பக்கங்கள்

சனி 16 2016

நண்பரின் பஸ் பயண அவஸ்தை.......




நண்பரின் நண்பர் வீட்டு விசேசத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நண்பரிடமும் என்னை கட்டாயம் அழைத்து வருமாறும் அவருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அந்த நாளில் நண்பர் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வந்த நேரம் எனது செல்போனில் அழைப்பு வந்தது. எடுத்து பேசியவர் நண்பர்.

நான் சாமி கும்பிட்டுவிட்டு நண்பரிடம் வந்தபோது.. நண்பர் விபரத்தை சொன்னார். எனக்கு வேலை கொடுக்கும் கம்பெனிக்கு உடனடியாக வரச் சொல்லியிருந்த்த்தை தெரிவித்தார்.

உடனே, நான் வேலையின் நிலைமையைச் சொல்லி, நண்பரின் விழாவுக்கு அவரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

நண்பரும் நிலைமையை உணர்ந்து கொண்டு, நண்பரின் விழாவில் கலந்து கொண்டு நான் கலந்து கொள்ளா முடியாத விபரத்தையும் தெரிவித்து பிரிதொரு நேரத்தில் என்னை அழைத்து வருவதாக கூறிவிட்டு நண்பரிடம் விடைபெற்று வந்தார்.

மறுநாள் என்னைச் சந்தித்தபோது.  எல்லா விபரத்தையும் என்னிடம் சொன்னார் அவற்றில் ஒன்று  நண்பர்க்கு பஸ் பயணத்தின் போது ஏற்பபட்ட அவஸ்தை.........

நண்பரிடம் விடைபெற்று பஸ் நிறுத்தத்திற்கு வந்த நண்பர்க்கு சிறுநீர் கழிக்கத் தோன்றியது. ஒதுங்குவதற்கு முயன்றபோது.. பஸ் சில வினாடிகளில் வந்Jவிடும் என்பதால் வந்த சிறு நீரை அடக்கிக் கொண்டார். 

சில நிமிடங்களில் பஸ் வந்த்து. அந்த பஸ்ஸை விட்டால் அடுத்து இரவுதான் என்றார்கள். வந்தது தனியார் விரைவு பஸ் என்பதால் நண்பர் ஒரு மணி நேரத்தில் வீடு சென்று விடலாம் என்ற நிணைப்பில் வந்த சிறு நீரை அடக்கிக் கொண்டு டிரைவர்க்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து வந்தார்.

கால் மணி நேரம்  ஆகியது சிறு நீரை அடக்குவதற்க்கான முயற்சி பலன் அளிக்காத நிலையில் இருக்கையைவிட்டு எழுந்து பஸ்ஸின் கடைசியில் வந்து நின்றுகொண்டு இருந்தார்.

பஸ் விரைவாக செல்லுவதாலும்  பிரேக் போடும்போது ஏற்படும் அசைவாலும் ஆட்டத்தாலும் ஓரளவு சிறு நீரை அடக்க முடியும் என்பதால் நின்று கொண்டார்.

அரைமணி நேரமாகியது.. நண்பர் நிணைத்த மாதிரியே பஸ் விரைவாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர் வீடு வந்து சேர்ந்துவிடலாம்...ஆனால் ..விரைவாகச் செல்லும் பஸ்சின் அசைவாலும் ஆட்டத்தாலும் சிறிது நேரம்தான் தாக்கு பிடிக்க முடிந்த்து.

எந்த நேரத்திலும் தாக்கு பிடிக்க முடியாத நிலையே இருந்தது. பஸ்சில் கூட்டமும் கூடியிருந்தது. அருகில் நின்ற கண்டக்டரின் உதவியாளரிடம் அடுத்த நிறுத்தம் எது என்று கேட்டபோது. அந்த நிறுத்தம் சற்று கடந்து இருந்த்து. உடனே அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று   வண்டியை நிறுத்தச் சொல்லி உடனடியாக இறங்கினார்.

பஸ் நகர்ந்த சிறிது நொடிக்குள் பேண்ட் ஜிப்பை இழுக்க... அது வர மறுக்க அவசரம் அவசரமாக பேண்ட்டையே கழட்ட முயற்சிக்க... இனியும் பொறுக்க முடியாது என்றபடி  நண்பரின் பேண்ட் முழுவதும் நணைந்துவிட்டது. இடையில் நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போனது...

சிறிது நேரம் கழித்து சகஜநிலைக்கு வந்தபின்.. பேண்ட் நணைந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றுப் புறத்தை கவனித்த போது  அது மரங்கள் அடர்ந்த காடாக இருப்பது தெரிந்தது.

சற்று பயபீதியடன்.  தூரமாக உள்ள பஸ் நிறுத்த்திற்கு வந்து  சில மணி நேரம் காத்திருந்த பின் வந்த வேறு ஒரு பஸ்ஸில் ஏறி... இரவு வீடு வந்து சேர்ந்தாக கூறினார். நான் உடன் வந்திருந்தால் தான் இந்த அவஸ்தை பட்டு இருக்க மாட்டேன என்றார். .


ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்பதை அனுபவம் மூலமாக தெரிந்து கொண்டீர்கள்.. என்றபோது பொய் கோபம் கொண்டார்.

குறிப்பு...எனது மொழியில் சாமி கும்பிடுவது என்பது காலைக்கடன் என்ற வெளிக்கு போவதை குறிக்கும்

வியாழன் 14 2016

எழுபதை தொட்ட அறுபது

 சாராய நாட்டில் வாழும் குடிமக்களுக்கு எந்த பஞ்சம் ஏற்ப்பட்டாலும் சாராயத்துக்கு மட்டும். பஞ்சமே ஏற்பட்டதில்லை. நிணைத்த நேரத்தில் குடிமக்களுக்கு  சாராயம் கிடைத்திட , சாராய நாட்டை ஆளும் சாராய ராணி பஞ்சமில்லாமல் நாட்டை ஆண்டு வந்த நாளில்

ஒருநாள் இரவில்  அறுபது வயதுள்ள குடிமகன் தள்ளாடி தள்ளாடி தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது தன் வீட்டுக்கு அருகில் வந்ததும். பக்கத்துவீட்டில் கணவனை இழந்த எழுபது வயது மூதாட்டி தனியாக படுத்திருந்ததை கண்டது. தள்ளாடிச் சென்ற அது.. ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்தது... .. மெதுவா... நடை நடைந்து.. சட்டென்று மூதாட்டியின் வீட்டிற்க்குள் நுழைந்தது.

சாராய ராணி ஆளும் நாட்டில் சாராயத்துக்கு பஞ்சம் இல்லாது இருப்பது போலவே  ..சாராய குடிமகன்களுக்கும் சுயசிந்தனை எதுவும் இல்லாமல் காம சிந்தனை அதிகமாக இருக்கின்றது என்பதற்கு.  பல சான்றுகளில் இதுவும் தான்..

நுழைந்த மறுநிமிடம் அறுபது வயதுள்ள சாராய குடிமகன் தனியாக படுத்திருந்த எழுபது வயதுள்ள மூதாட்டியை பாலியல் பலத்காரம் செய்தது. மூதாட்டி குடிமகனின் பொல்லாத செயலைக் கண்டு  அய்யோ ..குய்யோ என்று அக்கம் பக்கம் கேட்கும் அள்வுக்கு அலறினார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர். தத்தம் வேலைகளை போட்டுவிட்டு மூதாட்டியின் வீட்டை நோக்கி   ஓடி வந்தனர்.அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்தக்குடிமகனுக்கு அப்போது மட்டும் சிந்தனை வந்துவிட்டது போலும்  .பயந்து போய் ஓடி மறைந்து விட்டான்.....

 மூதாட்டியின் புகாரின்படி... சாராயகடை வியாபாரத்தை தங்கு தடையின்றி பாதுகாக்கும் போலீசார்  எழுபதை தொட்ட சாராய ராணியின் அறுபது வயதான குடிமகனை கைது  செய்து விசாரனை செய்து வருகின்றனர்

சாராய பாதுகாப்பபு படையின் விசாரனை சாராய குடிமகனிடம்  எப்படி இருக்கும் ??????

புதன் 13 2016

உரிமையை நிலை நாட்டிய குடிமகன்........





தூரத்தில் பஸ் ஒன்று வருவது தெரிந்தது அந்த குடிமகனுக்கு.. ஓரமாக நின்று கையை நீட்டினால் நிறுத்தாமல் சென்று விடுவாங்கே என்று அனுபவத்தில் உணர்ந்த அந்த குடிமகன் தா்ன தள்ளாடுவதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ரோட்டின் நடுவில் அதாவது பஸ்ஸின் முன் பக்கத்தில் நடுவில் வந்து தடுத்தார்.

பஸ் ஓட்டுனரும்  ஆகா...நம்மல விட இவிங்கே விவரமாத்தான் இருக்காங்கே“ என்று எண்ணியபடி... பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.

வண்டி நின்றதும் குடிமகனும் தன்னுடைய வியூகம் வெற்றி பெற்றதை எண்ணி பெருமையாக வண்டியில் ஏறி அமர்ந்தார்.

பஸ் சில தூரம் சென்றதும் கண்டக்டர் வந்தார். குடி மகனிடம் பயணசீ்ட்டு வாங்கும்படி கேட்டார்.

குடி மகன் எழுந்து நின்று அவிழ்ந்த வேட்டியை கட்டிக் கொண்டு இருக்கும்போது.. கண்டக்டர் பயணச்சீட்டு வாங்க காசு எடுக்கத்தான் எழுந்திருக்கார் என்று நிணைத்தவர். குடிமகன் திரும்பவும் உட்கார்ந்தவுடன் மீண்டும் பயணச்சீட்டு வாங்க  காசு கேட்டுள்ளார்.

 சாராய ராணி ஆளும் கோ்ட்டையின் குடிமகனின் உரிமைபை்பற்றி தெரியாத தவறுதலாக பயணச்சீட்டுக்கு காசு கொடுன்னு கேட்கலாமா..?.“ என்னையே டிக்கெட் எடுக்கச் சொல்கிறாயா” என்று கோபம் கொண்டார் ... அமெரிக்கவாழ் மக்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருப்பது போல், சாராய ராணி ஆளும் சாராய கோட்டையின் குடிமகன். தன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கத்திரிக்கோலால் சதக் சதக் சதக் என்று சரமாரியாக  பஸ் கண்டக்டரின் காலில் குத்தினார்.

 சாராய நாட்டின் குடிமகன் கத்திரி கோலால்  பஸ் கண்டக்டரை குத்துவதைக் கண்ட பயணிகள்  ஓடிக் கொண்டு இருக்கும் பஸ்ஸில் அலறி அடித்து  நாலா பக்கமும் சிதறி ஓட முடியாததால்..... உடனடியாக108 ஆம்பு  லன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
 காலம்தாமதிக்காமல் ஓடி வந்து கண்டக்டருக்கு முதலுதவி செய்தது.

தகவல் அறிந்து வந்த குடிமகன்களை காக்கும் போலீஸ் .. கத்திரிக்கோலால் குத்திய குடி மகன்  சாதாரண குடிமகனாக இருந்ததினால்  காவல் நிலையம் அழைத்துச் சென்றது..

திங்கள் 11 2016

யாருக்கு பவர் அதிகம்...???



நண்பர்கள் இருவர் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சில் எந்த முடிவுக்கும் அவர்கள் வரவில்லை... பேச்சு நீட்டிக் கொண்டே போய் கொண்டே இருந்தது. மணி கடந்து  கொண்டே இருந்தது.

நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலையைக்கூட மறந்து பேசிக் கொண்டு இருந்தனர். தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வந்த ஆட்களும் இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து வியப்புடன் சென்றனர்.. சாராயக்கடை பத்து மணிக்கு அடைத்துவிட்டாலும்.. பாரில் சாராயம் விற்பனை ஆகிக் கொண்டு இருந்தது.

 முதலில் சாராயக் கடைக்கும் பின் சாராய பார்க்குக்கும்  போலீஸ் காரில் அமர்ந்திருந்தபடியே போலீஸ் காவல் காத்துக் கொண்டு இருந்தது. நண்பர்கள் இருவரும்  அதுகளை பொருட் படுத்தாமல் பேசிக் கொண்டு இருந்தனர்.

 நண்பர்கள்  விடாமல் பேசிக் கொண்டு இருந்தது . கடவுள் பவர் பெரிதா? பேய் பவர் பெரிதா? என்பதுதான்

ஒருவர். சாமியின் பவர்க்கு பயந்ததுதான்  பேய் என்று சொல்ல..இல்லை. பேயின் பவர்க்கு பயந்ததுதான் சாமி என்று அவரவர் கதைகளை அள்ளிவீசிக் கொண்டு இருந்ததினாலதான் அவர்கள் பேச்சு முடிவையாமல் நீண்டு கொண்டே இருந்தது.



நண்பர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டு இருப்பது. பக்கத்துவீட்டுக்குள் நுழைய காத்திருக்கும் கள்ளக் காதலனுக்கும் அவன் வரவை எதிர் பார்த்து காத்திருக்கும் கள்ளக் காதலிக்கும் ரெம்பவும்  கடுங் கோபமாய் இருந்தார்கள்.

பொருத்து பொருத்து பார்த்த  க.காதலர்கள் இருவரும் தத்தம் காத்திருக்கும் இடத்திருந்து   நண்பர்கள் இருவரும் மீதும்  குறி பார்த்து  சற்று பெரிய கற்களைக் கொண்டு சரமரியாக எறிந்தனர்.

சரமாரியாக வந்து விழுந்த கற்களால் அடிபட்ட நண்பர்கள் இருவரும் அ்யயோ! அம்மா என்று அலறிபடியே இடத்தை காலி செய்தனர்.....

 இந்தப் பதிவை படிப்பவர்கள் சொல்லுங்கள் பவர் யாருக்கு அதிகம்..! சாமிக்கா..? பேய்க்கா...?

சரமரியாக விழுந்த கற்களால் சாமிக்குத்தான் பவர் அதிகம் என்று சொன்னவர்க்குத்தான் கல்லெறி காயம் அதிகம்.........

ஞாயிறு 10 2016

அவர்கள் நாவிலே...........




அவர்கள் நாவிலே இராமனையும்
கைளிலே கூர் வாளையும்
வைத்து இருப்பார்கள்.. ஆனால்
கொலைகாரர்களாக மாறி கொல்வார்கள்

கடவுள் எங்கும் நிறைந்து
இருக்கிறான் என்பார்கள் ஆனால்
விலங்கிலும் கேவலமாக ஒரு
பிரிவு மனிதர்களை நடத்துவார்கள்

எறும்பிற்கு சர்க்கரையை உணவாக
இடுவார்கள.  ஆனால் மனிதர்கள்
தண்ணீர் குடிக்க தடைவிதிப்பார்கள்...

நாயுடன் படுத்தால் உன்னியுடன்
தான் எழுந்திரிக்க வேண்டும்
ஆகவே. மனிதர்களே இவர்கள்
உடன் சேராதீர்கள்...சேராதீர்கள

newspaper

படம்-  வினவு..
.






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...