பெருங்கூட்டம் அந்தக்
கூட்டத்திலே சிக்கிய
நான்- பாட்டுப் பாடு
வதற்க்காக தவியாய்
தவித்த வேளையிலே...
பெருங்கூட்டத்தின் மத்தியிலே
நெற்றியில் மூன்று பட்டை
நடுவிலே பெரிய பொட்டுட்ட
துறவியொருவர் மேடையிலே
வீரமாய் எழுந்து நின்றார்.
காவியுடை தரித்த வீர
துறவியைக் கண்டு
பெருங்கூட்டம் ஊளை
யிட்டு வரவேற்றது.
ஊளையிட்ட கூட்டத்தினை
கை சைகயால் சாந்தப்
படுத்திய துறவி வீரமாய்
முழங்கினார்......தப்பு
வீரமாய் கத்தினார்.
இந்துக்களே! இந்துக்களே!!
தீபாவளி பண்டிகையை
இந்துக்களாகிய நாம்
மட்டுமே கொண்டு ஆட
வேண்டும் என்ற நம்
மரபை மீறி கண்ட
வனும் கொண்டு ஆடுகிறான்.
தீபாவளி பண்டிகை வியா
பாரத்திலே..அவன் மட்டுமே
நல்ல லாபமடைகிறான்.
ஆகவே...இந்துக்களே! இந்து..க்களே!!
இந்து..க்களின் வீர மரபை
மீட்டெடுக்க..இந்துக்களாகிய
நாம் வரும் காலங்களில்...
தீபாவளியை கொண்டாடாமல்
புறக்கணிப்போம்..புறக்கணிப்போம்
புதுத்துணி வாங்காமல் புறக்கணிப்போம்
வெடி வெடிக்காமல் நிறுத்தி வைப்போம்.
பெருங்கூட்டமும் புறக்கணிப்போம்!
புறக்கணிப்போம் !! இந்துக்கள்
அல்லாதவர்கள் லாபமடையும்
தீபாவளி பண்டிகையை புறக்
கணிப்போம் என்று வெடிச்
சத்தம ளவிற்கு ஊளையிட்டது
அதி காலை நேரத்தில்
கேளாத செவியில் வெடிச்
சத்தம் கேட்டு எழுந்த
போது கனவு கலைந்தது
வெடிச் சத்தத்தின்.....
ஆத்திரத்தை அடக்கியவன்
மூத்திரத்தை அடக்க .....
முடியாமல் ஓடினே்ன்
விரைவாய் பாட்டு பாட....
குறிப்பு ---பாட்டுப்பாட என்பது சிறுநீர் கழிப்பதை குறிக்கும்.
