பக்கங்கள்

சனி 22 2013

மாநகராட்சி பாதையை தனது பாதையென பக்கத்து வீட்டுக்காரன் மீது வழக்கு தொடுத்த ஒரு தெருநில மன்னன்



ஆள்பலமும் பணபலமும் இல்லாதவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து தன்கூத்தியாளுக்கும் தான் வாடகைக்கு விட்டுள்ள வீட்டிற்க்கான வழி நடை பாதையாக்கி பயன்படுத்தி வருவதோடு, இடத்துக்காரன் எதிர்க்காதவாறு பல இம்சைகளை கொடுப்பதோடு,புதிய இம்சையாக, அந்த இடத்தை விட்டுக் கொடுத்தால் மாநகராட்சி பாதையை உனக்கு விட்டுக் கொடுப்பேன் என்று மிரட்டியும், இடத்தை பறி கொடுத்தவன் பணியாததால் வீம்புக்கு மாநகராட்சி பாதையை தனது பாதையென்றும்,இதில் குழாய் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாதென்று வழக்கு போட்டு,அந்த வழக்கிலும் ஆஜராகமல் இழுத்து அடித்து கைதேர்நத கிரிமினல் புத்தியுடன தாழ்த்தப்பட்ட சமூகத்திற்க்குள் உள்ள ஒரு அயோக்கியனை பற்றிய உண்மைக் கதைகளின் ஒரு சிறு துளி இது.


அந்தப் பறைய தெருவுக்கு அவன்தான் தலைவன்,நாட்டாமை,தெரு சந்திப்பில் கட்டியுள்ள காளி கோயிலுக்கும் பூசாரி,காளிகோயிலின் முதல் சாமியாடி.இத்தனை பதவிகளுடன் அந்தத்தெருவுக்கு அவன்தான் மன்னன்.


அந்த தெரு நில மன்னனக்கு நாலு இளவரசர்களும்,இரண்டு இளவரசிகளும்  நான்கு இளவரசர்களின் மனைவிமார்கள் மற்றும்பிள்ளைகளை சேர்த்தாலே ,தெரு நிலமன்ன்னின் குடும்ப உறுப்பினர்களே எண்ணிக்கையில் இருபது பேர்களுக்கு மேலாக இருப்பார்கள்..இதோடு அந்தத் தெருவின் சமூகத்தில் நாட்டாமையாகவும் கோயில் பூசாரியாகவும் சாமியாடியாகவும் இருப்பதால் சமூக அஸ்தஸதுக்கு தக்கப்படி,சின்னவீடுகளும் ,அதுகளுக்கு பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் இளவரசிகளின் வழி உறுப்பினர்களின்  எண்ணிக்கையை  மொத்தமாக கூட்டினால்  ஐம்பதை தாண்டும்..


அந்தத் தெருவிலே முதன்முதலாக அரசாங்க உத்தியோகமான மின்சார வாரியத்தில் வேலை பார்த்து பென்சன் வாஙகுபவன் என்ற பெருமையும் முதல் ஆளாக  அந்தத் தெருவில் கழிப்பறை கட்டியவன் என்ற சிறப்பும்  இவனுக்கு உண்டு..


பெருமை வாய்ந்த அந்த தெரு நில மன்னனை அதே தெருவில்வசிக்கும் ஒருவன் எதிர்த்துவிட்டான். ஏற்கனவே. அந்தத் தெருநில மன்னரால் பல தடவை இவனுக்கு ஆப்பு வைக்கப்பட்ட்டு மூலையில ஒக்கார வைக்கப்பட்டாலும் பயந்து கொண்டு பின் வாங்கி விடாமல் எதிர்த்து வந்தவன் அவன்


தெரு நில மன்னன் கண்சாடை காட்டினால் அவனின் பக்தர்கள் மட்டுமல்ல தெருவில் உள்ளவர்களும் பத்தடி பாதையை பாதாள சாக்கடை போடுவதற்க்காக அய்ந்து அடி ஆக்கிய மாநகராட்சி மாதிரி,அய்ந்து அடி பாதையையும் பயன்படுத்த முடியாதவாறு, பழைய சைக்கிள்களையும் பழைய டப்பா தட்டுமுட்டு சாமான்களையும் போட்டும் ,போதா குறைக்கு பாதையை மறைத்து உட்கார்ந்து கொண்டு வீட்டுப்பாத்திரம் கழுவுகிற, துணிகள்  துவைக்கிற சாக்கில் பாதையை மறைத்து விடுவார்கள். அதோடு தெருவை விட்டும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். யாரவது எதிர்த்தவனை  வந்து கேட்டால் அப்படிபட்டவன் இங்கே இல்லை என்று சாதித்துவிடுவார்கள். பொதுக்குழாயில்  குடிதண்ணியும் எடுக்க முடியாதவாறு பக்காவா பிளான் போட்டு தடுப்பார்கள் தொடர்ச்சியாக சண்டையிடச்செய்து,போலீஸ் ஸ்டேசன்,அபதாரம் என்று செலவையும் மன உளச்சலையும்  ஏற்ப்படுத்துவான். தெருநில மன்னனை எதிர்த்தவன் நோயால் வந்து  படுத்துவிட்டால் சண்டை ஓய்ந்து  அமைதியாக இருக்கும்


சண்டை ஓய்ந்து  அமைதியாக இருக்கும் நாளில்.,அதாவதுஉள்ளுர் காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் மாறிய பின், புதிய ஆய்வாளர் வந்தபின் ஏற்கனவே. மூத்த இளவரசனின் தொடர்புள்ள உதவி ஆய்வாளர் உதவியுடன் தெருநிலமன்னன்,தன்னை எதிர்த்தவன் மீது ஒரு பொய்ப் புகார் செய்வான்


புதிய ஆய்வாளரே, தெரு நில மன்னனுக்கு விட்டு கொடுக்கச் சொன்னார், அவனோ,தெரு நில மன்னன் தன் வீட்டில வாடகைக்கு இருப்பவர்களுக்கு நடப்பு விலைக்கு விட்டுக்கொடுத்தால் தங்கள் உத்தரவுப்படி நான் விட்டுக்கொடுக்கத்தயார் என்பான். ஆய்வாளர் மிரட்டி பார்ப்பார். மிரட்டிலின் ஒரு பகுதியாக  காவல்நிலையத்தில் பிடித்து வந்தவர்களை இவன் கண் எதிரில் நாயடி பேயடியாக அடித்து மிரட்டிப்பார்ப்பார். இவன் மிரளமாட்டான்.



பகுதி காவல் நிலையத்தில் அடி வாங்க வைத்தல், அபதாரம் கட்டவைத்தல் ,இப்படி பல வகையான மிரட்டல்களுக்கும் பயந்தும் சோர்வுற்றும் இடத்தின் சொந்தக்காரன் பின் வாங்காமல் தெரு நில மன்னனை எதிர்த்து நின்றான்


தெரு நில மன்னனாக இருக்கும்  மப்பில் ,இவனை எதிர்த்தவனுக்கு பாத்தியமான இடத்தை வளைத்து போட்டுவழி நடைபாதையாக்கி,பயன்படுத்தியதோடு, அந்த ஏரியாவின் சர்வேயருக்கு.ஒரு தொகையை செட்டில் செய்து நகரப்புலப்படத்தில் பொதுப்பாதையாவும் மாற்றிவிட்டான். இதை தக்க வைப்பதற்க்காக


மாநகராட்சிப் பாதையை தனது பாதையென்றும், அந்தப்பாதை தனக்கும் தன் உறவுக்காரர்க்கும் பாத்தியப்பட்டது என்றும், அந்தப்பாதையில்  தெருநிலமன்னனை எதிர்த்தவன். நடக்கவோ, பாதாள சாக்கடை குழாய் பதிக்கவோ,இணைப்பு கொடுக்கவோ,கூடாது என்று நிரந்தர உறுத்து கட்டளை வேண்டி மாவட்ட  கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தான்.


வழக்கும் நம்பராகி நிரந்தர உறுத்து கட்டளை எதுவும் வழங்கப்படாமல் வழக்கும் வாய்தாவாகி நகர்ந்து கொண்டு இருந்து இரண்டரை ஆண்டு கழித்து வழக்கு தொடுத்த தெரு நில மன்னன் முதல் விசாரணைக்கு ஆஜராகும நாள்.


அன்று தெரு நில மன்னன் தொடுத்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்குபின் விசாரனைக்கு வந்தது. தெருநில மன்னன்தான் முதலில் விசாரிக்கப்படவேண்டியவன், அவனுக்கு தன்வழக்கு நிற்காது என்று தெரியும் இருந்தாலும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் நாட்களை கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தெருவில் தன் அருமை பெருமையை நிலை நாட்டும் பொருட்டும் , வழக்கு விசாரணைக்கு


புறப்படும் நேரத்தில், (கெளலி) பல்லி ஒன்னு  ஆகாத மூலையில் இருந்து கத்தியது.என்றும் காளி அம்மனின் பூசாரியும்,முதல் சாமியாடியும் பல்லி சத்தம் கேட்டு சற்று தயங்கி நின்றேன என்றும்,.ஆகாத திசையில் பல்லி ஒன்று கத்தியதாலும்,குறுக்காக பூனை ஒன்று ஓடியதாலும், சகுனம் சரியில்லை என்று தெருநிலமன்னன்,தெருவில் உள்ளவர்களுக்கு கதை பரப்பி விட்டு வழக்கில் ஆஜராவதிலிருந்து தவிர்த்துவிட்டான்

.
தெருநில மன்னனை எதிர்த்து நின்றவனோ, நீதி மன்றத்தில் காத்து கிடந்தான். குருசாமி,குருசாமி,குருசாமி என்று மூன்று தடவை  நீதி மன்றத்தில் கூப்பிட்டபோது எந்த ஆசாமியும் ஆஜராகவில்லை, தெரு நில மன்னனின் நாற்பது வருட  சட்டஅனுபவரான வழக்குரைஞரோ, தன்வாதியைப்பற்றி பதில் எதுவும் சொல்லாமல் திட்டமிட்டபடி மௌனமாக  நடந்து கொண்டார்.


தெருநில மன்னன் தொடுத்த வழக்கில்.வாதி விசாரனைக்கு ஆஜராகததாலும், வாதியின் வழக்குரைஞர் எந்தப்பதிலும் சொல்லாததாலும் வழக்கு (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.


தெருநில மன்ன்னும் விடாமல்  பழைய புதிய வழிமுறைகளை கையாண்டு கொண்டே வந்தான். அதில்  ஒரு யுக்தியை கையாண்டான்,


கைதேர்நத கிரிமினல்களின் வழிகாட்டல்படிதெரு நில மன்னன்தள்ளுபடியான வழக்கை திரும்பவும் நடத்தும்படி மனு போட்டான்


தான் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாகி மருத்துவ மனையில் கிடந்த்தாகவும், தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால்,காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை. அதனால் முதல் விசாரனைக்கு ஆஜராக முடியாமல் போய்விட்டதென்றும், இந்த வழக்கை  நடத்தாவிட்டால் தனக்கு பாரிய இழப்பு ஏற்ப்படும் என்று  முறையீடு செய்தான்.

நீதி மனறமும் தெரு நில மன்னனின் முறையீட்டை ஏற்றது.


தெருநில மன்னனை எதிர்த்தவனோ, பத்து தடவை தனக்கு ஆப்பு வைத்தபேதும் ஒரு தடவையாவது ஆப்பு வைக்கலாமா போய்விடுவேன் என்று அடுத்த  சட்டத்தின் ரவுண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறான்.


தெருநிலமன்னனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மீண்டும் ஆப்பு வைப்பதற்க்காக   கழுத்தில் செயினும் கையில் மைனர் செயினுடனும் இளைஞானட்டம்  அவனும் அடுத்த ரவுண்டை கடத்துவதற்க்காக காளிக்கு விழா எடுக்குறான்.

வெள்ளி 21 2013

அரை ஆடை பக்கிரியும் ஆடையில்லா பக்கியும்..



இங்கிலாந்து பிரதமரான வின்சென்ட் சர்ச்சில் பொருத்தமாகத்தான் பேரு வைத்திருக்கிறார் அரை ஆடை பக்கரின்னு.


இந்தியாவின் மகா ஆத்து மா. என்று ஊதி பெருக்கி பரப்பட்ட இந்த அரை ஆடை பக்கரி, இந்திய சுதந்திரத்தில் செய்த துரோகதனத்தை பற்றி பக்க பக்கமாய் ஆதாரங்கள் குவிந்துள்ளபோதிலும்.


இந்த பக்கிரி சத்திய சொதனை என்ற பெயரில் பொய்யும் புரட்டலையும் எழுதித்தள்ளிய போதிலும் பக்கிரி செய்திருந்த பக்கிரித்தனமான செய்கைகள் நடத்தைகள்.   எப்படியும் வெளியே வந்து நாறத்தான் செய்யும்  அதற்கு ஒரு சாட்சிதான். மனப்பென்னின் குறிப்பு புத்தகம்


அரைஆடை பக்கிரி தன் ராம ராஜ்ஜிய ஆசிரமத்தில் தனக்கு பணிவிடை செய்வதற்கென்று அதிகமான வயசுக்கு வந்த இளம் பெண்களை தங்க வைத்திருக்கும்போது.


அந்த இளம் பெண்களை தொழிற்சாலை ஷிப்ட்டு முறையில் தான் படுத்திருக்கும்  ஒரே படுக்கையில்  தன்னுடன் இடது வலதாக நிர்வாணமாக  படுக்கச் சொல்லுமாம்.

அந்த இளம் பக்கிகளும் பக்கிரியின் சொல்லுக்கு மறுபேச்சு இல்லாமல் பக்கிரியின் இரண்டு பக்கத்திலும் நிர்வாணமாக படுத்துக் கொள்ளுங்களாம்.


தன்னுடன் நிர்வாணமாக படுத்திருக்கும் அந்த இளம் பெண்களை.அந்த பக்கிரி கட்டி அணைத்து,சில்ஷிம சேட்டைகள் செய்யும்போது, நிர்வாணமாக படுத்திருக்கும்  அந்த இளம் பெண்கள் உணர்ச்சி படாமல் இருக்குதான்னு டெஸ்ட் பன்னுமாம்.


அடுத்து இந்த பக்கிரியை  இளம் பெண்கள்தான் குளிப்பாட்ட வேண்டும். அதுவும் குளிப்பாட்டும் பெண்ணும்  ஆடையில்லாமல் நிர்வாணமாக இருக்கவேண்டும்


இப்படிபட்ட செய்கைகளுக்கு இந்த பக்கிரி வச்சபேரு. பிரமச்சரிய பரிசோதனையாம். பீ தின்னும் நாய்க்கு பேரு முத்துமாலை மாதிரி.


இன்றைக்கு சினிமாவிலும்,இணையத்திலும்.செல்போனிலும் வந்து சேவை ஆற்றிக் கொண்டு இருக்கிற படுக்கை சீன்களுக்கும், குளியல் சீன்களுக்கும்முன்னோடியாக. இந்த அரைஆடை பக்கரியும்,ஆடையில்லாத பக்கிகளும் தூள் கிளப்பி இருந்திருக்குதுகள்.


இந்த லட்சனத்துல இந்த யோக்கிய பக்கிரி, ஒரு பிரிவு மக்களுக்கு  கூப்பிட்டு பேரு வையுங்கன்னு சொன்ன மாதிரி அரிசனங்கள் ன்னு பேரு  வேறு வச்சுருச்சு


ராம ராஜ்ஜியம் என்று சொல்லிக் கொண்டே, .சொல்லி.கொள்கிற பதி விரதன் சீதாராமனுக்கு விரோதமாக இந்த பக்கிரியின் நடத்தையும். இருந்திருக்கிறது
Sarla Devi



வியாழன் 20 2013

வலிப்போக்கன் ஒன்பதாம் வகுப்பில் பெயிலான கதை....


அரையாண்டு தேர்வு முடிந்த சில நாட்களிலே,டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவன் வீட்டில் போதிய சுகாதாரமும் வைத்தியம் செய்வதற்க்கான வசதியும் இல்லாத்தால். அவன் அம்மாவின் கை பக்குவ மருத்துவ சிகிச்சையில் ஒரு மாதத்திற்கு மேல் படுத்த படுக்கையாய் கிடந்து ஒரு வழியாய் சாவின் வளிம்பில் இருந்தும் நோயின் கொடுமையிலிருந்தும் மீண்டு விட்டான்.


உடல் மெலிவும் சொர்வும் இருந்தாலும், பள்ளிக்கு சென்று நீணட நாட்கள் ஆனதால் பள்ளிக்கு செல்ல ஆவல் ஏற்ப்பட்ட காரணத்தால் கையில் ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.


அவன்  பள்ளி சர்ச்சை கடந்து வாசலில் நுழைந்தபோதே பிரேயர் முடிந்துவிட்டுயிருந்தது. லேட்டாக சென்ற மாணவர்கள் பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தத்தால் புத்தக சுமையுடன் அலறி அடித்து ஓடிக் கொண்டு இருந்தனர்.


வலிப்போக்கனோ, பீட்டி வாத்தியாரின் விசில் சத்தத்தை பொருட் படுத்தாமல்,மெதுவாக  லைபரேரியை கடந்து மாரியப்ப அண்ணனின பெட்டிக் கடையை கடந்து  கொண்டு இருக்கும்பொழுது ..........


பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தம்  பயங்கரமாக அருகில் கேட்க பதற்றட்டத்துடன் திரும்பவதற்க்குள் பீட்டீ வாத்தியாரின் விசிலின் வயரின் அடி குண்டியில் சுரீர்.என்று விழுந்தது.


காய்ச்சலால் தோல் வத்திப்போன உடம்பில் அடி தீய்யா சுட்டது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி,“ஓடுறான்னு சொன்னா, அன்ன நடையா நடக்குறன்னு அடுத்த அடி......


ரெண்டு,மூணு அடி விழுந்ததில்.வலி பொறுக்க முடியாமல் பீட்டீ  வாத்தியாரை பலம் கொண்டு ஓங்கி குத்தியும் சரமரியாக  அடித்தும் துவைத்துவிட்டான்.


மாணவன் அடித்ததால் கோபம் கொண்ட பீட்டீ வாத்தியான் திரும்ப அடிக்க, வலிப்போக்கனும் அடிக்க, மாணவனும், வாத்தியானும்  மல்லுகட்டி  தரையில்புரண்டனர்.


வலியின் வேகத்தால் மாணவன் கீழே  கைக்கு கிடைத்ததை எடுத்து வாத்தியானை பதம் பார்த்துவிட்டான். வாத்தியானும் மாணவனை விட்ட பாடில்லை,


பீட்டீ வாத்தியானும் மாணவனும் கட்டிப்புரண்டு உருளுவதைக் கண்ட பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் கடையை விட்டு ஓடோடி வந்து சண்டயை விலக்கிவிட முயற்ச்சித்தார். இன்னொரு பீட்டீ வாத்தியாரும் வந்துவிடவே, இருவரும் சேர்ந்து சண்டயை விலக்கினர்.


வலிப்போக்கன் பேச முடியாமல்.கைகால்கள் நடுங்கிய வண்ணம் மேல்மூச்சு,கீழ்மூச்சு வாங்கியபடி நின்று கொண்டு இருந்தான்


பீட்டீ வாத்தியானோ,கோபம் அடங்காமல், மாணவனை திரும்பவும் அடிக்க பாய்ந்தான்.


மாரியப்ப அண்ணே, காய்ச்சல்ல ஒரு மாசமா,பள்ளிக்கூடத்துக்கே வரலைண்ணே, இன்னிக்குதானே  சுகமாகி வந்தேன். ஓட முடியாம, நடந்து வந்ததை நீங்களும் பாத்துகிட்டுதானண்ணே இருந்தீங்கே, அடி வாங்கி வீங்கிப்போன உடல் பகுதியை காட்டினான்.


செம்மன் தரையாதலால் உடலில் உராய்வு காயங்களும் ஏற்ப்பட்டு இருந்தது.
                      -----------------------


ஹெட் மாஸ்டர் ரூம்.  பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் மல்லு கட்டிய பீட்டீ வாத்தியானுடன் பள்ளியில் பணியாற்றிய அத்துனை பீட்டீ வாத்தியானும் உடனிருந்தனர். வலிப்போக்கனின் கிளாஸ் வாத்தியார், மற்றும் சயின்ஸ் வாத்தியார்களும் உடன் இருந்தனர்.


வலிப்போக்கன் முதலிலே,ஹெட் மாஸ்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்லி விட்டான்


சார், எங்கவீட்டுல யாரும் வரமாட்டாங்க,சார், எங்க அப்பா, நான் சின்ன புள்ளயா இருக்கறப்பவே. செத்துப்போயிட்டாரு, எங்க அம்மாவுக்கு எதுவும் தெரியாது. எல்லாமே நான்தான். காய்ச்சலுக்கு வைத்தியம் பாக்க்கூட வசதி இல்லாததால்தான் ஒரு மாசமா படுக்கயில இருந்து பொழச்சு வந்திருக்கேன். எனக்கும் வாத்தியாருக்கும் முன்பகை எதுவுமில்லை, வாத்தியார அடிச்சத்து தப்புதான், வாத்தியாரு அடிச்ச அடி தாங்க முடியாமல் கோபத்தில் அடித்து விட்டேன்.  அவரும் இப்படி வெறிகொண்டு நோஞ்சனாகிவிட்ட என்னை இந்த வெளு வெளுத்திருக்க வேண்டாம். நீங்க பாத்து  என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன் சார்..


கிளாஸ் வாத்தியார், வலிப்போக்கனின் கையை  இருக பிடித்து விட்டார். பியுன் வந்து கொடுத்த ஆயுள்மெண்டை வாங்கி வீங்கிப் போன இடங்களில் தேய்க்கச் சொன்னார்.


சிறிது நேரம் வலிப்போக்கனை ,வெளியில் இருக்கச் சொன்னார் ஹெட்மாஸ்டர். கதவு அடைக்கபட்டு, உள்ளே போர்டு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது.


பீட்டீ வாத்தியாரு குலாம் எல்லாரும் மொத்தமாக வெளியேறினர். கடைசியாக கிளாஸ் வாத்தியார் சொர்ந்து போன முகத்துடன் காணப்பட்டார்.


ஹெட்மாஸ்டர்.மாணவனை அழைத்து கிளாஸ் வாத்தியார் சொல்றபடி நடந்துக்க என்றார். சரிங்க சார் என்றுவிட்டு கிளாஸ் வாத்தியாரை பார்த்தான். வீட்டுக்கு போயி ரெஸ்ட எடுத்துட்டு நாளைக்கு வாடா? என்றார்.


முடிவு சொல்லுங்க சார் என்றபோது  தயங்கியபடி சொன்னார்



வீட்டுக்கு வந்தபோது அன்று மாலையில் திரும்பவும் காய்ச்சல வந்தவிட்டது. அது முதற்க் கொண்டு அந்த பள்ளி கூடத்து பக்கம் போவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை, டீ.சி வாங்க போனதைத்தவிர.................

.

ஞாயிறு 16 2013

வலைக்குள் சிக்கிய கொசுவும் மனிதனும்....

தமிழகத்தில் பவர்கட் அதிகமாக இருந்த நேரம். ஃபேன் ஓட மின் சாரம் இல்லாததால் புழுக்கமும் கொசுவும் சேர்ந்து ருத்ரதாண்டம் ஆடிய காலம் அது.

கொசுவுக்கு பயந்து கொசுவலைக்குள் பதுங்கிக் கொண்ட காலம் அது. அப்படிபட்ட காலத்தில் ஒரு சராசரி மனிதன். பகலில் தன் வேலைமுடிந்து கொசுவலைக்குள் பதுங்கி கொண்டியிருந்த நேரத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான்.

சார்ஜ்சில் எரிந்து கொண்டு இருந்த  15வாட்ச் சிஎல் பல்ப்பை அணைக்க்கூட முடியாதவனாக படுத்திருந்தான்.  பக்கவாட்டில் பார்வையை செலுத்தியபடி தலைக்கு மேலே கொசுவலையை பார்த்தான்.

ஆ............... கொசு............எப்படியோ....... உள்ளே வந்துவிட்டது...

கொசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

கொசுவால் டெங்கு,சிக்குன்குனியா,போன்ற மர்மக்காய்ச்சல்கள் இந்தியா வெங்கும் பரவி ஏராளமானவர்களை பலிகாடாக்கியது அவனின் நிணைவுக்கு வந்து போனது.

கொசுவும் இவனுக்கு போட்டியாக  எங்கும் பறக்காமல் ஒரே இடத்தில் குத்துக்கல் சாமியாராட்டம் அமர்ந்திருந்த்து. கொசுவும் மனிதனும் வைத்த கண் மாறாமல் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் கொசு மனிதனைப் பார்த்து சிரித்தது.

என்னாது! கொசு,மனுசனை பார்த்து சிரிச்சதா? என்று சந்தேகம் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில நான் ஈ..........ன்னு ஒரு பட்த்திலே ஈ.......தன் காதலியிடம் தன்னை வெளிப்படுத்தி வில்லனை பழி தீர்க்கும்போது சந்தேகமா கொண்டீர்கள்.

ஆனால், இந்த சம்பவத்தில்.கொசுவுக்கு மனிதன் வில்லனா அல்லது மனிதனுக்கு கொசு வில்லனா என்பது பற்றி நீங்களே தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.  

படுத்திருந்த மனிதன் மெதுவாக கையை அசைத்தான். கொசு சிரிப்பதை நிறுத்திவிட்டு. கிங்காங் படத்தில் வரும் குரங்ங்கைப்போல,முகத்தை உம்மென்று வைத்து முறைத்தது. அடிக்கொருதரம் தன் ஊசி முனையை சரிபார்த்து கொண்டது.

தூக்கம் கெட்ட மனிதன் மீண்டும் ஆடாமல் அசையாமல். கொசுவை பார்த்தபடியே நிதனாமாக மூச்சை இழுத்து வெளியே விட்டுக்கொண்டு இருந்தான்.

சிறிய இடைவேளைக்குப்பின், உம்மென்ற முகத்தை மாற்றிக்கொண்டு.கொசு ஏதோ சொல்லியது.

மனிதர்கள் பேசுவதே,அந்த மனிதனுக்கு கேட்காது. இதுல,கொசு 
பேசினது கேட்டுச்சாக்கும் என்று நக்கல் பன்னக்கூடாது.

கொசு பேசியது அந்த மனிதனுக்கு கேட்டது......

எங்களால் பரப்படும் நோய்களும் சரி, நாங்களும் சரி, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடே பார்ப்பதில்லை, ஆனால் மனிதர்களால் செய்யப்படும் மருத்துவ சிகிச்சையில்தான் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு பார்க்கப்படுகிறது. இது ஏன்? என்பது தெரியுமா?

அந்த மனிதன் பேசாமல் இருந்தான். வலைக்குள் சிக்கிய கொசுவே மீண்டும் பேசியது.

நாங்கள் பாகுபாடு பார்க்காததற்கு ஏகப்பட்ட சான்று இருக்கு. அதில் ஒன்று எம்புட்டு பெரிய இந்திப்பட தயாரிப்பாளர் யாஷ்சோப்ரா நாங்கள் பரப்பிய டெங்குவால்தான் போய் சேர்ந்தார்..

அந்த மனிதன் மெதுவாக கிசு கிசுத்தான்...

 கொசு தலையை ஒரு சிலிப்பிக் கொண்டு ஓ...........அதுவா.......... ,  ஆசிய டைகர் என்னும் புதியரக கொசுவான நாங்கள் ஏடி எஜிப்டி கொசுவுடன் கூட்டணி அமைத்துதான் கொள்ளை நோய்களை பரப்புகிறோம். என்றது.

ஒன்னும் புரியவில்லையே என்கிற மாதிரி கண்களை கேள்விக் குறியாக்கினான் மனிதன்.

உன் மரமண்டைக்கு,இன்னும் விளக்கமா சொல்லுவதென்றால்.....

காங்கிரசும் பாரதிய ஜனதாவும். ஊழலிலும்,களவானித்தனத்திலும்.நாட்டை கூறுபோட்டு விற்பதிலும் ஒற்றுமையாய் இருந்து.வெளியில் வேற்றுமையாய்  காட்டிக்கொண்டு இருப்பது போல.

மனிதன் வியந்தான்,அட்டா, இந்த கொலகார கொசுவுக்குகூட நாட்டுப் பற்று இருக்குதுபோல”...........ஆனால் மக்கள் பற்று இருந்திருந்தால், 
எம்மை இப்படி பயமுறுத்துமா?”.

நிணைத்த மறுநிமிடத்தில்...........

திடிரென்று. சிஎல் பல்ப் அணைந்தது, சுதாரித்த மனிதன் கண் இமை நேரத்தில் தன் இரு கைகளை குவித்த வண்ணம் கொசு உடகார்ந்த இடத்தை ஒரே அடியாக அடித்தான்.

பிறகு, வலைக்கு வெளியே வந்து,திரும்பவும் கொசுவலையை உதறி சரி பண்ணி,திரும்பவும்  கொசுவலைக்குள் படுத்தான்.

கொசுவு என்னாவாகியது என்று .அந்த மனிதன் நிணைக்கவில்லை. அவன் தூங்கவில்லையேன்றால் நாளை வேலை செய்யமுடியாது என்ற நிணைப்பே மேலோங்கி இருந்தது.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...