பக்கங்கள்

வெள்ளி 17 2019

அதிகாலை கனவு-19.









 கனவிலும் பயமுறுத்தும் சித்தப்பனின் மனைவி....!!!!!!!!!!











என்  தொழிற்கூடத்தில் அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்துக் கொண்டிருக்க  அவர்களோடு நானும் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்... என் சித்தப்பனின் மனைவியும்.. என்மீது அபாண்டமாக பொய் புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவரும் என் பரம எதிரியின் கூட்டாளியும், என்தந்தையின் அக்கா மகளும் என் தாயின் சித்தப்பன் மகளுமான  என் தந்தையின் தம்பியின் மனைவியானவர்.

திடிரென்று படுக்கை பை முதலிய சாமன்களுடன் என் தொழிற்கூடத்தில் நுழைந்து தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்துவிட்டார். இதை நுழையும் போது கவனிக்காத நான் அவர் உட்கார்ந்திருப்பதை  வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரட்சியாக பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் நான் கவனித்தேன்...

அரண்டு மிரண்டு பொய் ஒருவிதமான பயத்தால் ஏற்ப்பட்ட பதட்டத்தில்...“ ஏய்..யாரும்மா நீ.....  திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைவது மாதிரி வந்து உட்கார்ந்திருக்க....உன் வீடு பின்னாடி இருக்குமா..? அங்க போ... வீடு தெரியாம வந்திட்டியா   போம்மா..... என்று சத்தமிட்டேன்
யாரு வீட்டில இருந்துகிட்டு யாரடா வெளியே போகச் சொல்ற முட்டாப் பயலே... நீ போடா வெளியே... பதிலுக்கு கத்தினாள். 

ஆகா... இவ.. எதோ திட்டம் போட்டுத்தான் தைரியமா உள்ளே வந்திருக்காள் என்று என் பயத்தை வெளிக்காட்டாமல். ஒழங்கா மருவாதியா.... உன் பொருட்களை எடுத்துகிட்டு உன் வீடு போயி சேரு.... இல்ல நடக்கிறதே வேற..

இடைமறித்து என்னடா நடக்கும்..... இங்கேயே நான்னுகிட்டு என் சாவுக்கு நீதான் காரணமுன்னு எழுதி வச்சுட்டு சாவேன்டா பொண்டுகயப்பயலே என்றாள்.. எனக்கு பயம் கூடி விட்டது... இவள் எந்த எல்லைக்கும் செல்வாள்.. சும்மா சண்டையில் கையைப்பிடித்து இழுத்தவிட்டதில் கெடுக்க முற்பட்டான் என்று பொய்புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவள்....

 என்ன பிளான் செய்து வந்திருக்காளொ என்று மனது பதைபதைத்தது.. அவள் கொண்டுவந்து வைத்த பொருளை எடுத்து வெளியே வைக்க முற்பட்டபோது  என் கைகளை தடுத்து என்னை தள்ளிவிட்டாள்... என் வீட்டுக்கு பின் வீட்டிலுள்ள MBA படித்த இவளின் மகனை கூப்பிட்டபோது வீட்டில் ஒளிந்து கொண்டான்.. ஆகா எதோ திட்டம்தான் என்று நிணைத்துக்கொண்டு  

இந்தாரும்மா... நீ செய்வது கொஞ்சம்கூட நல்லா இல்ல.... உனக்கு இந்த வீட்டில பங்கு இருந்தால் அதற்குரிய ஆவணத்தை கொண்டு கோர்ட்ல வழக்கு போடு..உன் பக்கம் தீர்ப்பாயிடுச்சனா... அப்பீல் எதுவும் செய்ய மாட்டேன். அடுத்த நிமிடமே இடத்த விட்டு காலி செய்துவிடுகிறென். அதை விடுத்து முறைகெட்ட தனமாக  நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அடவாடித்தனம் செய்வது சரியல்ல....ஒழுங்கா நீயா போறீயா..? போலீச கூப்பிடவா? என்று சொன்னபோது....

டேய்... கூப்பிடுறா... போலீசு வரட்டும்..... அவுககிட்ட உன் ஞாயத்த சொல்வோம்.. என்றாள்...  இந்தா பாரும்மா  பொம்பளயாச்சுன்னு பாக்குறேன்  இல்ல.....

இல்லாட்டி என்னடா செய்வா...அடிச்சிடுவியா... எங்க  அடிடா....கடிக்கி மவனே என்று சொன்னதான் தாமதம் எனக்கு கோபம் எப்படி வந்ததுன்னு தெரியல... ஒரே அடில   கீழே விழுந்திட்டா...சும்மா நின்றவர்கள்... அவள் அருகில் சென்று அவளை தொட்டு பார்க்க....அவள் செத்துப்போனாள்..

அய்யோ... அம்மா என்ன கொலக்காரனக ஆக்கிப்புட்டாளே  அம்மா என்று கத்திய கத்தலில்... என் அக்கா. மச்சான்... மருமகள், பேத்தி எல்லாரும் பதறிப்போயி என் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுந்திருக்க வைத்து என்ன கனவு பயங்கரமான கனவா?? என்று துழைத்து எடுத்துவிட்டனர்..

கண்ட கனவை அவர்களிடம் சொன்னால்  அதை நிணைத்து அவர்களும் நெஞ்சுக்கும் தொண்டைக்குமா நிணைத்து கொண்டு இருப்பார்கள் என்று நிணைத்துக் கொண்டு  என்னவென்று தெரியவில்லை என்று பேந்த பேந்த முழித்தேன்... விடிவதற்கு நேரம் இருந்தாலும் உறங்க முடியவில்லை. என் சித்தப்பனின் மனைவியான அந்த கொடூர மனது படைத்த சித்தியின் செயலே மனதில் பயத்தை உண்டு பன்னிக் கொண்டு இருந்தது. இந்தக் கனவு நிஜத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருந்தாலும் அதை தடுப்பதற்கு என்ன வழி என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன்.


வியாழன் 16 2019

அதிகாலை கனவு-18.

அந்த நாள் நிணைவுகள்...கனவுக்குள் கனவு...!!!

மகிழ்ச்சி க்கான பட முடிவு


நான் தூக்கத்தில் புலம்புவதை கண்டு..என் அம்மா..டேய்...என்னடா  வாய் ஒலம்புற என்னடா என்று என்னை உலுப்பி  கேட்டபோதுதான் கண்விழித்தேன். என் அம்மாவைப் பார்த்தால் என் அம்மாவைக் காணோம்.
பேந்த பேந்த முழிக்கும் நிலை ஏற்பட்டது.. சிறிது நேரம் கழித்து தன்னுணர்வு வந்த பிறகுதான் புரிந்தது. கனவுக்குள் கனவாக என் அம்மா வந்தது.

இன்னும் விடியவில்லை என்பதால் மீண்டும் படுத்துவிட்டேன்.

அதிகாலை விடிந்ததும் பணப்பேக்கை காணமல் அதிர்ச்சியாக இருந்தது. மாணிக்கத்தை பார்த்தால் காணவில்லை... மகள்களிடம் கேட்டபோது.. பணப்பேக்கை மகள்களிடம் கொடுத்துவிட்டு பக்கத்து நகரத்தில்  இருக்கும் மாணிக்கத்தின் தம்பியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றது தெரியவந்தது.

அங்கயற்கண்ணி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தேன்... சந்தர்ப்பம் கிடைத்தது.  விபரத்தை சொன்னேன் மகள்கள் இருவருக்கும்தலா  ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு உன் பேர்ல  வைப்பு தொகையாக இருக்கட்டும். இந்த விபரம் உனக்கு மட்டுமே இருக்கட்டும் மகள்களிடமோ..மருமகன்களிடமோ... மூச்சு விடவேண்டாம். பின்னாளில் உன் மனசு போல... மகள்களுக்கே கொடுத்தாலும் சரி, உன் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி... அன்னிக்கு நிலமைக்கு முடிவு எடுத்துக்கோ...என்றுபேசி முடித்தவுடன் மூத்த மகள் வசந்தி தன் குழந்தையை கொண்டுவந்து  தாத்தாவிடம்  போ..  என்று என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். பேரனோ.  ஒரு புதிய முகத்தை கண்ட அதிர்ச்சியில் அழுது துடித்ததைக் கண்டு அவன் அம்மாச்சிடம் கொடுத்துவிட்டேன்.


அடிக்கடி வந்தால்தானே கொழுந்தா... பேரனுக்கு தாத்தாவை தெரியும்...என்றார் அங்கயற்கண்ணி...

ஆமாம.. அண்ணன் இருக்கயிலேயே வர முடியல.... இனிமேலா வரமுடியப் போகுது.....என்றவுடன்....எதையோ நிணைத்து வருத்தப்பட்டார்.. இனி என்ன வருத்தப்பட்டா மட்டும் அண்ணன் திரும்பி வந்துவிடவா போறார்.. வருத்தப்பட்டு  உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.... சாயப்பட்டறை தொழிலின் கொடுமை தங்கள் கைகளிலும் உடம்பகளிலும் தெரியுது... இதோடு அண்ணனை நிணைத்து வருத்தப்பட்டால்..... என்று சொல்லி முடிக்கும்முன்னே...அவருடனே நானும் சேர்ந்து போயிருந்தால் எவ்வளவு சந்தோசமும் நிம்மாதியாக இருக்கும்.....ஏங் கொழுந்தா..எங்கள் இருவருக்கும்
கல்யாணத்தை முடித்து வைத்த  நீய்யி....அவருடனே என்னை அனுப்பி வைக்க மறந்திட்டில..... என்றார்.

ஆமா..ஒன்னயும் அவருடனே அனுப்பி வச்சா... ரெண்டு மகள்களை பார்க்கிறது யாரு....???இப்படியெல்லாம் பேசாத மதனி......அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசி....இப்படி புலம்பிகிட்டு நீயும் வண்டிய விட்டுராத..... உன்னய வச்சுதான் நான் இங்கு வர்ரேன்.....நீயும் போயிட்டா.....நான் இங்கு வருவதற்கு வேலையே இல்லை...மருமகன்களின் குணம்தான்  தெரியுமே......


மகள்கள் இருவரும் வந்தார்கள். நல்லா  சொல்லுங்க சித்தப்பா... எப்பப் பாத்தாலும் அம்மா அழுதுகிட்டே இருக்காங்க...நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாடறாங்க... சித்தப்பா என்றன.....

உங்காப்பா மேல உங்கம்மாவுக்கு அவ்வளவு பாசம்மா......அந்தப் பாசத்த அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதும்மா...??? கோபத்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்தவிர அவருக்கு யாருமே இல்லம்மா...?? நான் சொல்லிகிட்டு இருக்கயிலே.. அஙகயகற்கண்ணி என்னைக் கட்டி பிடித்து அழுதார்.. மகள்களின் சிறு வயதில் இருந்தே.. அப்பா முன்னே.. அம்மா சித்தாப்பவை கட்டிப் பிடுச்சு அழும்...அப்பவே.. சித்தப்பா அம்மாவுக்கு ஆதரவாக அப்பாவை சத்தப் போடுவார்...... அம்மாவுக்கு அண்ணனாக பிறந்திறக்க வேண்டியவன்  அம்மாவுக்கு கொழுந்தனாக வந்து மாட்டிக்கிட்டான் என்று அப்பாவும் சித்தாப்பவை கேலி செய்வார். சித்தப்பா எதாவது சொன்னால். அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசமாட்டார்கள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சித்தப்பா மேல் அவ்வளவு பாசம் என்பது அதுகளுக்கு தெரிந்திருந்தது.


சரி.. சரி  போதும் அழுவதை நிறுத்து.. என்றுவிட்டு மகள்களிடம் அம்மா..உன் வீட்டுக்காரர்கள் எங்கே.. ரெடியாக இருக்கறார்களா.... மாணிக்கம் வந்த வுறுவுடன்  வந்த வேலையை முடிக்க வேண்டும் ரெடியாக இருக்கச் சொல்லுங்கள் என்று விட்டு மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்தேன்.

கிடைத்த இடைவெளியில் அங்கயற்கண்ணியிடம்  ..நீ எந்த பேங்கில் கணக்கு வைத்திருக்காய்.. மகள்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்கிலா என்று கேட்டபோது  வேறு பேங்க் என்று சொன்னவுடன் மனதில் சற்று நிம்மதி கிடைத்தது.

மாணிக்கம் வந்தவுடன் செட்டில் மெண்ட் வேலை தொடங்கியது... மாணிக்கம் மகள்கள் பேரில் டெபாசிட் செய்வோம் என்ற போது.. மகள் மருமகன் இருவர் பெயரில் ஒரு தொகையும் குழந்தைகளின் பெயரில் சிறு தொகையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது.. மருமகன்கள்    இருவரும் மாமா சொலற்படி செய்யுங்கள் சித்தப்பா என்றபோது.... நான் மாணிக்கம், அங்கயற்கண்ணி, மகள்கள் இருவரும்  எல்லாருமாக வாயடைத்து நின்றோம்....எனக்கு ஆச்சச்சரியம்..... அந்த சந்தோசத்தில் படுக்கையை எழுந்துவுடன் என்னையறியாமல் சத்தம்மிட்டேன்......










புதன் 15 2019

அதிகாலை கனவு-17.

அந்த நாள் நிணைவுகள் கனவாக.............






நண்பர் ஒருவித மன இருக்கத்தோடு வந்தார். என்னை தன்னோடு வரும்படி கட்டளையிட்டார் .என்ன விசயம் என்று கேட்டதற்கு ரெடியாகு சொல்கிறேன் என்றார். பேண்ட்சர்ட் அணிந்த  அவர்முன் நின்றேன். ஒரு நிமிசம் கதவை அடை என்றார்

புரியாமல் கதவை அடைத்து தாழ்ப்பால் போட்டுவிட்டு திரும்பினேன் நண்பர் தான் கொண்டு வந்த பேக்கிலிருந்து பணத்தை கொட்டினார். நான் திகைத்து என்ன பணம் ஏது பணம் என்று பதட்டத்துடன் கேட்டேன்.

பயப்படாதே கெட்ட பணம் இல்லை.. நல்ல பணம்தான்... இப்பொழுதான் வங்கியிலிருந்து கணக்கை முடித்துக் கொண்டு வாங்கி வந்துள்ளேன். இது என் பணம் அல்ல.... செத்தானே கோவிந்து அவன் பணம்....அவன் இறப்பதற்கு முன் நமமிடம் இந்த பணத்தை தன் இரண்டு மகள்களுக்கு பிரித்து கொடு என்று சொன்னான்ல்லாவா....  மறந்துவிட்டாயா... உன்னிடம் கொடுத்தபோது எணக்கு கணக்கு வழக்கெல்லாம் தெரியாது..என்னிடம் கொடுத்து என் வங்கி கணக்கில் டொபாசிட் போடச் சொன்னது நீதானடா..? மறந்து போச்சாடா...???


நான் மறந்துவிட்டதை மறைத்து இல்லையே...மறக்கவில்லை.... ஏன் கோபப்படுகிறாய்  கொஞ்சம் பொறுமையாய் சொல்... சட்டென்று புரிந்து கொள்வதில் எனக்கு கோளாறு என்பது உனக்குத்தான் தெரியுமே.... என்றபோது..

சரி..சரி....மொத்தப்பணம் பதிணைந்து லட்சம் இருக்கிறது. இரு மகள்களுக்கு ஐந்து ஐந்து லட்சம், அங்கய்யர்கண்ணிக்கு ஐந்து லட்சம் சரியா...? ஒரு கட்டில் ஒரு லட்சம் இருக்கிறது.. மூன்று ஐந்தாக பிரி...

ஏன்? ..அதற்குள் என்ன. அவசரம் அவர்களுக்கு.... என்னிடம் எதுவும் சொல்லவில்லையே..... 

உன்னை நம்புகிற அளவுக்கு அவர்கள் என்னை நம்பவில்லை.... கடந்த ஒருமாதமாக என் தந்தை கொடுத்து வைத்த பணத்தை கொடுங்கள். என்று பலவாறு நச்சரித்துக் கொண்டு இருந்தார்கள்... நானும் கடந்த ஒருவாரமா பேங்க்கும் வீட்டிற்குமா அலைந்து இன்னறைக்கத்தான் கணக்கை முடித்து பணத்தை கொடுத்தார்கள். அதனால்தான் பணத்தை வாங்கிய கையோடு உன்னிடம் வந்து விட்டேன். நீ அய்ந்து லட்சத்தை இரு மகள்களுக்கு தெரியாமல் அங்கயற்கண்ணியிடம் கொடுத்துவிடு....மற்ற இரு அய்ந்து லட்சத்தை இருமகள்களிடம் சேர்த்துவிட்டு வந்துவிடுவோம் என்ன  சரியா..??

சரி......நீ சொல்ற மாதிரியே கொடுத்துடுவோம்.....

என்ன  நான் சொல்ற படியா.....?? நீதானே முன்னாடி எனக்கு சொன்ன...நல்ல மறதிடா...ஒனக்கு...என்னயவாச்சும் நிணவு இருக்கா...இல்ல  மறந்திட்டீயா..???

என்னமோ..தெரியலபா   வர வர  மறதி கொஞ்சம்  அதிகமாகத்தான்...இருக்கிறது

பணத்தை தனித்தனியாக வைத்துக் கொண்டதும்   கிளம்பி சென்றோம்... மாலை நாலு மணிக்கு ஏறின பஸ்ஸில் அவ்வூர் பஸ்நிலையத்தை  அடையும்போது ஒரு மணியாகிவிட்டது. பிறகு ஆட்டோ பிடித்து நண்பர் கோவிந்த ராசன் வீட்டை அடைந்தோம்..

வீட்டை அடைந்தபோது   வசந்தியும் சுகந்தியும் ஆவல் பொங்க  என்ன சித்தப்பா என்றும் நண்பர் மாணிக்கத்தை மாமா என்றும் அழைத்து வரவேற்றனர்.மருமகன்கள் இருவரும் என்னை ஒப்புக்கு வரவேற்றனர்..மாணிக்கத்தை மரியாதையுடன் வரவேற்றனர்.  மாணிக்கம் அவர்களின் உறவுக்காரர். நான் உறவுக்காரன் இல்லை.. அதோடு அவர்கள் சாதிக்காரன் இல்லை.... சுகந்தியும் வசந்தியும் என்னை மூச்சுக்கு முன்னூறு தடவை சித்தப்பா என்று அழைப்பதைக்கண்டு... மருமகன்கள் இருவரும் மகள்களிடம் அவன் என்ன உங்கப்பன் கூட பிறந்தவனா....இல்ல உங்கத்தாவுக்கு மாமன் மகனா...?  என்ன சாதியோ...அவனப்போயி சித்தப்பா.சித்தப்பான்னு கூப்பிடாதிகடி என்று சண்டையிட்டு உள்ளனர். அங்கயற்கண்ணிக்கு விசயம் தெரிந்து நடந்த வரலாற்றை கூறி, நான் அங்கயற்கண்ணிக்கு  கொழுந்தன்தான் என்று சண்டையிட்டு எச்சரிக்கை செய்த பின்தான் ரெண்டு மருமகன்களும் வாயை பொத்தினர்.

மகள்களிடம் அம்மா எங்கே என்று கேட்டபோது..அங்கயற்கண்ணி படுத்திருந்த அறைகை்குள் என்னை அழைத்துச் சென்றனர் மகள்கள் இருவரும்.. என்வாசம் பட்டதோ இல்லையோ.... ஏ..கொழுந்தா... என்னா இங்நேரம் ...பகல்ல வந்திருக்ககூடாதா...???  யம்மா சித்தாப்பாவுக்கு சாப்பாடு கொடுங்கம்மா.....மகள்களை ஏவினார்

கிளம்பிய மகள்களை தடுத்து காலையில பாத்துகிறலாம்...  என்று தடுத்தேன். உடன் மாணிக்கமும் வந்துவிட....வாங்கண்ணா....ரெண்டு பேரும்மா வந்தீக... படுக்கையைவிட்டு எழுந்திருக்க முயன்ற அங்கயங்கண்ணியை தடுத்து கொண்டு வந்த  பணப் பேக்கை அவர் அருகில் வைத்தார்..சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சொந்தக் கதை சோகக்கதை, வந்தக் கதை போன கதை நடந்தகதை... நடக்கப் போகும் கதையை எல்லாம் பேசி முடித்தோம்.

மருமகன்கள் இருவரும் தன் மாமானார்  எங்களிடம் பணம் கொடுத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு மகள்களிடம் அடிக்கடி சண்டையிடுவதைக் சுட்டிக்காட்டி அழுதார். இடையிடையே என்னை கட்டிப்பிடித்து அழுதார். அழுது தீரட்டும் என்று நானும் எதுவும்  சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.மகள்கள் தான் ஒவ்வொன்றாக சொன்னார்கள்.


ஒரு வழியாக படுத்து உறங்கி காலையில் எழுந்த போது பணம் வைத்திருந்த பேக்கை காணாமல் அதிர்ச்சியாகி  தூக்கத்தில் புலம்பி விட்டேன்....

திங்கள் 13 2019

அதிகாலை கனவு-16.

படுத்த இடம் .. எழுந்த இடம்  வேற வேற........!!!!!!!!!!!!!


பொதிகை ரயில் க்கான பட முடிவு






பன்னிரெண்டு மணிக்கு படுத்தும் மூன்று மணிவரை தூக்கம் வரவில்லை... காற்றாடி  காற்று வீசியும் புழுக்கம் தாள முடியவில்லை.. மேலுக்கு சிறிது தண்ணீர ஊத்திவிட்டு படுக்கலாம் என்றால் உடல் அசதியில் மனது சோம்பலாகி விட்டது. எழுந்திருக்க முடியவில்லை.. போதாதக்குறைக்கு தண்ணீர் பற்றாக்குறை  முழுபசியா இருக்கிறவன் விட அரைகுறை பசியா இருக்கிறவன் தூங்கமாட்டான் என்கிறமாதிரி என் நிலைமை ஆகிப் போச்சு..
எப்படியும் தூக்கம் வந்திடும் என்ற நம்பிக்கையில்  ஒன்னுலிருந்து ஆயிரம் வரைக்கும் மனதிற்குள்ளே  எண்ண ஆரம்பித்தேன்...


எதுவரை எண்ணுனேனோ தெரியவில்லை...தூங்கிவிட்டேன்.......மதுரை ஜங்சனில் நிற்கிறேன் பொதிகை எக்ஸ்பிரஸ் வந்து நிற்கிறது...எஸ்2 என்ற ட்ரக்கைில் ஏறுகிறேன்..இருப்பதைந்தாம் இருக்கையில் அமருகிறேன். எதிர் சீட்டில் கல்லூரி மாணவி தன் லேப்டாப்பில்  டைப் செய்து கொண்டு இருக்கிறது. அந்தப் பெண்ணிடம்  என் செல்போனை காட்டி இந்த சீட் சரியா என்று கேட்கிறேன். அந்த மாணவி செல்போனை வாங்கி பார்த்துவிட்டு இதுதான் என்று உறுதி படித்தியது.

அதற்குப்பின் அருகில் வந்தமர்ந்த ஊனமுற்ற ஒருவர். மேலே படுத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அர்த்தம் எதுவும் தெரியாமல் இல்லை வேண்டாம் நான் கீழேயே படுத்துக் கொள்கிறேன். என்று சொல்லி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை... இருட்டையே பார்த்துக் கொண்டு வந்த எனக்கு  விபத்தில் விழுந்த இடம் என் அருகில் தெரிந்து கடந்தது தெரிந்தது.

பக்கத்தில் அமர்திருந்தவர்கள் படுக்கலாமே என்றார்கள்.... ஓ..படுக்கலாமே என்றுவிட்டு.. நான் அமர்நதிருந்த சீட்டிலே படுத்துக் கொண்டேன்..நீ....ங்க எங்க போகனும் என்று கேட்டார்கள். ஒரு அம்மா...... எதோ சொன்னேன் என்ன சொன்னேன் என்று தெரியவில்லை....

என் கன்னத்தையும்  கையையும் தட்டி..மாமா..மாமா என்று தட்டி எழுப்பினான் மருமகனின் பள்ளித்தோழனான மகா கிருஷ்ண கோபாலன்...என்ன மாமா இப்படி தூங்குறிங்க...மணி ஒன்பதாகப்போகிறது மாமா...என்றான்...

ஓ...வேலயத்தான்ய்யா முடிச்சுட்டு படுக்கிறதுக்கு ஒரு மணிக்கு மேல ஆச்சு...அதான் இப்படி தூக்கம் என்றதும்.....அங்க படுத்து இருக்கிற உன் ஆளப்போயி எழுப்பு என்றதும் மகா கிருஷ்ண கோபாலன் தன் நண்பனை எழுப்ப போய்விட்டான்....

என்னடா..இது நாம ரயில்ல போய்கிட்டுல்ல தூங்கிட்டு இருந்தோம்.....  மகா வந்து எழுப்புல.... இங்க படுத்து கிடக்கோம்... படுக்கையை விட்டு அமர்ந்திருந்த நான் எழுந்திருக்க சில நேரமாகிவிட்டது.... பாட்டுபாடவும் சாமி கும்பிடவும் அருள் வந்த பிறகுதான் தடாபுடலாக எழுந்திருச்சு ஓட வேண்டியதாகிவிட்டது.

ஞாயிறு 12 2019

அதிகாலை கனவு-15.

சிங்கத்திடமிருந்து தப்பித்து புலியிடம் மாட்டிய கதை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை க்கான பட முடிவு


நான் படுத்திருப்பது வீடா.. வேறு இடமா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை... மயக்க நிலையில் இருந்தேன்.... வலது காது அவுட் என்பது உர்ஜிதமானது... எந்த சத்தமும் கேட்கவில்லை... இடது காது  பற்றி ஒன்றும் தெரியவில்லை... நான் மூச்சு விடும் சத்தம் மட்டும் எனக்கு தெரிகிறது.. வேறு ஒன்றும் தெரியவில்லை.. எந்த சிந்தனை இல்லாமல்  மயக்கமாகி இருந்தேன்.


நீண்ட நேரத்திற்குப் பின் சுய நிணைவு வந்து கண் விழித்தபோதுதான் தெரிந்தது. நான்  ஜீ எச்சில் இருப்பது... விபத்தில் கைகால் முட்டி கன்னம் முதலிய இடங்களில் அடி பட்டபோதும்... உள்ளுக்குள் பலமாக அடிபட்டு இருப்பது வந்து நான்கு நாளுக்கு பிறகுதான் எனக்கே தெரிந்தது. 


என்னென்னமோ கதை சொன்னார்கள்....பாதி காதில் விழுந்தும் மீதி விழாமல் கடந்தது. ஒருவழியாக சிகிச்சை முடிந்தது..... விழுந்தது எழுவதற்குதான் என்பது மாதிரி விழுந்து எந்திரிச்சு வந்தாச்சு....

இனி  நம்ம பொழப்ப பாக்குனும்..... அய்யா விபத்துல சிக்கியதால் இந்த மாதத்துக்கு ஜிஎஸ்டி கட்ட முடியாதுன்னு சொல்ல முடியாது....வட்டிக்காரன்கிட்ட வேண்டுமானால் அடுத்த மாதத்துக்கு தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.....

பகல் கனவு கண்டால் பலிக்காது என்றாலும் பகலில் கனவு வருவதில்லை.
இரவுதான் கனவு வருகிறது... வரும் கனவுகளில் சில நடந்துவிடுகிறது. கண்ட கனவு நிணைவில் இருந்தால் தப்பித்துவிடலாம்... அங்கு மறதி வந்து தடுத்துவிடுகிறது....

சுடுகாட்டில் படுத்திருப்பது போல் நிணைவு ..எனக்கு பக்கத்தில் வரிசையாக பலர் படுத்திருக்கிறார்கள். நான்தான் தனிக்கட்டை... இவிங்க ஏன்? இங்கு வந்து படுத்திருக்காங்கே என்று யோசித்தால் யோசனை வர மறுக்கிறது. ஏழு எட்டு பேருக்கு அடுத்தாப்புல இருக்கிறவன் அருகில் ஒரு பெண் தலைவிரி கோலமாக அழுது கொண்டு இருக்கிறாள்.

அத்தான் என்னை விட்டு போகாதிங்க..த்தான்.... புலம்புகிறாள். அதைக் கேட்டதும்..மாமா மகன் மச்சான்.. அத்தை மகன் அத்தான் என்று நிணைவு போகிறது... சிறிது நேரத்தில் அழுகுரல் எதுவும் கேட்கவில்லை... வரிசையாக படுத்திருந்தவர்களில் பாதிப்பேரை காணோம்... வீட்டுக்கு சென்று விட்டார்களா என்று கேள்வி எழுந்தது.

இதனிடையே ஒரு சத்தம் கேட்டது...ஏலே.. ஒத்த ஒத்தையா எரிச்சு என்னிக்கிடா முடிக்கிறது.. மொத்தமா தூக்கி வச்சு எரிங்கடான்னு...

அப்பத்தான் எனக்கு சுரீர் என்றது ..அட நானு செத்து போயிட்டேன்னா... அதுக்குத்தான் கிடத்தி வச்சுருக்காங்கேளா..என்று யோசிக்கிறேன்.. ஆ..ஆ.. நான் மூச்சு விடுகிறேன்னே......ஆச்சரியப்பட்டு   முழித்தபோது விடிந்துவிட்டது.. காலையில்  செய்தி பத்திரிகையை படித்தபோது.. மழையின் போது. கரண்ட் போனதால் சிகிச்சையில் இருந்தவர்கள் முச்சு திணறி இறந்தது... தெரிய வந்தது.

கனவுக்கும்..செய்திக்கும் ஏதோ ஒரு நூலிலையில் தொடர்பு இருப்பதாகவே எனக்கு தோன்றியது..


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...