பக்கங்கள்

சனி 07 2017

பொய்ப்புகாரில் அபராதம்

அந்தக் காவல் நிலையத்தில்    சங்கிலியால் கட்டப்பட்டுக் கடந்தவரின் அருகில் அவர் ... இன்ஸ்பெக்டர் ரவுன்ட்ஸ் போய் இருப்பதால் அவர் வந்தப் பிறகு விசாரிப்பதற்க்காக  போலீஸ்காரர்களின் வசவு மட்டும் மிரட்டலோடு அவர் உட்கார வைக்கப்பட்டார்..

காவல் நிலையத்திற்குள் வருகிற ஒவ்வொரு போலீஸ் காரர்களும் தனியாக உட்கார வைக்கப்பட்டவர்களை என்ன? ஏது? என்று விசாரித்தனர்... அப்படி ஒருவரை என்ன விபரம் என்று கேட்டு விசாரித்துக் கொண்டே கடுங்கோபத்துடன் டம்மு.டும்முன்னு  விசாரிக்கும் போலீசார் தாக்குவார்கள்...
சிறப்பு உதவி ஆய்வாளர் என்று சொல்லப்படும் போலீஸ்காரர்களும் தங்கள் அதிகார பலத்தை விசாரனைக்கு அழைத்து வந்து உட்கார வைக்கப்பட்டவர்களிடம் காட்டுவார்கள்....

இப்படி வருகிற  ஒவ்வொரு போலீசும்  தங்கள் அதிகார பலத்தை கட்டிக் கொண்டே வரும்பொழுது  அவர் முறை வந்த பொழுது... ரவுண்டஸ் போயிருந்த இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார்.... அவர்  நிலையத்துக்குள் வந்தவுடன் ஒவ்வொரு போலீசும் தங்கள் மொழியில் அய்யா வணக்கம் அய்யா. வணக்கம் சார், என்று சல்யூட் அடிக்காத குறையாக மரியாதை செலுத்தினார்கள் காவல் நிலைய வாசலில் நின்ற துப்பாக்கி ஏந்தியபடி நின்ற போலீஸ் மட்டும். டப்..டுப் என்று சத்தம் எழுப்பி துப்பாக்கி தூக்கி  மரியாதை செலுத்தினார். அவர் அப்படி  செய்தது.. காவல் நிலையத்துக்குள் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார் என்பதற்கும் ஒரு அடையாள அறிவிப்பாகவும் இருந்தது.

 போலீஸ காரர்களிடம் அடி வாங்காமல் தப்பித்த அவர்..  வந்திருந்த பெரிய பிரமுகர்களை சந்தித்து அவர்களின் புகார்களை பெற்றுக் கொண்டு சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவர்கள் சென்ற பிறகு... அவர் இன்ஸ்பெக்டர் முன் நிறத்தப்பட்டார்.


“பேரு... என்னடா...”..

“கணேசன் சார்,

“ என்ன வேல பாக்குற..”

“ பிரிண்டிங் தொழில் பாக்குறேன் சார்,

“ புகார் கொடுத்த அவரின் சித்தப்பனின் மனைவியை அழைத்தார். அருகில் நின்றிருந்த அந்தப்பெண் இன்ஸ்பெக்டர் முன் நின்றதும்”

“ இந்தம்மா யாருடா..”

“ என் அப்பாக்கூட பிறந்தவரின் மனைவி..சார்,”

“ என்னடா..சித்தப்பன் மனைவி சித்தின்னு சொல்லத் தெரியாதா..டா”“?ஃஃஃஃஃஃ

“..................”

“இந்தம்மாவ கெடுக்க முற்பட்டாயா..”

“ சார்..இல்ல சார், இந்தம்மா பொய்யா என் மேல புகார் கொடுத்திருக்காங்க  சார், ”

“வெண்ண.... பொய்ப் புகாரா.. நிஜம்மா... நா... சொல்லனும்டா...” நீ என்ன பொய்ப் புகாருன்னு  சொல்றது..... வெண்ண  பேண்ட்ட கலட்டுறா....”-- ஒரு போலீஸ்காரரை பேர் சொல்லி கூப்பிட்டார்.” வந்த போலீஸ் காரர்தான்.. அவரை வீட்டிலுிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தவர்.. அவரிடம் விசாரித்தார்..


“ போலீஸ்காரர் விசயத்தை சொன்னார்.   அய்யா.. ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்க..... இவரு..அவரு வீட்டை ஒட்டி க்ககூஸ்க்கு செப்டாங்கிக்காக  குழி தோண்டியிருக்கிறார். . இந்தம்மா வழக்கு நடககுற இடத்துல எப்படிடா.. குழி தோண்ட போச்சன்னு தடுத்து இருக்கு... அதுல இவரு சேலைய உருவி... ரவிக்கையை கிழிச்சு கெடுக்க முயற்சி பன்னயிருக்கிறார் அய்யா என்றார்.

“ சார்..  சண்டை நடந்தது உண்மைதான் சார், ஆனால் சேலையை உருவி, சட்டையை எல்லாம் கிழிக்கல சார், இந்தம்மாவும் இவரு வீட்டுக்காரரும் மற்றும் இவங்க வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து என்னைத்தான் அடி அடின்னு அடிச்சாங்க.... சார், நான் இவங்கள.. அடிக்கல சார், இவங்க அடிக்கிற அடியைத்தான் தடுத்தேன் சார்,”....

“பொய் சொல்றான் சார், குழி தோண்டக்கூடதுன்னு சொல்லத்தான் செய்தோம் சார், கெட்ட வார்த்தையில என்ன திட்டி.. என் வீட்டுக்கார கீழே தள்ளி , என்கிட்ட வந்து நான் கட்டியிருந்த சேலையையும் சட்டையையும் கிழித்துவிட்டான் சார்.. அதுக்குள்ள என்  பிள்ளைக வந்து இவன்கிட்ட இருந்து என்ன காப்பத்த்தியிருச்சங்க  சார்,


“இவன் உனக்கு என்னம்மா வேனும்”

” மச்சான் மகன் சார், என் வீட்டுக்காரருக்கு அண்ணன் மகன் சார்,” இவனுடைய அம்மா என் அப்பாவோட பிற்ந்த பெரியப்பா மக சார்.. எனக்கு அக்கா்  சார்....”

“ அப்ப..  இவன் உனக்கு மகன் முறை வேனும் என்றபடி குற்றம் சாட்டப்பட்ட அவரை இனஸ்பெக்டர் பார்த்த போது.. பேண்ட்டை கழற்றி சட்டியோடு நின்றிருந்தார்.”

“ஏன்டா.. பேண்ட கழட்டுன....” நீங்கதான் தான் கழட்ட சொன்னீங்க..”

“ மாட்டுறா வெண்ண.”.. என்று இன்ஸ்பெக்டர் சவுண்டு விட்டதும்  கையில் வைத்திருந்த பேண்ட்டை திரும்பவும் அணிந்து கொண்டார்.”

“ டே...நாயி... உனக்கு அம்மாட.. நாயி....”

“ சார். இந்தம்மா.. பொய் சொல்லுது சார்”

“ டேய்.. வாயை மூடுறா...” உனக்கு வயசு என்னடா.... . ஒனக்கு பொண்டாட்டி பிள்ள இருக்கா..டா”

“ நான் கலியாணம் முடிக்கல சார்”

“ அப்போது  வயர்லெஸ் ஒலிக்க.... இன்ஸ்பெக்டரிடம் கொண்டுவந்தார் ஒரு போலீஸ்காரர்... அதை வாங்கிய இன்ஸ் பெக்டர் .. கேட்டுவிட்டு திரும்பவும் அந்தப் போலீஸ்காரரிடம் கொடுத்துவிட்டு,.. அந்தப் பெண்ணிடம்  , நீ போயிட்டு சாயந்தரமா..வாம்மா என்று சொல்லிவிட்டு,  வேறு போலீஸகாரரை கூப்பிட்டு.. இவனை உள்ளறையில் இருக்க வை.. என்றுவிட்டு தொப்பியை கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் படை சூழ... விரைவாக வெளியே சென்றார்.

வெள்ளி 06 2017

என்ன..கணேசா... நல்லாயிருக்கியா......???

என்ன கணேசா...நல்லாயிருக்கியா...என்று இருவரும் கேட்டபோது.... அவர்கள் யாரென்று தெரியாமல் திகைத்து நின்றேன்... என் திகைப்பை பார்த்து பின் அவர்களே..எங்களைத் தெரியலையா என்று கேட்டபோது...நாகரிகம் கருதி அவர்கள் யாரென்று தெரியாததை மறைத்து ஒப்புக்காக... ஓ..தெரியுமே என்று மழுப்பி.. நல்லாயிருக்கேன்..நீங்க நல்லாயிருக்கீங்களா என்று நலம் விசாரித்தேன்..

பின் அவர்கள் நான் கோர்ட்டுக்கு வந்த விபரத்தை கேட்டபோது... இன்னுமா..? உன் வீட்டு வழக்கு முடியல...என்று ஆச்சரியமாய் கேட்டார்கள்.. அவர்களுக்கு விபரத்தை கூறிவிட்டு இருபத்தியோரு ஆண்டாக நடைபெறுகிறது... என்று கூறியபோது  .. அவர்கள் தங்கள் சந்தேகத்தை தெரிவித்தார்கள்.  அப்போதுதான் அவர்கள்  என் அம்மா பிறந்த ஊரும் என் அக்காவை கட்டிக் கொடுத்துள்ள ஊரின்  ஊர்க்காரர்கள் என்று தெரிந்தது.உறவுக்காரர்கள் என்றால் எதையாவது ஒரு முறையைச் சொல்லி அல்லவா கூப்பிட்டு இருப்பார்கள் என்ற முடிவுடன் இவர்கள் ஊரிலுள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டாலும் இவர்கள் இன்னாரென்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை...

அவர்கள்.  கேட்டார்கள்.... டவுன்ல வீட்டைக்கட்டுறத விட்டுப்புட்டு, கிராமத்துல வீட்டைக் கட்டியிருக்கிற.... சென்ட்ரிங்ல சுவர கட்டிப்பிட்டு... சென்ட்டிரிங்ல வீட்ட கட்டாம  ஓட்டு வீட்ட போட்டுட்ட..ஏன் ? கணேசா  என்றார்கள்...


கிடைக்க வேண்டிய பணம் கைக்கு கிடைக்காத உண்மை காரணத்தை அவர்களிடம் சொல்லாமல் நடைமுறையில் நிலவியதை   காரணமாக எடுத்துக் கொண்டு

அவர்களுக்கு விபரத்தைச் சொன்னேன்... டவுன்ல குடியிருக்கிற வீடுதான் இருபத்தியோரு வருசமா வழக்கு நடக்குது.. மீறி கட்டியிருந்தேன்னா, ஒருத்தன் மாத்தி ஒருத்தன் போலீசில ரிப்போர்ட் கொடுத்தே சேமித்த காசையெல்லாம் செலவழிக்க வச்சிருப்பாங்கே.... அதோட என் அக்கா மகன்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டியிருப்பதால்.. அங்கு வசதியான வீடு இல்லாததாலும்தான்  வீடு கட்டினேன். முதலில் சென்டிரிங் வீடு கட்டுவதற்குத்தான் பிளான் பண்ணினேன்.... நகரத்தல இருக்கிற மாதிரிதான் கிராமத்திலும் பொறாமைப் பட்டாங்க..... பார்ரா.. வக்கத்த என் மச்சினனுக்கும் எனது அக்காவின் மகனுக்கும்  வீடு கட்டுரான்டா  என்றனர்.. வீட்டுச் சுவரு ஏற..ஏற  நல்லா பேசிக்கிட்டு இருந்த உறவுக்காரங்கே  காச்சுமூச்சுன்னு பேசுறத நிப்பாட்டிடாங்க....


அதோடு சுவரு ஏறி  மேல்தளம் சென்ட்ரிங் போட முயன்றபோது... திடிரென்று என் அம்மா இறந்துட்டாங்க..... என் நலனில் மிகவும் அக்கறை கொண்ட நண்பர்களும் வேண்டியவங்களும்..... கண்ணேர் பட்டுவிட்டது.... அதனால்தான் உங்கம்மா  திடிரென்று இறந்தவிட்டாங்க.... மீறி கட்டினா மீண்டும் ஏதாவது துக்கம் நிகழும் என்று வலியுறுத்தி சொன்னார்கள்... அதனால்தான் சென்டிரிங் ல மேல் தளம் போடாமல் ஓடு போட்டு காட்டேஜ் வீடு மாதிரி கட்டிவிட்டேன்.. என்று அவர்களிடம் சொன்னபோது...

ஏ...... ஆமாப்பா....  குடிக்க கஞ்சி கிடைக்காதவன்  வீடு கட்டினா..... பொறாமைப்படாம...வாழ்த்தவா செய்வாங்கே.....  கணேசா.... ரைட்டு கணேசா... வீட்டை  போயி பார்த்தோம் ... கணேசா.... 36க்கு 16 அடியில வீட கட்டிருந்த...  நீ கட்டின மாதிரி அந்த ஊருல எவனும் கட்டல....வெளியில பாத்தா ஓடு வீடுன்னுதான் தெரியும் உள்ளே பார்த்தா.. பங்களா வீடு மாதிரி இருக்குது கணேசா.... ஏழு எட்டு ரூபா செலவு பன்னுன நீ... சென்டிரிங் போட்டு இருநத வீடு ஒரே தூக்கா தூக்கியிருக்கும்  அதனால்தான் கேட்டோம் கணேசா  என்றார்கள்....

விடைபெறும்போது கேட்டார்கள்.உன் அக்கா மகனுக்கு எப்போ  கல்யாணம் என்றபோது... இப்பத்தான் வீட்டை கட்டி முடிச்சேன். அடுத்தது கலயாணம்தான்... பெண்ணு தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னபோது..   ஆமாம்மா..என்றார்கள்...

அவர்கள் என்னிடம் விடைபெற்று சென்ற பிறகும்  அவர்களுக்கு நான் விடை கொடு்த்து அனுப்பிய பின்பும்  இந்தப் பதிவு எழுதும்வரையிலும் அவர்கள் யார் என்ற விபரம்  என் மண்டைக்குள் உதிக்கவுமில்லை..எழவுமில்லை.... கணேசா..நல்லாயிருக்கியா... என்று அவர்கள் கேட்டது மட்டும் நிணைவில் அழியாமல் இருக்கிறது... ..

புதன் 04 2017

நண்பருக்கு சொன்ன சொந்த விவரக்கதை.

என்ன கணேஷ் நீயும்..சிங்க முத்துவும்... நெடுநேரமா பேசிக்கிட்டு இருந்தீங்களே...அப்படி என்ன அவ்வள நேரம் பேசிக்கிட்டு இருந்திங்க....

 எங்க வீட்டுக்கு கழிப்பறை கட்ட முற்ப்பட்டபோது.. என்அப்பனோட பிறந்தவனின் பொண்டாட்டி வழக்கு நடக்கிற இடத்துல  நீ எப்படி கழிப்பறை கட்டலாம் கட்டக்கூடாதுன்னு தடுத்தா... என் அப்பனோட பிறந்த இன்னொருத்தனுடன் சேர்ந்து என்ன அடித்துவிட்டனர். என்னை அடித்துவிட்டதோடு..விடாமல்... என் அப்பனோட பிறந்தவனின் பொண்டாட்டிய நான் மானபங்க படுத்தியதாக சட்டையை கிழித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனில் பொய்ப்புகார் கொடுத்திட்டா... போலீஸ்காரங்கே வந்து என்ன இழுத்துட்டு போயி ரெண்டு நாளா போலீஸ் ஸ்டேசன்ல வச்சு விசாரிச்சாங்க.... அதப் பத்தி விசாரிச்சாரு... அதத்தான் அவருகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.. அப்பத்தான் நீங்க பாத்திருங்கிங்க.......

ஓ.... அதுவா..... ஆமா...நானும்.... கேள்விப்பட்டேன்..... என்ன விபரம்..... நீ குடியிருக்கிற வீடும் அதைச் சேர்ந்த ஆறு சென்ட் இடமும் அய்யணன அம்பலத்துக்கு சொந்தமுன்னு  வழக்கு போட்டது தெரியும்.. பிறகு என்னாச்சு கணேஷ்....


இப்ப நா..குடியிருக்கிற வீடு அந்த ஆளுக்கு சொந்தமுன்னும் என் தாய் தந்தையர் வாடகைக்கு குடியிருந்து வந்ததாகவும்.கடந்த மூன்று வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் . நான் குடியிருக்கும் வீடு ஓலை குடிசை என்பதால் பழுதாகி விட்டதென்றும் அந்த வீட்டை இடித்து விட்டு சென்ட்ரிங் வீடு கட்ட இருப்பதால் மேற்படி வீட்டில் குடிருக்கும் எங்களை காலி செய்து சொத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டி விளிம்புகை பரிகாரம் வேண்டி 1989 யே வழக்கு போட்டாருங்க.... அந்த வழக்கு போடுவதற்கு முன்னமே் எனக்கு யாருன்னு தெரியாது தாத்தான்னு சொன்னாங்க..பன்டாரம் என்பவருகிட்ட இருந்து செல்லம்மா என்வரு கிரையம் வாங்கியதாக ஒரு பத்திரமும்,  இந்த செல்லம்மா என்பவரிடமிருந்து அய்யணன் அம்பலம் கிரையம் வாங்கியதாக ஒரு பத்திரத்த அடிப்படையா வச்சு வழக்கு போட்டு இருக்காருங்க... இந்த வழக்கு போடுவதற்கு ஒன்னு ரெண்டு வருசத்துக்கு முன்பு..என் அப்பா பெயிரில் இருந்த வீட்டுவரியை முறைகேடா. அய்யணன் அம்பலம் பெருக்கு மாத்திப்புட்டுத்தான் வழக்கு போடுறாருங்க.....


அதெப்படி... உன் அப்பன் பெயரில் உள்ள வீட்டு வரிய அந்தாளுக்கு பெயருக்கு மாற்றினாங்கே....

அந்த ஆளு..நம்ம ஏரியா..மாநகராட்சியாக ஆவதற்கு முன்பு பஞ்சாயத்தா இருந்த போது  அந்தாளு.. பஞ்சாயத்து தலைவரா இருந்தவருயில்லையா..அந்தப் பவரு வச்சு  ரெண்டு பத்திரத்தக் காட்டி அவரு பெயருக்கு மாத்திட்டாரு...அதும்போல..எங்கம்மாவக்கு ஒன்னும் தெரியாது. எனக்கும் அதைப் பத்தின விபரமும் தெரியாது...இப்ப இருக்கிற மாதிரிதானே அப்பவும் காசுக்காக எதை வேனும்முன்னாலும் செஞ்சுருக்காங்கே.ல......


அப்படி..மாத்திட்டாங்கேளா.....!!!!


பத்து வருசம் கழிச்சு விசாரனை நடந்துச்சு..அதுக்கு இடையிலே... உங்களுக்குத்தான் தெரியுமே... கோயில் பூசாரியான குருசாமி..பாதையில்லாம விலை போகாத இடத்த குறைந்த விலைக்கு வாங்கி. நான் குடியிருந்து வருவதும் அய்யணன் அம்பலம் என் தாயார்மீது வழக்கு போட்ட   இடத்தின் ஒரு பகுதியை பாதையாக பயன் படுத்தி வந்தததும்...எதிர்த்து கேட்டதுக்காக குருசாமியின் வப்பாட்டியான பெத்தம்மாள் மூலமாக என் வீட்டீல் தீவைத்ததும் அதற்கு ஈடாக..குறைந்த வியைில் வாங்கிய அந்த இடத்தின் பாதியை அவள் பெருக்கும் எழுதிக் கொடுத்தானே.. என் வீட்டில் தீ வைத்த அந்த சம்பவத்தில் போது    ”அழகிரி மீதான் கொலை வழக்கை விசாரிச்ச முருகேசன் என்ற போலீஸ் ஆய்வாளர்”..நம்ம பகுதி போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்தபோது  குருசாமிகிட்டேயும் பெத்தம்மாள் புருசன்  வடிவேலுகிட்டேயும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு. .. காலையிலிருந்து இரவு வரை ஸ்டேசனிலே இருந்த என்னையும் என் அம்மாவையும் பெத்தம்மாள்வீட்டுக்கு தீவைத்தாக பொய் வழக்கு போட்டு ஜெயில்ல தள்ளியதோடு... எதிர்த்து கேட்ட.. மானபங்கம் செஞ்சுட்டேன்னு பொய்ப்புகார் கொடுத்தவளின் புருசன்காரனையும் அடிச்சு எங்களோடு ஜெயில்ல தள்ளினதுதான் தெரியுமே..இந்த குருசாமி  மின்சார வாரியத்திலும் பெத்தம்மாளின் புருசன் பிஆர்சியிலும் வேலை  பார்த்ததால் பெத்தம்மாள் ஆடிய ஆட்டம்தான் உங்களுக்கு தெரியுமே.....

குருசாமியும். பெத்தம்மாள் புருசன் வடிவேலும் இணை பிரியா நண்பர்களாச்சே கணேஷ்.....

அந்த குருசாமியின் தூண்டிய தூன்டலில் பெத்தாம்மாள் என்ன ஆட்டம் ஆடினா......

...அந்த ஆட்டத்துக்குத்தான்... அனுஅனுவாக சித்ரவதைப்பட்டு நாத்தமெடுத்து செத்தாளே....!!!

சரி..அந்தக் கத... அப்படி கெடக்கட்டும்... பத்து வருடம  கழிச்சு விசாரிச்சு கோர்ட்டுல தீர்ப்பு வந்துச்சு.... வழக்கிடை சொத்தானது. பிரதிவாதியின் கணவர் கட்டியதால்தான் அவர் பெயரில் வீட்டுவரி உள்ளது...வாதி வாங்கியதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து சொத்து அவருக்கு பாத்தியமானதுக்கான எந்த ஆதாரமும் இல்லை... பிரதி வாதிகளிடம் வாடகை வாங்கியதாக காட்டப்படும் பாக்கெட் நோட்டின் மெய்யத்தன்மையை பிரதிவாதி நிருபிக்க வில்லை..பிரதிவாதியின் கணவர் வாதியிடம் பன்னையாளாக வேலை செய்திருக்கிறார் என்று நிருபனமாகிறது..ஆகையால்..இந்த வழக்கில் வாதிக்கு எந்தவித பரிகாரமும் கிடைப்பதற்க்கில்லை என்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.. சொத்து யாருக்கு உரிமை என்பதை உரிமையில் கோர்ட்டில் தீர்த்துக் கொள்ளச் சொல்லி... அந்தாளு போட்ட வழக்கு தள்ளுபடியாகிவிட்டது..
உடனே அந்த ஆளு அடுத்த கோர்டில் அப்பீல் செய்கிறார்.


அவன் என்ன அன்றாட காய்ச்சியா விட்டுட்டு போக......

கேளுங்க..சொல்றேன்..... அப்பீல் கோர்ட்ல ரெண்டு வருசம் கழிச்சு விசாரிச்சாங்க... அதுல  கூடுதலா.என்ன சொன்னாங்கன்னா... என் அப்பா பெயரிலிருந்த வீட்டுவரி எப்படி அய்யணன் அம்பலம் பெயருக்க மாறுச்சுன்னு ஒரு இக்கு வச்சு.. அங்கேயும் இந்தாளு போட்ட வழக்கு தள்ளுபடி ஆச்சு... 
இந்த தீர்ப்பு முடிந்த கையோடு... வெளி வேலைக்கு போயிகிட்டு இருந்த நானும் சொந்தமாக பைண்டிங்-பிரிண்டிங்் தொழில வீட்டிலேயே தொடங்கிட்டேன்..

இது தெரிஞ்சும் அந்தாளு..படையோட வந்தாப்ல...வந்தப் படையிலே..எனக்கு தெரிஞ்ச முகங்களும் இருந்ததால்.. விபரத்தை சொல்லி பேசினேன். வந்தவர்களின் பேச்சைக் கேட்டகாமல் உரிமையில் கோர்ட்டில் 1996ல் என் மீதும் என் அம்மா மீதும் வழக்கு தொடுத்தாரரு... அப்ப போட்ட வழக்கு இன்னிய வரைக்கும் கிட்டதட்ட இருபத்தியோரு வருசமாக வாய்தாவில.. இருக்கு.. இதுக்கு இடையிலே..அந்தாளு  சாகுதுக்கு முன்னாடி.. என் அப்பன்கூட பிறந்வங்களை தூண்டிவிட்டு இடத்துல பங்கு கேட்டு என்னோட சண்டையிட்டனர். அப்பவும் போலீஸ் ஸ்டேசனுக்கு போயி என் மீது புகார் கொடுத்தார்கள்..... நானும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கிடை சொத்தில் அவர்களுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் அவர்களும் என் மீது வழக்கு போட்டு எடுத்துக் கொள்ளட்டும் என்று என் தரப்பு வாதத்ததை அவர்களுக்கு சாதகமான போலீஸகாரர்களிடம் சொன்னதும் அவர்களும் என் அப்பனுடன் பிறந்த மூன்று சகோரர்களும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் ரெண்டு பேர் இறந்து போக அவர்கள் வாரிசுகள் ஆறும் பேரும்பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்னர்... 

அப்போ..அய்யணன் அம்பலமும் அந்தாளின் மூத்த மகனும் செத்துப்போனாங்களே....அவிங்க..வாரிசு.....


அவிங்க வாரிசுகளான..மொத்த உறுப்பினகளான 12 பேரும் வாதிகளாக சேர்க்கப்பட்டனர... இத்தோடு என் அம்மாவும் இறந்துவிட்டபடியால்  என் அக்காவும் என்னுடன் சேர்த்து பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது .

அடப்பாவிகளா...!!! மூன்று பேருல..விசாரிச்சு முடிக்கிறத விட்டுப்புட்டு... வாதி தரப்புல 12 பேரு... ஒன் தரப்புல உன்னையும் சேர்த்து ரெண்டு பேரு, உன் சித்தப்பங்கே தரப்புல...ஒன்னு..ரெண்டு..மூனு... ஆறு பேரு.... இத்தினி பேரையும் விசாரித்து தீர்ப்பு சொல்றதுக்குல்ல.....

அங்கு இடமே.. இருக்காது... சுத்தி இருக்கிறவங்கல்ல.... குருசாமி அவனின் உறவுக்காரர்கள் இப்பவே.... பாதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்....இந்த லட்சணத்துலதான்..... வெளிக்கு போக  கழிப்பறை கட்டியதுக்கு இவ்வளவு சண்டை சச்சரவு..... நானு ஒத்த  ஆளு..இவிங்கள எதித்து நிக்க முடியல.... அவிங்க பலபேரு...... பூசாரி குருசாமி..அவனோட சொந்தப் பிரச்சினையை பொதுப் பிரச்சினைன்னு சொல்லி  வீட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் வரி போட்டு  தெம்பா என்ன ஒழித்துக் கட்டுறாங்கே.....


இவ்வளவு பிரச்சினையில... ஏன்? அங்க இருக்கிற... வர்ர விலைக்கு வித்துட்டு வேறு பக்கம் வந்துடலாம்ல.....

அப்படித்தான் நெணச்சேன்... வயக்காட்டு பக்கம் போயி விலையை கேட்டா ஒரு சென்ட் ஐந்து இலட்சம்னு சொல்றாங்கே.. ஐந்து லட்சத்துக்கு எங்கே போவேன்.... ஏற்கனவே..நான் சேமித்து வைத்திருந்த ஆறு இலட்சத்தையும் டூவீலர் விபத்தில சிக்கிய என் மருமகனின் சிகிச்சைக்கு செலவழிச்சுட்டேன்... குடியிருக்கிற இடம் வழக்கு நடப்பதால் ரெம்ப ரெம்ப அடிமாட்டு விலைக்கு கேக்குறாங்கே.  வழக்க  அவனே நடத்திருக்கிறாங்களாம்....



ஒருத்தனுக்கு நாலு பக்கம் இம்சைன்னா..உனக்கு  எட்டுப்பக்கமும் இம்சையாவுல..இருக்கு.கணேசு......


என்ன செய்யிறது.. இந்த என் நிலமையைத்தான்... சிங்க முத்துவம் நானும்.... அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.....உங்களுக்கு ரெம்ப போரடிச்சு இருக்கும்..  போய்ட்டு வாங்க.... அடுத்து ஒவ்வொன்னா சொல்றேன்..

திங்கள் 02 2017

வில்லனுக்கு சொல்லும் ஆயுதம்????????

...“ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” முன்னு சொன்னது பொய்யுதானே ”...சித்தப்பு..

“அட..., எப்படிடா...கண்டுபிடிச்ச்......”

“கைய புடுச்சு இழுத்ததா...உம்.பொண்டாட்டி உன் சகல மீது போலீசில  பொய்ப் புகார் கொடுத்தப்பவே... கண்டுபிடுச்சுட்டேன் சித்தப்பு...”

“ அடப்பாவி..... நீ என்..சகலையோட..மகன்னு எனக்கு தெரியாம போச்சே...”

“ தெரிஞ்சிருந்தா.... என்ன..சித்தப்பு செய்திருப்ப...”

“ உங்கப்பனுக்கு பதிலாக... உன்னைய கையப்புடுச்சு இழுத்ததா புகார் கொடுக்கச்  சொல்லியிருப்பேனே...”

“ ஆ.....ஆ.......ஆ......”

“ என்னடா......ஆ ..ன்னு வாயப் பொளக்கிற..... வில்லனுக்கு சொல்லும் ஆயுதும்” முன்னு  இப்பவாவது.... புரிஞ்சுதாட....






ஞாயிறு 01 2017

ஆச்சரியமான ஆச்சரியம்மா இருக்குது கணேசு....

ஏ....ங்..கணேசு...... தலைவருகிட்ட கோயிலப்பத்தியும் சாமியப்பத்தியும் விலா வாரியா...பேசியதை..கதையா.... எழுதிட்ட..... தலைவரு  அவரோட செல்போன்ல படிக்கச் சொல்லி காட்டினாருப்பா.. ...ஆமா.... உன் வீட்டில சாமிய கும்பிடுவதற்கு கோயில கட்டிட்டீயா...... நீ..சாமி  கும்பிடுவதற்கு வயல் வெளிப்பக்கமும்... ஒருநாள்  வயல் வெளியில சாமி கும்பிட்டப்ப  புதுசா வீடு கட்டியிருந்தவங்கே  கல்லக் கொண்டு எறிஞ்சதானால... ஆத்துப்பக்கம் போனதாக கேள்வி பட்டேனே.... ... எப்படி உன் வீட்டுல கோயில கட்டினே.. உன் வீட்டுக்கருகில் கோயில கட்டும்போது... உன் சித்தப்பன் பொண்டாட்டிய தடுத்துல உம்மேல பத்தி  இழுத்ததா போய் புகார் கொடுத்தாலே.... அதை மீறி எப்படி கணேசு கோயில் கட்டுன..... ரெம்ப ஆச்சரியப்பா....... உன் தெருவிலே இருக்கிற தெரு நாட்டாமையும் தெரு முகப்பில இருக்கிற  காளியம்மன் தெருக்கோயிலுக்கு பூசாரியா இருக்கிற..அந்த குருசாமியும் எப்படிய்யா உன்ன கட்டவிட்டாங்கே...........

உங்க ஏரியாவுல முன்பு குடியிருந்த செல்லக் கன்னு கதை கதையா சொன்னான் கணேசு.....செப்பு டாங்கிக்காக சிமெண்ட் உறையை .. தெருப் பொம்பளை எல்லாம் ஆசை நாயாகியா வச்சுஇருக்கிற பூசாரி தெருவுக்குள்ளேயே கொண்டு போக முடியாம  தெருப் பொம்பளைகளை தூண்டிவிட்டு மறிக்க வைத்ததும்,  உன் சித்தப்பன் பொண்டாட்டி அவ பேரு கூட.... ஞாபத்துக்கு வரமாட்டுது கணேசு.... சரி விடு கணேசு பெயரு வரலாட்டி.... அந்த பொம்பள கழிப்பறை கோயில கட்ட குழி தோண்டவிடாமா   மறிச்சதும், தெரு நாட்டாமையான தெரு பூசாரியும் ரோட்டுல இருந்து சிமெண்ட் உறை தடுத்து நின்றதும்...

இவ்வளவு அநியாயம் செய்தும் நீ கோபப்படாம.... வந்த போலீஸ்காரன் கிட்ட எல்லா விபரத்தையும் சொல்லியும்... வந்த போலீஸ்காரன் ஊரோடு ஒத்துப்போ என்று சொன்னதும்.. நீ ஊரோடு ஒத்து போகமுடியாது என்று சொன்னதும் ஒரு வாரமாக  உன்னை போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் இழுத்தடித்ததும். தெரு முகப்பில் இருந்த சிமெண்ட உறைஇரண்டை  பூசாரிபய ஆட்கள்“ உடைத்துவிட்டதும்.....சோர்வுற்று பயந்து பின்வாங்காமல்....போலீஸ் காரனும், உன் தெருக்காரனும் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று  கடைசியாக கோயில் கட்டி விட்டதை சொன்னான் கணேசு.....

பலவித தடைகற்களை போட்டும் நீ கோயில் கட்டியதை தடுக்க முடியாத அந்த பூசாரி பய தெருப்பாதையை தனது பாதை என்றும் ரோடு போடக்கூடாது என்றும் நீ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாது என்று கோர்ட்டிலே வழக்கு போட்டு விட்டானாமே..... ஆமா செப்டாங்கி நிறைந்துவிட்டால் என்ன செய்வே.... அப்போதும் பூசாரி பய எதாவது பன்னுவானே...கணேசு

ஏற்கனவே... புறம் போக்கு இடத்துல கோயிலையயும் கட்டிவிட்டு, தெருப் பாதை செல்லும் பிரதான இடத்தில நிழல் குடையும் நீளமாக  கட்டிவிட்டதால் கழிவு நீரை இந்த வழியா கொண்டு போக விடமாட்டோமுன்னு சொல்லப் போறான் கணேசு....

தெருக் கோயிலுக்கு பின்னாடி இருக்கிற பெரிய கட்டிடம் அந்தக் கோயிலில் கிரகம் எடுத்து சாமியாடுபவன் என்று சொன்னான். அதோடு மாநகராட்சியில அந்தக் கட்டிடக்காரன் உதவி கமிசனராக இருக்கானமே.....அந்தக் உதவிக் கமிசனர்காரன் உன்னை உண்டு இல்லைன்னு பாக்குறானாமே.. கணேசு.... பாத்து கவனமாக காய நகர்த்து கணேசு.... எங்களப்போல..கூட்டாளின்னு வச்சக்க  உன்னப்போல பயந்துகிட்டு இருக்கமாட்டோம்..வக்காளி செத்தாலும் பரவாயில்லடா... நம்மல வாழ விடாத பயல வெட்டி சாய்ச்சு பிடுவோம்.... பாவம்... உன்ன நெணச்ச பாவமா இருக்குது... நேர்மைக்கு. காலமில்லன்னு சொலற்து.. சும்மா இல்லேன்னு தெரியுது... நாங்க வந்து ஞாயத்த பேசினாக்கூட... சாதியச் சொல்லி திட்டிப்பிட்டாங்கன்னு புரளி கிளப்பி போலீசுக்கு போவாங்கே.........

எப்படியோ...சாமாளி..... உங்க தெருக்காரங்க.... புதுவித சாதிக்காரன் ஆன  ராமதாசு மாதிரி  வளர்ந்து வாராங்கே.....அதாவது பாப்பாபட்டி கீரிப்பட்டி மாதிரியின்னு சொல்லலாம்   . நீ... உன் மொழியான கழிப்பறை கோயில் கட்டியதை கேள்விப்பட்டதும் ஆச்சரியமான ஆச்சரியம்மா  இருக்குது.கணேசு....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...