பக்கங்கள்

சனி 16 2013

பின்னாலே மீசை வச்சவரு.................சிறுகதை..





பஸ்ஸை விட்டு இறங்கியதும் மண்ணுமுட்டிக்கு தெக்கு வடக்கு எதுவும் தெரியவில்லை. சிறிது நேரம் சூரியனையும் தரையையும் பார்த்தான் ஒன்னும் திசை தெரிகிறமாதிரி தெரியவில்லை.

இருக்கி கட்டிய வேட்டியை அவிழ்த்து திரும்பவும் கட்டிக்கொண்டான். வேட்டியின் முனையில் கட்டி இடுப்பில் சொருகியிருந்த தாளை எடுத்து காற்றில் பறக்கா வண்ணம்பிடித்துக்கொண்டு,ஒவ்வொரு கடையாக,  கடையில் நிற்கும் ஒவ்வொரு மனிதராக பார்த்துக்கொண்டே வந்தான்.
நகரத்தைப்பற்றி. நரகத்தில் இயங்கும் மனிதர்களைப்பற்றி அவன் புரிந்து கொண்டது இது.“ பொல்லாப் பயல்க..., கொஞ்சம் அசந்தா கோவணத்தை உருவி, அந்தக் கொவணத்தையே அம்மணமாக்குற பயல்க...... நரகத்து சனங்களிடம் எச்சரிக்கையாக............இருப்பதற்க்காக....... பார்ப்பதற்கு சுமராகவும் பேசும்போது அமைதியாக கேட்டு பதில் சொல்பவராக இருப்பவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கிராமத்து பெரியவர்கள் சொன்னதை நிணைத்துக கொண்டே .........வந்தான்.

அவன் நிணைத்ததுபோல்  மாட்டுத்தீவணம் விற்கும் கடையில் ஒருவர். அவரிடம் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டு துண்டுச் சீட்டை நீட்டி வழி கேட்டான்.

அவர்,அந்த சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எந்த ஊருன்னு கேட்டார்.

“ இவன் தன் ஊரைச் சொன்னான்”..

இவன் பெயரைக்கேட்டார்”.

இவன் தன் பெயரைச் சொன்னான். “என்பேரு மண்ணுமுட்டிங்க”!

“ஒங்கப்பேரு என்னங்க? அவர் பெயரைக்கேட்டான்.

“ புன்னாக்கு என்று சொன்னதும் நல்லதுங்க- என்றபடி தலையாட்டினான்.

“ புன்னாக்குகாரர் , வழியைச் சொன்னார்.

வடக்குப்பக்கம் கையை காட்டி,“அந்தா..........அங்க...தலயில உருமா கட்டி நாற்காலியில ஒக்காந்து இருக்காருல..............

“ஆமா, ஒக்காந்து இருக்காரு........

அவருக்கு பின்னால,மீசை வச்சவரு இருப்பாரு.....அவர்கிட்ட இந்த சீட்ட காண்பிங்க..........அவருதான் சீட்டுல குறிப்பிடப்பட்டதுக்கு சொந்தக்காரரு..ஃ

“நல்லதுங்க, அப்படியே! செய்றேன்ங்க

 தலையில் உருமா கட்டியவரை நோக்கி வந்தான். அவருக்கு அருகில் வந்ததும் சற்று தயங்கி உருமாகாரர்க்கு பின்னால் பார்த்தான் பின்னால் மீசை வச்சவரை காணவில்லை. வழி சொன்ன புண்ணாக்குவைப் பார்த்தான். புன்னாக்கு அங்கு இல்லை.

சிறிது நேர தயக்கத்துக்குப்பின் தலையில் உருமா கட்டியவரிடம் கேட்டான். அய்யா......ஒங்களுக்குப்பின்னால மீசை வச்சவரு இருந்தாரே அவரு........... என்று இழுத்தான்.

உருமா,இவரைப் பார்க்காமல் பேசா...மடைந்தையாக இருந்தார்.
மண்ணுமுட்டி. திரும்பவும் முயற்சித்தான்.அய்யா,ஒங்களுக்கு பின்னாடி மீசை வச்சவரு...............

அப்போதும்,உருமா பேசாமல் அமைதி காத்தார்.
சுற்றும் முற்றும் பார்த்த மண்ணாங்கட்டி, “ அய்யா.......... ஒங்களுக்கு பின்னால மீசை வச்சவரு இருந்தாருல, அவரு எங்கங்கய்யா......உரத்தக் குரலில் கேட்டதுதான்.

உருமா, கோபம் கொண்டது. “யோவ், ஒனக்கு அரிவு இறக்கா,எவனாவது பின்னால மீசை வப்பானா............மீசை என்னா பின்னாலியா மொழைக்கும் அவனவன் முன்னால மொளைக்குற மீசையை  வலுச்சுவிட்டுட்டு மழுக்குன்னு திரியுறானுங்க..................... இந்த லட்சனத்துல நீ...........வேற ,பின்னால மீசை வச்சவன கேட்க வந்துட்ட.........

மண்ணுமுட்டியால் பேசமுடியவில்லை...

வியாழன் 14 2013

லஞ்சம் வாங்குவது எங்கள் பிறப்புரிமை!அதற்க்காக சஸ்பெண்டை எதிர்ப்பது எங்கள் சங்க உரிமை.!!!




வல்லரசு இந்தியாவில் தெருவோரம் ஒன்னுக்கு இருந்தாலும் லஞ்சம் கொடுக்கமால் இருக்கவோ,தப்பிக்கவோ முடியாது. அதுபோல் லஞ்சம் வாங்காமல் எந்த அரசு அலுவலங்களும் இயங்க முடியாது அந்தளவுக்கு
தூணிலும் துரும்பிலும் லஞ்சம் ஒளிந்து இருக்கிறது. இது எனது அனுபவ உண்மை.பெறுக்கெடுத்து ஓடும் லஞ்ச ஆற்றில் கரையோரம் நின்ற மாவட்ட ஆட்சியர் கரை ஒதுங்கிய லஞ்ச ஆற்றை சிறிது மணல் எடுத்து அணை கட்டியுள்ளார்.

அதாவது.விசயம் இதுதான்.மதுரை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு வருவாய் அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கிய பிரச்சினையில் ஆட்சியரால் தற்க்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதை எதிர்த்து லஞ்ச ஆற்றில் முழ்கி பாதுகாப்புடன் முத்தெடுத்து வரும் வருவாய்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போர் ஆட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடைய போராட்டத்தை ஆட்சியர் கண்டு கொள்ளாத்தினால் மாவட்ட வருவாய்ய்துறை அலுவலர் மற்றும் லஞ்சம் வாங்குவோர் பாதுகாப்பு சங்கத்தினர் “ லஞ்சம் வாங்கவது எங்கள் பிறப்புரிமை, அதற்க்காக சஸ்பெண்டை எதிர்ப்பது எங்கள் சங்க உரிமைஎன்பதை வலியுறுத்தி ஒட்டு மொத்த விடுப்பில் செல்லும் போராட்டத்தை நடத்துகின்றனர்.

சம்பளத்துடன் விடுப்பா? சம்பளமில்லா விடுப்பா? என்பது போராட்டத்தின் பின்புதான் தெரியவரும். அதுவரை லஞ்சம் வாங்குவோர் பாதுகாப்பு சங்கம் காத்திருக்க வேண்டும்.


ஞாயிறு 10 2013

படித்ததில் சிரித்தது............

ஒரு வாரமாக போலீஸ் ஸ்டேசனுக்கும், வீட்டுக்கும் இடப்பிரச்சினை காரணமாக அலைந்து டென்சனாக சோர்வாக இருந்த நேரத்தில்  படித்ததில் சிரித்தது இது.

டாஸ்மாக் கடையில்  முன் டாஸ்மாக் குடிமகன் ஔறியது




“வாடா மாப்ள... இப்பத்தான் வர்றீயா...........வா.....வா..... இங்க சரக்கு ஒன்னும் சரியில்லடா........... எம்புட்டு அடித்தாலும் மப்பு ஏறவே மாட்டேங்கிறதுடா.......”

“மப்பு ரெம்பத்தாண்டா ஓவரா....... ஏறியிருக்கு.  நான் உன் மாப்ள
 இல்லடா......உன் அப்பன்டா..........”





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...