பக்கங்கள்

சனி 21 2013

இனி, திருமலை ஏழுமலையான் “ஸ்டைல்” காரில்தான் பவனி வருவான்...

திருப்பதி ஏழுமவையான் ,பக்த  கோடிகளுக்கு தேரில் பவனி வந்து அருள் பாலித்தது   சலித்துபோன காரணத்தால்.

ஒரு சேஞ்சுக்கு, ஏழுமலையான்,அசோக்லேண்டுன் துனைத்தலைவர் வழங்கிய 9.5 இலட்சம் பெருமானமுள்ள புதிய தயாரிப்பான “ஸ்டைல்” காரில்தான் பவனி வந்து பக்த கேடிகளுக்கு அருள் பாவிப்பான்.

அவனவன் சர்ர்ர்..........புர்ர்ர்..........னு போயிகிட்டு இருக்கயில............ஏழமலையான் மட்டும் ஆடி அசைந்தா போகனும்.............

ஏழு மலையானே.................ம்ம்ம்................ம்ம்ம.................ம்ம்ம்

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட "ஸ்டைல்' கார்.

வெள்ளி 20 2013

மாடு தின்னும் புலையா.......... உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா.....-? கேட்கிறது ஒரு அறிக்கை

inioru.com 


பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி சம்பத் கமிசன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையானது ஜெயா ஆட்சியின் தேவர் சாதிவெறி பாசத்தை தோலுரித்து காட்டிவிட்டது.

“மாடு தின்னும் புலையா...........உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்று  காலம் காலமாக ஆதிக்கச் சாதியினரால் கேட்கப்பட்ட ,அதே குரலைத்தான் சம்பத் கமிசனும் எதிரோலித்திருக்கிறது.

மேலும் படிக்க.. புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 இதழை பாருங்கள்.

வியாழன் 19 2013

அதென்ன ..லோக்(கு)பால்.................



வாலிபால் -புட்பால்
விளையாடிய வர்களுக்கு
தெரியும்......................

கிரிகெட்பால்-சிக்ஸர்பால்
பார்த்தவர்களுக்கு
தெரியும்......................

மாட்டுப்பால்- ஆட்டுப்பால்
குடித்தவர்களுக்கு
தெரியும்................

“அதென்ன லோக்(கு)பால்”......

பார்ஆளும் மன்றத்திலும்
சட்ட மன்றத்திலும்
சொகமாய் படுத்து
புரளும் பன்றிகளுக்கு
தெரியும்...................

படி அரிசியில் முனி அரிசி
சோமாறும் சோமாறிகளுக்கு
தெரியும்......................

படி அளக்காமல்
மொத்தமாய்  பதுக்கும்
பதுக்கல் பேர்வழிக்கு
தெரியும்................

எல்லாப் புகழையும்
மொத்தமாய் அள்ளும்
பெரிசு அன்னா கசரேவும்
ஆத்மி கேசரி வாலுக்கும்
தெரியும்.................

 “லோகபால் நிறைவேறியது”

புரட்சி திட்டமுனு
சொல்லித் திரிந்த
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்

பல்லு போயி
ஒன்றிரண்டு சொத்தை
பல்லைக்காட்டி.
கொண்டு நிக்க
மாட்டாமல் நிக்குது.

இந்த லோக்(கு) பாலும்
லோக்கு பால் அல்ல
லாக்கு பால்லுன்னு
சந்தி சிரிக்கத்தான்
போகுது...................

செவ்வாய் 17 2013

அதிலிருந்து இதிலோ.............இதிலிருந்து அதிலோ்........சிறுகதை


tamil.yahoo.com 












ஒரு வாரத்துக்கு மேல் கடுமையான வேலை,அந்த வேலையின் காரணமாக நேரத்துக்கு சரியாக உணவு உண்ணமுடியவில்லை,  நல்ல தூக்கமும் இல்லை

வேலையை முடித்த மறுநாள் இரவில் பயங்கரமான.தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வயிற்று வலி.

என்ன செய்தும் வலியை குறைக்க முடியவில்லை.நேரம் இரவு 12 மணிக்கு மேல்,பக்கதில் இருக்கும் கிளினிக் எதுவும் இல்லை. அரசு மருத்துவமனையோ தூரத்தில் உள்ளது.

அப்படியே,அரசு மருத்துவமனைக்கு சென்றாலும்  உடனடியாக கவனித்து விட மாட்டார்கள்.“ இந்நேரத்தில் வந்து ஏன்டா ?எங்க உயிர வாங்குறீங்க!”என்று
திட்டுவார்கள். வேறு வழியில்லை என்றும்  கெஞ்சினால் நோயாளியை  ஓரமாக சாய்த்து வைக்கச் சொல்லுவார்கள்.

காசும்மாச்சு,மயிருமாச்சு, இரவும்பகலுமா வேலை பார்த்த காசைக் கொண்டு.ஆட்டோவைப் பிடித்து, சற்று தூரத்தில் இருந்த 24 மணி நேர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவிர் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது.

உள் நோயாளியாக தங்க வைக்கப்பட்டுதினசரி 3 அல்லது 4 குளுகோஸ் பாட்டிலுடன் ஊசியும் ஏற்றப்பட்டு.மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. வயிற்றை பட்ம் பிடித்து பார்த்தில் குடல்களில அதிகமான புண்கள்., கேன்சராக ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பிவிட்டதாக வழி மொழியப்பட்டது. தினசரி  காலை மாலை மருத்துவரும் செவிலியர்களும் வந்து பார்வையிட்டனர்..

வசூல்ராஜாவானர் ஏழை நோயாளிடம் விசாரனை செய்தார்.

“தண்ணி அடிப்பிங்களா?”

“இல்ல,சார்”

“பாக்கு போடுவிங்களா? ”

“இல்லசார்”

“பீடி.சிகரெட் ..........”

சிறு வயதிலிருந்து எந்தப் பழக்கமும் இல்ல சார்.”

”அன் மேரிடா”

“ஆமாம் சார்”

“ஏன்”

“அது பெரிய கதை சார்,”

வசூல்ராஜாவானர். அந்த நோயாளியை ஆச்சரியமாய் பார்த்தார்.

“தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்திருந்தால்,வெறும் வயிற்றில் தண்ணி அடித்தால் குடல் வெந்து போகும் என்ற பயத்தில் பாரில் விற்கும் சிக்கனையோ,அல்லது முறுக்கையோ ஏதாவது ஒன்றை உள்ளே தள்ளி இருப்பீர்கள்..”

அங்கு கொடுக்க வேண்டியதை , மொத்தமாய் இங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

“ தண்ணி அடிப்பதெற்கெல்லாம்,  தினசரி வருமாணம் இல்லை.சார்,

“இப்ப மட்டும் பணம் எப்படி வந்தது.” “ எப்படித்தான் நீங்கள்  இருந்தாலும்.
“அதிலிருந்து இதிலோ.........இதிலிருந்து அதிலோ............”தப்பிக்கவே முடியாது என்பதை புரிஞ்சிக்கிங்க.............என்றார் வசூல்ராஜா.


வயிற்றுவலி குணமாகி வீட்டிற்கு வந்த போது, கடன் கொடுத்தவர்கள் நலன் விசாரிக்க வந்தபோது தான் தெரிந்தது. இராப்பகலா உழைத்து சம்பாதித்த பணமும் போயி,மேற்க்கொண்டு கடனும் எகிறி இருப்பது.

இனி, கடனை அடைக்க உழைப்பு, ஆஸ்பத்தரி செலவு, திரும்பவும் கடன்......உழைப்பு.......

இப்போதுதான் எனக்கு புரிந்தது.என் மண்டை தரையில் சாய்கிற வரைக்கும்..“

“அதிலிருந்து இதிலோ......இதிலிருந்து அதிலோ........ .தப்பிக்கவே முடியாது என்று”

திங்கள் 16 2013

மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!...

panippulam.com 

மார்கழி மாதம் பிறந்து விட்டாலே.பதினோரு மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாத்த்திற்கு யோக்கியர்கள் வேடம் தரித்து விடுகிறார்கள்.

என்னென்ன அயோக்கிய தனங்கள் இருக்கிறதோ அத்துனை தனங்களிலும் புகுந்து விளையாடியவர்கள், புதிய அயோக்கிய தனங்களுக்காக இந்த ஒரு மாதத்தில் யோக்கியர்களாக வலம் வருகிறார்கள்.

அதிகாலையில் எழுந்து குளிரில் நீராடி நெற்றியில் பட்டையிட்டு.மார்கழி மாத சீருடை அணிந்து. காட்சி அளிப்பார்கள். நாங்கள்தான் மார்கழி மாத யோக்கியர்கள் என்று பறை சாட்டுவார்கள்.

சாஸ்திரப்படி பதினோறுமாத பாவம் ஒரு மாதத்தில் தீர்த்துவிடுமாம். பதினோறு மாதம் கடவுளை நிணைக்காதவர்கள். ஒரு மாதத்தில் நிணைத்தால் பதினோறு மாத பலன் கிடைக்குமாம். அந்த ஒரு மாதத்தில் பலன் கிடைத்தவுடன் அடுத்த பதினோறு மாதத்தில் பழைய புதிய அயோக்கிய தனங்களில் ஈடுபாட்டாலும் அதனால் கெடுதல் ஏற்ப்படாதாம்.

கடலில் மீன் பெருக தடைகாலம்  இருப்பது மாதிரி, பதினோறு மாத அயோக்கிய தனங்கள் செய்யும் அயோக்கியர்களுக்கு மார்கழி மாதம் தடைகாலம்.

 சாதராண அப்பிராணி குடுமபங்களைச சேர்ந்தவர்களுக்கு இந்த மார்கழி மாத தடைகாலத்தை பற்றி அவ்வளவாக தெரிய வாய்பில்லை என்றாலும் அவர்களும் இந்த மார்கழி மாத தடைகாலத்தை இப்படி பயன் படுத்துகிறார்களாம்

பதினோறு மாதம் குடியே கதியின்னு கிடப்பவனை,மார்கழி மாத அயோக்கியர்கர்களின் தடைகாலத்தை பயன்படுத்தியவது ,குடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில்  பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

பழைய பழமொழியான “யோக்கியன் வாரான், செம்பை எடுத்து உள்ளே வை ”என்பதை

இப்படிக் கூறலாம்............

”மார்கழி மாத யோக்கியன் வாரான். செல்போனை எடுத்து உள்ளே வை” என்று

“ மார்கழி மாதத்து யோக்கியர்கள் வருகிறார்கள்  மாராப்பை  இழுத்து மூடிவை”


தொடர்புடைய பதிவு.http://valipokken.blogspot.com/2013/01/11-1.html
11மாத அயோக்கியர்களும் ஒரு மாத யோக்கியர்களும்

ஞாயிறு 15 2013

நாய்களும் .........மனிதர்களும்.............

www.tamilaustralian.com.au












நாய் ஒன்று பழைய
தெருவிலிருந்து புதிய
தெருவுக்கு வந்தது.

புதிய தெருவில்
பழைய நாயொன்று
புதிதாய் வந்த
நாயை கண்டது

சட்டென எழுந்து
தன் கோரப் பற்களை
காட்டி குரைத்தது.

உர்ர்ர்............உர்ர்ர்...
லொள்ள்ள்.....லொள்

ஒரு நாய் குரைத்ததும்
பல நாய்களும்..........
சேர்ந்து குரைத்தது.

லொள்.லொள் லொள்
லொள்..லொள்..லொள்

வந்த நாயோ சற்று
பலமுள்ளது அதுவும்
தன் வீரத்தை காட்டியது

உர்ர்ர்ர்ர............உர்ர்ர்ர்ர்
உர்ர்ர்ர்ர.............உர்ர்ர்ர்ர்

புதிய தெருவிலே
இருந்த பழைய
நாயும்-பழைய
தெருவில் இருந்து
வந்த புதிய
நாயும் ஒன்றுடன்
ஒன்று மோதின.

பழைய தெருவில்
இருந்து புதிய
தெருவுக்கும்
புதிய தெருவில்
இருந்து பழைய
தெருவக்கும்
போய் கொண்டும்
வந்து கொண்டும்
 இருந்த மனிதர்கள்

நாயின் சத்தத்தை
கேட்டும் அதன்
பற்களை கண்டும்
எட்டடி தள்ளி
சென்று பதினாறு
அடி வேகத்தில்
கடந்தார்கள்........

டாஸ்மாக் குடி
மக்களோ போதை
தெளியாத சாக்கில்
தூரத்தே நின்றனர்.

பழைய தெருவென்ன
புதிய தெருவென்ன
நாய்களை ப் போல
மனிதர்களும் குரைப்பதால்
தானே, “நாயே”
நாய்களே...........
என்று பட்டம்
வாங்குகிறார்கள். 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...