பக்கங்கள்

சனி 08 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --32-

 யார் குற்றவாளி!

ஆன்லைன் வகுப்பு நடத்துபவர்களா?

அல்லது..

மொபைல் வாங்கி

கொடுக்காத பெற்றோர்களா?

அல்லது  ..

பணமில்லாத நிலையை ஏற்படுத்திய

கரோனாவா??

.


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஃபோன், , ’கட லூர் ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் பாததால், மனமுடைந்த மாணவன் தற்கொலை.! ထရဲ’ எனச்சொல்லும் உரை

வியாழன் 06 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --31-



ஆண்டபரம்பரை இனி 3 ஆவது படிக்கவே முட்டனும் | mathimaran Speech | மதிமாறன் |




4000 ஆண்டுகள் வயதான புதியக் கல்வி. ஆண்ட பரம்பரையல்ல கை நாட்டு பரம்பரை. 3 ஆவதே இனி மேற்படிப்புதான். எட்டாவதெல்லாம் இனி எட்டாக் கனி. பள்ளிக்கூடத்தை மூடிட்டு 12 வது வரை கட்டாயம் படிக்க வைப்பாங்களாம். என்னா புதுமை? பள்ளியில் காலை, மாலை சத்துணவு. ஆனால் முட்டை கிடையாது. வெங்காயம் வெள்ள பூ ண்டும் கிடையாது. அருகம்புல் ஜுஸ்தான். இந்திக்காரனுக்கே இந்தி தெரியல. நான் எதுக்கு இந்தி படிக்கனும்? இந்திக்காரனுக்கு இரண்டு மொழி. எங்களுக்கு மட்டும் மூணு மொழியா?

சமஸ்கிருதம் படிச்சா எங்க மக்கள் கருமாதி பண்ணிகூட பிழைக்க அனுமதி கிடையாது. அப்புறும் எதுக்கு அது? ஆண்ட பரம்பரையா கை நாட்டு பரம்பரையா?

புதன் 05 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --30-

நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா ...



நீ தயிர் - நான் கறி குழம்பு

நீ குடுமி - நான் மீசை

நீ வெள்ளை - நான் கருப்பு

நீ நாடோடி - நான் பூர்வகுடி

நீ சமஸ்கிருதம் - நான் தமிழ்

நீ தீபாவளி - நான் பொங்கல்

நீ கீதை - நான் திருக்குறள்

நீ பிறப்பால் சாதி - நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

நீ புராணம் - நான் வரலாறு


நீ பிரிவினைவாதம்- நான் சமத்துவம்.

நீ என்னை தொட்டால் தீட்டு என்பாய் - நான் எல்லோரும் ஒன்றே என்பேன்.

"உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது"

நீ என்னை அடிமை படுத்த நினைக்கிற - நான் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் உயர வேண்டும் என்று நினைக்கிறேன்..


நீ வேறு...நான் வேறு... இதில் நான் எப்படி இந்து ஆவேன்..

திங்கள் 03 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --29-


ஊரடங்கு காலத்தில் 37,500 பேர் கைது - Newsfirst


நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள். ஆனால் எந்த போலீஸ் அதிகாரியாவது இதை செய்கிறார்களா?  சட்டத்தை மீறுவதே போலீஸ் துறைதான்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை அணிந்திருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

ஞாயிறு 02 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --28-




பள்ளிக்கூடத்துக்கு கட்ட பணம் இல்லையா? கல்விய இலவசமாக்கு.

சாப்பாட்டுக்கே வழியில்லையா? இலவச சத்துணவு போடு.

போட்டுக்க நல்ல துணிமணி இல்லையா? இலவச சீருடை கொடு, போட்டுக்க செருப்பு கொடு.

நோட்புக் வாங்க காசில்லையா? எல்லாத்தையும் இலவசமா கொடு, பை, ஜாமெட்ரி பாக்ஸ் சேர்த்து கொடு.

பஸ்சுக்கு காசில்லையா? இலவச பஸ்பாஸ் கொடு, சைக்கிள் கொடு.


பதினொன்னாவது சேருற எல்லா பிள்ளைகளுக்கும் லேப்டாப் கொடு.

பெண்பிள்ளைய படிக்க வெக்காம கல்யாணம் பண்றாங்களா? பத்தாவது முடிச்சா, பன்னெண்டாவது முடிச்சா கல்யாணத்துக்கு உதவித் தொகை கொடுக்கிறோம்னு சொல்லு.

பெண்பிள்ளைகளுக்கு நாப்கின் கொடு.

பெயிலாகிட்டா படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பிடுவாங்களா? எட்டாவது வரைக்கும் ஆல்பாஸ் கொடு.

பாடத்திட்டத்துல ஏற்றத்தாழ்வு இருக்கா? எல்லாருக்கும் சமச்சீர்கல்வி கொடு.

உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கத்துக்கொடு.
சிறுபான்மைசமூகப் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடு.

முதல்தலைமுறைப் பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் கொடு.

உயர்கல்வில நுழைய கோச்சிங் போகமுடியாது. நுழைவுத்தேர்வுகளை நீக்கு. எல்லா சமூகங்களுக்கும் இடங்களைப் பகிர்ந்து கொடுக்க இடஒதுக்கீடு கொடு.

இப்படியெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்து புள்ளைங்கள படிக்கவெச்சு திராவிடம் சாதிச்சது தான்டா 49% GER. ஆண்பிள்ளைகளுக்கு சமமா பெண்பிள்ளைகளும்.



இப்ப 3 5 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரதும், ஆங்கிலம் கத்துக்கிற வாய்ப்ப மட்டுப்படுத்துறதும், ஒன்னுத்துக்கும் உதவாத சமஸ்கிருதம் இந்திய திணிக்கிறதும், தொழிற்கல்வி கொண்டுவரதும், எல்லா உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரதும் யார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க? யார் வீட்டுப்பிள்ளைகள குலத்தொழில் பாக்க வீட்டுக்கு அனுப்ப?

தமிழகத்தோட கல்வி வளர்ச்சில பாதி கூட காமிக்காத விளங்காத பயலுக நீங்க யாருடா எங்களுக்கு சட்டம் போட?

தூசிதட்டி பெயிண்ட் அடிச்சு மத்திய பாஜக அரசு கொண்டுவரும் இந்த ஈராயிரமாண்டு பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தமிழகம் நிராகரிக்கிறது!

எதிர்ப்புகள் வலுப்பெறும்!!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’Global Comparison Tamil Nadu China Malaysia Bahrain Kuwait Higher Education GER Tamil Nadu Kerala Telangana Andhra Maharashtra Karnataka Gujarat 49% 43% 45% 47% 55% 49% 37% 36% 32% 32% 28% 20% Gross Enrollment Ratio (Sep 2019) Total enrolment in higher education as percentage of population in 18-23 years age group. Tamil Nadu India 49.0% 26.3% Source: MHRD TN eradicates Gender Discrimination in Higher Education GER Male -49.8% Female 48.3% Source: MHRD’ எனச்சொல்லும் உரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...