பக்கங்கள்

சனி 16 2013

தன்னை புதைப்பதற்கு 6அடி நிலம் கேட்ட தியாகி



கானி நிலம் வேண்டும் என்று இல்லாத ஒன்றிடம் கோரிக்கை வைத்தார் மகாகவி  ஒருத்தர். அந்த மகாகவியைப்போல் இல்லாத ஒன்றிடம்    கானி நிலம் கேட்காமல் ஆளும் ஆட்சியரிடம், தான் இறந்த பிறகு புதைப்பதற்கு 6அடி நிலம் கேட்டு மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனுநீதி நாளில் கோரிக்கை வைத்தார்.இந்திய சூதந்திற்க்காக போராடிய தியாகி ஒருவர்.

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் அல்லா பாக்ஸ்/85 என்பவர் தியாகியான இவர். தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும். இலவச வீட்டு மனை கேட்டு மனுநீதி நாளில் பலமுறை மனு கொடுத்தும் மக்கள் சேவையே புனித சேவையாக போற்றி பணி செய்யும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மனம் நொந்துபோன தியாகி
இந்தமுறை மனுநீதி நாளில் எனக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் வழங்க முடியவில்லையென்றால் நான் இறந்தபிறகு புதைப்பதற்க்காவது 6அடி நிலமாவது கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மனு கொடுத்தார்

தியாகியின் இந்த மனுவால் முகாமே பரபரப்பு அடைந்தது, பரபரப்பை ஏற்ப்படுத்திய மனுவை விசாரனை செய்த மாவட்ட கலெக்டர் “ வீட்டு மனை தருகிறேன்,வீடு கட்ட முடியுமாஎன்று கேட்டாராம், அதற்கு தியாகி வீட்டு மனை கொடுங்கள் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் மனு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அகில ஒலகத்தை ஆளும் பராசக்தியானவள்  மகாகவியின் கோரிக்கையை ஏற்று,கானி நிலத்தை வழங்கியதாக இதுவரை தகவல் இல்லை, மகாகவியும் பெற்றதாகவும் கூறவில்லை. தியாகி அல்லா பாக்ஸ் கோரிக்கையை ஏற்று  மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கொண்டு. அதிகாரிகள் வீட்டு மனை வழங்கினார்களா?  6அடி நிலத்தை கொடுத்தார்களா? அல்லது நடவடிக்கையில் இருக்கிறது என்று காலத்தை ஓட்டுகிறார்களா? என்று 6அடி நிலம் கேட்ட தியாகி அல்லா பாகஸ்தான் சொல்ல வேண்டும். அடுத்த தியாகிகளுக்கு? நமக்கும்!!!!


வெள்ளி 15 2013

அறியாத வயதில்..........


நான் இடுப்பில்
டவுசர் கட்டிய
காலத்தில்

என்னை அறிந்தவர்கள்
கேட்பார்கள்-உன்
அப்பன் எங்கே?
என்று.........

என் அப்பனைப்பற்றி
தப்பாமல் சொல்வேன்

ஆகாயத்தில்
ஆகாயவிமானம்
அதில்லே என்
அப்பன் போறார்
என்று......

வினா தொடுத்தவரும்
சுற்றி நிற்பவரும்
சத்தம் கேட்க
சிரித்தனர்....

அந்தச் சிரிப்பு
கேலிச்சிரிப்பென்று
அப்போது தெரியவில்லை

அறும்பு மீசை
முளைப்பதற்கு
முன் தெரிந்தது

என் அப்பன்
நான் பிறந்து
மூச்சுவிட்ட
சில நாளில்
தன் மூச்சை
நிறுத்தினார்
என்று........

இப்போது
பார்க்கிறேன்
ஆகாயத்தை
விமானம்
பறந்து
செல்கிறது

என் அப்பன்
அதில் செல்ல
வில்லையென்று
யாரிடம்
சொல்வது..

கேள்வி கேட்டவரும்
இல்லை.
பதில் கேட்டு
சிரிப்பவரும்
இல்லை...





வியாழன் 14 2013

ஆகையினால் காதலர்களை வாழ்த்துகிறேன்





என்னை யாரும்
காதலிக்கவில்லை
ஆகையினால்
நான் யாரையும்
காதலிக்கவில்லை

முன்னே பின்னே
செத்திருந்தால்
தானே சுடுகாடு
தெரியும்...

சொல்வடை போல்
முன்னே பின்னே
காதலித்திருந்தால்
தானே காதல்
தெரியும்.........

முன்னேயும்
காதலி இல்லை
பின்னேயும்
மனைவி இல்லை
காதல் எப்படி
பிறக்கும்....

அரை நூற்றாண்டை
கடந்தவன்
முதியவராமே!
இந்த முதியவனுக்கு
பிப்ரவரி 14ல்
காதல் பிறக்க
வழியில்லை

ஆகையினால்
காதலில்
சாதி.மதங்களை
மறுத்து
ஏற்றத்தாழ்வுகளை
ஒழித்து
அஞ்ஞானத்தை
மிதித்து
விஞ்ஞானத்தை
மதித்து
இறக்கும்வரை
காதல் செய்யும்
காதலர்களை
காதல் குடும்பங்களை
காதலர்தினத்தில்
வாழ்க! வளர்க! என
வாழ்த்துகிறேன்.

செவ்வாய் 12 2013

மாதம் மும்முறை பொழிய வேண்டாம், மும்மாதம் ஒரு முறையாவது வான்மழை பொழியுமா???


மாமதுரை போற்றுவோம்னு
கொண்டாடிய கூட்டத்தாரே!
மண்ணில் மாமதுரை வாழ
வேண்டுமென்றால் வான்மழை
பொழிய வேண்டும் என்பது
தெரியமால் போகுமோ................

மாமதுரையை போற்றி
ஆடலாம்,பாடலாம், பேசலாம்
தண்ணிரின்றி வறண்டு கிடக்கும்
வைகையில் மாதிரி அனையும்
கட்டி மகிழலாம்...........

குடிநீர் கேட்டு பல இடங்களில்
காலி குடங்களுடன் மாமதுரை
மக்கள் மறியல் செய்யலாம்
மறியலில் மாமதுரையின்
அமைதியை கெடுப்பதாக
குண்டர்களின் குண்டாந்தடியின்
வலியையும் பெறலாம்........

மாமதுரையில் பிறந்த சங்கப்
புலவன் ஒருவன் பாடினான்
நீதி வழுவா நீதியரசர்களும்
நேர்மையை நெஞ்சிலே கொண்ட
ஆட்சியாளர்களும்,கற்பில் 
சிறந்தவர்கள நிறைந்த மதுரையில்
மாதம்மும்முறை வான்மழை
பொழிந்து செழித்ததாம்.....

அப்பேர்ப்பட்ட மாமதுரையில்
கிரானைட் கொள்ளையர்களும்
கொள்ளையர்களுக்கு ஆதரவா
ஆட்சியாளர்களும், கொள்ளையர்க்கு
எதிரான நீதிக்கு சமாதி கட்டிய
நீதி அரசர்களும்., நமக்கேன்
வம்பு  என்று ஒதுங்கி சாதிப்
பெருமை பேசும் வீணர்கள்
நிறைந்த மாமதுரையில் மாதம்
மும்மாரி பொழிய வேண்டாம்
மும்மாதத்துக்கு ஒரு முறையாவது
வான்மழை பொழியுமா? ??  
மாமதுரையை போற்றுபவர்களே!!!!!!!................



திங்கள் 11 2013

தீர விசாரிக்காமல் கொல்லும் நீதி.........



முன்னொரு காலத்தில்
இந்தியாவை ஆணடான்
வெள்ளைப் பரங்கியன்

அந்தப் பரங்கியன்
சொன்னான்-அன்று
நாயைக் கொல்வது
என முடிவு எடுத்தால்
தீர விசாரனை செய்து 
கொல்லுவோம் என்று...

அந்தப் பரங்கியரின்
வழிவந்த விசுவாசிகள்
சொல்கிறார்கள்-இன்று

நாய்களை விசாரித்து
விடுதலை செய்வோம்.
ஏன்?என்றால்- அதுகள்
எங்களின் ஏவல் நாய்கள்.

ஆண்டானை எதிர்க்கும்
மனிதர்களை போராளிகளை
தீர விசாரிக்காமல் உடன்
இரகசியமாய் கொல்லுவோம்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...