பக்கங்கள்

வெள்ளி 16 2013

முதுகெலும்பு உள்ள மனிதர்களும்,,முதுகெலும்பு இல்லா பிராணிகளும்.

போஸ்டர்

இந்திய சுதந்திரத்தன்று...........“1947க்கு முன்பு ஆங்கிலேய காலனி எஜமானர்கள்   இந்தியாவை ஆண்டார்கள். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது விசுவாசமான தரகர்கள் மூலம் இந்திய மக்கள் மீது அதிக்கம் செலுத்துகிறார்கள்.”

எனவே,ஆகஸ்டு15 போலி சுதந்திரம்,இதற்கென்ன கொண்டாட்டம்? தொடங்கு வோம் புதியதோர் விடுதலை போராட்டம்,”- என்று துண்டறிக்கை கொடுத்த தோழர் சிவாவையும், போஸ்டர் ஒட்டிய தோழர் இராமலிங்கத்தையும்

1947 க்கு முன் ஆங்கிலேயனுக்கும், தற்போது தரகர்களுக்கும் விசுவாசமாக  கருத்துரிமை,அரசியல் உரிமை ஆகியவற்றை பறித்து  போலி சுதந்திர தினத்தில் நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாக அணிவகுப்பில் சென்று சல்யூட் அடிக்கும் போலீசு.

பொது அமைதிக்கு குந்தகம், விளைவித்தாகவும்.அரசை கவிழ்க்க சதி செய்ததாகவும் தேச துரோக வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்........போலி  சுதந்திர நாட்டின்.இவர்கள்......
--------------------------------------------------------------------


“ தலைவா” என்ற ஒரு பொழுது போக்கும் படம், அதில்  நடித்தவர் வருங்கால முதல்வர் பதவிக்காக ரெண்டு சைக்கிள்,மூன்று அயன்பாக்ஸ், நாலு தையல் மிஷின் அன்பளிப்பாக  முன்கூட்டியே  அச்சாரம் கொடுத்து வைத்திருக்கும். கதாநாயகன் விஜய்.

வருங்கால முதல்வருக்காக கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் எல்லாவற்றையும் முன்னெடுக்கடும்  விஜய்யின் தந்தை,

இந்த வருங்கால முதல்வருக்காக இப்பவே பரப்பபுரை செய்வதற்கு 50கோடி போட்டு  படமெடுத்த தயாரிப்பாளர்.

அய்யோ, தம் பதவிக்கு ஆபத்தென்று அஞ்சி இஞ்சி தின்று  ,தலைவாவை,
மடக்கி முடக்கி  தனியொரு ஆளாக பத்து பேரை பந்தாடும் வீராதி வீரரை பந்தாடு்ம் வில்லாதி வில்லிகள்.

சொந்த தொழில்  ஏற்ப்படும் பிரச்சினையை தீர்க்க வக்கற்று  பதினாறு அடி ஓடி எட்டி பார்ப்பவர்களை  சூராதி சூரன் என்று பிலீம் காட்டுபவர்கள்  எல்லாம் சுதந்திர இந்தியாவின்  .................................

வியாழன் 15 2013

இவர்கள் வாசகர்கள் // பதிவர்கள்



வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,

வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,

கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்

இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........

புதன் 14 2013

நடுநிசியில் வாங்கிய போலி சுதந்திரத்தின் கதை.........!!!



ஆங்கிலேயன். இந்தியாவுக்கு   1947ம்ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரம் தருவதாக அறிவித்தான். அன்றைய தினம் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும்மாறு தெரிவித்தான்.

அன்றைய இந்தியாவின் இந்துத்துவ வாதிகள், ஆகஸ்டு 15ந்தேதி அஷ்டமி நாள்  சுதந்திரத்தை வாங்கினால் ,அபசகுனம் ஆகும். அதனால் இரண்டு நாள் கழித்து 17ந்தேதி சுதந்திரத்தை வாங்கினால் நல்ல சகுனம் உள்ள நாள் என்றும் பொருத்தது பொருத்தோம். இன்னும் இரண்டு  நாள் கழித்து சுதந்திரத்தை வாங்கலாமே என்று அங்கலாயித்தனர்.

இது பற்றி ஜவகர்லாலுவிடம் முறையிட்டனர். ஜவகர் லாலுவும் அஷ்டமி-நவமி போன்ற பஞ்சாஙக்கத்தில் நம்பிக்கை இல்லையென்று வெளியில் பீத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் இந்துத்துவாதிகளின் வேண்டு கோளுக்கு இணங்கி ஆங்கிலேயனை அனுகினார்.

ஆங்கிலேயரோ, சட்டம் இயற்றியாகிவிட்டது, இனி மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டனர்.

மெத்த தெரிந்த பூனூல்களும்,  கடவுளுக்கு மேலானவர்களாக பீற்றிக் கொள்ளும் உச்சி குடுமிகளும், அனைத்து வகையான பஞ்சாங்கங்களை கொண்டு நாள் நட்சத்திரங்களை கணக்கீடு செய்து அந்த நாளுக்குரிய பரிகாரம் செய்வதற்கு வழிவகைகளை  தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்படி ஆராய்ந்து ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தனர்...

இந்தியனுக்கு அதாவது  பூனூல்களுக்கும் உச்சி குடுமிகளுக்கும் மறுநாள் என்பது அதிகாலை 5மணிக்கு தொடங்குகிறது.

ஆங்கிலேயனுக்கு மறுநாள் என்பது நடுநிசி 12 மணிக்கு தொடங்ககிறது. இதனால் அஷ்டமி- நவமி கேடுகள்-மற்றும் அப சகுணங்கள் இல்லாது போகிறது என்று கண்டுபிடித்தனர்.

இதன் காரணங்களை கொண்டுதான். 1947ம்ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி முடிந்து  ஆங்கிலேயனின் மறுநாளான  ஆகஸ்டு 15ந்தேதி நடுநிசி  12 மணிவாக்கில் ஆங்கிலேயனிமிருந்து   போலிச் சுதந்திரத்தை பெற்று  15ந்தேதி அதிகாலை 5மணியில்  இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லி 67 வருடமாக சுதந்திர தின திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.






செவ்வாய் 13 2013

பெயருக்கு முன்னால் பட்டங்களை போட்டுக் கொள்ளாதவர்கள்!!!!

PUChinnappa.jpg

இன்றைய 21ம் நூற்றாண்டில் புல் தடுக்கி விழும் சாதரணமானவர் களுக்குகூட, 

தானைத்தலைவர்,தமிழினத்தலைவர்,அம்மா,கொம்மா, தாயே. பேயே, பிசாசே, புரட்சிபுயலு, இளம்புயலு.முதியபுயலு புரட்சி தளபதி, வீரத்தளபதி, வீரத்துறவீ, ஓடும் துறவி, தலயே,மலயே, சூப்ஸ்டாரு,கூப்பிட்டாரு, கும்பிட்டாரு , கேப்டவுனு,  வருங்கால, இறந்தகால, இப்படி அறிவுக்கு எட்டாத என்னற்ற பட்டங்கள்

நடிக நடிகர்களுக்கும் அரசியல் தொழில் நடத்தும் தலைவர்களுக்கும் சரி, ஒரு பேச்சுக்குகூட அவர்களுக்கு பொருந்தாத, பொருத்தமில்லாத பட்டங்களை வாரி வழங்குறார்கள்.

இப்படி வாரி வழங்கப்பட்ட பட்டங்களுடன்  ஊர்வலம்  நகர்வலம், திரைவலம் வரும் 

இவர்களுக்கு மத்தியில் 20 நூற்றாண்டில் ஆரம்பத்தில் பொருத்தமான பட்டங்களை பெற்ற   “கந்தர்வ கான ஏழிசைஎன்ற பட்டத்தை பெற்ற எம்.கே. தியாகராஜன் பாகவதரும்,

“நவ நடிக பூபதிபட்டம் பெற்ற பி.யு.சின்னப்பாவும் 

தங்கள் பெயருக்கு முன்னால் அந்தப் பட்டங்களை போட்டுக் கொள்ளவில்லையாம்......

இவர்கள் பிழைக்கத் தெரியாத நடிகர்களாக அந்த பட்டங்களை விரும்பாதவர்களாக வாழ்ந்து மடிந்து விட்டார்கள்.



திங்கள் 12 2013

உயிர் வாழும் 200 பேரில் ஒருவன் இரக்கமில்லாத கொடுங்கோலன், கொலை வெறியன்.!!!!

செங்கிஸ்கான்

அலெக்சாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கானின் பேரரசு நான்கு மடங்கு பெரியது அதனால்தானோ...

அலெக்சாண்டரைவிட நாண்கு மடங்கு போர் வெறியனாகவும். கொடுங்கோலனாகவும்,எதிரிகளை வறுத்து எடுத்தவன் இரக்கம்
என்பதே இல்லாமல் அளவுக்கு மீறிய கொலைவெறியை காட்டியவன்

வன்முறை,கொலைவெறி நிறைந்த மன்னர்களில் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவன்.செங்கிஸ்கான்.

உலகில் வாழும் மொத்த ஆண்களில் அரை விழுக்காடு பேர்கள்,இவனின வாரிசகள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

2003ம்ஆண்டில் ஆசியாக் கண்டத்தில் 23 நிபுணர்கள் ஒருங்கிணைந்து மரபனு தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள்

இந்தியாவில் சாதி ரீதியாக கணக்கெடப்பு மாதரியானது அல்ல இது.

செங்கிஸ்கானின் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில்  வாழந்த பகதிகளில் வாழ்ந்த 16 வகையான மக்கள் கூட்டத்திலிருந்து ஆண்களின் இரத்த மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டது.

அதில் எட்டு விழுக்காடு பேருக்கு ஒரே மாதிரியான குரோமா சோம்கள் இருந்தன.

“ஒய்”குரோமாசோம்கள் என்பவை.ஆண்களிடம் மட்டுமே காணப்படும் “ஓய்” குரோமாசோம்கள் அலாதியான மரபனு துனுக்குகளை வைத்திருக்கும் ஆண்கள் அனைவருமே, ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள் எனலாம் ,
-என்றார்கள்

 அதன்படி மரபனு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால்.........

உலகில் வாழும் 16 மில்லியன் ஆண்கள் செங்கிஸ்கானின் வம்சாவழிகள். அதாவது உலகில் வாழும் ஆண்களில் 200பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் வாரிசு.

உலகில் வாழும் ஆண்களில் 200பேரில் ஒருவன்செங“கிஸ்கானைப்    போலவே, இரக்கமில்லாத, கொடுங் கோலன், ,கொலைவெறியர்கள் குணம் உள்ளவர்கள் என்பதுதானே அர்த்தம்.....

ஞாயிறு 11 2013

நாடறிந்த உண்மையை மூடி மறைக்கும் இந்திய பிரதமர் கிரிமினல் அலுவலகம்.....



போபால்  நச்சு வாயுப் படுகொலையை பற்றி ஒப்புக்குக்கூட நாடறிந்த உண்மையை தெரிவிப்பதற்கு பிரதமர் அலுவலகம்  தயாராக இல்லை.இதிலிருந்து

இந்தியாவுக்கான பிரதமர் அலுவலகம் இல்லை, இது அமெரிக்காவுக்கான அமெரிக்க அலுவலகம் என்பதையே பறைசாற்றுகிறது.

போபால் விஷவாயு படுகொலையில் நாடறிந்த உண்மைகள் எதுவும் இல்லை என்றும்,நேற்றுதான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து இறங்கி பணிபரிவது போலவும்   இந்திய பிரதம அலுவலகம் நடிக்கிறது..

நாடறிந்த உண்மைகள் இதோ,....

 1975-ல் அவசர காலத்தில் தொழில் அமைச்சகத்தின் ஆட்சேபத்தை மீறி இந்த ஆலைக்கு உரிம்ம் வழங்கியது மட்டுமின்றி ஆராய்ச்சி என்ற பெயரில் ஆலைக்குள் இரகசியமாக இரசாயனப் பரிசோதனைகள் நடத்துவதற்கும் அனுமதி அளித்த்து இந்தியாதான் இந்திரா-வின அரசு. 

இந்த ஆலையை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று கூறிய நகராட்சி அதிகாரியை அங்கிருந்து தூக்கியடித்தவர் அன்றைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜூனசிங்

அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கிய ஆண்டர்சனை போலீசு கைது செய்தவுடனே.தலையிட்டு பிணையில் விடுவித்தவுடன,அரசின் தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து, ஆண்டர்சனிடம் மன்னிப்பும் கேட்டு, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் ராஜீவ்காந்தி. இதனா ல்தான் செத்துப்பொனவனெல்லாம் உத்தமன் அல்ல என்று குறிப்பிடப் படுகிறது.

“ஆலையை பார்வையிட ஆண்டர்சன் வருகிறார். அவரை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியது. நாம் உத்தரவாதம் கொடுத்தோம் என்று கூறியிருக்கிறார் அன்றைய வெளியுறவுத்துறைச் செயலர் ரஸ்கோத்ரா. 

“வெளியுறவுத்துறையின் நிர்ப்பந்தத்தினால்தான் ஆண்டர்சனை விடுவித்தோம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார் இவ் வழக்கை கையாண்ட சி.பி.ஐ. அதிகாரி லால். 

ஆனால் 1984இல் ஆண் டர்சன் வந்து போனதற்கு எவ்வித ஆவணச்சான்றுஇல்லை என்று அப்பவே, கொட்டை போட்டஉள்துறை அமைச்சாக இருந்த ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 

ஆனால்,செத்தப்போன உத்தமன் ராஜீவுக்கு இது பற்றிஎல்லாம் எதுவுமே தெரியாது என்று சாதித்து இருக்கிறது. காங்கிரஸ்கட்சி.

அப்பவே கொட்டை போட்ட இந்த கிரிமினல்கள் புளுகி தள்ளியிருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் அரசாங்கமும் அவர்களின் அலுவலகமும் இதைத்தான் புளுகித்தள்ளமுடியும்.

நம்வே முடியாத அளவுக்கு நயவஞ்சகமான முறையில் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும்  காங்கிரசு கட்சியும் பிஜேபியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்கான துரோகம் இழைத்திழத்திருக்கின்றன. அதற்க்கான  

 தகவல் மற்றும் ஆதாரத்துக்கு படியுங்கள். மேற்க்காணும் புத்தகம்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...