பக்கங்கள்

சனி 25 2021

கண்ணகி முருகேசன்- ஆணவ கொலை தீர்ப்பு..!!!

 

வழக்கறிஞர் ரத்தினம்


விருத்தாசலம் கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில் ஆதிக்க சாதி வெறித்தனத்திற்கும், காவல்துறை கூலிப்படை அதிகாரிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை ! ஒருசில உத்தமராசா நீதிபதிகளாக இருப்பதால் இந்த நீதி ! 18 ஆண்டுகள் சமரசமில்லா நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இந்த வழக்கு சரியான திசையில் செல்ல மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் மட்டுமல்ல சி.பிஐ அதிகாரிகள் சிபிஐ வழக்கறிஞர்களோடு வழக்கறிஞர் ரத்தினம் நடத்திய போராட்டம் மூலம் அரசு கட்டமைப்பின் யோக்கியதையை புரிந்து கொள்ள முடியும்.
முருகேசன் சித்தப்பா அய்யாசாமி, உறவினர் குணசேகரன் ஆகியோரையும் இந்த ஆணவக் கொலையில் குற்றவாளிகளாக சேர்த்து சி..பி.ஐ ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த கிரிமினல் தனத்திற்கு எதிராகத்தான் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இறுதியில் இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு ஆயள்தண்டனை, சகேகாதரர் மருது பாண்டிக்கு மட்டும் தூக்கு தண்டனை. வழக்கின் சாட்சி ஆதாரங்களை மறைத்த குற்றத்திற்காக அன்றைக்கு விருத்தாசலம் காவல் துணை ஆய்வாளராக இருந்த லஞ்சப்பேர்வழி தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்துவுக்கும் ஆயுள் தண்டனை என்பது தீர்ப்பின் தரத்தை உயர்த்தி உள்ளது. வன்கொடுமை சட்டத்தின் வழியாக இந்த வழக்கை அணுகியதால்தான் இத்தகைய தீர்ப்பு.
தீர்ப்பில் நீதிபதி உத்தமராசா “ மற்றவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளார். கொலை நடந்த 2003 –ம் வருடத்தில் அதைபற்றி பேச மக்கள் அச்சப்பட்டார்கள். கண்ணகி முருசேகன் காதில் விசம் ஊற்றி, தனித்தனியே எரித்த கொடுமையை ஊரே வேடிக்கை பார்க்க, இது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு.
சம்பவம் நடந்த பிறகு முருகேசன் உறவினர்கள் கரும்பு காட்டில் உயிருக்கு அஞ்சி பதுங்கி இருந்தனர். ஒரு வாரம் கழித்து நக்கீரனில் விசயம் வெளிவந்த பிறகுதான் வெளி உலகிற்கு தெரியும். உடனே வழக்கறிஞர் ரத்தினம் விருத்தாசலத்தில் உள்ள என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். விபரங்களை கேட்டறிந்தார். முருகேசன் ஊரான குப்பநத்தம் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களிடம் சம்பவத்தின் பின்னணியை கேட்டறிந்தோம். அதன்பிறகு விஜயமாநகரம், வண்ணான்குடிகாடு என அருகமை கிராமங்களில் அவர்களின் உறவினர்களிடம் விசாரித்தோம். அவர்களுக்கு தைரியம் சொன்னோம்.
விருத்தாசலத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நாங்கள் இருக்கிறோம்: அச்சம் வேண்டாம்! எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்! வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் முருகேசன் உறவினர்களை என்னிடம் அனுப்பி நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் சட்ட உதவிகள் செய்ய சொன்னார். இந்த வழக்கில் இருந்து விலகுமாறு எனக்கு உள்ளூரில் பல நெருக்கடிகள் தரப்பட்டன. இந்த வழக்கிற்காக கடலூர் சென்னை செங்கல்பட்டு என ஒவ்வொரு ஊரிலும் வழக்கறிஞர் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரின் பங்களிப்புதான் இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து போராட்டம் நடப்பதற்கு அடிப்படை. ஆணவக் கொலையில் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வைப்பதற்குதான் இந்த போராட்டம்.
இந்த வழக்கின் சில செய்திகள் முருசேகன் தந்தையிடம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் “என்மகனை நாங்களே விசம் வைத்து கொன்று விட்டோம் மனசாட்சி உறுத்தியதால் இன்று தங்கள் முன் சரணடைகிறோம்.“ அதுபோல் கண்ணகி தந்தையிடம் ஒரு மோசடியான ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தலா நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குள் வழக்கு விசாரணை முடித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விருத்தாசலம் காவல் நிலையத்திலிருந்து சம்பவம் நடந்த புதுக்கூரைப்பேட்டை 2 கி.மீ கூட இருக்காது. இந்த அநீதிக்கு எதிராக எஸ்.பி. ஐ.ஜி. டி.ஐஜி யாரும் தடுத்து நிறுத்தவில்லை. கண்ணகியின் தந்தை துரைசாமி பஞ்சாயத்து தலைவர். அவர் ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவர் பதவி பறிபோகும் என்ற காரணத்தால் அவருக்கு கடலுர் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியது குறிப்பிடதக்கது.
சி.பிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் கிராமப் புற மக்களிடம் பெற்ற சாட்சி வாக்குமூலங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பதிவு செய்து கையொப்பம் பெற்று குற்றபத்திரிக்கையாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை தமிழில் தர வேண்டும் என பல போராட்டம் நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் ரத்தினத்தோடு நான் சென்றிருந்தேன். அப்போது சி.பி.ஐ அதிகாரியிடம் வழக்கறிஞர் ரத்தினம் அவர்கள் “ உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? சொந்த அண்ணன் மகனை தங்கள் குடும்பத்தில் மெத்த படித்த பி.இ கெமிக்கல் என்ஜினியர் முருகேசனை விசம் வைத்து கொன்றார் என அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளீர்களே! அப்படி யாரும் செய்வார்களா என கோபமாக கேட்டார். அதற்கு அந்த அதிகாரி “ சம்பவத்தில் இவரும் உடனிருந்தார். வழக்கு விசாரணையில் இவரை அப்ருவராக மாற்றிவிடலாம் என நாங்கள் செய்தோம்“ என குறிப்பிட்டார். சித்தப்பா அ்ய்யாசாமி, உறவினர் குணசேகரன் சிறை செல்ல முருகேசன் உறவினர்கள் எப்படி சாட்சி சொல்லுவார்கள்? இதுவே குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்து விடாதா? என பதில் கேள்வி கேட்டார். சி.பி ஐயிடம் பதில் இல்லை. சட்டம் படித்தால் மட்டும் போதாது சமூக அறிவு, மக்களை பற்றிய அக்கறை கொண்டவர்களால்தான் இப்படி சிந்திக்க முடியும். வழக்கை சரியான திசையில் எடுத்து செல்ல முடியும்.
அன்றைக்கு இன்னொரு சம்பவம் “சமரசமாக போய்விடலாம், ஆதிக்க சாதியினர் மிக வலுவாக உள்ளபகுதி விரு்ததாசலம். இந்த வழக்கில் தண்டனை பெற்றால் தலித் மக்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக மாறிவிடும் என வழக்கறிஞர் ரத்தினத்திடம் தலித் அமைப்பின் பிரதிநிதி என சொல்லிக் கொண்டு ஒருவர் செல்லில் பேசினார். ரத்தினம் கண்டபடி அவரை திட்டினார்.
வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுத்தருவது என்பது செங்குத்தான வழுக்குப் பாறையில் ஏறுவது போன்றது. போலீசுக்கு எதிராக, கீழமை நீதிமன்றத்துக்கு எதிராக, சமரச கட்சிக்கு எதிராக, உண்மையான எதிரிக்கு எதிராக, இப்படி எதிராக எதிராக என கடந்துதான் இத்தகைய நீதி வந்துள்ளது. இந்த தீர்ப்பு உயர், உச்சநீதிமன்றத்தில் நிலைக்க வேண்டுமானால் தொடர்ந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் சி.ராஜு


கண்ணகி முருகேசன்


கண்ணகி முருகேசன் வழக்கு தீர்ப்பு.
கொலையை கண்டுக்கொள்ளாமல்,கொலையாளிகளுக்கு உடந்தையாக ,பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க முயற்சித்த காவல் ஆய்வாளருக்கும் .துணை ஆய்வாளருக்கும் ஆயுள் தண்டனை.
இது சாதாரண சட்டங்களினால் சாத்தியமாயிருக்காது.மிக எளிதாக தப்பியிருப்பார்கள்.அல்லது மாட்டியிருக்கவே மாட்டார்கள் .பட்டியலின வன் கொடுமை சட்டத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகியது.இத்தனைக்கும் நடக்கும் வன் கொடுமைகளில்.வழக்கு பதிந்து நடத்தி நிருபித்து தண்டிக்கப்பட்ட வழக்குகளின் சதவீதம் வெறும் 1% தான் என்பதுதான் உண்மை நிலை. இதே வழக்கில் கண்ணகியை கொன்றது வன் கொடுமி சட்டத்தில் வராது.ஏனென்றால் அவர் தலித் இல்லை.
இதுதான் பல ஆனவ கொலைகளின் குற்றவாளிகள் தப்பிக்க காரணமாக இருக்கிறது.அது தற்கொலையாக மூடி மறைக்கப்படுகிறது.இதை தடுக்க உச்ச நீதிமன்றம் எல்லா மாநிலங்களும் ஆணவக்கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிட்டது.மத்திய அரசும் வரைவு சட்ட்டத்தை உருவாக்கியது.கடந்த ஆட்சியில் உயர் நீதிமன்றம் கொட்டியும் எடப்பாடி
ஆணவக்கொலை தமிழகத்திக்.இல்லவே இல்லை எனவே சிறப்பு சட்டம் தேவையில்லை என்றார்.
ஆனால் இதற்கான சிறப்புச்சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் ஆண்ட ராஜஸ்தான் மாநிலம் இவ்வளவுக்கும் ஆதிக்க சாதிகளால் நிரைந்த அம்மாநில சட்ட மன்றம் இதை 2019 ல் நிறைவேற்றியது.
இச்சட்டத்தின் மூலம் சாதி மதம் மாறி திருமணம் செய்வதை எதிர்க்கும் ஊர், சமூக ,சாதி கூட்டங்கள் முடிவுகள் தடை செய்ப்படுவதோடு தண்டணைக்குறிய குற்றம்.
சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் இயக்கமோ தலைமையோ கொலைநடந்தால் அதற்கான பொறுப்பாக்கப்படுவார்கள்.
சாதி மதம் மாறி திருமணம் செய்கிறவர்களுக்கு அவ்ர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பை கலெக்டர் டி எஸ் பிக்கு குறையாத அதிகாரிகள் கொடுக்க வேண்டும்..
இதில் தவறிழைத்த அதிகாரிகள்.குற்றத்திற்கு உடந்தையானவ்ர்கள்,வெறுப்பை பரப்புகிறவர்கள் என அணைவருக்கும் தூக்குதண்டணையிலிருந்து. 4 வருட கடுங்காவக் தண்டணை வரையும் அபராதமும் உண்டு.
சாதி மதம் மாறி மணம் செய்து அல்லலுறும் தம்பதிகளின் வாழ்வாதாரத்துக்கு அரசு பொறுப்பேற்கும்.
இப்படியான சட்டத்தை உடனே தமிழக அரசும் சட்டமன்ரதில் நிறைவேற்ற வேண்டும்.அதற்கான அழுத்ததை பொது உடமை பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் ஏற்படுத்த வேண்டும்.

வியாழன் 23 2021

ஒரு கண்டு பிடிப்பு....!!

 




முட்டாளாக நடித்தான்

அவர்கள் அவனை

அறிவாளியாக ஏற்றுக் கொண்டார்கள்


அறிவாளியாக நடித்தான்

இவர்கள் அவனை

முட்டாளாக மாற்றி விட்டார்கள்

 எப்படி  பார்த்தாலும்

அவன் நடிகன்

புதன் 22 2021

ஆறாவது ஆண்டு நினைவு.........

 


யம்மா.....ஒனக்கு என்பதுக்கு மேல் வயசாச்சும்மா... இன்னும் பர ரன்னு வேலை செய்வேன்னு மல்லுகட்டதம்மா..  நான் சொல்றத கேட்டேன்னா.... நூறு வயசு வரைக்கும் இருப்பேம்மா.... அவர் சொல்லி முடிக்கும்முன்னரே அவருடைய தாய் இடைமறித்து சொன்னார்...


“ நூறு வயசு வரைக்கும் நான் இருந்தா.... அப்புறம் செத்த பிறகு யார்டா..? தூக்கி போயி என்ன. பொதைப்பா.....

“ யாரு இருக்காவா....    ஒம் மக ..மருமகன், ரெண்டு பேத்தி, ரெண்டு பேரன்கள்ல..வச்சுகிட்டு... யாரு இருக்காங்கன்னா  கேட்க்கிற.... எனக்குத்தான் உன்னவிட்டா யாரு  இருக்கா... மனைவி, மகன்.மகள், மனைவி வழி உறவுகள்னு யாரு இருக்கா.... உன் மகளுக்காக என்னை செக்குமாடாக்கிட்டேயம்மா.... எனக்கு  யாருமில்லாத காரணத்ததால்  ஒனக்கு முன்னாடி நான் போயிட்டா ...... நல்லாயிருக்குமுன்னு  சொல்றேன்..   அதக்கூட கேட்க மாட்டுறீயேம்மா....


நீ சொல்வதை கேட்க முடியாதுடா......நான்தான் முன்னாடி போவேன்.. நீதான் என்னை தூக்கி போகனும்--- அதற்குத்தான் ஒன்னை பெத்தென் வளத்தேன். உன் கடமையை  செய்டா...   .

அதன் பிறகு அவர் தாயிடம்  எதுவும் சொல்வதில்லை....சொன்னாலும் அவர் கேட்கமாட்டார்....  நாளாகி வாரமாகி, மாதமாகி. வருடமாகி கழிந்த ஒருநாள் அவரின் எழுந்து  நடமாட ஒரு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தார்

அவரின் தாய் என்ன நினைத்தாரோ ..அந்த ஊன்றுகோலை கடைசி வரைக்கும் பயன்படுத்தவில்லை. ஊன்றுகோல் இல்லாமல் தனியாக எழுந்து நிற்க முயன்றபோது தவறி விழுந்து இடுப்பெலும்பு பலத்த சேதமாகி  படுக்கையில் விழுந்தார்.

எலும்பு முறிவு மருத்துவமனைக்கு தூக்கி சென்று காண்பித்தபோது.. நல்ல மனது உள்ள அந்த மருத்துவரோ  தாயார்  வயது முதுமை அடைந்துவிட்டார் இடுப்பு எலும்பை சரி செய்ய முடியாது.. சில நாட்கள்தான் உயிருடன் இருப்பார் . வேறு மருத்துவமனைக்கு  சென்று பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். வலிக்கு ஊசி போட்டு சில மாத்திரையும் தந்து. வீட்டுக்கு  போங்கள் என்று அனுப்பி வைத்தார்.


வீட்டுக்கு வந்து படுத்த படுக்கையாக இருந்தவர் உயிர் பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன் மகனை ஈனக்குரலில் பல தடவை அழைத்தார். அந்த தாயின் பேரன் பேத்திகளும் அவரிடம் வந்து கூறிய போதும்  போகவில்லை

 சத்தியம் சர்க்கரை பொங்கல் என்று தெரிந்த போதும்..சாகப்போகும் தருவாயில் இன்னும் ஏதாவது  வாக்கு ,சத்தியம் என்று கேட்டுவிட்டால் அதை நிறைவேற்ற இந்தச் சூழ்நிலையில்  நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே. எல்லா வகையான ஆசைகளை எல்லாம் துறந்து ...கொடுத்த வாக்கை நிறைவேற்றவே தனக்கு  ஐம்பத்திஐந்து வயதாகிவிட்டது. அதனால் அவரின் தாய் உயிர் பிரியும் வரை அருகில் செல்லவில்லை. தாய் இறந்தபின்தான்   அதற்க்காக வருத்தப்பட்டார்.

சரியாக 20.09.2015 -ல் இரவு எட்டுமணி  வாக்கில் அவரின் தாய் பிரிந்தது.  முதன்முதலில் அவரின் உற்ற நண்பர் செல்வம்தான் முதலில் வந்தார்..பின் அவர் தமக்கையிடமும் அரின் கணவரிடமும்  சடங்கு சம்பிரதாயம், மூடநம்பிக்கை அற்ற வழியில் தன் தாயின் உடலை எரியுட்டுவதற்கு ஒப்புதலை பெற்றார். பின் அதற்கான செலவுக்கான பணத்தை தயார் படுத்துவதற்கு வெளியில் சென்றார்.

ஆட்டம் பாட்டம். கொட்டு ரேடியா. நீர்மாலை போன்ற எந்தவித சடங்கு  சாத்திரம் எதுவுமில்லாமல்   நன்றாக குளிப்பாட்டி. துக்கம் விசரிக்க வருபவர்கள் பார்த்தால் தூங்குவதுபோல் தெரிகிற மாதிரி ஐஸ் பெட்டியில் வைத்து மாலையில் நல்ல நேரம் பார்க்காமல் ஆம்புலன்ஸ் வண்டியில்  கோயிந்தா..கேயிந்தா என்ற கோஷமிடாமல்.  மாலைகளை ரோட்டில் போட்டு துவம்சம் செய்யாமல்  மிக அமைதியான முறையில்  சற்று தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரியூட்டினார்.... தாயை  இழந்து அனாதையான அந்த மகன்.



திங்கள் 20 2021

என் தாயார் நினைவு தினம்..

 

                                                                       எனது தாயார்


இன்று...

புரட்டசியாக..

பௌர்ணமியாக..

இருக்கட்டும்

ஆனால்

இன்றைய..

20.09.21

என்பது

எனக்கு

என் தாயார்

நினைவுதினம்.

மட்டுமே

தெரியும்....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...