பக்கங்கள்

சனி 24 2011

அஞ்ஞானத்தை பறைசாற்றும் ஊடகங்கள்



பகுத்தறிவு பெரியாரை சந்தித்த தொண்டர் ஒருவர். தன்னுடைய கலப்பு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி தரும்படி பெரியாரிடம் கேட்டார்

பெரியார் வியப்படைந்து , கலப்பு திருமணத்திற்கெல்லாம் நான் தலைமை தாங்கி நடத்திக்கொடுக்கமுடியாது என்று மறுத்தார்.அனுமதி கேட்ட தோழர்க்கு மன வருத்தம் உண்டாகியிருந்தது. அதைக் கவனித்த பெரியார்.

தோழரை அருகில் அழைத்து.கலப்புத்திருமணம் என்பது மனிதனுக்கும் வேறு
பிராணிகளுக்கும்அதாவது வேற்று உயிரினங்களுக்கு நடப்பதுதான் கலப்பு திருமணம்.

நீங்கள் நடத்தும் திருமணம் சாதிமறுப்பு திருமணம்.,சுயமரியாதைத்திருமணம்
இவற்றை கலப்பு த்திருமணம் என்று கூறியதால்தான் நான் தலைமை தாங்க முடியாது என்றேன், என்றார்.

தோழர்கள் சாதிமறுப்பு திருமணத்தை,சுயமரியாதை திருமணத்தை கலப்புத்திருமணம் என்று கூறக்கூடாது என்றார்.

வந்திருந்த தோழர் தன்தவற்றை திருத்திக்கொண்டு,மீண்டும் பெரியாரிடம் சாதி மறுப்பு திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கேட்டது போது சந்தோசமாக ஒப்பதல் அளித்தார்.

இந்த சுயமரியாதை திருமணத்தையும்,சாதிமறுப்பு திருமணத்தையும் இன்றைய வேசித்தனம் நிறைந்த ஊடகங்களால் கலப்பு திருமணம் என்றே பறை சாற்றி வருகின்றன. இந்நாளில் பெரியாரை நிணைப்பதோடல்லாமல் அவருடைய சிந்தனை.செயல்முறைகளை நினைவுகூர்ந்து அவர் வழி நடப்பதே. பெரியாருக்கு ஒடுக்கபட்ட,தாழ்த்தப் பட்ட மக்கள் நிணைவு கூர்வதற்கான வழி.

வியாழன் 22 2011

கேரள அவியல் கூட்டு தின்றால் புத்தி அதிகமாகுமாம்.


கேரள மக்களின் உணவு பண்பாடு அவியலாம். அவியல் என்பது காய்கறிகளின் கூட்டு.

காய்கறிகள் சாப்பிட்டால் உடம்பில் எந்த நோயும் தங்காது என்றும் தொப்பை குப்பை எதுவும் வளராதாம்.காய்கறிகளை அதிகம் சேர்த்தக்கொண்டால் புத்தியும் அதிகரிக்குமாம்.
இந்தக் காய்கறிகள் நிறைந்த அவியல் கூட்டுவை தின்றதால் என்னவோ, உம்மன்சாண்டிக்கும்.அச்சுதானந்தனக்கும் அவர்களின் வால்களுக்கும்,தோலுகளுக்கும் புத்தி அதிகமாகி விட்டதால் பெரியாற்று பிரச்சினையான முல்லைப்பெரியாறு அணைக்கான.
நடப்பு நிகழ்வுகளை வைத்துப்பார்த்தால் ஒத்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது புத்தி அதிகரித்தால் ஆசையும் ஊற்று எடுக்கலாமா இருக்கும்.ஆசையினால் கொழுப்பும் அதிகமாகிவிட்டது..அந்தக் கொழுப்பினால்தான் இடுக்கி அனையை கட்டி.மின்சாரம் தயாரிக்க தண்ணீர் இல்லததால் முல்லைப்பெரியாறு பிரச்சினையை கிளப்பிவிட்டு 999
என்ற கிராபிக்ஸ் படமும் எடுத்து ரீல் விட்டு அதிபுத்திசாலித்தனமாக நடந்தகொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுக்காரன் கேனையனாக இருந்தாலும் இந்திய தேசியத்துக்கு எந்தவித பாதகமும் ஏற்படாமல் நடந்து வந்திருக்கிறார்கள்.தமிழனின் இந்திய ஒருமைபாட்டுக்கு அதரவாக இரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்ல்லாம். 1.எம்ஜியார் கேரளத்துக்காராக இருந்தாலும் தமிழ்நாட்டை சாகும்வரை ஆண்டார்.2 ஜெயலிதா கன்னடத்துகாராக இருந்தாலும். அவர்தான் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இப்படி பல சொல்லலாம்.தமிழ்நாட்டை தமிழன் ஆண்டாலும் காட்டிக் கொடுத்த கூட்டிக்கொடுத்த தமிழனாகத்தான் ஆட்சி செய்தான்
கேரளக்காரான எம்ஜியாரின. வார்த்தையில் சொல்வதென்றால். அவியல்கூட்டு தின்ற கேரளாக்காரனுக்கு பல்பு இருக்கு பம்பு இல்ல.என்பதுதான் உண்மை.. அதாவது கேரளாகாரனுக்கு புத்தியிருக்கு ஆனால் பண்பு இல்ல என்பதுதான்.
இந்த பண்பு இல்லாத்தால்தான் 1975 வருடத்திலிருந்து செக்ஸ்படமா எடுத்து தமிழ்நாட்டில் ஓடவிட்டு தமிழனை சீரழித்தான். இன்னும் கூடுதலான புத்திக்கு அவியல்கூட்டு என்ன?மத்திய கூட்டு,ஆட்சிக்கூட்டு என்னனென்ன கூட்டு இருக்கிறதோ எல்லாத்தையும் சாப்பிட்டாலும் அந்தப்புத்தியானது கிரிமினலுக்கு பயன்படுமே ஒழிய நல்ல பண்புக்கும்
சமத்துவத்துக்கும் நேர்மையான கூட்டாட்சிக்கும் ஒருபோதும் பயன்படுமா?
சம்பந்தபட்டவர்கள்தான் நேர்மையாக பதில் சொல்லவேண்டும்

புதன் 21 2011

டாஸ்மாக் குடிமகனின் உளரல் தீர்ப்பு..!!

அடேய்,வெண்ணெய்களா?என்னங்கடா? வெளையாடுகிறிங்களா? அங்க ஒருத்தன் அனை உடையப்போகுதுன்னு ஔருறான். இங்க இருக்கறவனெல்லாம் அனையை பாதுகாப்போமுன்னு கூவுறான். என்னங்கடா

இந்தத் சத்தத்த கேட்காமா உருமாக்காரன் நாடு நாடா பறக்குறான்.டேய்,
உருமாக்கார என்னடா நெணச்சு இருக்கிற ஒம் மனசுல. சொல்லித் தொலைடான்னா. சொல்லமாட்டுறான்

கேனப்பயலே.உருமாக்காரா, நான் சொல்றேன்டா தீர்ப்பு....................................

சேட்டன்காரனான் மின்சாரத்துக்கு தானடா அனை உடயப்போகுதன்னு உதார் விடுறான்.  செட்டன்னுக்கு கூடங்குள அனு நிலயத்த அவனுக நாட்டு
கடலோரமா வச்சு கொடுத்துடுடா. இன்னு ரெண்டு உல வாங்குவிலடா அதையும் சேட்டனுக்கே கொடுத்திடுடா..

எங்களுக்கு மின்சாரம் வேனாண்டா, நாங்க காத்தாடிய சுத்தவச்சு மின்சாரம்
எடுத்துக்கிறோம்டா?

டேய், சேட்டன்காரா,உருமாக்காரனும்.நாரயாண கருப்பணசாமியும்தான்
அனுஉல வெடிக்காது பாதுகாப்பா இருக்குன்னு சொல்றான்ல, பேசாமா வாய
மூடிக்கினு ஓஞ் சோலியப்பாரு. அனை உடயப்போகுதுன்னு ரீல் விட்டு என்
கோபத்தை கிளராதே..................

என்னடா, பேச மாட்டுன்கிறிங்க,  பேச்சு வார்த்தைக்கு வா.வான்னு முச்சந்தியில கூப்பாடு போட்டீங்க. பேசுனா......... பேசாமா.....இருக்கீங்க.....

.ஊம...ஊருக்கெடுக்குமடா.....நீ எங்க ஊரகெடுக்குற.....
உருமாக்காரன் நாட்டயே கெடுக்குறான்.....................

என்னய குடிகாரன்னு  நிணைக்காதிங்கடா........நான் இந்திய(டாஸ்மாக) குடிமகன்டா .......,,,,,.......எனக்கு குடிமகன்என்ற பட்டமே வேணான்டா                        .........

செவ்வாய் 20 2011

முன்னால் முதல்வர் இன்னால் முதல்வராகிறார்!!!



கர்....நாடக மாநிலத்தின் முன்னால் முதல்வர் அரசு நிலங்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கிய முறைகேட்டில், நிலமோசடி வழக்கில் லோக் அயுக்தா போலிசால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் ஓய்வு எடுத்து ஜாமினில் வெளிவந்தார்.

வெளியே வந்ததும் சில நாளில் தனக்கு 72 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவியை தனக்கே வழங்கும்படி உத்தமசிகாமணிகளின் தலைமை பா.ஜா தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி யுள்ளார்.

இதற்கு ஆதரவாக இரு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். வெளியுறைவு அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா மீதும் லோக் அயுக்தாவில் வழக்கு பதிவாகியுள்ளது. இருந்தும் அவர் அமைச்சராக இருக்கிறார்.

தமிழகத்து ஆத்தா ஜெயலலிதாவின் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாக வழக்கு நடக்கிறது. அவரும் பதிவியில் இருந்துகொண்டு வலம் வருகிறார்.இவர்களே! எந்தவித குற்றணர்வு இல்லாமல் பதவியில் இருக்கும்போது. இவர்களையே முன்னுதரமாகக் கொண்டு என்னையும் முதல்வராக்க வேண்டும் என்று யுத்தத்தை தொடுத்துள்ளார்.

முன்னால் முதல்வர் எடியுரப்பா,இன்னால் முதல்வராவதற்கு அவர் காட்டும் ரோல் மாடல்களேஇதற்குசாட்சி.

திங்கள் 19 2011

ரிலையன்ஸ் அம்பானி கைது செய்யப்படுவாரா?????........

ஜோசப்,கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்திடம் 24 ஆயிரம் ரூபாய் விலையுள்ள செல்போன் ஒன்றை வாங்கினார்

அந்தச் செல்போன் இணைப்புக்கு குறிப்பிட்ட காலம் வரை ஏராளமான வெளி  அழைப்புகளும் எஸ்எம்எஸ்களும் இலவசமாக பெறலாம் என்று ரிலையன்ஸ் கூறியிருந்தது.

அவர் பலமுறை முயற்சி செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.கடைசியாக திருச்சூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில்(2005-ல் ) வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில்,செல்போன் விலையான 24 ஆயிரத்தையும் அய்ந்து ஆண்டுக்கான 12 சதம் வட்டி தொகையையும் சேர்த்து ஜோசப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குமாறு உத்திரவிட்டது.

ரிலையன்ஸ் நிறுவனமோ, இந்த உத்திரவை மதிக்கவில்லை. ஜோசப் விக்கிரமாதித்தானாக திரும்பவும் கோர்ட்டையே நாடினார். நுகர்வோர் கோர்ட் நீதிபதியான பத்மினி, பதில் அளிக்காத ரிலையன்ஸ் அதிபரை கைது செய்ய உத்திரவு பிறப்பித்தார்.

ரிலையன்ஸ் அதிபர் இந்தியாவின் பெரும் பணக்காரர் தொழில் அதிபர் என்பது நீதிபதிக்கு தெரியாமலா இருக்கும். அதனால்தான் என்னவோ,2012 வருடம் பிப்ரவரிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்ய உத்திரவிட்டார்

ஏற்கனவே,முல்லை பெரியாறு வழக்கில் உச்ச.....நீதி.........மன்றமே உத்திரவிட்டும கேரள அரசு அமுல்படுத்தாமல் சண்டித்தனம் செய்யும்போது ஜோசப்க்காக மாவட்ட நுக்வோர் கோர்டடுஉத்திரவுதானாஅமுல்படுத்தப்படும்

ரிலையன்ஸ் அதிபரோ.பொதுத்துறையான பிஎஸ்என்எல்க்கு பட்டை நாமாம் போட்டு கொட்டைபோட்டு கொழுத்தவர் அவரைப்போயி கைது செய்ய முடியமா??ஃ

இந்திய ஸனநாயக நாட்டில் சட்டத்தின்முன் அனைவரும் சமமுன்னு எப்படியெல்லாம் பாமரனை ஏமாத்துறாங்க. பாருங்க!!!!!!!! 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...