பக்கங்கள்

வெள்ளி 21 2016

வீராதி வீரனின் வீரம்....

..................................
.....................................
......................................
யோவ் வக்கீலு
அவன் மேல்
போட்டது பொய்
கேசு  தான்
 பொய் வழக்கு
போட்டது நான்தான்
உன்னால என்னய
ஒன்னும் பன்ன
முடியாது  போ...
போ.... போய்யா

என்ன பாக்குற
எம் பேரு
கூட ஒனக்கு
தெரியக்கூடாது
என்றுதான் நேம்
பேட்ச குத்தல..

என்னாது  கோர்ட்டு
ஆர்டரா அந்த
ஆர்டர உன்
பையிலே பத்திரமா
வச்சுக்ய்யா வக்கீலு...

இங்க நா....
வச்சதுதான் சட்டம்
தெரிஞ்சுக்க வக்கீலு.

வியாழன் 20 2016

வாயைப் பொளக்காதே மூடு......

.........................


அதோ அந்த
குவாலிக்ஸ் காரின்
முன் கூலிங்
கிளாஸ் கண்ணாடி
அணிந்து பந்தாவா
காரில் சாய்ந்தபடி
செல்லு போனில்
பேசிக் கொண்டு
இருப்பது யாருன்னு
உனக்கு தெரியுமா...?

உனக்கு தெரியாது
சொல்றேன் கேளு..

சப்பு இன்ஸ்பெக்டராக
சேர்ந்து இன்ஸ்சு பெக்டராக
ஆகி  கடைசியல
போலீஸ் படைக்கே
தலைவராக இருந்தவர்களைப்
போல..  அவரு...........

 கூலிக்கு கொலை
செய்யும் கொலைகார
கூலிப்  படையில்
எடுபிடியாக சேர்ந்து
பல கொலைகளை
 செய்து அதன்
மூலம் பல
நாள் சிறையில்
ராஜாவாக வலம்
வந்து பதவி
உயர்வு பெற்று
பெரும் கொலைகார
கூலிப் படைக்கே
தலைவராக இருக்காரு..

வாயை பொளக்காதே
மூடு     நீ
வாயை பொளப்பது
அவருக்கு தெரிந்தால்
 கூலி வாங்காமல்
உன்னோடு எண்ணையும்
சேர்த்து போட்டு
தள்ளி  விட்டு
போய்கிட்டே இருப்பாருடா...


புதன் 19 2016

ஆணென்ன..பெண்னென்ன..எல்லாம ஓர் இனம்தான்.

2. விழுப்புரம்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக போராடி வருகிறது. கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத மத்திய அரசு என்னை எவனாலும் அசைக்க முடியாது என்று  தனக்கே உரிய பார்ப்பன திமிரோடு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என  மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தனது காலுக்கு சமமாக கூட மதிக்க வில்லை மத்திய அரசு.  தமிழக அரசோ நிற்க கூட வக்கில்லாமல் அப்போலாவில்  படுத்து கிடக்கிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள  அனைத்துக்கட்சிகளும் கூடி 17,18 அன்று தமிழகம் முழுவதும் இரண்டு நாள் 48 மணி நேரம்  ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தனர். 16 ம் தேதி  இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி தனது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி காட்டியது பிஜேபி.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் 18.10.2016 இன்று ரயில் மறியல் போராட்டம்  நடத்துவது  என மக்கள் அதிகாரம் முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையில்  நடைபெற்றது.
இந்த போராட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையம் நுழைவு வாயில் எங்கும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையை போட்டு வைத்திருந்தது. காட்டி கொடுப்பதற்காக கியூ பிரிவு போலீசாரையும் ஆங்காங்கே போட்டு வைத்திருந்தனர்.
சரியாக 10.30 மணிக்கு  சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் வண்டி வந்ததும் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கூடியதும் செய்வதறியாமல் திகைத்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கைதாகுமாறு கேட்டது. முடியாது என்று மறுத்த தோழர்கள் முழக்கமிட்டவாறே ரயில் முன் அமர்ந்து விட்டனர்.
இதனை சற்றும் எதிர் பாராத அம்மா போலீசோ தோழர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது. 
பெண் தோழர்களை தூக்கி சென்ற பெண் போலீசிடம், உங்களுக்கும் சேர்த்து தானே போராடுகிறோம் என்று கூறி தோழர்கள்   வாக்குவாதம் செய்த  போது ” எங்களை என்ன பண்ண சொல்றிங்க, நாங்களும் அவுத்து போட்டு போராட சொல்றியா” என்று ஆபாசமாகவும் திமிராகவும் பதிலளித்து பெண் போலீசு. போலீசு என்றாலே ஆளும் வர்க்க கைக்கூலி தானே இதில் ஆண் – பெண் என்ற வேறுபாடே இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு தோழர்களை  கடுமையாக தாக்கியது. இரண்டு தோழர்கள் போராட்ட களத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இறுதி வரை உறுதியாக போராடிய    அனைத்து தோழர்களையும் கைது  செய்வதற்குள் கதி கலங்கியது அம்மா போலீசு.
போராட்டத்தில் ஈடுபட்ட  கடைசி தோழரை கைது செய்யும் வரை மக்கள் கூட்டம் கலைந்து செல்லாமல் நின்றிருந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களின் போராட்ட உணர்வை கண்டு உணர்வடைந்தனர்.
இப்போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் என 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களுடன்  மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய் 18 2016

பெரிய வெண்ணைகள்...........

.................................
.................................
...................................

என்ன தலைவரே...

காவிரி மேலண்மை
வாரியம் அமைக்கச்
சொல்லி இரண்டாவது
நாளாக  இந்தீய
ரயில் மறியல்
போராட்டம் நடக்குது
நீங்க என்னடான்னா
ஜாலியாக  இங்க
குந்திகிட்டு இருக்கீங்க.....

அப்படியா.... சே
எனக்கு தெரியவே
இல்லீயேடா..ஆமா
 நீ ஏண்டா
போராட்டத்துக்கு போகல....

அதுவா தலைவரே..
நாங்கதான் தண்ணிய
காசு கொடுத்து
வாங்கி குடிக்கிற
கூட்ட மாச்சே...

அட அப்படியா...
சே..நானுந்தான்
காசு கொடுத்து
அம்மா தண்ணீய
வாங்கீ குடிக்காத
கூட்டத்த சேர்ந்தவனேச்சே........

.............................
........................................
...............................

திங்கள் 17 2016

ரயிலை மறிக்க வந்தவர்களை வழி மறித்தவர்கள்........

அவர்கள்
ரயிலை மறிக்க
போனபோது
வழி மறித்தனர்
காக்கி சட்டைகள்...

ஏய்..... தண்ணி இல்லாம
வாடுவதில் நீங்களும்
உங்க குடும்பமும்
இல்லையா   நீங்கள்
தமிழ் நாட்டு போலீசா
இந்தியா போலீசா
என்று கூட்டத்தில்
ஒருவர் கேட்டபோது
கேட்டவரின் சட்டை
காலரை இருக
பிடித்து கொண்டு
அவரின் காதருகே
கடுப்புடன் சொன்னது
ஒரு  காக்கி சட்டை

நாங்கள்
தமிழ் நாட்டு போலீசுமில்லே
இந்தியாவின் போலீசுமில்லே
ஸகாட்டு லாந்து  போலீசுமில்லே
அம்மா போலீசு..என்று.......

???????  !  !   !!!!!




ஞாயிறு 16 2016

பேப்ப......ரீல் செய்திகள்....

ஹாய்................

ஹாய்...........

என்ன பேப்பர்
பார்த்துக் கொண்டு
இருக்கிறாய்யா.....??

இல்லை பேப்பர்
படித்துக் கொண்டு
இருக்கிறேன்.....

ஹா......ஹா....ஹா....


ஹா......ஹா.....ஹா...

பேப்பரில்
அப்படி என்ன
செய்திகள்்....???

பேப்ப...ரீல்
ஒரே எழவு
செய்திகளாக
இருக்கின்றன.........

?????????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...