பக்கங்கள்

வியாழன் 02 2019

அதிகாலை கனவு-13...

வள்ளுவரால்  கிடைத்த தர்ம அடி....

வள்ளுவர் க்கான பட முடிவு


பார்ப்பதற்கு அவர் வள்ளுவரை போல இருந்தார். டேய்... அவரு வள்ளுவர்தாண்டா என்று என் மண்டையில் கொட்டி சொன்னார்என் அம்ம நான் இவரு வள்ளுவர்தான்னு படிக்காத உனக்கு எப்படியம்மா தெரியும் என்று கேட்டபோது..

என் அம்மாவுடன் வேலை செய்த அம்மா என் அம்மாவிடம்  சொன்னார்..தான் வேலை பார்க்கிற வீட்டில் பெரிய போட்டாவ..சுவத்தில மாட்டி இருந்தாங்கடா...அந்த எஜமானோட முன்னோர்களா என்று நான் கேட்டதுக்கு இல்ல... தெய்வப்புலவர் திருவள்ளுவர்ன்னு சொன்னாங்கடா..அந்த படத்த பார்த்துதாண்டா சொல்றேன் இவரு திருவள்ளுவருன்னு-இந்த அம்மா சொல்றத கேளுடா முட்டாப் பயலே என்று என் - மீண்டும்என் தலையில் கொட்டினார்.


போம்மா  போ... அவரு செத்து பல நூறு வருசமாச்சு இப்ப வந்து இவருதான் திருவள்ளுவருன்னு....சொல்லிகிட்டு..நா..பத்தாவதுல பத்து வருசமா படிச்சிருக்கேன் வள்ளுவரப்பத்தி எனக்கு தெரியாத  போம்மா  சும்மா... என்று
விட்டு கையில்  புடித்திருந்த  புத்தகத்தில்.... இருந்த வள்ளுவரின் கவிதை படித்தென்...

கடா   அக்களிற்றின் மேல்
கட்டுபடாம் மாதர்
படாா  முலை மேல் துகில்.....

படித்து முடித்த சிறுது நேரத்தில் மடார்  மடரென்று அடி விழுந்தது. .. அய்யோ அம்மா... ஒனக்கு என்ன ஆச்சு  அந்த அம்மா பேச்ச கேட்டு இப்படி அடிக்கிற என்று தடா புடா என்று எழுந்திருக்க முயன்று கண்ணை திறந்தால் டேபில் மேல் வைத்திருந்த சின்ன பலகை தலையில் விழுந்து அடிபட்டது...எப்படி என்தலையில் விழுந்தது என்று பார்த்தால் பூனை ஒன்று ஓடியது தெரிந்து..

என் அம்மா இறந்து மூன்று வருசமாச்சு..என் அம்மாமேல் இருக்கும் பயம் இன்னும் போகல...

புதன் 01 2019

அதிகாலை கனவு-12.

அய்யோ  என்னது இது....????????



தொடர்புடைய படம்
இடித்தது இவுக இல்லை..படத்துக்காக









அவன் மெதுவாகத்தான் வண்டியிலே போயிக்கிட்டு இருந்தான்.

அவன்னா... யாருன்னு உங்களுகுத்தான் தெரியுமே!  நான்தான்னு

இடது பக்க ஓரமா  போய்கிட்டு இருந்தேன்னா... வலது பக்கமிருந்து இடது பக்கமாக வேகமாக  ஆக்டிவா வண்டி ஒட்டி வந்த நடுத்தரபெண்மணி ணஎன்னை முந்தி சென்றபோது..என் வண்டியின் முன் சக்கரம் அவர்கள் வண்டியில் இடித்துவிட்டது.

பெண்மணியின் பின்னால் உட்கார்ந்து வந்த இளைஞன். கடும் கோபத்தில் என்னை திட்டியபடி அடிக்க பாய்ந்தான். “டேய்..., என்ற நான் சற்று சுதாரித்து. ஏய்..அய்யா... நல்லா கவனி நானாவா வந்து இடிச்சேன்... நீங்கதானே வேகமாக என்னை முந்துறேன்னு குறுக்கால...  போனீங்க.... யோசிங்க...

அந்தப் பெண்ணுக்காக வலிந்து என்னுடன் சண்டையிட்டான். கடைசியில் டென்சனான நான்....வண்டி நம்பர குறிச்சுக்க..இந்தா என் விசிட்டிங்கார்டு.. வச்சுக்க என்ன நடவடிக்கை எடுக்கனுமோ எடுத்துக்கோ..அனாவசியமா பேசக்கூடாது .. நான் அமைதியா இருப்பதால்..தலைக்கு மேல் எகிறக்கூடாது.

வண்டிய இயக்கியபின் ஆக்டிவாவை ஓட்டி வந்த பெண் முகத்தை பார்த்தேன்.
அதிர்ச்சியில் தூக்கம் கலைந்தேன். மறுநாள் பை-பாஸ் நகர் துரச்சாமி நகர் அருகில் கனவில் கண்ட சம்பவம் நடந்தபோது.. இடித்த பெண்ணை கண்டபோது அது கனவில் வந்த பெண்ணாக இல்லை....


ஆக..கடைசியாக
வண்டி ஓட்டியது
நான் என்
வண்டியில் இடித்தது
அவள்  என்னை
திட்டியவன் அவன்
இதை வேடிக்கையாக
பாரத்தவர்கள் சுற்றி
நின்ற அவர்கள்..

செவ்வாய் 30 2019

அதிகாலை கனவு-11.

உள்ளது உள்ளபடி............













ஸ்ஸ்கூட்டியில் நார்மலாக போனேன்... நடுத்தர வயதுடையவர் கை நீட்டி வழி மறித்தார். யாரென்று தெரியவில்லை. தெரிந்தவராக இருக்கும் என்ற நிணப்பில் வண்டியை நிறுத்தி என்ன விசயம் என்றேன்.

எங்கே போகிறாய் என்றார்
நீங்கள் எங்கே போக வேண்டும் என்றேன்.
இடத்தை சொன்னார். நான் சொல்லும் இடத்தை கடந்துதான் செல்லவேண்டும். அதை மறைத்து உங்களை ஏற்றிக் கொண்டு என்னால் வண்டி ஓட்டமுடியாதே என்றேன்.

பரவாயில்லை..நான் ஓட்டுகிறேன். என்றார். உங்களிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா..? என்றேன். இருக்கிறது. தற்போது கைவசம் இல்லை. நான் ஓட்டுவதால் என்னிடம் யாரும் கேட்க மாட்டார்கள் என்றார்..

சரி உட்காருங்கள் நான் ஓட்டுகிறேன்...என்றபோது..ஓட்ட தெரியாதுன்னு சொன்ன...என்றார்

சும்மா சொன்னேன்..உட்காருங்கள் என்றேன். முதுகில் லேசாக தட்டினார். பொய் சொல்வதற்கு அளவில்ல என்பது போல்....

என் முதுகில் கையை வைத்துக் கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது... பள்ளம் மேடுகளில் செல்லும்போது திடிர் பிரேக்கால் அவருடைய மார்பகம் என் முதுகில் முட்டியது.. தப்பாக நிணைத்துவிடுவார்களோ என்று சுமரான வேகத்தில் சென்றாலும்  அவரது மார்பகம் முதுகில் மோதியது...
கூச்சமாக இருந்தது..ரெம்ப கவனமாக அவர் சொன்ன இடத்திற்கு முன்னால் வண்டியை நிறுத்தினேன். என்னை ஒரு அமுக்கு அமிக்கி இறங்கியவர் தன் மேலாடைக்குள் இருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

எதுக்கு என்றேன்.. வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்க..என்றார்.  வண்டியில் பெட்ரோல் இருக்கு , வேண்டாமென மறுத்தேன்...அடிக்காத குறையாக என் சட்டை பைக்குள் திணித்தார். அவரிடம் விடைபெற்று நான் செல்லும் இடத்திற்கு சென்று கொண்டு இருக்கும்போது... யாராக இருக்கும என்று நிணத்துப் பார்த்தேன் நிணைவுக்கு வரவேயில்லை...

அவரது முகமும்  வண்டியில் போகும்போது ஏற்ப்பட்ட நிலையும் மறையவேயில்லை....மறக்கவேயில்லை...ஏகப்பட்ட கனவுகள் வந்தும் போயியும் இருக்கின்றன... இந்தக் கனவும் மட்டும் போகவே மாட்டேன்கிறது..
இந்த வயதில் இந்தக் கனவு எனக்கு தேவையா..?? அது யாரென்றும் தெரியவில்லை....

என் தொழிலகத்தில் இரண்டு பேர் அடுத்த இடத்தில் அதிகம் சம்பளம் கிடைக்கிறது என்று சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.. ஏகப்பட்ட பிரச்சனைகளில் தவிக்கும் எனக்கு இந்த கனவு முகம் மறைய மாட்டேன்கிறது......அடுத்தக் கனவும் வரவில்லை...இந்தத் தொல்லையால். எனது கடவுச் சொல்லும்  தமிமணம் கடவுச் சொல்லும் மறந்ததினால் இந்தப் பக்கம் வரவே முடியவில்லை.........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...