பக்கங்கள்

சனி 10 2011

சமூக விரோதிகள் தாலிய அறுக்கக்கூடாதுன்னுதான்.....அரசாங்கமே தாலிய .......!!!!

மதுவிலக்கை முழுவதுமாக அமுல் படுத்தினால்
அரசுக்கு வரும் பதிணைந்துகோடி வருமானமும்
சமூக விரோதிகளுக்கும் தனியாருக்கும் சென்று
விடும்

கள்ள சாராயத்தை ஒழித்ததன் மூலமே குடிபான
விற்பனை உயர்ந்துள்ளது

கள்ளச் சாராய விற்பனைக்காகவே மதுவிலக்கை
சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்

சமூக விரோதிகளின் கஜனாவுக்க சென்று கொண்டு
யிருந்த நிதியை முதல்வர்ஜெய் லலிதா அம்மா
அவர்கள் முயற்சினால் அரசு கஜனாவுக்கு திருப்பி
விட்டுயிருக்கிறாரகள்.இப்படியாக மதுவிலக்கு
அமைச்சர் புள்ளி விபரங்களை கொடுத்துள்ளார்.

--உண்மைதானுங்கோ அமச்சரே! பெண்களின்
தாலிய அறுத்த பெருமையெல்லாம்முதல்வர்
ஜெய் லலிதா அம்மாவுக்கே உரியதுங்கோ!
புன்னாக்கு கதையெழுதும்முன்னால் முதல்வர்
கருனாநிதிக்கு இல்லீங்கோ! இன்றைக்கு நாட்டு
மக்கள்நாட்டு சரக்கை குடிக்காமல் பாரின்
சரக்கையும் ஜ.எஸ.ஜ முத்திரையிட்ட சரக்கை
யும் குடித்து சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றால்
அதற்கு காரணமே முதல்வர் அம்மாதானுங்கோ
அமச்சரே!

வாழ்க அம்மாவின் தொண்டு! வளர்க
அம்மாவின் புகழ்!! இப்படி புள்ளி விவரத்தை
கொடுத்த அமச்சருக்கு இந்த குடிக்காத மகனின்
தாங்ஸ



நல்ல சரக்கை குடிக்கிறதுக்குதானே,கடையை
திறந்து வச்சுருக்கோம், மற்றவர்கள்குடிக்காமல்
போனா எப்படி? முன்னேல்லாம் குடிச்சு இருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ குடிக்காம இருப்பவர்
களையும் புடிச்சு உள்ள போட்டால் குடி பான
விற்பனை கின்னஸ்க்கு போகுமில்ல அமச்சரே,

தினமணியிலசுட தங்களுக்கு ஆதரவா
“மக்கள் கருத்து ”க்கு அதிக ஓட்டுவிழுந்திருக்கு
அமச்சரே...........எப்பாடு பட்டாவுது தமிழகம்
முன்னுக்கு வந்துடனும் அமச்சரே............

வினவு தளம்தான் “பனை மரத்துல வவ்வாளு
டாஸ்மாக் இல்லேன்னா திவாலு” ன்னு பொய்யா
சொல்லுது அமச்சரே!!

வெள்ளி 09 2011

டும்...டும்....டும்...டும்..குடிமக்களுக்கோர் நற்செய்தி!!!

தினமும் ஓய்வு இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும்அல்லது
அவதிப்படும் குடிமக்களுக்கோர் நற்செய்தி!

நம் தமிழ்நாட்டு மதுவிலக்கு அமைச்சர் அறிவிப்பு
என்னவென்றால்

சில்லரை விற்பனை கடைகளிலும் உணவக கூடங்களிலும்
திருவள்ளுவர்தினம்,காந்தி ஜெயந்தி,நபிகள்பிறந்ததினம்
மகாவீர் ஜெயந்தி வள்ளலார் தினம் மற்றும் முதல்வர்
ஜெய்லலிதாவின் உத்தரவுப்படி மேலும் சுதந்திரதினம்
மேதினம்,குடியரசு தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு குடி
பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார்.

எனவே,இந்த எட்டு நாட்களில் குடிமக்கள் நல்ல ஓய்வு
எடுத்துக் கொண்டு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லு
மாறு குடிமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
டும்....டும்.....டும்.......டும்.....டும்,.....டும்,,,,,.........................

வியாழன் 08 2011

அட,செப்பு....டம்பரு..அய்ந்து வாத்தி தினமாம்...

அவரு என்ன வாத்தியராகவா இ ருந்தாரு
ஒன்னாந் தேதிக்கு முன்னாடி சம்பளம்
வாங்கும் ஊழியராகவல்ல இருந்தாரு

பள்ளியில் வகுப்பறையில் சொல்லாமல்
மாலை வேளையில் அவர் வீட்டு
வகுப்பறையில காசு வாங்கில்ல
பாடம் நடத்தினாரு

முதல் நாளு புத்தகத்தை மனப்பாடம்
செய்து மறுநாளு கரும்பலகையில
வரிவிடாமல ஒப்பித்தாரு
துணிந்து கேள்வி கேட்டால்
புத்தகத்தை பார்த்து தெரிந்து கொல்லு
னு சொன்னாரு

முதல் வரிசையில் அமர்நதிருந்த
என்னை கடைசி பெஞ்சில துாங்க
வுல வச்சாரு

ஜால்ரா த்ட்டும் மாணவர்கள் இவர்
முன்னே தட்டாதவர்களுக்கு வேட்டு
வைப்பார் பின்னே

இவர் வீட்டு வேலைக்கு போக வில்லை
யென்றால் செய்முறை தேர்வின்
விருப்ப மதிப்பென்னை போடாமல்
போடாமல் மறுப்பார்.

காரணமில்லாமல் பிரம்பால் அடிப்பார்
தலைமை வாத்தியிடம் சொன்னால்
அந்தத் தலையாட்டி பொம்மை
சொன்னதுக்கு திருப்பி அடிக்கும்

மாணவன் தப்பு செய்தால் வாத்தியிடம்
சொல்லலாம். அந்த வாத்தியே தப்பு
செய்தால் யாரிடம் சொல்வது

பாடம் நடத்தும் வாத்தி மாணவியை
மான பங்கம் செய்யுது
டீச்சரு,படிக்கும் மாணவனை
கடத்திக்கிட்டு ஓடுது

மேல்ஜாதி வாத்தி ஜாதி
வித்தியாசம் பாக்குது

அரசாங்க வாத்திக்கு அழுக்காத
வேலை கொளுத்தகூலி ஓய்வு
நிறைந்த நாட்கள்

பத்தில் மூன்று முன்னேறுவதற்கு
அடிமை கல்வி போதிக்கும்
வாத்திக்கு செப்பு டம்ளரு
அய்ந்து தினமாம்

வாத்தியில் ஆனென்ன பென்னென்ன
இதுகள் ஏங்கினால் நாடு ஏங்குமாம்
பிழைப்பு வாதத்தின் பிதாமகன்
சொன்னாராம்

இந்த வாத்திகள் வளரும் தலைமுறை
களிடம் எதை ஊட்டுகின்றன
அறிவையுமில்லை வீரத்தையுமில்லை

அடிமைதனத்தையும் அச்சத்தையும்
சுயநலத்தையும் போதிக்கும் வாத்தி
மார்களுக்கு செப்பு......டம்பரு அய்ந்து
தினமாம்


ஞாயிறு 04 2011

அவர் சொன்னார்..................இவர் சொன்னார்!!!


அவர் சொன்னார்.

நீ குடியிருக்கிற வீட்டுக்காக முப்பது வருஷமா கோர்ட்டுக்கும்,
கலெக்டர் ஆபிஸிக்கும், விடாம அலைஞ்சும்,சலிக்காம மனு
கொடுத்தும்,விடாம கொடுத்தும் பலன் ஒன்னுமில்லேன்னு
சோர்ந்து போயிடாத தம்பி,



எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதை மட்டும் மறக்காத,
வழக்கு போட்டவன் செத்தபிறகும் அவன் மகன்கள வழக்க
நடத்தலியா,இவன்களும் உனக்கு தீர்ப்பாகிட்டா விட்டுறவ
செய்வானுக,அப்பீல் பன்னுவாங்கே,அப்புறம் புதுசா எதையா
வது கண்டுபிடுச்சு திரும்பவும் வழக்கு போடுவாங்கே,
கோர்ட்டு தீர்ப்பு எப்போ சொல்லுதோ அப்போ சொல்லட்டும்



இடையில் நான் சொல்லுறத கொஞ்சம் காதுல வாங்கிக்க.
இப்ப வந்திருக்கிற கலெக்ட்டரு ரெம்ப நல்ல மனுசன்னு
சொல்றாங்க,மத்தவங்க மாதிரியில்லயாம்,நேர்மையான
வராம்,பிறர் காசுக்கும் சொத்துக்கும் ஆசைபடாதவராம்
அநியாயத்தை அவரளவுக்கு தட்டி கேட்பாராம்.இவரு
மாதிரித்தான் எஸ்.பியுமாம்.



ஒரு சாதிப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தாராம்.இவரு
அப்போ, இருந்திருந்தா “மேலவளவு”சம்பவத்தையே
தடுத்திருப்பாருன்னு சொல்லிகிறாங்க,இப்படிபட்ட ஒருசில
நல்லவர்களின் தயவுகளில்தாண்டா எந்தக் கட்சி ஆளுதோ
அந்தக்கட்சிக்கு நல்லபேரு கிடைக்குது.



உன் தெருவுக்காரனுங்க ,உன் சாதிக்காரனா இருந்தாலும்
உனக்கு பலவித தொல்லையும்,இடைஞ்சலும் செஞ்சாலும்
அவிங்களும் ஆதிக்க சாதி வாரிசுகள்தாண்டா? மேல்சாதிக்காரன்
கீழ்சாதிக்காரன அடக்கி ஒடுக்குவது மாதிரி சொந்த சாதிக்
காரர்களில் ஆளபலமுள்ளவன் ஆளபலமில்லாதவர்னை
ஒடுக்குவதுதாண்டா இங்கு நீதி. உனக்காக உன் தெருக்காரனிடம்
ஞாயம் பேச வந்தால் கட்டுப்படமாட்டார்கள். அப்புறம் என்மீது
சாதிய சொல்லி திட்டினாருன்னு பொய்ப்புகார் கொடுப்பானுக,
உண்மையிலே,சாதிய சொல்லி திட்டுறவன விட்டிடுவானுக.
அவனோட.காசு பணத்துக்கும்.ஆள்பலத்துக்கும் பயந்துதிடுவானுக!



நல்லா கவணி, படித்தவுடன் புரியிறமாதிரி மனுவை தயார்
பன்னு.அதற்குரிய சான்றுகளை நகல் எடுத்து இனை.ஒருதடவைக்கு
இருதடவை படிச்சு பாரு. கேட்டா சொல்லத் தெரியனும்.மனுவில
கையெழுத்த ஆங்கிலத்துல போடாத... தமிழ்லயே போடு. இப்படித்தான்
ஆங்கிலத்துல கையெழுத்து போட்டவர ஜம்பது தடவை தமிழ்ல
எழுதச்சொன்னாராம்.வம்பு எதற்கு தமிழ்லயே கையெழுத்தப்போடு.



திங்கட்கிழம.வெள்ளனா போயிடு,கலெகட்டரா பார்த்து மனுவை
கொடுத்திரு. கலெகட்டரு ரெம்ப நல்லவருப்பா? முதியோர்
பென்சன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தினதுமே,கூட்டத்த பார்க்கனுமே
அப்படியிருந்தும் ரெம்பப் பொறுமையாக இரவு ஏழு மணிவரை
மனுவை வாங்கியிருக்காருய்யா!

கிராம நாட்டாமைய பார்க்கப்போனா,காசில்லாம போகமுடியுமா?
சும்மா அடிக்கிற காத்துலகூட பேப்பர் ஆடாது.

ஏழைகள் குடும்பத்திலிருந்து எவ்வளவோ பேர் அதிகாரிகளா
இருக்காங்க,எல்லா அதிகாரிகளும் நேர்மையாகவும்.ஏழைகள்
மீது இரக்கப்படுகிறவங்களா இருக்காங்க, ஏதோ ஒண்றிரண்டு
அதிகாரிகளால்தான் ஏழைகளின் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்
குது.,



இவர் சொன்னார்.



ஆமடா, அவரு சொல்ற மாதிரிதான். சொல்றாங்க, ஆனா ஓம்
பிரச்சனைக்கு கலெக்ட்ரு தலையிடமாட்டாரு, ஓங்கிட்ட மனுவை
வாங்குவாரு. குறைகளை கேட்பாரு, ஆனா நிறைவேறாது.

மனு தாலுகா ஆபிஸ்க்கு போயிரும். மனு கொடுக்கயில கொடுத்த
ஒப்புகை சீட்டின் தேதி பிறகாரம் போனின்னா,தாசில்தார பாக்க
முடியாது. எந்த அதிகாரிய பாக்கனும்னு கேட்டா “நானில்லங்க
அவர பாருங்கன்னு சொல்லுவாங்க, அப்படியும் விடாம கண்டு
பிடிச்சு போனா அவரு சீட்டு காலியா இருக்கும். எங்கன்னு நீ
கேட்டா,அன்பா,நான் என்ன பையிலையா வச்சுருக்கேன் னு
சொல்வாங்க,சிலர் தெரியலங்க என்பார்கள். பியுன்கிட்ட
கேட்டா ,ஏன்கிட்ட சொல்லிட்டு போகல என்பாரு... இப்படியும
சோர்வில்லாம கண்டுபிடுச்சு


அந்த அதிகாரிட்ட போனா .....மனுவ் தேடுவாரு
அவரு மேஜை மேல அவ்வளவு குவிஞ்சு கிடக்கும். மனு
கிடைக்காது. மனு விவரத்தை வாயில சொல்லச் சொல்வாரு
கரெட்டா சொல்லிடின்னா,அடுத்தவங்க கிட்ட என்ன செய்யலாம்
னு யோசனை கேட்பாரு!...கரெட்டா சொல்லலைன்னு வச்சுக்க
போயிட்டு அடுத்த வாரம் வாங்கன்னு சொல்லுவாரு.அடுத்த
வாரம் போனின்னா,வி.ஏ.ஓ பாருங்கன்னு சொல்லுவாரு.வி,ஏ.ஓ
பாத்தின்னா,உன் மனு வரலன்னுவாரு......... திரும்ப தாலுகா
ஆபிஸ்........இப்படியே அலைய வேண்டியதுதான்.
இப்படித்தான்டா நான் அலஞ்சுகிட்டு இருக்கேன்.


ஆமாடா,ஊருபய இடத்தை ஊருபய புடுங்கிகிட்டானுன்னு நில
பறிப்பு வழக்கு கூத்து நடக்குதே, உன் இடத்தை பொது இடமா
கெச்சல மாத்தின டவுன் சர்வேயரை எதிர்த்து புகார் கொடுக்க
வேண்டியதுதானேடா?


எதுக்கும் அவர் சொன்னதை செய்துகிட்டு பிறகு இவர்
சொன்னதை செய்!



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...