பக்கங்கள்

சனி 02 2014

துணிவு இல்லா ராஜாவிடம் சிக்கிய புத்திசாலி!!!





மொக்க உருவமும் பலமும் பெரிய மூளையும் இருந்து என்ன புன்னியம் ..

எதிர்ப்பதற்கு தைரியமும்  தப்பிப்தற்கு விவேகமும்  அல்லவா

இருந்திருக்கனும் .

தன் தலையிலே மண்ணை அள்ளி போட்ட பழமொழி சரிதானோ

பழைய ரேடியோவை விற்று சென்னை சென்ற பிரபலம்.......

படம்-mathimaran.wordpress.com


ஆர்மோனிய பெட்டி,.தபேலா,கித்தார். ஆகியவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு சூராதி சூரர்களையும் வில்லாதி வில்லன்களையும் வீழ்த்தி இசை அமைத்து பிரபலமானவர்  இசை அமைப்பாளர் இளையராஜா..

தான் சென்னைக்கு வந்த இரகசியத்தை சொன்னார்.

எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம் என்று விட்டு..................

வீட்டில் இருந்த பழைய ரேடியோவை ரூ400க்கு விற்பனை செய்து கொடுத்து எங்களது தாயார் எங்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார். என்றார்.

ஒரு பழைய ரேடியோவை, அந்த ஊரில் ரூ400க்கு விற்பனை செய்து இருப்பதும்.........அந்த பழைய ரேடியோவை ரூ400க்கு  ரேடியோ ரசிகரும் வாங்கி இருப்பதும்தான் பெரிய்ய்ய.....ய   விசயம்..............

வெள்ளி 01 2014

நடுநிலையில்லாத நீதி மன்றங்கள்....

படம் வினவு












மத்தியில் மோடி அரசின்  உச்ச நீதி மன்றமாகட்டும், மாநில ஜெ அரசின் உயர் நீதி மன்றமாகட்டும் மாவட்ட  நீதி மன்றமாகட்டும்  இந்த நீதி மன்றங்கள் . “சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற சட்டத்தின் படி நடுநிலையாக இருந்தது இல்லை . நேர்மையாகவும் இருந்தது இல்லை .

சூ தந்திரம் வாங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஏகப்பட்ட சான்றுகளை கூறலாம். இருந்தாலும். சமீபத்தில் நிகழ்ந்த, நிகழும் நிகழ்வுகளை கன்டாலே  நடுநிலையில்லாத நீதி மன்றங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த நீதி மன்றங்கள்  ஆங்கிலேயன் கோலோச்சிய காலமான அப்போதும் சரி,
இப்போதும்சரி, எப்போதும்சரி, அதன் விசாரனையும். காலம் கடந்து வழங்கும் தீர்ப்பும் சரி,நேர்மையாகவோ, நடுநிலையானதாகவே இருந்ததே இல்லை.

வறியவர்களுக்கு ஒரு நீதியும் வசதியுள்ளவர்களுக்கு ஒரு நீதியுமாகத்தான் வழங்கி வருகிறது. அப்படியான நீதிகளுள் ஒன்று கும்பகோணம் தீ விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு.  பார்க்க. http://www.vinavu.com/2014/07/30/kumbakonam-school-fire-tragedy-11-acquited-10-guilty/

 குஜராத்தில் மோடி செய்த படுகொலை வழுக்கு விசாரனையின்போது   சிறப்பு புலனாய்வின் மோசடியும் அதையொட்டி உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகள்  ஒரு சான்று.


பார்க்க--- http://www.vinavu.com/category/hindutva-judgements/

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு  வழக்கு முறையைப்பார்த்தால், மத்திய உச்ச நீதி மன்றமும் சரி, மாநில உயர் நீதி மன்றமம் சரி, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற ஊதி பெருக்க வைத்த பலூன் வாசகம்  வெடித்து சிதறுவதைக் கானலாம். இவருக்காக இந்த நீதி மன்றங்கள் எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கின்றன.

அப்படி வளைந்து கொடுக்கும் செயல்களுக்கு தொழில் முறைக்குக்கூட நேர்மை இல்லாமல் வியாக்கினம் செய்கின்றன.எனபதை செய்தி ஏடுகளிலும். வழக்கு தொடுத்த கட்சியின் தலைவர் புலம்பும்  கட்டுரைகளிலும் கானலாம்.

இப்படிப்பட்ட நீதி அரசர்கள் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சிகளின் சார்பான நீதி அரசர்களாக இருப்பார்களாக....!! அல்லது நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்றும்  சொல்வார்களா??ஃ நானே (நீதி) அரசன் நானே கள்வன் என்று நீதி  தவறியதற்க்காக  செத்து போவார்களாக.........




படம் வினவு


















பார்க்க---http://www.vinavu.com/2013/10/10/jayalalithaadisproportionate-assets-case/


ஏழை- பணக்காரன், தொழிலாளி- முதலாளி,உண்மைகள் நிலவுகின்றதைப் பார்த்தால் ,சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் இந்த அரசுகள் நடுநிலையாக  இருந்ததே இல்லை 

இருக்கப்பட்டவர்கள்,  “சட்டம் அனைவருக்கும் சமம்” என்பதை தங்களின் வசதிக்கேற்ப எப்படியெல்லாம் வளைத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தகிறார்கள். என்பதும்  வழக்காடுபவர்களுக்கும், வழக்குதொடுப்பவர்களுக்கும், இருவரின் வாதகங்களை கேட்பவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும்.

இந்த அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், போலீசும், நீதி மன்றங்களும் ஒரு பக்க சார்பாக இருந்துகொண்டு, அவர்களிலே ஒரு சிலரின் நேர்மையைச சுட்டிக்காட்டி, இது அனைவருக்கும் சார்பான அரசு என்று ஏய்க்கின்றனர்.

பத்திலே ஒன்று பழுதில்லை என்பது மாதிரிதான் மக்களும் மாற்றுவழிக்கு செல்ல மனமில்லாமல் அடித்துவிட்ட பந்துபோல் இவர்களிடமே செல்கின்றனர். இதனால்தான் உலகில் உள்ள நீதி மன்றங்கள்  எல்லாம் நடுநிலையில்லாத நீதி மன்றங்களாக  நேர்மையில்லாத மன்றங்களாக பீடு நடை போடுகின்றன.

நேர்மையான ,நடுநிலையான தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அரசு நிர்வாகத்தில் ஒரு சிலரைத்தவிர,மற்ற எல்லோருமே  சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்களாக இருப்பதால்தான் .இந்த அரசைக் காப்பாற்ற நேர்மையற்ற..ஒருதலை பட்சமான தீர்ப்புகளை வழங்குகின்றன.





வியாழன் 31 2014

சும்மா கேட்டுப்பாருங்க..அந்த குரலில் நியாயம் உங்களுக்கு புரியும்.

Bala Cartoonist Bala
சில குரல்கள் மட்டும் தான் கேட்ட மாத்திரத்தில் உங்களை அப்படியே கட்டிப்போட்டுவிடும். தமிழகத்தில் மகஇக தோழர் கோவன் அவர்களின் குரலுக்கு நான் பெரும் ரசிகன்.
கலை கலைக்காக என்று உலா வரும் குரூப்புகள் மீது எனக்கு சுத்தமா மரியாதை கிடையாது. கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
அப்படி மக்களுக்கான கலைஞர்களில் ஒருவர் சீத்தல்(Sheetal Sathe) . மராட்டியத்தில் இயங்கும் Kabir Kala Manch அமைப்பின் கலைக்குழு போராளி.
இவரின் கலகக்குரல் மக்களிடம் எழுச்சியை உண்டுபண்ணுவது கண்டு எரிச்சலடைந்த அதிகார வர்க்கம் கடந்தாண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சீத்தலையும் அவர் கணவரையும் நக்சலைட்டுகள் என்று கூறி சிறையில் அடைத்தது. இப்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்.
Anand Patwardhan இயக்கிய ஜெய் பீம் தோழர் என்ற ஆவணப்படத்தில் தான் சீத்தலின் குரலை முதன்முறையாக கேட்டேன். அதன்பின் இணையத்தில் பலமுறை அவரின் பாடல்களை தேடி கேட்க ஆரம்பித்தேன். கேட்கும்போதே உங்களுக்கு பல்வேறு உணர்வுகளை உண்டுபண்ணக்கூடியது.
மராட்டிய மொழி புரியாவிட்டாலும் பரவாயில்லை.. நீங்களும் சும்மா கேட்டுப்பாருங்க.. மொழிக்கான அவசியமில்லாமல் அந்த குரலில் வெளிப்படும் நியாயம் உங்களுக்கு புரியும்.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா
25-7-14

Jai Bhim Comrade (Excerpt - Kabir Kala Manch) by Anand Patwardhan.mov

புதன் 30 2014

செத்தும் கெடுத்த காதலன்.......

படம்--tamilnanbargal.com


விருதுநகர் மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை  சேர்ந்தவர் ராமர் கட்டிடத் தொழிலாளி.வயது40, இவருக்கு ஒரு மனைவி, 2மகள்கள்.1 மகன், ஒரு கள்ளக்காதலி உள்ளனர்.

இந்த நிலையில் ராஜபானையம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருபுத்திரனின் மனைவியான லட்சுமியை கள்ளக் காதலியாக வைத்துள்ளதை, ராமரின் மனைவி மீனாள் கண்டித்தார். இதனால் கனவன் மனைவிக்கும் தகராறு ஏற்ப்பட்டது.

இதனால் மனம் உடைந்த ராமர். தனது கள்ளக்காதலி வீட்டுக்கு வந்து, காதலி வெளியே சென்ற நேரம் பார்த்து தூக்கு போட்டு இறந்தார்.

சம்பவம் அறிந்த போலீசு விரைந்து வந்து பொணத்தை கைப்பற்றி தனது மனைவி வீட்டில்  சாகாமல் கள்ளக்காதலி வீட்டில் ஏன் ? சாகவேண்டும் என்று விசாரித்து வருகிறது.

செவ்வாய் 29 2014

வைகை கூவமாவதை தடுக்க முடியுமா???..

படம்-livemadurai.yavum.com

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைப் போல மதுரை நகரில் நிலத்தடி நீர் மட்டம் 400லிருந்து 1000வரை இறங்கிவிட்டது. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீரின் மாதிரிகள் குடிக்க உகந்தாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபடும் அளவும் கூடிக்கொண்டே போகிறது.

சுமாரான நிலையில் இருந்தவைகள் எல்லாம் உப்புத்தன்மைக்கு மாறி உள்ளது.

ஆற்றுக்குள் உள்ள நீரும் மாசு பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் நீரும் தடுப்பாரின்றி கலப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

வருடம் தவறினாலும் மேலே சொல்லப்பட்டவைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. இநத நிலையிலும் எந்த நிலையிலும் தூங்கா நகரமான் மதுரையில வருடம் முழுவதும் கூத்துக்கும் பாட்டுக்கும் குறைச்சலுமில்லை, பஞ்சமுமில்லை.

அவைகளில் சில...மீனாட்சீ கல்யாணம், தேரோட்டம், வீதிஉலா, சித்திரைத்திருகுவிழா,  இவைகளுக்கு பின் தொடர்கதையாக தெருவுக்கு தெரு உருவாக்கப்பட்டு இருக்கும் தெரு கோவில்களின் கும்மாளங்கள்....

இவைகளுக்கு ஈடாக...நோன்புகள் ,இப்புதார்கள், தொழுகைகள்,..... இவைகளுக்கு போட்டியாக  அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், ஜெப ஆராதனைகள்,   இப்படியாக.............

என்னதான் சுற்றுசூழல் ஆய்வுகளை் பற்றி ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்திகள் தந்து பயமுறுத்தினாலும், மெனக்கெடுத்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராடினாலும்................

தூங்காமலே தூக்கத்தில் புலம்புவோர்களாலும்,  தூங்கீனு இருக்கிற மாதிரி நடித்துக் கொண்டு இருப்பவர்களலும். வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவே முடியாது....

அப்படி வைகை கூவமாவதை தடுத்து நிறுத்தவது என்பது  உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான் பயங்கரவாதமாகும். அதாவது ஆளும் மத்திய-மாநில அரசை எதிர்ப்பது  அரசு பயங்கரவாதமாகும்.

 மீத்தேன் வாயு எடுப்பதால்  காவிரி நாசமாவதைப்போல ..வைகை கூவமாவதையும், தடுக்கவே முடியாது.

திங்கள் 28 2014

வருங்கால வசூல்ராஜக்கள்எம்பிபிஎஸ்களை பாதுகாக்க 13 கேமராக்கள்....

படம்--www.dinamani.com

அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரியில் வருங்கால வசூல்ராஜக்கள் எம்பிபிஎஸ்களை பாதுகாக்க 13 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு முதல் தேதியில் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

புதிய தாக வரும் வருங்கால வசூல்ராஜக்களை நிகழ்கால வசூல்ராஜாக்கள் வர வேற்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரியில் உள்ள மூத்த வசூல்ராஜாக்களால் வருங்கால வசூல் ராஜாக்களுக்கு (ராகிங்) தீங்கு ஏற்படாமல் தடுக்க ஒரு விசிலென்ஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விஜிலென்ஸ் அதிகாரியின்  செல்போன் எண்கள் வருங்காலகால வசூல் ராஜாக் களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் எதிர்கால ராஜாக்கள் அந்த பொனில் பேசி விபரம் தெரிவிக்கலாம்.

மேலும், மருத்துவ கல்லூரி.விடுதி, பகுதியிலும் புகார்பெட்டிகள் வைக்கப் படு கின்றன. இதனுடன் முக்கியமாக 13 இடங்களில் அதி (அதாவது மருத்துவ மனையில்  இருக்கும் செயல்படாத கண்காணிப்பு கேமரா மாதிரி இல்லாமல்)   நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன

இந்தக் கேமராக்கள் மூலம் “ராகிங்் செய்யும் மூத்த வசூல்ராஜாக்களின் நட மாட்டம் முழுமையாக கண்காணிக்கப்படும்.

இதனால் எதிர்கால.வருங்கால வசூல் ராஜாக்கள்எம்பிபிஎஸ்கள் மூத்த வசூல்ராஜாக்கள் எம்பிபிஎஸகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்..

அறிவுள்ள ஐந்தறிவு பெண்கள்......

சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம்வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
படம்--மாலைமலர்


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டூப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகச்சாமி குரு பூஜையின் போது பெண்கள் குளத்தின் படிக்கட்டில் சோத்தை கொட்டி வைத்து  நாலு  கால் பிராணிகள் போல் சாப்பிடும் இரண்டு கால் பிராணிகளின்  காட்சி

 முன்பு  இப்படி  சாப்பிட்ட  பெண்களுக்கு குழந்தைகள் பொறந்துள்ளதால்  அவர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம்  வழங்கினார்களாம்.

இனி....கொள்ளகை்கார வசூல் ராஜாக்காள்  மருத்துவமனையை மூடிவிடுவாங்களா....... இல்ல..

ஞாயிறு 27 2014

கல்வி தனியார் மயத்தால் ஏற்ப்பட்ட விளைவுகள்,




ஆந்திராவில் பள்ளி  பஸ் மீது  எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 19 குழந்தைகள் உள்பட 21 பேர உடல் சிதறி பரிதாபமாக இறந்த நிகழ்ச்சியானது..

பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநரின் அவசரத்தாலும் குறுக்கு வழியில் செல்வதை கவனித்து செல்லக்கூடிய பொறுமை இல்லாததாலும் இந்த விபத்து என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்குமாறாக..அந்தஓட்டுநரின்அவசரத்தையும்,பொறுமையின்மையையும் ஏற்ப்படுத்தியது  பள்ளி நிர்வாகமா????? அல்லது நாளும் பரபரப்பையும், சிடுசிடுப்பையும் ஏற்படுத்திக்  கொண்டு  இருக்கும்  நிலவும்  சமூகமா..???

எது இந்த விபத்துக்கு காரணம் , முழு முதற்க்காரணம், பரபரப்பையும், அவசரத்தையும் .இயலாமையையும ஏற்படுத்திக் கொண்டு  இருக்கிற தனியார் மயம். தாராளமயம் உலகமயம்தான். இந்த மயங்களை பயபக்தியோடு..மூர்க்கமாய் அமுல் படுத்தி வரும் அரசுகளும் தான் காரணம்

ஆளும் அரசுகளின் பங்கை மறைப்பதற்க்குத்தான் ஆளும் கட்சி ஆளாத கட்சி தலைவர்கள்  ஓரே குரலில் இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஆளும் கட்சி அதிர்ச்சி தெரிவித்து இழப்பீடு வழங்குகிறார்கள்.  விபத்து பற்றி விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கைவிட்டு நடிப்பை முடித்துக கொள்கிறார்கள்.

இப்படிபட்ட நடிப்புகளின் ஒன்றுதான். விபத்து பற்றி அறிந்ததுமே.பள்ளியின் பிரின்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு.தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக படுத்துக் கொண்டு இருப்பது.

விபத்து நடந்த லெவல் கிராசிங்கில் பலமறை விபத்து நடந்தும் அதை சுட்டிகாட்டி கேட் அமைக்க மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் கேட் அமைக்க மனம் அற்ற வர்கள்  ,இத்தனை குழந்தைகள் பலியானதும் ஓடி வந்து ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம். இந்த மூன்று மயங்களை பாடை கட்டி அனுப்பாதவரை  இந்த விபத்துகள் போன்ற துன்ப துயரங்களும் தொடர்கதையாக  தொடரும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...