“டேய்...... எங்கேயடா...அவிங்க....”
“யாருண்ணே...”
“ யாரா......?ஃ..அவிங்க தாண்டா... மழை வேண்டி.. கழுதைக்கும் கழுதைக்கும் நாய்க்கும் விட்டைக்கும் கல்யாணம் பண்ணி வச்சவிங்க......”
“அவிங்களாண்ணே.......இன்னவரைக்குமாண்ணே...இருப்பாங்கே... சிட்டா பறந்து இருப்பாங்கேண்ணே.....”
“ மழை வேண்டி..யாகம் பண்ணினவங்கே.......”
“ அவிங்க எல்லாம்... வெளிநாட்டுக்கு யாகசம் கேட்டு போயிருக்காங்கண்ணே...”
“அப்போ ஒரு பயலும் வெள்ளத்துல இல்லையாடா.....”
“ கல்யாணம் செஞ்சு வச்சவனும்.. யாகம் பண்ணினவனும் நாசமா போன மழையில சிக்காம தப்புச்சுட்டுகாங்கண்ணே..... ....
“பாவிகள் தப்புச்சுட்டான்களா...”
“இவிங்க மட்டும்..பாவிங்க இல்லண்ணே..”
“பின்ன..இல்லீயா.டா... நம்ம தலநகரமே..இப்படி நாசமா..போச்சுடா....”
“ மற்ற ஊர்கள வச்சுதானே தலநகரம்... கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்கண்ணே.....”
“என்னடா...சொல்ற...”
ஒங்களுக்கு தெரியாதது இல்ல..இருந்தாலும் சொல்றேன். தல நகருக்குஒரு அரை மணி நேரம் மின்சாரம் நிறுத்தி வைத்தால் வெளி நாட்டு, உள்நாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளின் ஊதுபத்தி பாதிக்குமுனு சொல்லி மத்த ஊர்களை எல்லாம் இரட்டுல..முழ்க வச்சங்களே.. ஞாபகமிருக்கா...???... இப்ப அந்த கார்ப்ப ரேட்டு வெண்ணைகளும்..அவிங்களுக்கு ஆதரவாக இருந்தவங்கேதாண்ணே பாவிகள் ..
அட, ஆமாடா...“யாகம் செஞ்சவன் பாவின்னா....இவிங்க மகா பாவிங்கடா..””
“அவிங்களும் இப்ப காணோம்ண்ணே...”
”............நொங்கு திண்டவன் ஓடிட்டான். நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்ட ” கதையாவுல இருக்கு....
அது கதையில்லண்ணே.. அது உண்மையிண்ணே .அந்த நிலமைதான்ண்ணே.....இப்ப நம்ம தல நகர்ல்ல நடந்துகிட்டு இருக்கு...”