பக்கங்கள்

சனி 05 2014

மூன்று மயத்தையும் ஓட்டால் தடுக்க முடியுமா,,,...,,,???


questionable-ballot-box
படம் வினவு
http://www.vinavu.com/wp-content/uploads/2014/04/questionable-ballot-box.jpg













கிராமத்தை
அழித்து
நகரத்தை
புரட்டிபோட்டு
கடலிலே
கலக்கும்
வெள்ளத்தால்
கடல் மட்டம்
உயர்வதே
தனியார்மயம்

கிராமத்தை
அழித்தும்
நகரத்தை
புரட்டிபோட்டும்
ஆர்ப்பரித்து வரும்
வெள்ளத்தை
தடுக்காமல்
உவகை கொள்ள
வரவேற்பதே
தாராளமயம்

உயரும் கடல்
நீர் மட்டத்தால்
பள்ளமான
இடங்கள்
முழ்கியும்
மேடான
இடங்கள்
வெளி வருவதே
உலகமயம்

தனியார்மயம்
தாராளமயம்
உலகமயம்
இந்த மூன்று
மயத்தையும்
நீங்கள் அளிக்கும்
வோட்டால்
தடுக்க முடியுமா...???
வாக்காளர்களே!!!!

வெள்ளி 04 2014

”சுற்றி வரும் மதுப்பணம்”

படம் மாலைமலர்












மதுப்பணம் கஜனாவை நிரப்புகிறது
நிரம்பிய கஜனா பணம் ஆட்சியாளர்களின்
அசையும் அசையா சொத்துக்களை பெருக்கிறது
சொத்துக்களை பெருக்கிய பணம் தேர்தலில்
ஓட்டுக்காக தரப்படுகிறது.

ஓட்டுக்காக பெற்றப பணம் மீண்டும்
மதுப்பணமாக கஜனாவை நிரப்புகிறது.
இதனால் தெரிவது யாதெனில் பூமியைப் போல்
மதுப்பணமும் சுற்றிச் சுற்றி வர்ர்கிறது.


வியாழன் 03 2014

நல்லா இருக்குதுங்கய்யா உங்க ஞாயம்.............!!!

questionable-ballot-box
படம்வினவு












இந்திய  ஓட்டு சீட்டு கட்சிகளின் தேர்தல்பாதையான திருடர் பாதையில் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 49ஒ படிவத்திற்கு மாற்றாக பேப்பர் இல்லாமல்,கையெழுத்து இல்லாமல் ஓட்டு கட்சிகளின் படோபடமான பிரச்சாரம் இல்லாமல் எந்த ஒரு வாக்குறுதி இல்லாமல் வேட்பாளர் களத்தில குதித்திருக்கும்  வேட்பாளர் “நோட்டா” என்ற எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பொத்தான்தான்.

ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகளும், ஜனநாயகத்  தேர்தல் என்று ஊதி பெருக்கும் ஊடகங்களும்.பத்திரிக்கை தூண்களும் அராஜக தேர்தலை புறக்கணிக்க கோரும் அரசியல் துணிவில்லாத நல்லவர்களுக்கும் சட்டப்பூர்வமான சந்து பொந்துதான் இந்த “நோட்டா” பொத்தான்.

வழக்கம் போலவே, வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து ஓட்டு சீட்டு ஊழல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்தால்.சாதி.மத,இன அரசியலுக்கும் கட்சிகளுக்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் என்றும், ஊழல் கட்சிகளை ஜனநாயகப் பாதைக்கு திருப்பி விடலாம் என்றும்  கதை விடுகிறார்கள்.

 சரி அந்த கதைப்படியே வைத்துக் கொண்டாலும் ஓட்டு போடு.....ஓட்டு போடு.......என்று நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரப் படுத்தும் தேர்தல் ஆணையம் ஒப்புக்குக்கூட “நோட்டா”வைப்பத்தி விளம்பரம் செய்வதில்லை....ஏன்?..... இது ஜனநாயகத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் எந்த வகையான  லட்சனம்........

 ஜனநாயகத் தேர்தல் என்றும் வாக்களிப்பது நமது உரிமை என்றும் பீத்தவது மாதிரி   ஊழல் கட்சிகளை திருத்த ஜனநாயகத்தை நிலை நிறுத்த என்பது மாதிரியாகவோ.....அல்லது தேர்தல் ஆணையத்துக்கு தோதான வார்த்தை ஜாலங்களிலோ ”நோட்டா “வை யும் விளம்பர படுத்த வேண்டுமல்லாவா  அவர்கள் கூறும  இந்திய  ஜனநாயகத்தில்................

நல்லா இருக்குதுங்கய்யா உங்க ஞாயம்



புதன் 02 2014

ரஜினி வாய்ஸ் கொடுத்தால்..மதுவிலக்கு வருமாம்....




ரஜினியின் முன்னால் பக்தரும் இன்னால் ரசிகருமான ஒருவர் கூறியது.

இந்தத் தேர்தலில் பணமும் பணத்துடன் மதுவும்.மதுவுடன் பிரியாணியும் பிரியாணியுடன் பொய் பிரச்சாரங்களும் பெருகியுள்ளது.

சென்ற தேர்தலுக்கு முந்தின தேர்தலில்  தலைவர் ஒரு வாய்ஸ் கொடுத்தார். தலைவர் கொடுத்த வாய்ஸ்க்கு ஒரு சக்தி இருந்தது. அந்த சக்தியை நாடே பிரதிபலித்தது.

இந்தத் தேர்தலில் தலைவர் மதுவிலக்கு பற்றி வாய்ஸ் கொடுத்தால். அந்த வாய்ஸ்க்கும் சக்தி வந்து நாடே பிரதிபலிக்கும்.

ஏனென்றால், தலைவர் உடல்  நலம் குன்றி எமனிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார். மீண்டு வந்ததிலிருந்து  .மதுப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். மது அரக்கனின் கொடுமைகள் என்னவென்று தலைவர்க்கு தெரியும்

இதனால். மனிதக் கடவுளான தலைவர் ஒரு வாய்ஸ் கொடுத்தால்.அவர் வாய்ஸை இந்தியா மட்டுமல்ல ஒலகமே கவனிக்கும் அதனால் மதுவிலக்கும் அமலுக்கு வரும் என்றார்  வாதத்தின் வெளிச்சமான வழக்குரைஞர்.

ஆக..ரஜினி வாய்ஸ் மதுவிலக்குக்கா...........கோச்சடையான் படத்துக்கா என்பது இனிமேல்தான்.............????



செவ்வாய் 01 2014

“மச்சான்ஸ் ஆத்மி” உதயம்........




டேய் மாப்ள...போனவாட்டி தேர்தல்ல....சிங்க முத்து, வடிவேலுக்கு சவால் விட்டதுல,...வடிவேலு தோத்து போயி ஆளு அட்ரஸ் இல்லாம போனமாதிரி

இந்தத் தேர்தல்ல.............சிங்கமுத்து ..ராஜபக்செக்கேவுக்கு சவால் விட்டுக்கான்டா.............வடிவேலு மாதிரி ராஜபக்சே நிச்சயமா தோத்து போயிருவாண்டா.....................

எத வச்சுடா மாப்ளே , ராஜபக்செ தோத்து போயிருவான்னு சொல்ற........

 சிங்க முத்து சவால் விட்டமாதிரி.............“ராஜபக்சே அம்மா முன்னாடி அவ்வளவு   ஈசியா வந்து நின்னுருவானா” டா......

அது முடியாது மாப்ளே..........

அப்புறம்............விந்தியா பிள்ள வேற................படகுல போயி மீன் பிடிக்கிறதாலதானே.. ராஜபக்சே ஆர்மிக்காரன் சுடுறான். அம்மா மத்தியில வந்தா........ஹெலிகாப்ட்டர்ல போயி  மீன் பிடிக்கலாம்னு சொல்லியிருக்குடா மாப்ள..........

ராமராஜா கூட  அம்மா கொடுத்த ஆடு--மாடு குட்டி போடும்முனு கண்டு பிடிச்சு இருக்காப்புல..டா ,மாபள.............

ஆமடா மாப்ள.......... நாமதான்டா..டாஸ்மாக்கை உள்ள இறக்கிகிட்டு புலம்பி தவிச்சுகிட்டு இருக்கோம். நமக்கும சவால் விடவும் வாய்ஸ் கொடக்கவும் கட்சியில்லாம கிடக்கொம்.......ட............

இல்லடா..மாப்ள...........நமக்கும் காலம் பொறந்திருச்சுடா மாப்ளே............

என்னாது நமக்கும் காலம் பொறந்திருச்சா........நிஜமாகவாட    மாப்ள

ஆமாட மாப்ள........“மச்சான்ஸ் ஆத்மி”ன்னு ஒரு கட்சி உதயமாகி இருக்குடா...
அதுக்கு  நிரந்தர தலவி, பொருளாலாரு,செயலாளரு எல்லாமே நமீதாடா..............மாப்ள................

வேனாம் மச்சான் நமீதாவா.......டா..........

ஆமாடா.......தலவீ...நமீதாவ அரசீயல்ல சேரச் சொல்லி மூனு கட்சிகள்ல இருந்து அழைப்பு வந்துச்சுடா மாப்ள............ அந்த மூனு கட்சியிகூட தலவீ நமீதா பேசியிருக்காங்க டா............ பேரம் ஒன்னும் படியல.......... அதனால தன்னுடைய செல்வாக்கை காட்டிடாங்கடா ......“மச்சானஸ் ஆத்மி”
தொடங்கிட்டாங்கடா...........மாப்ள.............

மாப்ள........அந்தக் கட்சியில நாம சேந்திட்டோம்னா......... சிங்கமுத்து மாதிரி லோக்கல் பயலுக்கா நாம சவால் விடுவோம். அமெரிக்காவின் ஓபாமாவுக்கே சவால் விடுவோம்டா   மாப்ள...............

ஆமடா மாப்ள..........விந்தியா மாதிரி ஹெலிகாப்டர்ர்லியா மீன் பிடிக்கச் சொல்லுவோம்.......... செங்கோட்டையில வந்து மீன் பிடிக்க உத்தரவு போட்டுருவோம் மாப்ள...............

சீக்கீரம் வாடா...மாப்ள.............“மச்சான்ஸ் ஆத்மி”யில சேர்ந்திடுவோம். லேட்டா போனா............நம்மல..ஓரங்கட்டி விடுவான்க மச்சான்காரங்கே.






திங்கள் 31 2014

ஒரிஜினல் அக்மார்க குடிமக்கள் சார்பாக வன்மையாக...கண்டிக்கிறோம்....???

படம்.ஜெய நித்திய கல்யானி













இதனால் சகல பெரிய கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

சமீபத்தில் மதுரை ரிங் ரோட்டில் நடந்த  தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாக்காளர்களுக்கு பேசிய படி பணம் கொடுக்கப் படவில்லை, அதோடு ஒருத்தர்க்கு ஒரு குவார்ட்ம் கொடுக்கப்படவில்லை பிரியாணியும் வழங்கப்படவில்லை .

பிரியாணியை சாப்பிட்டு அறியாதவர்களிடம்  வேண்டுமென்றால் குஸ்காவுடன் ரெண்டு முட்டையை சேர்த்து  பிரியாணி என்று நம்ப வைக்கலாம்.

அனால் எங்களைப் போன்று சென்ற தேர்தலில் பிரியாணி சாப்பிட்டு அனுபவப் பட்டவர்களிடமே குஸ்காவை பிரியாணி என்று ஏமாற்றினார்கள்.

சென்ற தேர்தலில் வழங்குவதாக சொன்ன தொகையில் பாதியாவது வழங்கப்பட்டது. இந்தத்தடவை அதுவும் வழங்கப்படவில்லை.

சென்ற தெர்தலில் ஒருத்தருக்கு ஒரு குவார்ட் வழங்கப்பட்டது. இந்தத்தேர்தலில் ஒரு குவார்ட்டை பல  பெக்காக பலருக்கு வழங்கப்பட்டது.
கொடுத்த சரக்கும் தரமானதாக இல்லை.

தேர்தல் கமிசனிடம் கணக்கு காட்டுவதற்க்காக என்று சொல்லி  இப்படி ஏமாற்றலாமா...??நாட்டை வெற்றி பாதையில் கொண்டு செல்லும் அரசியல் கட்சிகளுக்கு இது நல்லதல்ல.......!!.....

குஸ்காவை பிரியாணி என்று ஏமாற்றியதையும் ஒருத்தருக்கு ஒரு குவாட்டர் வழங்காதததையும்  வெயிலில் அவதிப்பட்டதை  கண்டும் பணம் கொடுக்காமல்  ஏமாற்றியதையும் “கூலிக்கு கூட்டம் சேருவோர் சங்கம் சார்பாகவும், ஒரிஜினல் அக்மார்க் குடிமக்கள் சார்பாகவும் வண்மையாக கண்டிக்கிறோம். 

ஞாயிறு 30 2014

அங்காளி--பங்காளிகளின் தேர்தல் சூளுரைகள்!!!


அங்காளி.... 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிட தொண்டர்கள முழு ழூச்சுடன்  விழிப்புணர்வுடன் பாடுபட வேண்டும்.



பங்காளி-!.....தேர்தல் வெற்றியில் நமது கட்சி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்




பங்காளி--2..  தேர்தலில் தி மு க வேட்பாளர்கள் நாண்காம் இடத்துக்கு செல்லும் வகையில் பணியாற்ற வெண்டும். அதுதான் நீங்கள் எனக்கு காட்டும் விசுவாசமாக இருக்க வேண்டும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...