பக்கங்கள்

சனி 10 2014

ஒரு குட்டியை ஈன்றெடுத்த பாரதத்தாய் யாரென்று தெரியுமா...?



படம்

ஈழத்தாய் யாரென்று கேட்டால்  பட்டென்று சொல்வார்கள் அவர்தான் என்று ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக முடியும் என்று கேட்டால் அடிமைகளிடமிருந்து வசவும், அடியாட்களிமிருந்து மிரட்டலும் வரும் இது தமிழ்நாட்டின் சாபக்கேடு மானக்கேடும்கூட...........

 சரி,பாரதத்தாய்  யாரென்று தெரியுமா? என்றால் பலருக்கு தெரியவில்லை எ சிலருக்கு அவரா? இவரா என்று என்னைக் கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலே பாரதத்தாய் யாரென்று தெரிந்தவர்கள் வினவுத் தோழர்களும் அதன் வாசகர்களுகமே.. அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்.

இருந்தாலும் தெரியாதவர்களும் இருப்பவர்கள் அல்லவா? அவர்களுக்காக !!!!

ஒரு குட்டியையும் ஈனாத தாய் எப்படி ஈழத்தாயாக இருக்க முடியும் என்பது மாதிரியான கேள்விக்கே இடமில்லை.

ஏனென்றால் ஒரு தங்கக்  குட்டியை ஈன்றவள் இந்த பாரதத்தாய்.. அந்த தங்கக் குட்டியை பெறறெடுக்க போன மருத்துவ மனையின் ஒருநாள் வாடகை ரூ20,000, மருத்துவ செலவு ஃபோர்டிஸே்லாஃபெம்மே மருத்துவமனையில் தங்கக் குழந்தைப்பேருக்கான பேக்கேஜ் மட்டும்  ரூ 4 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

இந்த பாரத்தாய் ஒரு தங்கக்குட்டியை பெற்றெடுக்க இவ்வளவு செலவு செய்ததை பார்த்தாவது பாரதநாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்று மெய்சிலிர்க்காதவர்கள் இருக்க முடியுமா???இவ்வளவு செலவா என்று வாயப் பொளந்தால் அவர்கள்  தேசத்துரோகிகள் ஆவார்கள்.

இந்தியாவின் பாரதத்தாய் தற்போது தொலைக்காட்சியின் “கல்யான் நகைக்கடை விளம்பரத்தில்  வலம் வருகிறார்கள்  பார்த்துக் கொள்ளவும்






வெள்ளி 09 2014

திருடியதை கண்டு பிடித்த கதை..........

படம்











இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதாக தேர்தல் கணக்கெடுப்பில் சொன்னதாக ஞாபகம்.

அது மாதிரியே  அந்தத் தெருவிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்த பெண்களின் எண்ணிக்கையை வைத்தேதான் ந்தத் தெருவுக்கு பொட்டத் தெருவுன்னு அப்பவே பேரு வச்சுட்டதனால..

வாழையடி வழையாக இந்தத் தெருவும் பொட்டத்தெருவுன்னே நிலைச்சு போச்சு.......அந்தத் தெருவின் பேருக்கு ஏத்த மாதிரி அந்தத் தெருவிலுள்ள பெண்களெல்லாம் கூட்டமாக கூடி நின்று இரண்டு பெண்கள் வாய்ச் சண்டை போ்ட்டுக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 சண்டையிட்ட இரண்டு பெண்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிக்கு வாக்கப்பட்ட பெண்கள்தான் என்று அவர்கள் சண்டையின்போது தெறித்து விழும் வார்த்தைகளிலிருந்து தெரிந்தது.

சண்டை ஏண்? எதற்கு? என்று  நின்று கவனித்த போது விபரம் அக்கு வேறு ஆணிவேறாக புரிந்தது.

அதாவது மச்சான் பொண்டாட்டி ஆனவள் வீடு கட்டுகிறாள். அதில் கொழுந்தனின் பொண்டாட்டி வேலை செய்தாள். வேலை முடிந்து அவளுக்கு கூலியை கொடுத்துவிட்டு மீதி இருந்த  ரூபா ஆயிரத்தை பத்தரமாக ஒர இடத்தில் வைத்தவிட்டு வெளியே சென்று விட்டாள்.

திரும்பி வந்து வைத்த பணத்தை பாத்து இருக்கிறாள். பணத்தை காணவில்லை, வைத்த இடத்தையும் வைக்காத இடத்தையும் சேர்த்து தேடினால் பணத்தை காணவில்லை...

அமைதியாக யோசனையில் ஆழ்ந்தாள். கடைசியாக..கொழுந்தனின் பொண்டாட்டிமேல் சந்தேகம் வந்துவிட்டது. அவள்தான் தன் வீட்டில் சோறு கஞ்சி,வெஞ்சனம் ஊற்ற்ிக் கொண்டு போவது திபை்படம் மாதிரி மனதில் ஓடியது.

கொழுந்தன் பொண்டாட்டி மீது சந்தேகம் கொண்டு அவளை தேடியபோது அவளைக் காணவில்லை. மச்சான் பொண்டாட்டி காரியும் தன்னுடைய ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்று அந்தத் தெருவக்கு டமாரம் அடித்து செப்பி விட்டாள்.

தெருவில் இருந்த பெண்களில் சிலர்..உன் கோளுந்தன் பொண்டாட்டி காரிதான் எடுத்திருப்பா..என்றும் ஒன் பணத்தை எடுப்பதற்கு  டில்லியில் இருந்தா ஆள் வரவாளுக்க..........என்றார்கள்.

ஒரு சிலர் தங்களுக்குள் இப்படி பேசிக் கொண்டார்கள், இவள் என்ன அந்தக் பணத்தை வம்பாடு பட்டா ஒழச்சா ,அவ வச்சுருக்க ஆள்கிட்ட இருந்துல..கரந்துருக்கா....என்று முனு முனுத்தார்கள்.

மச்சான் பொண்டாட்டி காரியின் வாயில் ஒழச்ச பணம் என்றும் வார்த்தை வரவில்லை. கள்ளபுருஷனிடமிருந்து பணத்தை கரந்து வீடு கட்டுகிறாள் என்றும் அந்தத் தெரு பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது.

பணத்தை திருட்டு கொடுது்தவளின் கொழுந்தன் பொண்டாட்டி காரிதான் பணத்தை திருடி இருப்பாள் என்பதற்கு ஆதாரமாக அந்தத் தெருவிலுள்ள ஒரு வீடட்டில் ரெண்டாயிரம் பெருமானமுள்ள பித்தளை அண்டாவை திருடியதையும் மற்றொரு வீட்டில் இட்லி சட்டி மற்றும் பெரிய வட்டயை திருடியபோது கையும் களவுமாக பிடித்ததையும்  சுட்டிகாட்டி சொன்னார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிந்து கொண்ட மச்சான்காரனின் பொண்டாட்டி ஆனவள். ஊருக்கு போயிட்டு மறுநாள் வந்தவளிடம்

“ஆயிரம் ரூபாய எடுத்தியே கொண்டாடி என்று கேட்க” மற்றவளோ,“ நான் எங்க பாத்தேன், நான் எடுக்கவே இல்லை என்று ஊருல உள்ள எல்லா தெய்வத்தின் பேயரைச் சொல்லி சத்தியம் செய்தாள்.

அவள் .என் பணத்தை கொடுடீ என்று கேட்க,இவள் இல்லை என்று சொல்ல இந்தச் சண்டையில் அந்தத் தெரு பெண்கள் கூட்டம் கூடியதற்கு காரணம்.

“சத்தியம் பொங்கச்சோறு என்று தெரிந்த அவள்,“ இந்தா பாருடீ பணத்த நீ எடுத்துக்கிட்டு போனதை ஜோசியக்காரரிடம் மையோட்டம் பா்த்தேன். ஒழுங்கா பணத்தை கொடுடீ என்றாள். இவள்.

எதற்கும் பயப்படாத.மசியாத கொழுந்தனின் பொண்டாட்டிகாரி, தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தாள். இப்படியாக ரெண்டு பேரும் ஒருவர்மாத்தி ஒருவர் புழுதி வாரி தூற்றிக் கொண்டுவிட்டு ஒருவழியாக
தங்களின் வாய்ச் சண்டையை முடித்துக் கொண்டனர்.

மறுநாள் காலையில் பித்தளை அண்டாவை பறிகொடுத்த குடும்பத்தாரிடம் ஆயிரத்தை பறிகொடுத்தவள் சொன்னாள்.

“ஒங்க வீட்டு பித்தளை அண்டாவை தூக்கிய மாதிரிதான் என்னுடைய ஆயிரம் ரூபாய தூக்கிட்டா என்றாள்.

அந்தவீட்டு ஆம்பளை ஒருவர், ”உனனுடைய ஆயிர ரூபாயை அந்த பொம்பளைதான் எடுத்தாள்” என்று எப்படி கண்டு பிடிச்சே ” என்று கேட்டார்.

மையோட்ட ஜோசியரிடம் போயி பார்த்தேன். அதுல இவள் பணத்த எடுத்துகிட்டு போனது தெரிஞ்சது என்றாள்.

அப்போ, “ அந்த பொம்பள.உன் ஆயிரம் ரூபாய திருடிக்கிட்டு போனது, சினிம்,டிவி மாதிரி மையோட்டத்துல தெரிஞ்சுத்தா என்றார். நக்கலாக

சும்மா கிணடல் பண்ணாதிங்க..,மையொட்டத்தைப்பத்தி ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது. திருடியவங்களை மையோட்டத்துல பாத்து கண்டுபிடுச்சிலாம் என்றாள்.

சரி,அந்த பொம்பளதான் திருடியதை கண்டுபிடிச்ச பின்பு,பணத்தை வாஙகியாச்சா என்று கேட்டபோது....

எங்க கிடச்சது அவ திண்டு செமிச்சிட்டா..என்றாள் கோபத்தொடு...

ஏனுங்க...சாமிகளா....???? மையோட்டத்துல திருடினவங்களை கண்டுபிடிக்கலாம்லன்னா....போலீஸ் ஸ்டேசன் எதற்கு? துப்பு அறியும் இலாக எதற்கு?? குற்றப்பிரிவு எதற்கு??? விசாரனை என்ற பிரிவில் அடி உதை சாவு எல்லாம் எதற்கு????  சொல்லங்க.. சாமிகளா.....!!!!!


வியாழன் 08 2014

போடீ...வேலையத்தவளே......ஒரு சாமி பேசின கதை..!!!

படம்.










ஒரு ஊருல ஒரு தெரு இருந்திச்சு...அந்தத் தெருவுக்கு ஒரு கோயிலு இருந்துசசு..அந்தக கோயிலுல ஒரு சாமி இருந்சுச்சு அந்த சாமிக்கு பேரு காளியம்மனாம்.அதோட வீடு புறம்போக்கு இடத்துல  காங்கிரிட் ல கட்டப்பட்டு இருந்திச்சு..

அந்த காளியம்மன் என்ற பெண் சாமியானது  வாரத்துக்கு செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே குளிக்குமாம். அந்தச் சாமிக்கு சோப்பு போட்டு, மஞ்சள் பூசி குளிப்பாட்டி,மாற்றுச் சேலை கட்டிவிடுவது வரை அந்தக் கோயிலின் ஆம்பள  பூசாரிதான்.

 அந்தக் கோயிலின் திருவிழாவின்போது சாமியாட்டம் ஆடுவதும்  இந்த பூசாரிதான். இதோடு கூட அந்தத் தெருவுக்கே நாட்டாமையும் இந்த பூசாரிதான்.

செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் நாட்களில் பூசாரி தாம்பாளத்தட்டில் நிறைய சூடத்தை கொட்டி அதை எரியவிட்டு காளியம்மன் முகத்தில் காட்டுவதும் பிறகு பக்தர்களுக்கு காட்டுவதோடு  காலையிலும் இரவிலும் காளியம்மன் வீட்டிற்கு மேல் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை கட்டி எட்டு தெருவுக்கு கேட்குமளவுக்கு பாட்டு போடுவாங்கே........ இரவில் அந்த பாட்டுகளை கேட்டுக்கொண்டே காளியம்மன் சாமி தூங்கி விடுமாம்.

இப்படியே வழக்கமாக நடந்துகிட்டு இருந்துகிட்டு இருக்கிறப்போ...அந்தத் தெருவுல இருந்த ஒரு பொம்பளை இந்த காளியம்மன் சாமி கிட்ட வந்து ஒரு மாசமா விடாது வந்து கடன் கேட்டுச்சு..,அதாவது வரம் கேட்டுச்சு

ஒரு மாசத்துக்கும் மேலாக வந்தும் ஒன்னும் கிடைக்காததால் அந்த பொம்பள கோபம் கொண்டு கோபத்துல “காளியம்மன “ஏடாகூடமாக திட்டினா..

“ஏண்டி,நீயெல்லாம் ஒரு சாமியா...??? எத்தன நாளா,விடாம..வந்து வேண்டுகிறேன். இரக்கப்பட்டு...என்னிக்காவது கண்ண தொறந்து நான் கேட்டத கொடுத்து இருக்கியா...டீ...சிறுக்கி மவளே...மூதேவி...அவளே..
இவளேன்னு கண்டபடி திட்டி இருக்கா..

பொறுத்து பொறுத்து பார்த்த காளியம்மனுக்கும் கோபம் தலைக்கு மேல ஏறியது. அடித்த வெயிலுல காளியம்மனுக்கும் கோபம் பொத்துகிட்டு வந்திருச்சு.... அதுவும் பொம்பளதானே..

திடிரென்று காளியம்மன் அவளை பார்த்து “ஏண்டி,வேலையத்த சிரிக்கி,ஏண்டி இப்படி என்னைய் ஏசுற.....”,  “நானே இந்த பூசாரியோட அலும்பு தாங்க முடியாம ..யாருகிட்டா சொல்லி அழுவுறதுன்னு.தவியாய் தவிச்சு கிட்டு இருக்கேன்”.

இதுல நீ வேற வந்து ஒப்பாரி வக்கிறது இல்லாமா...! என்னைய கண்ட மாணிக்கு பொளந்து கட்டுறயேடி.....என்றது சாமி

திட்டிக்கிட்டு இருந்தவளோ...காளியம்மன் பதிலுக்கு திட்டியதை கண்டதும் தான் திட்டுவதை  ஸ்டாப்பாக்கி..,.. வாய்மூடி,மெய் மறந்து தான் கேட்க வேண்டிய வரத்தையும் மறந்து விட்டு காளியம்மன் வாயையே பார்த்தாள்.

பூசாரி வர்ரானா பாரு என்று காளியம்மன் கூறியதும் அணிச்சை செயலாக அங்குட்டும் இங்குட்டும் திரும்பி பார்த்துவிட்டு யாரும் வரவில்லை என்று தலையாட்டிவிட்டதும்.

காளியம்மன்  மீண்டும் பேசத் தொடங்கியது.செவ்வாய் வெள்ளி கிழமைகளில் என்னை குளிப்பாட்டுகிற சாக்கில்  நான் கட்டியிருக்கிற துணிமணிகளை

”பழைய படங்களில் கற்பழிக்கிற பெண்களின் சீலையை உருவும் நம்பியார் மாதிரி என் சீலையை உருவி என்னை அம்மனமாக்கி விடுறாண்டி... இந்த பூசாரி

அதோட சோப்பு போட்டு, மஞ்சள் போட்டு தேய்ச்சு, பூசி விடுகிற சாக்கில் என் மார்பு மற்றும் மறைவான முக்கியமான இடங்களில் பாலியல் சேட்டை செய்கிறாண்டி..,

இது பத்தாதுன்டு என் கன்னத்தையும் மார்பையும் ஓயாமல் தடவி பாலியல் ரீதியா கொடுமை செய்றாண்டி .. இந்தக் கொடுமையை நான் யாருகிட்டடி சொல்வேன்.............

என்னைய கும்பிடுற சிறுக்கிகளும் சிறுக்கனுங்களும், ஆம்பள சாமிக்கு ஆம்பள பூசாரியையும். பொம்பள சாமிக்கு பொம்பள பூசாரியையும் நியமிக்கச் சொல்லாம....அவிங்கஅவிங்க ரோதனைய கொட்டிட்டு போராங்கடீ...
.
மெல்லவும் முடியாம..விழங்கவும் முடியாம.. தவியாய் தவிச்சுகிட்டு இருக்கிற நேரத்துலதான்

நீ வந்து இப்படி திட்டி தீர்க்கிறடீ  ..“.போடீ... வேலையத்தவளே...சிறுக்கி மவளே, போடீ ”.....என்று காளியம்மன் திட்டியது.ம்

அப்செட்டாகி போன,. வரம் கேட்டு திட்டிய பக்தை ஆ....ஆ...ஆ...ஊ.ஊ..ஊ என்று கத்தியபடி சாமியாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டாள்.  இவளின் ஆ...ஊ சத்தத்தைக் கேட்டதும் தெருவில் உள்ளவர்களும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தவர்களும் கோயிலின் முன் கூடிவிட்டார்கள்

கூட்டத்தைக் கண்டதும் காளியம்மனும் வாய்மூடி எப்பொதும்போலவே காட்சியளித்ததுவிட்டாள்.

கோயிலுக்கு அருகில் இருந்த தன்வீட்டில் டீவி பார்த்துக் கொண்டு இருந்த பூசாரி வந்தான். வந்ததும் திருநீற்று சாம்பலை எடுத்து சாமிஆட்டம் ஆடி கொண்டு இருந்தவளின் தலையில் ஒரு பிடி சாம்பலை அள்ளி போட்டான்.

திறுநீற்றை கொஞ்சம் கையில் எடுத்து அவளின் நெற்றியில் பூசுவதற்க்காக பூசாரி கையை நீட்டிய போது,   “எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது, என்னத்தைச் சொல்வது என்று தெரியாமல்  அலறியடித்தபடி மயங்கிவிட்டாள்..அந்த பக்தை...


புதன் 07 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(4)

படம.இந்நேரம் .காம்











வீட்டுக்கு வரும் வழியில்  சண்டையைப் பற்றி  தெரிந்தவர்   என்னாச்சு என்று விவரம் கேட்டார்.

வழக்கப்படியே போலீசுக்காரன்கள் அவர்களுக்கு சாதகமாகத்தான் நடப்பார்கள் என்றார். குருசாமி மகன் தன் கட்சிக்காரர்கள் மூலமாக ஒன்னுமில்லாம ஆக்கிபுடுவான்.. என்று மேலும் கூறினார்.

நீதி,ஞாயம் எதுவும் கிடையாதா.......??? என்றார் கேட்டவர்.

நீதி,ஞாயம் எல்லாம் காசு உள்ளவனுக்குத்தான் என்றார் கணேசன்.

“அவிங்களும், எத்தனை நாளுக்குத்தான்  போலீசுகாரனுக்கு காசு கொடுப்பாங்கே என்றார் .

ஒருத்தன் ரெண்டு பேருன்னா திண்டாடுவாங்க.... இங்கே எனக்கு எதிராக  தெருவையே களமிரக்குவாங்கே  நாட்டாம தன் தனிப் பிரச்சனையை  பொதுப் பிரச்சனைன்னு  மாத்தி,என்றார்  வீட்டுக்கு இவ்வளவுன்னு வரி போட்டு வசூல் செய்து கொடுப்பாங்கே, அதுதானே அப்பயிலிருந்து நடக்குது என்றார் கணேசன்.

எத்தனை நாட்களுக்கதான் ஆடுவாங்க...அவிங்களுக்கு கேடு காலம் வராமலா..போய்விடும். என்றார் ஆறுதலாக...

என்னதான் போலீசுக்காரங்கே சொல்லுறாங்கே.............என்றார் மீண்டும்

நாளைக்கு காலையில வரச் சொல்லியிருக்காங்க.....அப்ப ராசியா போங்கன்னு சொல்லுவாங்க....என்றார் கணேசன்.......

நீ அடிச்சிருந்தா....ஊரே பரப்பி இருப்பானுக...என்றவர் ..டீ குடிக்க கூப்பிட்டபோது. வேண்டாம் வீட்டுக்கு போயி சாப்பிட்டுறுவேன் மறுத்துவிட்டு.. வீட்டுக்ககு கிளம்பினார் கணேசன்.

வீட்டீல் இருப்பவர்களிடம் தன்னை அடித்தவனை போலீஸ்காரர்கள் அடித்து திட்டியதாக... அவர்களுக்கு ஆறுதலுக்காக சொல்லி நாளைக்கு வரச் சொல்லியிருப்பதையும் இன்னவாறு சொல்வார்கள்  என்று சொல்லிவிட்டு அசதியில் சிறிது மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்தார்.

நல்லவேளை, எந்த மனஉளச்சலும், பரபரப்பும் பயமும் இல்லாமல்  நாளைக்கு என்ன சொல்லவாங்கே என்ற சிந்தனையும் இல்லாமல் நிம்மதியாக தூங்கினார் கணேசன்.


காலை பதினோறு மணி வாக்கில் போலீஸ் ஸ்டேசன் சென்றார். எல்லாம் முன்னேற்பாடாக  முடிவு பன்னிவிட்டு எதர்த்தாமாக செயல் படுவது போல்  செயல் பட்டனர். ரைட்டர்  வேறு ஒருவராக இருந்தார். பழைய ரைட்டர்க்கு நைட் டூட்டியாம்.

நேற்று வந்தவர்களில் அனைவரும் வந்திருந்தனர். கூடுதலாக செல்லமணி,அழுகுமணியுடன் திமுக பிரமுகர் ஒருவரும் வந்திருந்தார்.
சிறப்பு எஸ்ஐ கணேசனை கூப்பிட்டு பேசினார்.

அடித்தவன் படிக்கிற பயல் என்றும் தெரியாமல் சண்டையிட்டதாகவும், இதுதான் முதல் தடவை என்றும் இனிமேல் எந்தச் சண்டைக்கும் தான் போக மாட்டேன் என்றும் கூறுகிறான். அவன் கூட வந்தவர்களும்  வழக்கோ அபராதமோ விதிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். என்றார்.

மேலும் அவரே சொன்னார். கோர்ட்டுக்கு போனாலும் கேசு வருச கணக்கா இழுததுக் கொண்டே போகும் ரெண்டு பேருக்குமே செலவுதான்.  அதனால  இந்த ஒருதடவை மன்னிச்சு விடுங்கன்னு இன்ஸ்பெக்டர்  சொன்னார்.... என்றார்.

நா...ன் இன்ஸ்பெக்டரை பார்க்கலாமா..? என்றபோது..நீ பார்த்தாலும் இதைத்தான் சொல்வார். என்றார். பதிலக்கு ரைட்டரும் சிறப்பு எஸ்ஐ சொன்னதையே அவரும் சொன்னார்.

 இவர்களுடன் வந்த பிரமுகரும் இதைத்தான் சொன்னார். அவன் திரும்பவும் சண்டைக்கு வந்தால் என்ன சார்........... வரமாட்டான். வந்தால் அவன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

இன்ஸ்பெக்டரை பார்க்க விடாமல் இவர்களே சொல்வதாக சந்தேகம் கணேசனுக்கு இருந்தாலும் ,காசு புகுந்து விளையாடி இருப்பதை தெரிந்து கொண்டு .அவ்வளவுதான் தன் சக்திக்கு இதற்கு மேல்  இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டார். மீறி முரண்டு புடித்தால் இவிங்களும் நம்மல போட்டு பா்த்துருவாங்கே என்று நிணைத்துக் கொண்டு................

ரைட்டர் கொடுத்த வெள்ளை பேப்பரில் வாங்கி சிறப்பு எஸ்ஐ சொல்லிய பிரகாரம்.......... சண்டையிட்டு கொலை முயற்சி செய்தவன் மன்னிப்பு கேட்டபடியால் என் புகாரில் மேற்கொண்டு நடவடிக்கை வேண்டாம் என்று கேட்டக் கொள்வதாக எழுதிக் கொடுத்தார் கணேசன்.

கணேசனை கொல்ல முயற்சி செய்த வளவன்,” தான் தெரியாமல் சண்டையிட்டு விட்டதாகவும் இனிமேல் சண்டையிட மாடடேன் என்றும்  மீறி நடந்தால் காவல்துறை  தன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்வதாகவும் எழுதிக் கொடுத்தான். சாட்சியாக ஏழுரையும் அவன் மனைவி ராணியும் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

ரைட்டரும் சிறப்பு எஸ்ஐயும் வளவனை ”டேய் படிக்கிறத விட்டுட்டு சண்டை போடக்கூடாது என்று எச்சரிக்கை விட்டு செல்லமாக ரெண்டு தட்டு தட்டினர்.

கணேசனை பார்த்து , பையன் சண்டைக்கே வரமாட்டான். என்றபோது ஏழரைமற்றும் ராணி அழுகுமணி,செல்லமணி இவர்கள்  பற்கள் வெளியே தெரியாமல் புன்முறுவல் பூத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஒரு வழியாக கணேசன் கொடுத்து கொலை முயற்சி புகார்  கட்டப் பஞ்சாயத்து மூலமாக  ஒருதலை பட்சமாக முடித்து வைக்கப்பட்டது.


செவ்வாய் 06 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(3)

இரவு  ஏழு மணிக்கு பொலீஸ் ஸ்டேசன் சென்ற பொழுது... போலீசு ஸ்டேசனுக்கு அருகில் உள்ள டீகடையில் தெரு நாட்டாமையின் மூத்த மகனும் விடுதலை சிறுத்தைகட்சியின் முகாம் பொருளாருமான செல்ல மணியும், ராணியன் ஒன்றவிட்ட அக்காவும் தெருவின் பொம்பள நாட்டாமையின் கடைசி மகனும்  .வி.சியின தெருவின் முகாம் அமைப்பாளருமான அழகமணியும் இரண்டு  போலீஸ்காரர்களுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அவர்களைக் கண்டதும் இனி என்னத்த நடவடிக்கை எடுக்க போறாங்கே என்ற மனநிலை வந்தது. ஸ்டேசனுகக்குள் உள்ளே சென்றபோது ஏழரையும் அவன் மனைவி ராணியும் . சண்டையிட்ட வளவனும்  நின்று கொண்டு இருந்தனர். ராணி என்பவள். சிறப்பு எஸ்ஐயிடம தன் தரப்பை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

கணேசன் ரைட்டருக்கும் சிறப்பு எஸ்ஐக்கும் மரியாதை க்கு வணக்கம் சொல்லிவிட்டு சிறப்பு எஸ்ஐக்கு அருகில் நின்றார்.

சிறப்பு எஸ்ஐ ராணி யின் தரப்பை கேட்டக்கொண்டே கணெசனின் புகார் மனுவை படித்துப்பார்த்தார். இடையிடையே  வளவன் தான் அடிக்கவில்லை என்றும் கணெசன்தான் தன்னை அடித்து காயப்படுத்திவிட்டதாக கூறி கையில் கட்டு போட்டதை காண்பித்தான்.

கணேசனுக்கு பகீர் என்றது. “என்னடாது நாலு மணிவாக்கில் தெருவில் பார்த்தபோது கையில் கட்டு இல்லாமல் மீண்டும் தன்னை அடப்புல போட்டு விடுவதாக மிரட்டியவன் இப்போ கையில் கட்டுடன் வந்திருக்கான் என்று திகைத்தார்.

சிறப்பு எஸ்ஐ கணேசனைப்பார்த்தார். “அவுங்க  பேசி முடித்ததும் நான் சொல்றேன் சார் என்றுவிட்டு ராணி சொல்வதை கவனித்தார் கணேசன்.

இதற்கிடையில் செல்ல மணியும் அழகுமணியும் வளவன் சார்பாக கணேசன் மீதுதான புகாரை சிறப்பு எஸ்ஐயிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்ட சிறப்பு எஸ்ஐ அதையும் படித்துப்பார்த்தார். .

கணேசன் சொன்னார். சார் எனக்கும் செல்லமணியை சுட்டிக்காட்டி இவருடைய அப்பாவுக்கும் இடத்து பிரச்சினை இருக்கிறது. இவன் அந்த ஆளுக்கு ஆதரவாக என்னுடன் சண்டையிட்டு ,என்னை அடித்ததோடு இல்லாமல் அடப்புல போட்டுத் தளளப்போவதாக மிரட்டுகிறான்.  இங்கிருந்து வீட்டுக்கு சென்றபோது கையில் கட்டு இல்லாமல் திரும்பவும் என்னை மிரட்டியவன் இப்போ கையில் கட்டுடன் வந்திருக்கிறான் அது என்னால் ஏற்ப்பட்டதில்லை. அவனால் எனக்கு ஏற்ப்பட்ட காயத்தை பாருங்கள் என்று தன் உடலில் இருந்த காயத்தை காட்டினார். அந்தக் கட்ட அவித்து பாருங்க அது உண்மையா...பொய்யான்னு தெரிஞ்சு போகும் என்றார் கணேசன்.

உடனே, ஏழரை ஆஸ்பத்திரியிலதான் கட்டு போட்டு வந்திருக்கோம் சார், என்று ஆஸ்பத்திரி சீட்டை காண்பித்தான். ராணியோ கணேசனின் காலில் எற்ப்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி அது என் மகனால் ஏற்ப்பட்ட காயம்.அல்ல  கல் தடுக்கி விட்டதனால் வந்த காயம் என்றாள்.

சிறப்பு எஸ்ஐ ரைட்டரைப் பார்த்தார். ரெண்டு பேரும் சொந்தக்காரங்க ஒரே தெருவுல இருங்காங்க.. எழுதி வாங்கிட்டு அனுப்பிடலாம் என்றார். செல்லமணி அழகுமணியை பார்த்துவாறு.........

கணேசன் குறுக்கிட்டார். சொந்தக்காரங்க எல்லாம் இல்ல சார், ஒரே தெருவுக்காரங்கன்னு சொல்லலாம் என்றார். அவரிடம் பிரச்சினையின் விபரத்தை சொன்னார். ரைட்டர் தன் வேலையில் முழ்கினார்.

சிறப்பு எஸ்ஐ கணேசனிடம் சொன்னார். அவுகளும் உன் பேர்ல புகார் கொடுத்து இருக்காங்க..என்றார்.

“ரெண்டு புகாரைிலும் நீங்க முடிவு பண்ணி வழக்கு போடுங்க என்றார் கணெசன்.

செல்ல மணிஎன்பவன் சிறப்பு எஸ்யைிடம் பேசினான். கணேசன் தம்பி வேனும் வளவனும் தம்பி வேனும் இவன் அய்டியில கடைசி வருடம் படிக்கிறான். ரெண்டு பேரும் சண்டை போட்டு இருக்காங்க   அதனால ரெண்டு பேரையும் எச்சரிக்கை பண்ணி மன்னித்துவிடுங்க சார்” என்றான்.

கணெசனுக்கு சற்று கோபம் வந்துவிட்டது. ஏப்பா...நா....உனக்கு தம்பியா...நீ எனக்கு சொந்தக்காரனா இல்லாத உறவு முறையை சொல்லாத.....

சார், இவிங்கே சொந்தக்காரனுங்களே கிடையாது சார்.  ஒரே சாதிக்காரன் கூட கிடையாது ஒரே தெருவுல இருக்கேன் சார், நீங்க மன்னிக்க வேணாம்  என்னையும் சேத்து ரெண்டு பேத்து லேயும் வழக்கு போடுங்க என்றார் கணேசன்.

இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக சொன்னதும் புகார் பேப்பர்களை மேஜையிலே வைத்து விட்டு தொப்பியை மாட்டியபடி இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்றார்


வேறு ஒரு எஸ்ஐ என்னவென்று விசாரித்தார். செல்லமணி என்பவன் அவன் பக்க சார்பை  சொன்னான்.கணேசன்  பதிலுக்கு எதுவும் சொல்லாமல் நின்றார்.

திரும்பி வந்த சிறப்பு எஸ்ஐ  உங்க ஏரியாவுக்கு பக்கத்துல பிரச்சனை நீங்க போயிட்டு காலை பத்து மணிக்கு வாங்க என்றார். வளவனைப் பார்த்து ” டேய் வாயை மூடி..சும்மா இருக்கனும் இல்ல படிக்கிற பையனும் பார்க்க மாட்டேன்னு ஒரு எச்சரிக்கை விட்டு, கணேசன் காலையில வாங்க முடிச்சு விட்டுலாம் என்றபடி நாலைந்து போலீஸ உடன்வர வெளியே கிளம்பினார்.

அவரின் பின்னாடி செல்லமணியும் அழுகுமணியும் பேசியவாறே சென்றனர். கணெசனுக்கு புரிந்து விட்டது  இனி அம்புட்டுத்தான் எனபது. சிறப்பு எஸ்ஐக்கு வணக்கம் சொல்லிவிட்டு ஸ்டேசனைவிட்டு வெளியேறினார்.


தொடரும்...................




ஞாயிறு 04 2014

ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(2)

முன்கதை.!.

1.ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.. - 5/2/2014 -

2.ஒரு புகாரும் அதன் மீதான போலீசின் கட்டப் பஞ்சாயத்தும்.(1) - 5/3/2014



ரைட்டர் செல்போனில் பேசி முடித்ததும். கணேசனை பார்த்து  உங்க 
ஏரியாவுல அம்பேத்கார்   சிலை இருக்குல     அங்க ஒரு போலீசு இருப்பாரு..
அவர போயி பாரு.அவரு வந்து விசாரிப்பாரு      ஏழு மணிக்கு மேல...இவர
 வந்து பாரு....என்று சிறப்பு எஸ்ஸ்ஐ சுட்டிக்காட்டினார்.


சிறப்பு எஸ்ஐயும் ஏழு மணிக்கு மேல என்னை வந்து பாரு....என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவர் . நாலைந்து தடவை உதை்த்தப்பின் ஸ்டார்ட ஆன பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

காலை பத்து மணிவாக்கில்  புகார் கொடுக்க வந்த கணேசன். இன்ஸ்பெக்டர் வருகைக்காக காத்திருந்து பின் சிறப்பு எஸ்ஐக்காக காத்திருந்து ஒரு வழியாக 3மணிவாக்கில் தன் ஏரியாவில் உள்ள அம்பேத்கார் சிலையை நோக்கி சைக்கிளில் புறப்பட்டார்.

அம்பேத்கார் சிலை பீட்டுக்கு அருகில் வந்து பார்த்தால் டூவிலர்க்கு அருகில் பிளாஸ்டிக் சேர் காலியாக இருந்தது. பக்கத்து டீக் கடையில் விசாரித்தால் கவனிக்க வில்லை என்றார்கள். பக்கத்தில் டாஸ்மாக் கடை இருந்தது.. சந்தேகத்துடன் அங்கு போய் பார்த்தார். அங்கும் இல்லை..

காலையில் ஏற்ப்பட்ட கைகலப்பில்  ஏழரை மகன் திருமா வளவன்அடித்த அடியின் வலி இப்பொழுதான்  தெரிய ஆரம்பித்தது.. காலையில் சாப்பிடாததால் உண்டான கிறக்கம் பசியை உண்டாக்கியது. சைக்கிளை உருட்டியபடியே தன் வீட்டை நோக்கி நகர்ந்தார்.

தெரு நுழைவில் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள நாட்டாமை குருசாமியின் வீட்டின் முன் ஏழரைமகனும் அவன் பொண்டாடியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.இவரைக் கண்டதும் ஏழரை மகன் வளவன்..

குருசாமியிடம் ,நீ சும்மா இருப்பா அவன.அடப்புல போட்டு தள்ளுறேன் பாரு என்றான் இவரைப் பார்த்தபடி... அவன் தாயார் ராணியோ......நீ சும்மாயிரு  மச்சான். அவனவன் சூத்த அறுத்துவிட்டா......இருக்கிற இடம் தெரியாம இருப்பாங்கே மச்சான்  என்றாள்.

கணேசனோ,எதிர்த்து எதுவும் பேசாமல் கேட்காதவன் மாதிரி தன்வீட்டுக்கு வந்தான். தெருவில் குருசாமியின்  ஏவல் கூட்டத்தின் பெண்கள் அணி இவனைப் பார்க்காதது மாதிரி தெருவை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் விலகி சென்று வீட்டின் சுவரில் சைக்கிளை சார்த்தி வைத்துவிட்டு முகம் கைகளை கழவி விட்டு பேருக்கு கொஞ்சம் தண்ணியும் கஞ்சியும் குடித்துவிட்டு  போலீசை பார்க்க கிளம்பினார்.

தூரத்தில் வரும்போதே போலீஸ பீட்க்கு அருகில் ஒரு போலீஸ் அமர்ந்திருப்பதைக் கண்டதும்  விரைவாக வந்தார். வந்தவர் அந்த போலீசைக் கண்டதும்  வணக்கம் சொல்லி தன் பெயரைச் சொல்லி  போலீஸ் ஸ்டேசன் ரைட்டர் தங்களை பார்க்கச் சொன்னதை சொன்னார்.

ஒங்க வீடு எங்கே இரக்கிறது என்று கேட்டார். பக்கத்தில்தான் நடந்தே செல்லலாம் என்று அவர் சொன்னபோது  எழுந்து தொப்பியை மாட்டியபடி அவர்க்கு பின் நடந்து வந்தார்.

நடந்து வரும்போதே உன்னுடன் ச ண்டை போட்டவர்களின் பெயர்களை சொல்லு என்றார். 

தெருவுக்குள் நுழையும்போதே குருசாமியும்அவனின் வைப்பாட்டி ராணியும் நின்று கொண்டு இருந்தார்கள்.. வந்த போலீசிடம் அவர்களை காண்பித்தார்..

வந்த போலீஸ் உன் மகன்,கனவன்  எங்கே? என்றார். மகன் படிக்க சென்று இருக்கிறான்  வீட்டுக்காரர் வேலைக்கு சென்று இருக்கிறார்  என்றார்கள்.

வந்த போலீஸ் ,சாயந்தரம் ஏழு மணிக்கு.நீங்கள் இருவரும் உங்கள் மகனுடன். போலீஸ்ஸ்டேசனுக்கு வந்துவிடனும்  என்ன ...புரியுதா........என்றார்.

போலீஸ் வந்தததைக் கண்டதும் குருசாமியின் மகள். மற்றும் மருமகள்கள் இருவர் சேர்ந்து  தாங்கள் எதுவும் பேசவில்லை என்றும் இவர்தான் முதலில் சண்டையிட்டதாகவும் அசிங்கமாக திட்டியதாகவும் படிக்கிற சின்னப்பயலலை வம்புக்கு இழுத்து சண்டையிட்டதாகவும் தோசையை ஒரே புரட்டாக புரட்டி போட்டார்கள்.

வந்த போலீஸ் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு  ஸ்டேசனில் வந்து சொல்லுங்கள் என்றார். கணேசனையும் பார்த்துவிட்டு மாலை ஏழு மணிக்கு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்துடுங்க என்றார்.



தொடரும்....................











ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...