பக்கங்கள்

சனி 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-23




நீதிபதி அரி பரந்தாமன்


போன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே? என்ற போது ..ஆமாம் என்று தலையாட்டியவர்கள்  எல்லாரிடமும் என்ன செய்தி என்று கேட்டபோது.. விழித்தார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு நான் சொன்ன விசயத்தை சொல்லாமல் வேறு வேறு விசயத்தை சொன்னார்கள்..

பிறகு நானாக ... நேத்து என்ன சாப்பிட்டோம் என்று நமக்கே தெரியாது.... இதுல முந்தின வாரத்தக்கு முந்தின வாரம் பரபரப்பான செய்தி எது என்று கேட்டால் விழிக்காமல் என்ன செய்வார்கள்.... சரி

விபரத்துக்கு வருகிறேன்... பேராசிரியர் ஒருவர் அதுவும் பெண் பேராசிரியர் தான் பயிற்றுவிக்கும் மாணவிகள் சிலரை  கல்வியை ஆளும் உயர் அதிகாரிகளின் இச்சையை தணிப்பதற்கு அழைத்த விவகாரம்தான் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது... பேஸபுக், வாட்ச் ஆப், டிவிட்டர் என்று ஏககலத்திலும் சின்னா பட்டுக் கொண்டு இருந்தது..


அந்த விவகாரத்தில் யாரையாவது பலிகடாக்கி ஊத்தி மூடுவதற்கு ரெண்டு விசாரணை கமிட்டி போட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்குமே.... தெரியலைன்னா  பின்னோக்கி போய் திரும்பி பாத்திட்டு வாங்க...அடுத்து ரெண்டு விசாரணை கமிட்டிகளும் தங்கள் தங்கள் பங்குக்கு ஆழமாக குழி தோண்டி கொண்டியிருந்தததை கண்டு பிடித்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவானது ்  சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஊழல்/,பாலியy;/ /காவி -எதிர்ப்பு   என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடத்தியது.


அந்த கூட்டத்திற்கு புறப்படுவதற்கு முன் என்னை தடுப்பது முகமாக திடிரென்று மழை பெய்தது. இம்சையாக தெரிந்தது. எனக்குத்தான் இம்சைகளை தாங்கி தாங்கி பழக்கமாகி விட்டதால்... மழையில் நணைந்தவாறு எனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன்.... அப்படி புறப்பட்டு செல்லும்போது  நட்ட நடு ரோட்டில் ஒதுங்க கூட இடமில்லாத  வேளையில் சட சட வென்று மழை பலமாக கொட்டி என்னை முழவதுமாக நணைத்து விட்டு “ யாருகிட்டே  என்று கேட்டது போல் இருந்தது....

கூட்டம் நடக்கும் இடத்திற்கும்  என் வீட்டு இடத்திற்கு நடுவில் மதுரை  மொழியில் சொல்வதென்றால் நடு செண்டரில் அந்தப் பக்கமும் போக முடியாம...இந்த பக்கமும் போக முடியாம .... ஒன்னும் செய்யமுடியல....

பிற கு ஒருவழியாக கூட்டம் நடக்கிற அரங்கிற்கு சென்று மின்விசிறி காற்று அதிகமாக  கிடைக்கும் இடத்தை பார்த்து அமர்ந்து விட்டேன். கூட்டத்தில் தலைமை, வரவேற்புரை  போன்றவைகள் முடிந்த பிறகு  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி  திரு. அரி பரந்தாமன் அவர்கள் சிறப்பரை ஆற்றினார்

தமிழகத்தையே அதிர்ச்சியுறவைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று, கருத்துகளைக் கூறிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள் சிலர்மீது நடவடிக்கை எடுத்துள்ளதும், பல்கலைக்கழக ஆசிரியர் அலுவலர் யாரும் இதைப் பற்றி பேசக் கூடாது என்று துணைவேந்தரும், பதிவாளரும் கூறியிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் கூட்டமைப்பு,  4-ம் தேதி மதுரையில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், "உச்ச நீதிமன்ற நீதிபதியின் செயல்பாட்டையே, சக நீதிபதிகள் வெளியில் வந்து ஊடகத்திடம் பேசுகிறார்கள். அப்படியிருக்கும்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசக் கூடாது என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்மலா தேவி விவகாரத்தில் பல விஷயங்கள் மறைக்கப்படுகிறது. சமீப காலமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் ஸ்டிராங்காக இல்லை. மாணவர் சங்கங்களின் பவரை குறைத்துவிட்டார்கள். அப்படி இருந்திருந்தால், மாணவிகளுக்கு எதிரான புகார்கள் வராது. ஆசிரியர் சங்கங்கள் பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்" என்று பேசினார்.

கூட்டம் முடிந்து என் ஆடைகளும் நன்றாக காள்ந்திருந்த பின் கடைசியாக ஒரு தோழருடன் பேசிக் கொண்டு அரங்கத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தபோது ஒருவர் வந்து நிர்மலா தேவிக்கும் கவர்னருக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.  எனக்கு தெரியாதே என்று பதில் சொன்ன பிறகு.. மீண்டும் என்னை விடாமல்..அவர் உங்களுக்கு எல்லாம் தெரியும் சொல்லுங்கள் ..“ நிர்மலாதேவி விவகாரம் என்ன ஆகும். என்றார்...

கேட்டவர் முத்தாயப்பாக எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி விட்டதால்.. நானும் இனி என்ன  “ ஊத்தி மூடிருவாங்கே..” என்றதுதான் தாமதம் விருட்டென்று சென்றுவிட்டனர்.. பேசிக் கொண்டு இருந்தவரிடம் கேட்டவர் யார் என்றேன்.... உங்களின் இம்சைகார பங்காளிதான் என்றார்.

எங்க போனாலும் இம்சைகள் என்னை விடாது போலிருக்கே....

வெள்ளி 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-22

Image result for புத்தகம் வாசிப்பு





 கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது மாதிரி கிடைக்கிற நேரத்தை எல்லாம் புடுங்கும் செல்போனில் இனிமேல் முழ்கி கிடக்க கூடாது அதை நோண்டுற வேலையை விட்டுவிடனும் என்ற தீர்மான முடிவு எடுத்து கிடைக்கிற நேரத்தையெல்லாம்  புத்தக வாசிப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதில் இருந்து தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் வலைப்பூவில் பதிவிடனும் என்ற காலம் கடந்து  தோன்றிய எனது எண்ண வழி காட்டுதல்படி...

 நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் பள்ளி முடிந்து வேலைக்கு சென்ற காலங்களில் எண்ணிடம் பொருளாதாரமும் அறிவும் இல்லாத காரணத்தால் அன்று படிக்காத, படிக்க முடியாத, நிலையை மாற்றி. உலக வாசிப்பு தினத்தையாவது பயன்படுத்தி, நாமும் வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்கலாமே என்ற  ஆசையில் அல்ல, நான் ஆசைப்பட்டால் எதுவும் நடக்காது கிடைக்காது என்பது எனது அனுபவ அறிவால் நான் ஆசைப்படாமல் எனது எண்ணத்தில் முடிவெடுத்து என் சொந்த முயற்சியால் பழைய புத்தக கடையில் மூலம் சேகரித்த சொற்ப அளவிலான புத்தகத்தை முதலில் வாசிக்கலாம் என்ற  நிரலில்

வழக்கம்போல் காலை உணவை முடித்துவிட்டு படித்தால் என் அறிவுக்கு புரியக்கூடிய. மனதில் பதியக்கூடிய புத்தகத்தை எடுத்து மகிழ்ச்சியுடன் எதைப்பற்றியும்....எதைப்பற்றின்னா.. ஏற்கனவே உள்ள இம்சைகளை பற்றி சிந்திக்காமல் அட்டையிலிருந்து ஒவ்வொன்றாக.....ஆரம்பித்தேன்....

..முகப்பு அட்டை, நூலின் விபரம், நூலலாசிரியரின் அறிமுகம்,விளக்கவுரை இப்படி ஒவ்வொன்றாக.. நூலின் முதல் பக்கத்தை தாண்டி இரண்டாம் .மூன்றாம் பக்கம் போய்க் கொண்டிருந்த வேளையில் மெதுவாக கண் சொறுகியது.. அதைத் தொடர்ந்து தலை வலது பக்கமாக சாய்ந்தது....
....
நான் பலமுறை முயற்சி செய்தும் கண்கள் சொறுகுவதையும் தலை ஆடி சாய்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருதடவைக்கு இரு தடவை முகத்தை தண்ணிர் விட்டு கழுவி விட்டு, மீண்டும் வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கண்கள் சொறுகுவதையும், தலை  ஆடுவதையும் நிறுத்த முடியவில்லை.

இதே இம்சைதான்... நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தது.. இந்த இம்சையால்தான் அன்றைக்கு என்னால் படிக்க முடியாமல் என் தாயாரின் ஆசைகளையும் அவரின் எதிர்பார்ப்புகளையும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.. அதற்கு பதிலாக அவரின் வேறு கோரிக்கையையும் ஆசையும்மான.. நான் திருமணம் முடிக்காமல் விபத்தால் இடையில் பார்வை இழந்த என் சகோதரியையும் அவர் பெற்றெடுத்த பிள்ளைகளையும் நான் வளர்த்து ஆளாக்குவதை ஏற்று நிறைவேற்றி விட்டேன். இந்த கதையை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிவிடுகிறேன்... இப்போது  மீண்டும் தொடர்ந்த  இம்சையை சொல்லி விடுகிறேன்.

அன்று பள்ளியில் தொடங்கிய இம்சையானது நான் செத்து சுண்ணாம்பு ஆகும் வரைக்கும் தொடருவேன் என்று சபதம் எடுத்து வந்ததுபோல இன்றும் தொடருகிறது. இப்படி ஒவ்வொரு தடவையும்  நான் புத்தகத்தை  வாசிக்கும் போதெல்லாம்.. கண்கள் சொறுகுவதும் தலை கோடாங்கி ஆடுவதுமாக அதன் வேலையை காட்டி விடுகிறது..

சரி, தூங்கி விட்டுத்தான் புதுப் பொலிவுடன் வாசிக்கலாம் என்று முடிவெடுத்து தரை விரிப்பு எதுவுமில்லாமல் துண்டை தலைக்கு வைத்து வாசிக்கும் புத்தகத்தை அருகில் வைத்து படுத்தால்...

அடிக்கிற வெயிலுக்கும் ஓடுற மின் விசிறி காற்றுக்கும் ஓட்டு வீட்டின் வெக்கையைக்கூட உணரமுடியாத அளவுக்கு  செம தூக்கம்.. ஒரு வழியாக தூங்கி எழுந்த பின் கண்கள் சொறுகியபோது போட்ட திட்டமெல்லாம்  தவிடு பொடியாகி நாசமாக போய்விட்டது.  வாசிக்க மனது வரவில்லை.

இப்படி ஒருநாள் அல்ல. ஒரு வாரம் அல்ல ஒரு மாசமாக இதே நிலைதான் பல தடவை பெயிலான பாடத்தை எழுதியும் பாசாவதற்கு வழியில்லாமல் பெயிலான கதையைப்போல் இந்த இம்சையும் தொடர்ந்தது. அப்படி வந்த இம்சைகள் தொடர்ந்து வந்தாலும் வேதாளம் சொன்ன கதையில் வரும் விக்கிர மாதித்தன் அளவுக்கு நான் இல்லையென்றாலும் என்னளவுக்கு தொடர்ந்து முயன்று வருகிறேன். படிப்பதென்றால் அவ்வளவு வேப்பங்காயக இருக்கிறது...

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறேன் என்று யாராவது என்னிடம் சொன்னால் நான்...“ மீண்டும் தொடரும் இம்சைகள் -22”-யைத்தான் பரிந்துரை செய்கிறேன்.

எப்படி?... தூக்கமில்லையா, ஒரு புத்தகத்தை திறந்து வாசியுங்கள். தானாக தூக்கம் வந்துவிடும் . நீங்கள் நிம்மதியாக தூங்கிவிடலாம். இதுக்கு போயி ஆஸ்பத்திரிக்கு கொடுக்கிற காசை.. ஒரு புத்தகத்திற்கு செலவழியுங்கள் என்பேன்.

நான் சொன்னது பலருக்கு பலனளித்துவிடும். சிலருக்குத்தான் பலனளிக்காது... அவர்கள் கேட்டபோது.... நீங்கள் ஓசியில் புத்தகம் வாங்கி இருக்கலாம்  அதனால் பலிக்கவில்லை என்னவோ..என்பேன்.. பலரும் என்னைப்போல்தான் இருக்கிறார்கள் என்று பூணை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது போல பெருமைப்பட்டுக் கொள்வேன்.

அட...போங்க..சார்.... எனக்கு வரும் இம்சைகள் ஒன்றா...இரண்டா....  வாய.. மூடி பேசாமல் இருக்க.......

மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இம்சைகள் என்றால் எனக்கு நான்கு பக்கத்தோடு , எட்டு பக்கமும் இம்சைகள்....சார்...

செவ்வாய் 01 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-21





தமிழ் இந்து தந்த வரலாற்று மொழி பெயர்ப்பு


நிழலில் நடித்தவருக்கு  நாதாரிகளால் வழங்கப்பட்ட பட்டம் ஒலக நாயகன்
நிஜத்தில் நடிப்பவர் பெற்ற பட்டமான நாடோடி(அ) ஊர்சுற்றி பட்டத்தை மறைத்து தமிழ் இந்து கட்டுரையாளர் வழங்கிய பட்டம் ஒலக நாயகன் . தமிழ் இந்து கட்டுரையாளர் எழுதியுள்ள செய்தியில் தந்துள்ள மொழிபெயர்ப்பு - paper Tiger-க்கு பேப்பர் புலி..

என் சிற்றறிவுக்கு காகிதப்புலி என்றே தெரிகிறது. ஏற்கனவே இப்படியான இதுபோன்ற பல கட்டுரைகளில் பல மொழி பெயர்ப்பாக வாசித்த இம்சைகளோடு மீண்டும் தொடர்கிறது. தமிழ் இந்துவின்  வரலாற்று மொழி பெயர்ப்பு இம்சைகள்,..............

 Paper Tiger-  பேப்பர்புலி..... எனது மொழிபெயர்ப்பு  காகித புலி...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...