பக்கங்கள்

சனி 30 2014

சுதேசி என்றால் என்னவென்று தெரியுமா....,???


படம்----nanayam.vikatan.com



உயிர்க்கு குறைந்த பட்சம் உத்தரவாதமில்லாத வாழ்நிலை.

படிக்கும் பிள்ளைகளுக்கு.கும்பகோணம் தீ விபத்து மாதிரியான நிலை.

சாலையில் தோண்டிவிட்டு செப்பனிடப்படாத பள்ளங்கள், மூடாத சாக்கடைகள், பாதுகாப்பு இல்லாத காஸ் சிலிண்டர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள்,

அய்ந்தாறு மாடிகளைக் கொண்ட கட்டிங்கள், அந்தக கட்டிடங்களிலே, அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க வழியில்லாத கடைகள், துணிக்கடைகள்,

தனியார்- தனியார் என்று தனியார் மருத்துவ மனைகளை பெருக்கிவிட்ட அரசு மருத்துவமனைகள்


இன்னும்“ பலவற்றோடு மேற்கண்டவைகள் தான்  சுதேசி.... சுதேசி...........

வியாழன் 28 2014

ஒரே கேள்வியும்....ஒரே பதிலும்......


படம்--ta.wikipedia.org


ஒரே கேள்வி....ஒரே கேள்வி
எந்தன் மனதிலே.....................

ஒரே பதில்.........ஒரே பதில்
உந்தன் மனதிலே................

இப்படி பாட்டு பாடியவாறு ஒருத்தர் என்னிடம்  ஒரு கேள்வியை கேட்டார்.

அந்தக் கேள்வி  இதுதான்  “ வரும் 2016 தேர்தலில் சூப்பர் ஸ்டார் ஜார்ஜ் கோட்டையில் முதலைமைச்சராக ஆகிவிட்டார் என்றால்  சினிமா பார்த்தவர்கள்   எல்லாம் என்னவா .... ஆவார்கள் என்று கேட்டார்..


இந்தக் கேள்வி ,அறிவார்ந்த கேள்வி இல்லையென்பதால் நான் சட்டென்று பதில்  சொல்லிவிட்டு  அவர் பாடிய பாடலை நான் மாத்திபோட்டு பாடினேன்
இப்படி...

ஒரே கேள்வி.......ஒரே கேள்வி.....
உந்தன் மனதிலே....................

ஒரே பதில் ....ஒரே பதில்.....
எந்தன் மனதிலே..................

நான் சொன்ன பதில் இதுதான்.

சினிமாவில் நடித்தவர் முதலமைச்சராக ஆகிவிட்டால்   அவரின் சினிமாவை பார்த்தவர்கள் எல்லோரும் பரதேசியாக ஆகியிருப்பார்கள், ஆகாதவர்கள் கூடிய சீக்கீரமே பார்- தேசியாக  ஆவார்கள் என்றேன்.

நான் சொன்ன பதில் சரியொன்று எனக்கு தோன்றுகிறது.....உங்களுக்கு..





புதன் 27 2014

சிலரின் முன்னேற்த்துக்கு- பலரின் பின்னேற்த்தை மறைத்ததேன்...???

படம்--paadam-pm.blogspot.com


அப்பளம் வித்தவர்- அப்பள
கம்பெனிக்கே முதலாளியாகிவிட்டார்.

இட்லி சுட்டு வித்தவர்- இட்லி
ஓட்டலுக்கே சொந்தக்காராகிவிட்டார்.

சுண்டல் வித்தவர்- சுண்டல்
பண்னைக்கே அதிபதியாகிவிட்டார்.

கஞ்சா வித்தவர்- கஞ்சா
தோட்டத்துக்கே உரிமையாளராகிவிட்டார்.

சாராயம் வித்தவர்- சாராய
ஆலைக்கே அதிபராகிவிட்டார்.

- இப்படி முன்னேறிய சிலரின்
 தந்திரத்தை .....அதிசியமாக
வாரி இரைத்து கடை விரிக்கும்
பத்திரிகை்கைளும் தொலைக் காட்சிகளும்,

அப்பளத்தை வாங்கியவர்கள்
இட்லியை திண்டவர்கள்
சுண்டலை கொரித்தவர்கள்
கஞ்சாவை புகைத்தவர்கள்
சாராயத்தை குடித்தவர்கள்

சிலரின் முன்னேற்த்துக்கு
பலரின் புின்னேற்த்தின்
மந்திரத்து கதைகளை கடை
விரிக்காமல் மறைத்ததேன்.......???

செவ்வாய் 26 2014

கடப்பாரை வேண்டுமா...? தலைவா....??

Nose picking in progress.jpg
படம்-ta.wikipedia.org

 நாலு  பேர் கூடுகிற  இடங்கள் என்றாலும் சரி, பொது இடமானாலும் சரி, நாகரிகமானவர்கள் செய்யும் அநாகரிகச் செயல்கள் இருக்கே......... அந்த நாகரிமானவர்கள் செய்யும்  அநாகரிமான  செயல்களை கண்டு,  ரசிகராக இல்லாதவர்கள் முகம் சுளிப்பார்கள், சிலர் கண்டும் காணாமல் இருப்பார்கள், சிலர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.

அப்படியான  அநாகரிமான் செயல் ஒன்று நாகரிமானவர் ஒருவரால் எனக்கு அருகில் நடைபெற்றது.

நான் குடியிருக்கும் என் வீட்டு இடம் சம்பந்தமாக மாவட்ட நீதிமன்றத்தில் ஜெ-ன் சொத்து குவிப்பு வழக்குக்கு  போட்டியாக வாய்தாவில் இருக்கிறது. ஜெ.யின் வழக்காவது விசாரனைக்கு வந்துவிட்டது என் வழக்குக்கோ விசாரனை்க்கே வரவில்லை.

அந்த வழக்கு சம்பந்தமாகவும். தெரு தாதா.... தெரு பாதையை தனது  பாதை என்றும் .அந்தப்பாதையில் நான் பாதாள சாக்கடை  இணைப்பு கொடுக்கக்கூடாது என்று என்மேல் போட்ட வழக்கிற்க்காகவும் நீதி மன்றத்துக்கு சென்றிருந்தேன்.

அப்போது கூடுதல் முன்சிப் நீதிமன்றத்து க்கு முன் நின்றிருந்த ஒரு நாகரிகமானவர் ஒருவர். அவருடைய கைகளால் அவருடைய மூக்கை நோண்டு நோண்டுன்னு நோண்டிக் கொண்டு இருந்தார்.

அவர் பக்கத்தில் இருப்பவர்களைப்பற்றியோ, போவோர்-வருவோர் பற்றியோ எதையும் கண்டு கொள்ளாமல் மூக்கை நோண்டிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்தவர்களும. அவர் கை, அவர் மூக்கு நமக்கு என்ன என்று ஒவ்வொருத்தரும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

இதைக் கவனித்த நான், அவர் மூக்கு நோண்டுவதை நிறுத்துவதற்கு ஒரு வழியாக ,  சலிக்கமால் வெட்கப்படாமல் மூக்கை நோண்டிக் கொண்டு இருந்தவரை, என்னை பார்க்கும்படியாகச் செய்தேன்.

அவர். என்னைப் பார்த்த மறு கணம், சிரிக்காமல், கடப்பாரை வேண்டுமா.... தலைவா?? என்றேன்.

அவ்வளவுதான் அந்த நாகரிகமானவர்க்கு நான் கேட்டதின் பொருள். புரிந்து விட்டது. மூக்கை நோண்டுவதை நிறுத்தினார். சுற்றிலும் பார்வையை செலுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...