பக்கங்கள்

சனி 13 2013

டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரக்கொள்கைகள் எப்போது சாத்தியமாகும்...................




அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக அவர் பணியாற்றினாலும். அவர் முன் வைத்த அடிப்படை கருத்துக்கள் எதையும் அரசியல் சட்டத்தில் சேர்க்க அவரால் முடியவில்லை. ஆற்றல்மிக்க தலித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பக்குள்தான் செயல்பட முடியும் என்ற அளவு கோளை ஆதிக்க வர்க்க சாதிகள் தீர்மானிக்கின்ற உரிமை பெற்று இருந்தனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மற்றவர்களுக்காக எழுதி முடித்தேன் என்று பிற்க்காலத்தில் வருத்தத்தடன் கூறினார். இதோடு சட்டங்களால் இந்த சமூகத்தை மாற்றிவிடமுடியும் என்று கனவு கண்டேன. அது முடியாது என்று இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த சட்டங்களை எரிப்பவன் ஒருவன் இருப்பானென்றால், அதில் நானே முதலாவதாக இருப்பேன் என்றும் கூறினார்.

அம்பேத்காரல் ஆன பலன்களை எல்லாம் படித்த பிரிவினர் பெற்றனர். அதை அவர்கள் தங்கள் சுய நலத்திற்கும் சொந்த லாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.

அம்பேத்கர் சாதி ஒழிப்பையே முதன்மையாக வலியுறுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கவே போராடினார். அம்பேத்காரின் பகுப்பாய்வுகள் நவீனமயமாக்கல்,தாரளமயமாக்கள், தனியார்மயமாக்கள் எதிர்ப்பாகவே உள்ளன.

அம்பேத்கரின் நிலச்சீர்திருத்தம்,கூட்டுப்பன்னை தொழில்மயமாக்கல், வேளான்மை கொள்கைகள், தொழில்சீர்திருத்தங்கள். போன்ற பொருளாதார கொள்கைகள்,  மக்களுக்கான அரசை வர்க்கப்போராட்டத்தின் மூலம் நிறுவி. புரட்சிகர அரசு நிகழ்கிற போதுதான் அம்பேத்கருடைய பொருளாதாரக் கொள்ளைகைகள் நடைமுறை சாத்தியமாகும்,











வெள்ளி 12 2013

முள்ளி வாய்க்கால் கொலைகாரர்களைவிட பயங்கரமானவர்கள்.........

ஈழக் கொலைக் களத்தை திரைக்கதை அமைத்து இயக்கி
 நடத்தியதே  இந்திய மேலாதிக்க அரசுதான்.

இந்த உண்மை சிரிப்பாய் சிரித்தும், செப்பியும் அறிந்தும் அறியாத வெங்காயங்களைப்போல்

ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்திய சீமான்கள்,புரட்சி புயல்கள்,புரட்சிதலவிகள், தளபதிகள், நெடுமாரன்கள், இத்து போகாமல் அடங்கி கிடக்கும் சிறுத்தைகள்.மார்தட்டும் தமிழ்ஈனவாதிகள்.

புதன் 10 2013

ஆச்சரியம்!அதிசியம்!! ஆனால் அப்படி எதுவும் நடக்காது!!

போலீசு
வீடு புகுந்து தாக்க முற்படும் போலீசு



பேப்பரை படிக்கும்போது, சினிமா படத்தில் கதாநாயகன் வில்லன் போலீசை அடித்து துவம்சம் பண்ணி கொடுமையை எதிர்ப்பது மாதிரி ஆச்சரியமாக இருந்தது. ஆனா, செய்தியை படித்து முடித்த பிறகு அதிசியமாக இருந்தது. இந்தியாவில் அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் நடக்காது. அப்படி எதுவும் நடக்கவும் விட மாட்டார்கள் அங்கீகாரம் பெற்ற கிரிமினல்கள்.

இந்தியாவில் முதன் முதலாக என் கவுன்டர்  நடத்திய போலீசார்க்கு மரணதன்டனை.யாம். உள்ளாங்கையில் சீனி என்று எழுதி வைத்துக் கொண்டு நாக்கால் நக்கிப் பார்த்து, எழுதியது ஒருவேளை இனித்தால்  என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு முதன்முதலாக இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று நம்பலாம்.
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் என்கவுன்டர் நடத்தும் போலீஸ் அதிகாரிகள் யாரும் நீதிமன்ற சட்டங்களை  சாதாரண போலீசுலிருந்து உயர் போலீசு அதிகாரிகள் வரைக்கும் யாரும் மதித்து நடப்பதே இல்லை.  சட்டத்தையே மதிக்காத இவர்கள்தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு கிறார்களாம்.

தமிழ்நாட்டில்  நீதி மன்ற சட்டத்தை மதிக்காமல் என்கவுன்டர் செய்யும் போலீஸ்காரர்களுக்கு வெகுமதியும் பதவி உயர்வும்  என்பது எழுதப்படாத ஒப்பந்தமாகவும் சட்டமாகவும் இருந்து வருகிறது. இதை நீதிமன்ற அரசர்களும்,நீதிமான்களும்  தட்டிக் கேட்பதுமில்லை.கண்டு கொள்வதுமில்லை.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் என்கவுன்டர் கில்லாடி இன்ஸ்பெக்டர் ஆர்.பி.சரோஷ் என்பவர். தன் மேலதிகாரியான துணை கண்காணிப்பாளரான (டிஎஸ்பி) கே.பி சிங்கை சக போலீசாருடன் கூட்டனி வைத்து கொண்டு போட்டு தள்ளியிருக்கார்கள். இந்த  என் கவுண்டர் கில்லாடிக்கு  உறுதுணையாகவும் இருந்த போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு என்கவுன்டர் நடக்கும் சம்பவத்தின் போது சொல்லப்படும் கதை.திரைக்கதை, வசனங்கள் சினிமாவையே தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு ரெம்ப திரில்லாக இருக்கும், இந்தக் திரில் கதையை  படிக்க டீக்கடையில் அன்று  ஒரே கூட்டமாக வேறு இருக்கும்

போலீஸ் துறையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் இவர்களை எதிர்த்து நிற்கும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கும்  ஜனநாயக வாதிகளுக்கும் மனித உரிமை போராளிகளுக்கும் அநியாயத்தை எதிர்ப்பவர்களுக்கும் சாதாரான ஜனங்களுக்கும்  என்ன கதி ஏற்ப்படும்.  என்பது அனுபவப்பட்டவர்களுக்கு அதிகம் தெரியும்.

இதனால்தால்தான் போலீஸ் துறையில் நல்லவர்கள் இருக்க முடியாது அப்படியே இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள், போலீஸ் துறையை புகழ்பாட பயன்படுமேயன்றி அவர்க்கு மட்டும்  தனிப்பட்ட புகழைத்தராது. அந்த நல்லவர்கள் பெரும்பாண்மையாக உள்ள தீயவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். மீறினால் கில்லாடிகளால் போட்டுத்தள்ளப்படுவார்கள்.

இதற்க்கு ஒரு பதம்தான், உத்திர பிரதேச மாநிலம் கோண்ட மாவட்த்தில் போலீஸ் டிஎஸ்பி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம். சட்டத்தின் நீதியை நிலை நாட்டும் நீதி மன்றமோ, அந்த வழக்கின் தீர்ப்பை 31 ஆண்டுகள் கழித்து வழங்கியிறுக்கிறது. இந்திய நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளின் வேகமும் தீர்ப்பும் ஆமை வேகத்தைவிட மிகவும் மோசமாக இருக்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சம்முன்னு பேப்பரிலும் சட்ட புத்தகத்திலும்  பேசும் ஊத்த வாயிலும் இருக்கிறதேயொழிய செயல்களிலும் நடைமுறையிலும் எள்ளவுக்குகூட இல்லை.

சட்டத்தை மதிக்காத போலீசின் அராஜகம், கிரிமினல் வன்முறை அதிகாரமும் வரைமுறையின்றி இருப்பதும் அது தனி வகை சாதியாக இருப்பதினால்தான் தமிழ்நாட்டிலுள்ள ம.க.இ.க. பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள், போலீசு அமைப்பை கலைக்க பேராடுவோம் என்று அறைகூவல் விடுத்து இருக்கிறது. (பார்க்க வினவு. போலீசு அமைப்பை கலைக்க போராடுவோம், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2012) இத்தகைய நக்சல்பாரி அமைப்புகள். ஜனநாயகஅமைப்புகள், மனித உரிமை அமைப்புகள். வளர்ந்து பலமாக இருக்கும்போதுதான். போலீசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, அது செய்யும் அக்கிரமங்கள் அடாவடிகள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு  தண்டிக்கப்படும்

என்கவுன்டர் செய்த போலீசுக்கு 31 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பானது போலீசின் மீதான வெறுப்புக்கு கொடுக்கப்படும் குச்சி மிட்டாய் அவ்வளவே!!


செவ்வாய் 09 2013

மெரினா கடற்கரை மீதான் சன் குடும்பம் தினகரனின் அக்கறை..........



6 கிலோமிட்டர் நீளமள்ள கடற்க்கரையில் 1,200 கடைகள் உள்ளதாகவும் அந்தக் கடைகள் எல்லாம் யார்க்கு சொந்தம் என்பது  மாநகராட்சிக்கும் தினகரனக்குமே தெரியும்.

இந்தக் கடற்கரையில் எல்லாவகையான் கழிவுகளும் பரவிக் கிடப்பதாகவும். இதனால் ஏற்ப்பட்ட குப்பைகளாலும், பெய்துவிட்ட சிறுநீர்களாலும் நாற்றத்தை தினகரனால் தாங்க முடியவில்லையாம்.
அதனால் இந்த மகா முழுங்கி தினகரன் நாளேடு அதன் தலையங்கத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டது.

மெரினா கடற்கரை (பணக்கார) சென்னை வாசிகளுக்கு மட்டுமேயான சொத்தல்ல. ஒட்டு மொத்த தமிழக (பணக்கார) மக்களுக்கே சொந்தமான பொது சொத்தாகும். இந்த சொத்தை பாதுகாத்து  அடுத்த  (பணக்கார)தலமுறை களிடம் ஒப்படைக்க வேண்டியது சென்னை மாநகராட்சியாம். இதை பங்கு போட்டு சீரழிக்க யாருக்கும்  அதிகாரம இல்லையாம்.

இதைசொல்ற புன்னியவான்.தன் பத்தரிக்கையில் சினிமாக்காரிகளின் அரைகுறை படங்களை போட்டு விற்ப்பதற்கும், தொலைகாட்சியில்  சீரழிவுகளையும் மூட பழக்கத்தையும்  பரப்பவதற்க்கும மட்டும் அவர்களுக்கு அதிகாரம் இருக்காம்.

இது எந்த வகையான லொள்ளு.....?




திங்கள் 08 2013

ஏமாந்த போலீஸ் உதவி ஆணையரின் ரைட்டரும், ஏமாற்றிய போலீஸ் உதவி ஆணையரும்



மதுரை திடீர் நகர காவல் சரகத்தில்  போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்தவர் பேச்சிமுத்து பாண்டியன். அவரிடம் ரைட்டராக பணிபுரிந்தவர்  ஏட்டு முகம்மது அம்ஜத்.

போலீஸ் ஏட்டு அம்ஜத் தன் மகனுக்கு சென்னையில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் பி.டெக் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுப்பதற்க்காக தன் மேலதிகாரியான  போலீஸ் உதவி ஆணையாளரை அணுகியிருக்கிறார்.

போலீஸ் உதவி ஆணையாளரோ, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் செல்வம் என்பவர் மூலம் ஏற்ப்பாடு செய்வதாகவும், அதற்கு 
7 லட்சம் செலவாகும் என்றும் முன்பணமாக தன்னிடம் ரூ50 ஆயிரத்தையும் மீதியை செல்வத்தின் வங்கி கணக்கில் செலுத்துமாறும்  கூறி செல்வத்தின் வங்கி கணக்கையும் கொடுத்துள்ளார்.

உதவி ஆணையாளரின் எல்லைக்குள்ள போலீஸ நிலையத்தின் பிரச்சனை மற்றும் வழக்குகளையெல்லாம் தீர்த்து வைக்கும் பணிகளை கூடவே இருந்து பணி புரிந்து வந்த  ரைட்டர்அம்ஜத்

தன் மகனக்கு பி.டெக் சீட் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் உண்மை நிலையை அறியாமல் ரூ50 ஆயிரத்தை போலீஸ் உதவி ஆணையாளர் பேச்சிமுத்து பாண்டியனிடம் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை செல்வத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த முயன்ற போது.

முதல்வரின் தனிப்பிரிவு செல்வத்தின் வங்கிக் கணக்கும் போலீஸ் உதவி ஆணையரின் வங்கிக் கணக்கும் ஒரே எண்ணாக இருந்ததை, போலீஸ் உதவி ஆணையரிடம் ரைட்டராக பணி புரிந்து குப்பை கொட்டிய அம்ஜத்துக்கு அப்போதுதான் லேசாக பொறி தட்டியது.. ஆகா... தான் சேவகம் புரிந்த போலீஸ் அதிகாரியே தன்னை ஏமாற்றியது அவருக்கு தெரிந்தது.

யானை வாய்க்குள் போன பழாப்பழம் திரும்ப கிடைக்கவா போகிறது. என்ற அனுபவம் இருந்தாலும் ,ரைட்டர் அம்ஜத்  தன் அதிகாரிதானே என்ற மிதப்பில்  தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

முன்பெல்லாம் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம்இல்லாமல் வேலையை செய்து முடிக்கும் நேர்மை ஓழிந்து போய் , வாங்கிய லஞ்சப் பணத்தையே க்வா செய்யும் திறமை அதிகரித்து விட்ட காரணத்தால்...

போலீஸ் உதவி ஆணையாளரும். தன் பங்க்குக்கு, மகா ஜனங்களிடம் பேசும் முறையில், எல்லா ஏற்ப்பாடும் செய்துவிட்டேன். பணத்தை திருப்பி தர முடியாது. பேசியபடி மீதிப் பணத்தை செட்டில் செய்து விடும்படியும். தன் ரைட்டரையே,ஏமாற்றினால் நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளார்.

போலீஸ் ரைட்டரோ, ஒரு முறை ஏமாந்ததே போதுமய்யா, இனியும் ஏமாற மாட்டேன் என்று போலீஸ் உதவி ஆணையாளர் மீது மதுரை போலீஸ் கமிஷனர், தென் மண்ட ஐ.ஜி , டி.ஜி.பி. என ஒவ்வொருக்கும் புகார் மனு கொடுத்தார். அவர்களும்  உதவி ஆணையர் வருங்கால போலீஸ் உயர் அதிகாரி என்ற பார்வையாலும் அதிகாரி என்ற பாசத்தாலும் நாளைக்கு நமக்கும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற ரீதியில் பகைத்து கொள்ள விரும்பததால் ரைட்டர் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. சோர்வடையாத ஏட்டு அம்ஜத்
. கடைசியாக  வாய்ப்பாக மதுரை உயர்நீதி மன்றத்தை அணுகி வழக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர் நீதீ மன்றமும். இதென்னடா . வில்லங்கமா இரக்குன்னு நெனச்சு, அந்த அதிகாரிக்கு மனு கொடு, இந்த அதிகாரிக்கு மனு கொடுன்னு  ஏட்டு அம்ஜத்தை சுத்த வைக்க முடியாமல்... ரைட்டர் ஏல்லாவற்றையும் மனு கொடுத்து சுற்றி வந்துள்ளதால். வேறு வழியின்றி கழித்து கட்ட முடியாததால்லும் அதிகாரிகளை பகைத்து கொள்ள விரும்பததாலும் மதுரை உயர்மன்ற நீதிபதி வாசுகி அம்மையார். கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதையாக, போலீஸ் ஏட்டுவான ரைட்டரின் மனுவை விசாரித்து...

உதவி ஆணையரின் சரகத்துக்குள்ள எஸ்.எஸ் காலனி போலீஸ நிலைய  ஆய்வாளரிடம் வழக்கை தள்ளிவிட்ட்டார்.  ஒரு மாத்தத்துக்குள்ன்னு சொல்லாமல் நாலு வாரத்துக்குள் விசாரித்து முடித்து. அதன் முடிவைப் பொறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையே, போலீஸ் ரைட்டர்  போலீஸ் உயர்  ஆணையாளரை ஏமாற்றி இருந்து வாங்கிய பணத்தை மொங்கா போட்டு இருந்தால் உடனே அனைத்து மட்டத்திலும்  நடவடிக்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்  புதுப்புது கண்டுபிடிப்பகளை புகுத்தி பரப்பரபாக்கி சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.ஏமாந்தது  ஏட்டு அம்ஜத் ஆச்சே........
இந்த விபரங்களை தினத்தந்தியிலும் தினகரனிலும் படித்த மகா ஜனங்கள்   சூடான டீத்தண்ணிய மடக்மடகென  வேகமாக குடித்துவிட்டு மிக ஆவலாக படித்தனர். இத்தகைய அரும் பெரும் விபரங்கள் அய் கிளாஸ் பத்திரிக்கையான தினமணியில் வரவே இல்லை.  தினமணியின் வாடிக்கையாளர்கள் இந்த லோ கிளாஸ் செய்திகள் எல்லாம்  திணமணியில வாரதுப்பா  அவுக எல்லாம் அய் கிளாஸ்ப்பா என்றார்கள்

ஓவர்............ ஓவர்...........

குறிப்பு......ஒவர் என்பதை முடிந்தது என்றும், ரெம்ப ஓவராகீது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்........ஓவர்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...