்கள. தியாக செம்மல்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.இந்திய உழைக்கும்மக்களின்
விடிவெள்ளிகள் நக்சல் பாரிகள்.

அவர்களின்றி ஒரு அனுவும் அசையாது.

புதன் 14 2011

இது என்னான்னு.....நீங்களே......சொல்லுங்க....

ஒருவர். அண்ணே! சட்டசபையில அம்மா பேசிகிட்டு

இருக்கையில ,எல்லாரும் மேஜையை தட்டுறாங்களே
ஏண்ணே,

மற்றவர். ஓ....அதுவா.......அவுங்க மேஜையை தட்டலப்பா

ஜால்ரா போடுறாங்க.

ஒருவர். ஜால்ரா போடலேன்னா,எண்ணன்ணே

மற்றவர். நாலாவது துாணு தினமணியே அம்மாவுக்கு
ஜால்றா போடயிலே,தேர்தல்ல சீட் கொடுத்து சீட்ல
எம் எல்ஏவாக,மந்திரியாக உடகாரவச்சதுக்கு ஜால்ரா
போடாம இருந்தா அவிங்க மனுசனா

ஒருவர். அதான் மந்திக்கனக்கா ஜால்ரா போடுறாங்களா!

மற்றவர். ஒனக்கு புரியுது, எனக்கு புரியுது.புரிய வேண்டிய
வங்களுக்கு புரிஞ்சா சரி..

----------------------------------------------------------------------------------------------------

போலீஸ்.1. ஏட்டடையா,இவன எதுக்கு புடிச்சுட்டு வந்திருக்கீங்க

போலீஸ்2.. குடிக்காம ,டாஸ்மாக் முன்னாடி நின்னுகிட்டு

இருந்தான். வாய ஊதச் சொல்லி பார்த்தா குடிச்சத
துக்கான வாடயே இல்ல, அதான் கைது பண்ணி
கொண்டாந்துட்டோம

போலீஸ்1. ஏன்னடா,குடிக்காம இருந்துகிட்டு எங்க உயிர
வாங்குறிங்க. கள்ளசாரயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சரக்கா விக்கிறம்ல.......நாங்கலெல்லாம் எதுக்கு
இருக்கோம மயிரு புடுங்கவா இருக்கோம்


கைதானவர். அய்யா,முன்னாடியெல்லாம் குடிச்சிருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ. குடிக்காம இருந்தாலும்
ஊள்ளே போடுறிங்க. இந்த ஒருவாட்டி மன்னிச்சு
விட்டுடுங்கய்யா,இனிமே தினமும் குடிக்றேனுங்கய்யா

திங்கள் 12 2011

நேற்று-இன்று-நாளை-நிரல்கள்


நேற்றைய நிகழ்ச்சிகள்.

சாதிவெறியும் அதிகார வெறியும் நிறைந்த பங்களா
நாய்களும்.சொரி நாய்களும் சேர்ந்து கடித்து குதறி
யதில் ஏழு அடிமைப்பட்ட மனித உயிர்கள் பலியாகின.

ஜனநாயகம்,மனித உரிமைகள் போன்றவைகள் என்ன
வென்றே தெரியாத தங்களின் சுகபோகத்திற்காக எள்ளு,
கொள்ளு என ஏகப்பட்டதை போட்டு இரு நாய்களையும்
சீமான்களும் சீமாட்டிகளும் அவர்களின் எடுபிடிகளும்
வளர்க்கின்றனர். தன் எஜமான்கள் ஏவிவிட்டாலும் ஏவி
விடாமாலும் இருந்தாலும். இந்த இரு நாய்களும் ஏழை
உழைக்கும் மக்கள் பணிந்து ஒதுஙகிச் சென்றாலும்
கடித்து குதறவே செய்யும்....இது இயற்கையின் நியதி.

இன்றைய நிகழ்ச்சிகள்.

பங்களா நாய்களாலும்,சொரி நாய்களாலும் கடித்து
குதறப்பட்ட மக்களுக்கு ஆறுதல்களோ, பண முடிப்
புகளோ,மற்றவைகளாலோ நிரந்தர தீர்வைத்
தருவதில்லை.கடித்து குதறிய நாய்களையோ,ஏவி
விட்டவர்களையோ.நல்லவர்களால்,நீதி மான்களால்
.தண்டித்துவிடமுடியாது.கடிக்காமல் இருக்கவும்
செய்யமுடியாது.நாயின் குணத்தை யாராலும் மாற்றி
விடமுடியாது காலங்காலமாகவும் நாகரிக காலத்திலும்
ஆண்டானுக்கு ஒருநீதீ! அடிமைக்கு ஒரு நீதீ இதுதான்
இன்றுவரை கோலோச்சுகிறது..இந்த அநீதீயை மாற்ற
ஒரேநீதீயைப்பெற ஒரே வழிதான் உண்டு. அது உழைக்கும்
மக்கள் ஒன்றாக திரண்டு புதிய ஜனநாயக அரசை அமைப்
பதுதான்.

நாளைய நிகழ்ச்சிகள்.

பங்களா நாய்களிடமிருந்தும்,சொரி நாய்களிடமிருந்தும்
சீமான் சீமாட்டிகளிடமிருந்தும் அவர்களின் எடுபிடிகளிட
மிருந்து எதிர்கால உழைக்கும மக்களின் வாரிசுகளை
பாதுகாத்திட பலவற்றை மற்றும் சிலவற்றை நம்பி
மோசம் போகாமல் புரட்சிகர இயக்கங்களில் அணி
திரள்வதே.சாலச்சிறந்தது..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...