பக்கங்கள்

வியாழன் 02 2017

திடிரென்று வந்த மறதி.......

திங்கள் கிழமை காலை  தாமதமாக எழுந்தேன்... மணி பத்து மேல்  ஆகிவிட்டது. குளித்து ரெடியாக மணி பதினொன்று ஆகிவிட்டது. சாப்பிட நேரமில்லாதால்... வீட்டிலிருந்து கிளம்பி  பஸ் நிறுத்தத்திருற்கு வந்தால் ரெடியாக ஆட்டோ ஒன்று நின்றது.. எப்போதும் ஆட்டோவில் செல்லும் பழக்கமில்லை... இருந்தாலும் அவசரம் கருதி ஆட்டோவில் சென்றேன்.. 

குறிப்பிட்ட இடத்தில் இறங்கிவிட்டு  ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை பார்த்தபோது முழக்கமிட்டுக் கொண்டு இருந்தனர்.. ஓரிருவர் பேசி முடித்துவிட்டு பின்  இடையில் முழக்கமிட்டுக் கொண்டு இருந்தது தெரிந்து. கூட்டத்தோடு கூட்டமாக நானும் கலந்து கொண்டேன்.

கூட்டம் முடிந்து வீட்டுக்கு வருவதற்க்காக  பஸ் நிறுத்த்த்தில் அமர்ந்திருந்தபோது....என்னுடன் பசுமலையில் மேல்நிலைப்பள்ளியில் படித்த நண்பர் என்னை அடையாளம் கண்டு என்னைப்பற்றி நலம் விசாரித்தார்.... அன்று முழுவதும்  அவருடன்  இருந்துவிட்டு  இரவு வீடு வந்து சேர்ந்த பிறகு சாப்பிடுவதையும் மற்ந்து தூங்கிவிட்டேன்.... 

மறுநாள்.. கணனி என்று ஒன்று உண்டு என்பதையும்  நான் பதிவர் என்பதையும் மறந்துவிட்டேன்..... மறுநாள்  காலையில் நினைவு வந்து கணனியை திறந்தபோது... அதுவும் எனக்கு போட்டியாக  தன்னை மறந்துவிட்டது..... கணனி மருத்துவரை அழைத்து வந்து திரும்பவும் ஓ.எஸ் போட்டப்பிறகுதான் அதற்கு நினைவு வந்தது. எனக்கும் நினைவு வந்தது பதிவு எழுத வேண்டும் என்று........

.நல்லவேளை திடிரென்று வந்த மறதி திடிரென்று மறைந்து விட்டது.. தப்பித்தேன்....


ஞாயிறு 29 2017

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து........

அறிமுகமான அவரை பா்க்கும்போது  எனக்கு கைகால்  நடுங்கியது.. முகம் வீங்கி தலையிலிருந்து வடிந்த ரத்தம் கன்னங்களில் காய்ந்து இருந்தது.. சட்டை வேட்டி கழட்டப்பட்டு அன்றாயரோடு... நிற்க வைக்கப்பட்டு இருந்தார். அவரோடு பலரும் அவரைப்போலவே  கொடுமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

போலீசிடம்... வீட்டுப் பிரச்சினையில் அடி வாங்கி காதின் சவ்வு கிழித்தெறியப்பட்டகாது கேட்காமல் போன அனுபவம்  எனக்கு இருந்ததால்...போலீசின் கொடூரங்கள் தெரிந்திருந்தது.. 

போலீஸ்காரர்கள் அடித்த அடியில் காயம் ஏற்ப்பட்டதோடு... பினையில் வர முடியாதபடி வழக்கும் ஜோடிக்கப்பட்டது.அவர் மீது

உண்மையில் ஜல்லிக்கட்டுக்காக ரயிலை மறித்த நிகழ்வில..அவர்  கலந்து கொள்ளவே இல்லை..  அவருண்டு தான் வேலையுண்டு இருந்தவர்.. இப்போது..ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு ரயிலை மறித்தாக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   அவர்தன்  நிலையை  பேசும் போதெல்லாம் அடியும் வசவுமு்தான் அவர்க்கு கிடைத்தது.

போலீசுகள் அடித்த அடியால் வீங்கிப்போன உடலோடு.. வலியால் அவதிப்பட்டு இருந்தவருக்கு என்னைக் கண்டதும்  வலிகளை பொறுத்துக் கொண்டு ஒரு செய்தி சொல்ல முயன்றார். அருகிலிருந்த ஒரு போலீசின் கொடூர பார்வையால் தன் பார்வையை  மூடிக் கொண்டார்.... அவர் திரும்பவும் தன்னைப் பார்ப்பார் என்று அவரைப் பார்த்துக் கொண்டு நின்ற போது.. போலீஸ்காரன் ஒருவன்  என்னை வெளியில் போய் நிற்கச் சொன்னான்.

அந்தக் காவல் நிலையத்தில்.... ரயிலை மறித்த இடத்தின் சுற்றி இருந்த வீடுகளில் குடியிருந்தவர்களே அதிகம் இருந்தார்கள்.....ஒருவர் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்ற சட்டமே... அங்கு செல் அறித்து போய் போலீசின் கால்களில் மிதிபட்டுக் கொண்டு இருந்தது....

வெளியில் நின்று கொண்டு இருந்தபோது.... நான்கைந்து இளைஞர்கள் போலீஸ வண்டியிலிருந்து போலீஸ கூடராத்துக்குள்  இழுத்து செல்லப்பட்டனர்.  இவர்களுக்கும் அவர்கள் கதிதான் கிடைக்கும் என்று மனதில் தோன்றியது..

நெடுநேரம் கழித்து... என் நண்பரின் நண்பர் மற்றும் பெரிய கட்சியைச் சேர்ந்த நான்கைந்து பிரமுகர்கள் சூழ  தன் மகனை போலீஸ் கூடராத்திலிருந்து வெளியே மீட்டிக் கொண்டு வந்தார். அவர்களிடம் விடைபெற்று விட்டு என்னிடம் வந்த நண்பரிடம்.... எப்படி உங்கள் நண்பரின் மகனை வெளியே விட்டார்கள்  என்று கேட்டபோது... கைகளால் செய்கை செய்தபடி எல்லாம் காசு என்றார்.

எப்போதோ... நண்பர் .. வழைப்பழம் தின்னாத குரங்கு உண்டா? என்று சொன்னது நினைவுக்கு வந்தது...நண்பர் வேறு சில இடங்களுக்கு செல்ல அழைத்தபோது... எனக்கு வேறு வேலை இருக்கிறது..  நீங்கள்“ சென்று வாருங்கள் என்று சொல்லி விடை பெற்று வந்தவுடன்  முதல் வேலையாக போலீஸ் நிலையத்தில் பார்த்த நண்பரின் வீட்டுக்குச் சென்று...  அவர் காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதை  தெரிவித்துவிட்டு....சட்ட உதவிக்குழு வழக்கறிஞர் கூடம் எண் 96 , மாவட்ட நீதி மன்ற வளாகத்தை  அணுகுமாறு தெரிவித்தேன்..


பிறகுதான் தெரிந்தது..  வேலை விசயமாக அந்தப் பகுதிக்கு சென்றவரை போலீஸ் பிடித்து சென்று அடித்தது.. வழக்கு போட்டது.... இரவு வீடு வந்து படுத்தபோது....   என் தெருவுக்காரர்களாலும் உறவுக்காரர்களாலும்  சேர்ந்து என் வீட்டு இடப்பிரச்சனையால்... போலீஸ்காரர்களால் என் காது பாதிக்கப்பட்டபோது ஏற்ப்பட்ட வலி   வந்து சென்றது....

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து... எனதுகுடியிருக்கும் வீட்டு இடப் பிரச்சினையால் என் மீது கொடுக்கப்பட்ட ஒவ்வொரு புகாரில் எந்தப் போலீசும் நேர்மையாகவோ... சட்டப்படியாகவோ நடந்து கொண்டதே இல்லை... என்பதே எனது அனுபவம்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...