பக்கங்கள்

சனி 01 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-78.

“மக்களை கொல்கிற போலீச”
“தண்டிப்பது யாருங்க”




நர்ஸ் ரேணுகா
விகடன்






திருவேற்காடு பகுதியை சேர்ந்த நர்ஸ் ரேணுகா என்பவர் தனது வீட்டில் கழிப்பறை கட்டியதால் பக்கத்துவீட்டு அமிர்தவல்லியோடு தகராறு ஏற்ப்பட்டதனால் போலீசு இன்ஸ்பெக்டரும். போலீசு சப்பு இன்ஸ்பெக்டரும் சேர்ந்து நர்ஸ் ரேணுகாவையும் அவரது கணவரையும் போலிசு ஸ்டேசனுக்கு வரவழைத்து பக்கத்து வீட்டு அமிர்த வல்லிக்கு ஆதரவாக  தகாத வார்த்தைகளால் திட்டி விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவேன் என்று மிரட்டியதால் மிரண்டு போய் அந்த ஸ்டேசன் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து  எரிந்துபோயி  சாவதற்கு முன்  வாக்குமூலம் கொடுத்து இறந்துவிட்டார்.


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், செல்ஃபி மற்றும் குளோஸ் அப்
தலைப்பைச் சேருங்கள்


இது ஏதோ அபூர்வமாக நடந்துவிட்டதாக சொல்லப்படும் கதை அல்ல... ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனும் இப்படித்தான் இருக்கின்றன.

1983லிருந்து 2018வரை என்னுடைய வீட்டுப் பிரச்சினையில் என் பகுதி காவல்நிலையம் ஒரு துளி அளவு கூட நேர்மையாக நடந்ததாக வரலாறு கிடையவே கிடையாது..ஐந்து வருடத்துக்கு முன்  என் வீட்டுக்கு என் இடத்தில் கழிப்பறை கட்டியபோதும் சரி, தற்போது பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க விடாமல் தடுத்ததுவரை  மக்களின் நண்பனாகவோ..? சட்டத்தின் படியோ நடக்கவோ இல்லை..

நர்ஸ் ரேணுகா தேவி பெண் என்பதால்  விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவேன் என்ற மிரட்டலை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து விட்டார்.

நானோ... பலத்கார- மானபங்க வழக்கில் என்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டிய போது....பாதாள சாக்கடை இணைப்பே வேண்டாம் என்றும்..போலீசின் பொய் வழக்கால் ஏற்படும் கைது,சிறை போன்றவற்றால் ஏற்படும்  செலவிலிருந்தும் மன உளச்சலிருந்தும்  பின்வாங்கி நீதிமன்ற கதவை தட்டிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் அங்கு கதவுகள் திறந்த பாடில்லை.

போலீசு கடுமையான பணிச்சுமையில் இருப்பதால்.. போலீசு நேர்மையாக நடந்து கொள்ளாது என்று  போலீசுக்கு ஆதரவானவர்கள் சாக்கு- போக்கு சொல்வார்கள், எனக்கு  எனது அனுபவத்தில் போலீசு என்றாலேஆத்திரமும் வெறுப்பும்தான் உள்ளது...

தற்காப்புக்குதான் ஒன்றிரண்டு தடவை போலீஸில் புகார் செய்துள்ளேனே தவிர  மற்றவை..எல்லாம் என் இடத்தில் ஆக்கிரமிப்பு,என் இடத்தை என்னையே பயன்படுத்துவதை தடுப்பது போன்ற பெரும்பாலானவை என் மீதான பொய்புகார்களே... சிலதுகளின் அபதாரமும்  பலதுகளில் பின்வாங்கலுமே... நடந்துள்ளது...

எனது அனுபவத்தோடு நாட்டில் நடக்கும் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து நசுக்கும் இந்த போலீசு படையை திருத்துவது எப்படி? தண்டித்தால்தானே திருத்த முடியும்...திருடன்கள் கொலைகாரன்கள். போன்றவர்களை  திருத்தத்தானே தண்டித்து வருடக்கணக்கில் சிறை  வைக்கிறார்கள். இந்த சமூக அமைப்பில் இவர்களை தண்டிக்க முடியுமா??
தண்டிப்பதற்க்கான வழியாவது உண்டா..?????????


வெள்ளி 31 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-77.

படம் பார்த்து இன்-இன்னாரை கண்டு பிடித்து தெரிந்து கொல்ளவும்- சொல்ளவ்வும்.....

Image result for ஜெயகுமார் அமைச்சர்


Image result for தினகரன்



மேலே உள்ள படத்தில் உள்ளவர்களில் “டோக்கன் ராஜா” என்று பட்டம் பெற்றவர் யார்?

“ டோக்கன் ராஜா” என்று பட்டம் வழங்கிய அந்த “ஆல் இன் அழகு ராஜா என்பவர் யார்?

கண்டு பிடித்த சொல்பவர்களுக்கு  வரும் தேர்தலில்  ஃபாரின் சரக்கு .புல் பாட்டிலும்.. குஸ்கா கலவாத ஒரிஜினல் பிரியாணி பொட்டலமும் வழங்கப்படுமாம்.......

புதன் 29 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-76.

 (ஆன்மா)மறுபிறப்பு  தத்துவத்தின் அர்த்தம் இதுதான்..

Image result for மறுபிறப்பு









தனியுடமை சொத்தின் புனிதத்தை
பாதுகாக்கவே மற்றவர் சொத்தின்
மீது ஆசை வைக்காதே என்று
சொல்லப்பட்டதின் அர்த்தமே
மறுபிறப்பின்  கொள்கை

துன்பத்தில் முழ்கியுள்ள
மக்களுக்கு கானல் நீரை
காட்டுவதே மறுபிறப்பின்
தத்துவம்..........இந்த
தத்துவம் இன்றைய துன்பங்களை
மறந்து விடுங்கள் என்று
உபதேசிப்பதோடு நிலவும் சமூக
வேறுபாடுகளை நிறுவப்படுத்தவும்
செய்கிறது மறுபிறப்பு சித்தாந்தம்.


ஞாயிறு 26 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-75.

உண்மையும் பொய்யும்.........




Image result for சொர்க்கம் நரகம்





நான் பிறந்தது உண்மை
நீ என் முன் இருப்பது உண்மை
நான் உண்டதும் உண்மை
நீ அவசரமாய்  போய் பேண்டதும் உண்மை
நான் உன்னிடம் கடன் வாங்கியதும் உண்மை
நீ கொடுத்த கடனுக்கு நான் வட்டி கட்டினதும் உண்மை
 நான் உன்னிடம் ஏமாந்தது உண்மை
நீ என்னை ஏமாற்றியதும் உண்மை
உனக்கு முன்னோ பின்னோ நான் சாவதும் உண்மை
நீ சாவதும் உண்மை..ஆனால்  சாகும்போது
அநியாயம் செய்தவன்  நரகத்துக்கும்
நேர்மையாய் இருந்தவன் சொர்க்கத்துக்கும்
போவான் என்பது மட்டும் பொய்..பொய்...
 நரகம் என்று ஒன்று இருந்தால் அநியாயம் செய்வதற்கு
அநியாயக்காரன் பயப்பட வேண்டுமல்லவா..
பொய் வழக்கு போடுபவன். பொய்யாய் தீர்ப்பு
சொல்றவன், தேர்தலில் பொய் வாக்குறுதி
சொல்பவன். கொலைகாரன் கொள்ளைக்காரன்
போன்ற அநியாயக்காரன்கள் நரகத்தை கண்டு
பயப்பட வேண்டமல்லவா...யாரும் பயம்படாமல்
துணிந்தல்லவா அநியாயம் செய்கிறார்கள்.


உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்
நான் வாழும்போது ஒரு தடவையாவது
அந்தச் சொர்க்கத்தை கண்டறியவில்லை
 என் வாழ்க்கையில் ஒரு தடவைகூட
கண்டறியாத அந்தச் சொர்க்கத்தை
நான் செத்த பிறகு சொர்க்கம் போவேன்
என்று கூறுவது கடந்தெடுத்த அயோக்கனின் பித்தலாட்டம்
 இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.........


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...