பக்கங்கள்

சனி 13 2024

திடீர் உடல்நலக்குறைவும்..பயமுறுத்திய லேப் பரிசோதனை முடிவுகளும்...





 கொரனாவுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பின்  அதாவது மூன்று வருடங்கள் கழிந்து  திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் முன்னெரிச்சைரிக்கையுடன் இருக்கும் நிலையை மீறி தோன்றிவிட்டது. அருகிலுள்ள கிளினிக் கொண்டு சென்றபோது அந்தக் கிளினிக் மருத்துவர்க்கு உடல்நலமில்லாததால் அவர் கிளினிக் வரவில்லை. அடுத்த கிளினிக் கொண்டு சென்றபோது அந்த மருத்துவர் வெளி வேலையாக வெளியே சென்றுவிட்டார். மூன்றாவதாக ஒரு கிளினிக்கில் சேர்க்கப்பட்டு, உடனடியாக உடலின் பின்புற அடிப்பாகத்தில் இரண்டு ஊசிகள் குத்தப்பட்டு, பின் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

இரண்டு, மூன்று. ஒரு வாரம் கழித்து  சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார் உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல், பி.பி.லோ, சுகர் அதிகமாகிவிட்டது, இருதய அடைப்பு உள்ளது. நான் சொல்லவில்லை லேப்பின் பரிசோதனை முடிவுகள் சொல்கிறது என்று லேப் முடிவுகளை காட்டினார்.

டைபாய்டு காய்ச்சல் குணமாகி, சுகர் குறைக்கபட்டு, பி.பிலோ, தடுக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் செலவழித்தபின்  இருதய அடைப்பு நீக்க  ஐம்பதாயிரம் பீஸ் என்று பேரம்பேசி, வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று..

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இவ்வளவு செலவு ஆகியிருக்காதே என்று மருமக்களிடம் கேட்டபோது.. அங்கு சேர்த்தால் பிணமாகத்தான் திரும்ப வேண்டியிறுக்கும் என்று பதிலோடு.. அங்கு சேர்த்தால் உடனிருப்பவர்கள் யார் என்ற கேள்வியும் வந்தது.

சிகிச்சையில் இருந்தபோது  சுகர் நோயாளிக்கு உடனிருந்தவர் சொன்னார். காலில் உள்ள புண்ணை சுகமாக்குவதற்க்காக இதுவரை ஐந்து லட்சம் செலவழித்துள்ளதாக சொன்னார். அவரை பார்க்க வந்தவர் ஒருவர் அடுக்காக மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனைகள் எல்லாம் உங்களின் நோயை போக்கவா கட்டியெழிப்பி உள்ளார்கள். அது சேவை என்ற பெயரில் காசு பறிக்கதானப்பா..

ஒரு வழியாக நல்ல நிலமைக்கு  வந்தவுடன் உண்ணாமல் உடுத்தாமல் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை  எடுத்து சிகிச்சைக்காக செலவழித்தவர்களுக்கு கொடுத்துவிட்டு.. சேமிப்பு இல்லாத நிலையில்

எந்த பழக்கமும் இல்லாதவனுக்கு டைபாய்டு சுரம், சுகர், இரத்த அழுத்த குறைவு, இருதய அடைப்பு.   . எதை சாப்பிட்டால் பித்தம் குறையும், தொலையும் என்ற ஆழ்ந்த யோசணையில் 2024-ல் 63 ஆண்டு முடிந்து 64 ஆண்டை நோக்கி,


செவ்வாய் 09 2024

"நான் ஏன் பவுத்தத்தை விரும்புகிறேன்" BBC-பேட்டி:மே-1956



பாபாசாகேப் அம்பேத்கர் 


"நான் ஏன் பவுத்தத்தை 

விரும்புகிறேன்"

BBC-பேட்டி:மே-1956

நான் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அதில் மூன்று கொள்கைகள் ஒரு சேர இணைந்திருப்பதேயாகும்.


1).பவுத்தம்-பகுத்தறிவு ரீதியில் உள்ளது.(புத்தம்-சுதந்திரம்-கற்பி)


2).பவுத்தம்-அன்பையும் கருணையும் கொண்டுள்ளது.

(தம்மம்-சமத்துவம்-கிளர்ச்சி செய்)


3).பவுத்தம்-சமத்துவத்தை கொண்டுள்ளது.

(சங்கம்-சகோதரத்துவம்-ஒன்றுசேர்)


புத்தம்,தம்மம்,ஜெய்பீம்.......


 மாளிகையில் இருப்பவர்கள் உங்களை அவர்களுடைய மாளிகைகக்கு  அழைத்தால் தாராளமாக செல்லுங்கள். ஆனால், போகும்போது உங்கள் குடிசைகளை எரித்துவிட்டு செல்ல வேண்டாம்.


மாளிகையின் உரிமையாளரால் ஒருநாள் வெளியே தூக்கிவீசப்படலாம்.


அப்போது நீங்கள் எங்கு செல்வீர்கள்? யாரிடம் வேண்டுமானாலும் விலைபோவதற்கு  உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் தாராளமாக விலையாகுங்கள்.


ஆனால் சமூக அமைப்பிற்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்க வேண்டாம்.   


எனக்கு ஆபத்து மற்றவர்களிடமிருந்து இல்லை,எனது  மக்களிடமிருந்தே எனக்கு ஆபத்தை உணர்கிறேன்.


- Dr. பாபாசாகேப் அம்பேட்கர்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...