பக்கங்கள்

வெள்ளி 10 2017

நண்பர் சொன்ன பேய்(நீதீ) கதை....................

ஒரு படகில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 

1. இராவணன்

2. இராமன்

3. கிருஷ்ணன்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. "உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.

"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...
இராமன்  தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.   

கிருஷ்ணன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான்.   பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"என்றது

உடனே இராவணன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ..."இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான்....

பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

 இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டியவர்  இராவணன்தான்

வியாழன் 09 2017

ஒரு நன்றிக்கடன்..................



நண்பர் வீட்டு
துக்க நிகழ்ச்சியில்
 என்னை கண்ட
நண்பர் ஒருவர்
கேட்டார் என்ன?
தாடி என்று......

மற்றவர்களுக்கு சொன்ன
அந்த ரகசியத்தையே
சொன்னேன் நண்பரிடம்

நண்பரே அந்த
ரகசியத்தை உங்களிடம்
மட்டுமே சொல்கிறேன்
வேறு   யாரும்
கேட்டாலும் சொல்லிடாதிங்க..
அடிச்சு கேட்டாலும்
சொல்லிடாதிங்க  நண்பரே

என் மண்டையில
அறிவு வளரல
நானும் பலமுறை
முயற்சித்தும் முடியல
நான் முயற்சிக்காமல்
உரம் எதுவும்
போடாமல் வளர்வது
இந்தா தாடி
மயிர் மட்டும்தான்
நண்பரே....என்னையும்
மனிதனாக மதிக்கும்
இந்த தாடி
மயிரை நான்
மதிக்க வேண்டாமா
அந்த நன்றிக்குத்தான்
இந்த தாடி


ஆர்வமாய் கேட்ட
நண்பர்க்கு கண்கள்
சிவந்தது வாய்
முனு முனுத்தது.




செவ்வாய் 07 2017

நவம்பர் 8 காவிகள் ஒழிப்பு தினம்




4000 ரூபாயை மாற்றுவதற்கு
தேசமே வரிசையில்
நின்ற போது
நானும் நின்றேன்

ஒரு நாளுக்கு
ஒரு முறைதான்
மீண்டும் நான்
வரிசையில் வரக்கூடாது
என்பதற்க்காக என்
கையில் அடையாளமாக
மை வைத்தார்கள்

என்னைப் போல்
வரிசையில் வந்தவர்கள்
பலர் வரிசையில்
நின்றே செத்தார்கள்

நின்றவர்கள் நிற்காதவர்கள்
அனைவருக்கும் தெரிந்திருந்தும்
எல்லோரும்  வாய்
இருந்தும் ஊமையாக
காட்சி அளித்தார்கள்

ஆனால் சேகர் ரெட்டி
என்பவர் மட்டும்
வரிசையில் நிற்காமல்
கையில் அடையாள
மை பெறாமல்
33கோடி ரூபாயை
மாற்றிக் கொண்டார்
எந்த வங்கியில்
மாற்றினார் எப்படி
மாற்றினார் என்பது
மட்டும்  அண்ணன்
புல்லட் பாண்டி
ஆளும் மத்திய
அரசுக்கு தெரியவே
தெரியாதாம் ரிசர்வ்
வங்கிக்குக்கூட சத்தியமா
தெரியாதாம் இதை
சிபிஐயால் கூட
கண்டே பிடிக்க
முடியாதாம் இந்த
மாபெரும் வெற்றியை
ஆடுவோமே. பள்ளு
பாடுவோமே....என்று
கூவுகிறார்கள் இந்திய
காவி பயங்கரவாதிகள்

திங்கள் 06 2017

எட்டப்பர்களின் ஆட்சியில்.............


எட்டப்பர்களின் ஆட்சியில்
எதைத்தான் எழுதுவது
இதைத்தான் எழுத
வேண்டுமோ...டூ
வீலர் வாகனம்
இரு டயர்களில்
ஓடுகிறது. ஃபோர்
வீலர் நான்கு
சக்கரங்களில் ஓடுகிறது.
சென்னையில் மழையா
இல்லவே இல்லை
கண்ணால் கண்பது
எல்லாம் பொய்
தேனாறும் பாலாறும்
தான் ஒடுகிறது
சொல்வதை காதால்
கேட்பதே மெய்

தமிழகத்து மக்கள்
எல்லாம் சுபிட்சமாக
அடுத்து வேளை
கவலை என்பதே
இல்லாமல் வாழ்கிறார்கள்
இப்படித்தான் எழுதி
சமூக வலை
தளத்தில் பதிவிட
வேண்டும் இதுதான்
எட்டப்பர்களின் ஆட்சியில்
விதியும் சதியும்

மேலும் விபரங்களுக்கு..படியுங்கள்........எடப்பாடியின் குண்டர் ஆட்சியில்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...