பக்கங்கள்

சனி 16 2017

ஆரியம் ஒழிக்க பழகு...!!!

ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமம்
எனில்.........................

முதலாளியும் தொழிலாளியும்
பார்ப்பானும் பறையனும்
ஏன்.......?

பக்தி இல்லாவிட்டால்
இழப்பு இல்லை..
ஒழுக்கம் இல்லாவிட்டால்
பாழ்.................................

பெரியார் பிறந்த
நாளை பார்ப்பன
இந்து மத வெறி
எதிர்ப்பு நாளாக
கடை பிடியுங்கள்

பெரியாரின்  கொ டையாகிய
பார்ப்பன எதிர்ப்பு
இந்து மதவெறி
எதிர்ப்பு கடவள் மறுப்பு
பகுத்தறிவு பெண்ணுரிமை
மதச்சார்பின்மை சமத்துவம்
சாதி ஒழிப்பு ஆகிய
உயரிய நெறிகளை
மாண்கபுளை உயர்த்தி
பிடியுங்கள்...................

பசு வெறி குண்டர்களை
உருவாக்கும் ஆர் எஸ்எஸ்
மத வெறிக் கும்பலுக்கு
முடிவு கட்டுங்கள்..

“ அகர முதல எழுத்தெல்லாம்
ஆரியம் ஒழிக்க பழகு ”

--நன்றி! கௌதம புத்திரன்..




வியாழன் 14 2017

அந்த நீதிமன்றத்தால்...............

சாராயக்கடைகளை நடத்தும் 
அரசிடம் கேள்வி கேட்க 
முடியாது அந்த நீதிமன்றத்தால்...

லஞ்சத்தை தடுக்க முடியவில்லை 
எனச் சொன்ன  தேர்தல் 
ஆணையத்தை கேள்வி கேட்க
 முடியாது அந்த நீதிமன்றத்தால்..

விவசாயிகள் எல்லாம் வீதியில்
 நிற்பதைக் கண்டும், காணாத 
 அரசிடம் கேள்விகேட்க 
முடியாது அந்த நீதிமன்றத்தால்..

சுப்ரீம் கோர்ட் உத்தரவையே
 மதிக்காத மாநில அரசுகளிடம்
 கேள்வி கேட்க முடியாது
மாநில அந்த நீதிமன்றத்தால்

MLA க்களின் குதிரை 
பேரத்தை தடுக்கமுடியாது 
அந்த உயர்  நீதிமன்றத்தால்...

இப்படியான பல அநியாயங்களை
ஏன்? அந்த நீதிமன்றத்தால்
தடுக்க முயலவில்லை என்றால்
அதற்கு இதுதான் காரணம்

அந்த நீதிமன்ற நீதிபதிகளுக்கு
சம்பளம் மற்றும்வசதி
அதிகாரம் எல்லாம் கொடுப்பது
அந்த அரசு என்பதால்தான்
அந்த நீதி மன்றங்கள்
மக்களுக்கு அநீதி மன்றங்களாகின்றன...









..

புதன் 13 2017

ஒரு முத்தத்தால் நல்லவரான தந்தை...

ஒரு நண்பர் ஒரு
முதத்தத்தால் நல்லவர்.ஆன
தந்தையை தெரியுமா என்றார்.

நான் அவரை ஏற
இறங்க பார்த்த போது

அப்படி பாக்காதீங்க நா
சொல்வதை கவனமாக கேளுங்க.
என்றார் அவர் சொன்னது

ஒரு மகன் தன் அம்மாவிடம் சொன்னான்.“
அம்மா உன்னைவிட அப்பா
 ரெம்ப நல்லவரா இருக்கிறார்.

அவனின் அம்மா... ஆச்சரியமாக ,
 எப்படிடா..உன் அப்பா
என்னைவிட அவ்வளவு நல்லவராக
உனக்கு தெரிகிறார் என்றார்..

அதற்கு மகன் அப்பா
எப்படி நல்லவராக தெரிகிறார்
என்ற காரணத்தை சொன்னான்

அம்மா...நீ பக்கத்து வீட்டு
பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு
உடனே வந்துட்டே.. ஆனா
அப்பா மட்டும்தான் பாப்பாவுக்கு
கொடுத்ததோடு அந்த ஆன்டிக்கும்
முத்தம் கொடுத்துட்டு வந்தார்
அம்மா...என்றான்....அவன்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய் 12 2017

தேவையில்லா...விபரம்.....

அந்தக் காவல் நிலையத்தில்
 ஒருவர் தந்த புகாரின்
 மீதான விசாரனை செய்த
சார்பு ஆய்வாளர் எதிராளியின்
முகவரியை கேட்டதோடு அவரின்
சாதியை கேட்டார். அவரோ
எனக்கு சாதி இல்லை
என்றபோது கோபப்பட்ட
சார்பு ஆய்வாளர் அதெப்படி
பிறக்கும்போதே சாதி இருக்கும்
போது நீ சாதி இல்லை
என்று எப்படி சொல்லலாம்
என்று வானத்துக்கும் பூமிக்கும்
குதித்தார்..............................

மீண்டும் குற்றம் சாட்டப்
பட்டவர் சொன்னார் அய்யா
நான் பிறக்கும் போதும்
பள்ளியில் சேர்க்கும் போதும்
சாதி இருந்தது உண்மைதான்
நான் இப்போது தோழராகி
விட்டதால் எனக்கு சாதி
என்பது இல்லை..எனது
பெயரும் வீட்டு முகவரியும்
என் தந்தை பெயரும்
செல் போன் எண்ணுமே
தங்களுக்கு போதுமானது என்றதும்
அந்த சார்பு ஆய்வாளரின்
சத்தம் முனுமுனுப்பாக
மாறி அமைதியாகி விட்டது.

ஞாயிறு 10 2017

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை..



அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவார். ஏனெனில், அவர் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவர் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வார். அவர் செய்த குற்றம்தான் என்ன? கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தார். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினார். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தார். அவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரி புலே. 

மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார். அவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ்.பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ்.மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர். 1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர். கல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர். சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர். 


இந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரி புலே புன்னகையை மட்டுமே தந்தார். 'கல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார். தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார்சாவித்திரி புலே. 

"கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்' என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார். திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார். அவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 

1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்த நோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார். 

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். ஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர். குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை. பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை; அற்புதமே பெண் உருவானது

-VIKATAN 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...