பக்கங்கள்

வெள்ளி 05 2014

செவ்வாய்க்கு அடுத்து சூரியன்..

படம்---www.maalaimalar.com


தற்போது  இயங்கிவரும் மங்களியான் மூலம்  செவ்வாயில் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அடுத்த 2016-ம் ஆண்டிற்க்குள் சூரியனில் கழிப்பறை கட்டுவதற்க்கான ஆய்வு செய்யப்படும். இதற்க்கான பணிகள் இன்னும் மூன்றாண்டுகளில் இயக்கப்பட உள்ளது.

இதற்க்கான இறுதிக்கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

 இந்தியாவில் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடமும், பணவசதியும், தனியார் பங்களிப்பும் இல்லாததால்...தனியார் முதலாளிகளின்   வசதியை முன்னிட்டு. செவ்வாயில்  மங்களியானின் கழிப்பறை பணி முடிந்ததும்.

கழிப்பறை கட்டுவதற்க்கான ஆய்வுக்காக..அதாவது “மங்கள்யான்”க்கு அடுத்து சூரியனுக்கு   “ஆதித்யா” அனுப்பப்படும்.

வியாழன் 04 2014

அரசின் கொள்ளை முடிவில் தலையிடும் நீதி அரசர்கள்...

judge-001


போதையால்  பெருங்குற்றங்கள், சீர் குலையும் குடும்பங்கள், இதனால் மது விலக்கை ஏன் அமலாக்கக்கூடாது ??? என்று சென்னை உயர்நீதி மன்ற நீதி அரசர்கள் சரமாரியாக  16 கேள்விக் கனைகள் தொடுத்ததோடு, அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தச் செய்தி நாளேடுகளில் வந்தபோது. படித்தவர்கள் அதை சத்தம்போட்டு படித்தார்கள். படித்து முடித்தபோது, படித்தவர்களும் கேட்டவர்களும் சொன்னார்கள். படிப்பதற்கும். கேட்பதற்கும் நல்லாத்தான் இருக்கிறது.  .

அதோடு நீதி அரசர்களின் பஞ்ச் டயலாக்குகள் சூப்பர் ஸ்டாரின் டயலாக்கையே விஞ்சி விட்டதென்று...

நல்ல மனதுடைய ஒன்றிரண்டு நீதி அரசர்கள்.நாட்டில் நடக்கின்ற கொடுமைகளில் ஒன்றிரண்டு கொடுமைகளுக்கு சட்ட ரீதியாக பூட்டு போட்டாலும் ...

இந்த நீதி அரசர்களை விட பெரிய்ய்ய  அரசர்களான  உச்ச மன்ற நீதியரசர்கள் நேர்மையான நீதி அரசர்கள் போட்ட பூட்டை , பூட்டுக்குரிய சாவியைக் கொண்டோ, அல்லது மாற்றுச் சாவியைக் கொண்டோ, அல்லது கள்ளச் சாவியைக் கொண்டோ திறப்பதில்லை.. 

அதற்கு மாறாக  சுத்தியலால் ஒரே போடாக போட்டு பூட்டையே உடைத்துவிடுவார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி பூட்டை உடைத்த கதைகள் எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும். சமீபத்தில் இந்த பெரிய நீதி அரசர்கள் உடைத்த பூட்டு சம்பவம் ஒன்று உண்டு.

தமிழகத்து கொள்ளைக்காரியும்,வாய்தா ராணி என்ற அரும் பெரும் பட்டத்தை தனதாக்கி கொண்டவர்களின் வழக்கின் தீர்ப்பும், அந்த தீர்ப்பின் பூட்டை உடைத்து  பினை வழங்கிய பெரிய்ய்ய நீதி அரசர்களுமே..இதற்கு சாட்சியும் உண்மையுமாகும் (பார்க்க--http://www.vinavu.com/2014/11/20/background-for-jaya-getting-fast-track-bail/)


மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டும். இந்தீயாவுக்கு சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்டு காலம் பல ஆகியும் ,  பேசும் அந்தந்த  மாநில மொழியை வழக்காடு மொழியாக்கவும், அந்த மாநிலத்தின்   மொழியில் நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவதற்கே  நீதி அரசர்களால் முடியாதபோது, தாங்கள் உத்தரவிட்டபின்னும் உத்தரவை நடைமுறை படுத்து மறுக்கும் ஆட்சியாளர்களின் மீதும்  நடவடிக்கை எடுக்க முடியாபோது...

நீதியரசர்களின் 16 கேள்விகளுக்கு அரசிடமிருந்து என்ன பதில் வரும்.

அரசின் பொதுத்துறை சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியார்க்கு  தாரை வார்த்து கொடுப்பதை எதிர்த்து நீதியரசர்களிடம் முறையீடு செய்தபோது  நீதிமன்றத்தில் ஆட்சி புரிந்த நீதியரசர்கள் சொன்ன கொள்கை முழக்கம்தான் அரசின் கொள்ளை முழக்கமாக வரும்.

அரசின் கொள்ளை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று அன்று சொன்னதைத்தான் 16 கேள்விகளுக்கும்  ஓரே பதிலாக.“ அரசின் கொள்ளை முடிவில் நீதி மன்றம் தலையிட முடியாது” என்று  பதிலாக வரும்.

நீதியரசர்களின் கொள்கை முடிவுக்கும்,அரசின் கொள்ளை முடிவுக்கும்-- ஏதுவாக தீர்ப்பு வர ..ஒரு பதினெட்டு வருடங்கள் ஆகலாம். அல்லது நீதியரசர்களின்  கொள்கை முடிவை உயிரோடு சமாதியாக்கி விடலாம்.அல்லது அரசின் கொள்ளை முடிவுக்கு எதிராக ஒரு தீர்ப்பும் வழங்கப்படலாம்.

அப்படி வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள். தடையானையும் பிறப்பிக்கலாம். பிறகு அரசின் கொள்ளை முடிவில் தலையிட்ட நீதியரசர்களின் சட்டப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரலாம்..




புதன் 03 2014

இல்லாததை இருப்பதாக பாட்டெழுதும் காவிப் போரரசு..


படம்-tamilcinemareporter.com


அந்தக் காலத்தில் ஆளும் மன்னிடம் சென்று,அவனிடம் இல்லாததை இருப்பதாக ஏற்றி போற்றி, அவன் கொடுக்கும் சன்மானத்தில் வயிறு வளர்த்தார்கள் புலவர் பெரு மக்கள்...

அதன் தொடர்ச்சியாக வாழையடி வாழையாக. காவிக் கட்சியின் எம்பி ஒன்றிரண்டு வார்த்தைகளை அள்ளிவிட்டதற்க்காக, இல்லாத தமிழ்பற்றை இருப்பதாக ஏற்றி. அந்தக் காவிக்கு விழா எடுத்து  இப்போது பெருமைப் பட்டுக் கொண்டார் தமிழால் பாட்டெழுதி வயிறு வளர்த்த காவிப்  புலவர்

இந்த காவிப் புலவர்  அந்தக் காலத்தை நிணைவூட்டும்படியாகவே... இல்லாது இருக்கும் காரியகிறுக்கனை  இருப்பவராக காட்டிகொண்டு, ஒரு பாட்டெழுதி.தனது தமிழ்புலமையின் புல்லுறுவித்தனத்தை காட்டி  தன்னை மெச்சிக் கொண்டது.

காரிய கிறுக்கனின் படம் ஒன்று படையப்பா... அந்தப் படத்தில் காவி போரரசு எழுதிய பாடல்.....

ஓ...............ஓ.........கிக்கு ...ஏறுதே..
ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமக்கு மட்டும்
இதுதான் ரஜினி சித்தர் பாட்டு--------- என்று காரிய கிறுக்கனை சித்தராக ஏற்றி பாவித்து வார்த்தைகளை காவிப்போரரசு அடிக்கியிருந்தது.

இந்தப் பாடலில் காரிய கிறுக்கனை சித்தராக காட்டி பாடலில் புகழ்ந்துள்ளதால்  காரியக் கூட்டமெல்லாம் ஆகா....ஓகோ...வென  காவி போரரசுவை பாராட்டியிருக்கிறார்கள்.

அந்தப் பாராட்டு மழையில்  திளைத்திருந்த வேளையில், காரிய கிறுக்கன். 

காவியை போனில் அழைத்து. சித்தராக இல்லாத என்னை சித்தராக என்னை ஏற்றி போற்றி பாட்டெழுதியது எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதனால் அந்தப் பாட்டை மாற்றிக் எழுதுங்கள் என்று கேடக..

காவிப்போரரசு... ரஜினி என்ற வார்த்தையை மட்டும் தூக்கிவிட்டு, ஞானசித்தர் என்று பாட்டை  மாற்றி  எழுதியது. 

தருன் விஜய் தமிழுக்கு குரல் கொடுத்ததுக்கு விழா எடுத்த காவிப்போரரசு, பாடலுக்கு தன் பெயர் வரவேண்டும் என்று விறும்புகிற ஹீரோவுக்கு மத்தியில்.“ தன்பெயர் பாடலில் வரவேண்டாம்” என்று விறும்பிய காரிய கிறுக்கனின் குணம் போற்றத்தக்கது என்று வியக்கத்தக்கது என்று அப்பவே புளகாங்கிதம் அடைந்து காரிய கிறுக்கனை புகழ்ந்து தள்ளியது.

இதுதான்  இல்லாதததை இருப்பதாக  தமிழில் பாட்டெழுதி காட்டி. வயிறு
வளர்த்த காவிப்போரரசு என்ற புலவனின் பாட்டுபுலமை.. 

செவ்வாய் 02 2014

இந்தியாவின் மாண்புமிகு பேசியது..கூறியது, பதிவிட்டது..

modi-auction-india-post

http://www.vinavu.com/2014/11/21/man-of-auction-put-india-on-sale-cartoon/


/“ பெண்கள் பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வர வேண்டும்”-- சுதந்திர தின விழாவில் மாண்புமிகு பேசியது.


“ மக்கள் மத்தியில் போலீசார் குறித்து தவறான எண்ணம் தோன்ற திரைப்படங்கள்தான் காரணம்”--- மாண்புமிகு கூறியது.


“ சத்தீஸ்கரில் தேச விரோத சக்கிகளால் நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூரமான, மனிதாபிமானற்ற தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது, துணிச்சலுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த சிஆர்எஃப் வீரர்களுக்கு என்து வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்”.-- மாண்புமிகு தனது டிவிட்டரில் பதிவிட்டது.

திங்கள் 01 2014

இதனால்..இருக்கலாம்....???ஃ

படம்--Itamil.gizbot.com
ஞாயிற்றுக் கிழமை காலையில்
எழுந்ததும்   என் மூளையில்
பதிவாகி வாயில் வந்து
ஒலியாய் தெரித்தது
பிட்டு பிட்டாய்
சில  பாடல்கள்

முழுசாய் ஒரு பாடலும்
பாடத் தெரியாத எனக்கு
பிட்டு பிட்டு பாடல்கள்
வருவது சந்தோசம் தான்.

அதில் ஒரு பாடல்
“நிணைத்ததை நடத்தி
வைப்பாய் வைகுண்டா...
நடத்தியதை முடித்து
வைப்பாய் கோயிந்தா”

அந்த வைகுண்டனை
அறிந்திருக்கவில்லை
தாது மணல் கொள்ளையன்
வைகுண்டனை அறிந்திருந்தேன்
வினவு தளத்தின் மூலமாக

அந்த கோவிந்தாவை கேட்டதில்லை
இந்தக் கோயிந்தாவை
கேட்டு இருக்கிறேன்.

இப்படியாக பல பிட்டு
பாடல்கள் இது எதனால்
வந்தது என்று திரும்பவும்
அதே மூளையை கொண்டு
யோசித்தேன்.......................

மின்சார பில்லை
கட்டிவிட்டேன்.
தொலைபேசி பில்லை
செலுத்தி விட்டேன்
கடனுக்கான வட்டியை
அடைத்துவிட்டேன்.
அபதாரம் இல்லாமல்

எனவே பிட்டு பிட்டு
பாடல்கள் வந்தது...
இதனால்  இருக்கலாம்............


ஞாயிறு 30 2014

காட்டு மிராண்டிகளின் தேசத்தின் கௌரவம்.

படம்-m.vikatan.com
இந்(து)தியாவை காட்டுமிராண்டிகளின் தேசம் என்று சொன்னவர்களின் வாயில் சர்க்கரையைத்தான் போட வேண்டும். அவர்கள் அப்போதே இந்துதியாவைப் பற்றி சொல்லி விட்டார்கள்.

இன்றைய காட்டுமிராண்டிகளின் இந்தீயாவை கணிக்கத் தெரியாதவர்கள்தான். இந்தீயா. செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பி விட்டதால் இந்தீயா தீயாய் வல்லரசாகிவிட்டது என்று 100 மீட்டர் உயரத்துக்கு துள்ளி குதிக்கிறார்கள்

பரமக்குடியிலும், தர்மபுரியிலும், உசிலம்பட்டியிலும் மற்றும் இந்தீயாவின் மற்ற மாநிலங்களில் நடக்கும் சாதிவெறி காட்டுமிராண்டிகளின் கொலைகளால் அந்தந்த மாநிலங்களுக்குதான் கௌவரமாக கருதப்பட்டு வந்தது. அது இந்தீயாவின் கௌவரமாக கருதப்படவில்லை.

இந்தியாவின்  தலைநகர் டெல்லியில். ஜனாதிபதி மாளிகையின் பணியாற்றிய பணியாளர் அபிஷேக்கின் காதல் மனைவி பாவனாயை, உசிலம்பட்டி பிரமலைகள்ளர் சாதிவெறி காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட விமலாதேவியைப் போன்றே.. ஊரறிய திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று நைச்சியமாக  பேசி அழைத்து வந்து..பாவனாவின் பெற்றோர் ஜெகன்மோகன்யாதவ்- சாவித்ரி ஆகியோர்களால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் பெருமையாக பீத்திக் கொள்வதற்கு  காட்டுமிராண்டிகளின் தேசத்திற்கு இந்த கௌவரமும் கிடைத்துவிட்டது..

வாழ்க! காட்டுமிராண்டிகளின் தேசம்! 
வளர்க!! காட்டுமிராண்டிகளின் கௌரவம்.!!!

விமலாதேவி

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...