பக்கங்கள்

சனி 06 2016

பாம்பைக் கண்டவுடன் பதறி அடித்து....

shutdown-tasmac-ambur-bus-stand
படம்- வினவு.

நண்பா...கேள்

ஒன்னும் ஒன்னும்
இரண்டு என்று
சுலபமாக கண்க்கீடு
செய்யலாம் நண்பா..

ஆனால்...

டாஸ்மாக் போதையால்
சீரழிந்த  குடும்பத்தை
கணக்கிட  முடியாது

கணவனை இழந்த
விதவைகளின் துயரத்தை
சொல்லிவிட முடியாது

டாஸ்மாக்கால் விபத்தில்
உயிர் இழந்தவர்களை
பட்டியலிட  முடியாது

பாம்பைக் கண்டவுடன்
பதறி அடித்து
உயிர்.. தப்ப
பாம்பை அடித்து
கொல்வதைப் போல்

டாஸ்மாக்கை மூடினால்
அழிவிலிருந்து மீண்டு
வாழ முடியும்

வா..நண்பா..
வா  மூடு
டாஸ்மாக்கை சிறப்பு
மநாட்டுக்கு  வா
நண்பா வா.....

வியாழன் 04 2016

டாஸ்மாக்; அன்றும்..இன்றும்....



படம்-வினவு



அன்று...
கருவக் காட்டுக்குள்
கூச்சப்பட்டு ஒளிவு
மறைவாய் குடித்த
காலம் போய்



இன்று கூச்சம்
நாச்சமின்றி பயமின்றி
குடிக்கிற பழக்கமே
இல்லாத பெண்கள்
இளைஞர்கள் படிக்கும்
பிள்ளைகள் முதற்கொண்டு
குடிக்கும் நிலமை.

பள்ளி மாணவன்
முதல் கிழவன்
வரை நடுத்தெருவில்
அரை நி்ர்வாணமாய்

குடிவெறி போதையில்
பெற்ற  மகளிடம்
பாயும் தகப்பன்
கணவனை தடுக்க
முடியாமல்  அடித்தே
கொல்லும் மனைவி

உடன்  பிறந்த
சகோதிரிடம் பாலியல்
வன்முறையில் ஈடுபடும்
சகோதரன் வல்லுறவுக்கு
ஆளாகும் சிறுமிகள்...

குடிக்க காசு
 கொடுக்கா..தினால்
அம்மாவைக் கொல்லும்
பெற்ற பிள்ளைகள்

குவார்ட்டர் திருடனாக
மாறும் கல்லூரி
மாணவன் தமிழ்
சமூகத்தையே டாஸ்மாக்கால்
அழித்துக் கொண்டு
இருக்கிறது சாராய
சாம்ராஜ்ஜித்து ராணியின்
தலைமையிலான அரசு

தலைப்பைச் சேருங்கள்

புதன் 03 2016

ஊருக்கு ஊரு சாராயம்... கதறுது தமிழகம்.....


சென்ற ஆண்டு ஜூன், சூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலமாக “மூடு டாஸ்மாக்கை” என்ற இயக்கம் தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இவ்வியக்கம் அரசியல் சக்திகள், மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக எழுந்து டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது மக்கள் மனதில் கனலாக கனன்று கொண்டிருக்கிறது.
நீதிமன்ற பாசிசம், தமிழகத்தையே புரட்டி போட்ட மழைவெள்ளம் போன்ற சில அரசியல் நிகழ்வுகளால் தற்காலிகமாக இந்த இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும், ஜனவரி 1-லிருந்து “ஊருக்கு ஊர் சாராயம்…கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கத்தோடு டாஸ்மாக்கை மூடியே தீருவது என்ற உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கிறது, இந்த இயக்கம். வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்துகிறது மக்கள் அதிகாரம்.

செவ்வாய் 02 2016

100க்கு101 புல் அடித்த டாஸ்மாக் தொண்டன்



படம்---


பகலில் பள்ளிகூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடத்தை வீட்டில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டு இருந்தான்  டாஸ்மாக தமிழனின் மகன் ஒருவன்.

வேலை முடிந்து டாஸ்மாக் வாசனையுடன் வந்த அந்த அவனின்  தந்தை மகன் படிப்புக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்று மனைவியின் உத்தரவால் சற்று  தள்ளியுள்ள  இடத்தில் சுவரொருமாக அமைதியாக படுக்க வைக்கப்பட்டான்.

சிறிது நேரம் கட்டையாக கிடந்தவன் படுக்கையில்  அங்குமிங்கும் புரண்டான். பிறகு எழுந்தவன் மகனைப் பார்த்தான்.. மகன் நோட்டீல் எழுதிக் கொண்டு இருந்ததைப் பார்த்தான்.. பிறகு தலையை நிமிர்த்தி வீட்டு முகட்டைப் பார்த்தான். என்னவென்னலாம் செய்து பார்த்தும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை..

தன் மனைவியை தேடினான்.. கானாதால்.. மகனிடம் அம்மா எங்கே என்று கேட்டான்.

மகன் அம்மா... வீட்டுக்கு தண்ணி எடுக்க குழாய்க்கு போயி இருக்குது எனறதும் சட்டென்று எழுந்து மகனுக்கு அருகில் வந்து அமர்ந்தான்

மகன் எழுதுவதை ஆர்வமாக பார்த்த சிறிது இடை வெளியில் மகனுடன் நைசாக பேச்சுக் கொடுத்தான்

“ டேய் மகனே... எங்க ஆத்தா...படிக்கையிலே.......”

உங்க ஆத்தாவா...மகன் அதிர்ந்தான்.. ஏப்பா... உங்க ஆத்தாதான் ..நீங்க சின்னப் பிள்ளையா..இருக்குரப்பவே செத்து பொயிட்டதாக சொன்னீங்களப்பா....”

“ அந்த..ஆத்தா...இல்லீடா.... என்றார் தந்தை.

“ அப்படின்னா ஒங்கப்பா.. வச்சுருந்த ..ஆத்தாவா... என்றான் மகன்”

தந்தைக்கு கோபம் வந்துவிட்டது... படிக்கிற பாயலாடா..நிய்யி... படவா.. வாயக் கழுவுடா.... நான் ஒன்னு சொன்னா...நீய்யி ஒன்னு சொல்ற... பெரியவுங்க ஏதாச்சும் சொன்னா...அமைதியா... கேட்டு  பழகுடா..” என்றார்

“ சரிச்சரி...கோபப்படாதிங்க...... என்னன்னு சொல்லுங்க..” என்றான் மகன்.

“அந்த  ஆத்தா  இல்லடா.... இது வேற  ஆத்தாடா.... இந்த ஆத்தா படிக்கும்போது 100க்கு 100 மார்க்கு வாங்குவாங்கடா..”


“என்னப்பா.. பள்ளிக்கூடமே போகாத ..நீங்க  அந்த ஆத்தா  படிக்கும்போது 100க்கு 100 வாங்குவான்னு ஒங்களுக்கு எப்படியப்பா  தெரியும்” என்று கேள்வி கேட்டான் மகன்.

“ இதுக்குத்தாண்டா.. நா.... எதுவுமே.... சொல்றதில்லே..... அதோ அந்த சுவத்தைப் பார்..... என்ன..பாக்காதடா சுவத்த பார்.... சுவத்தல என்னா இருக்கு..”

“ பல்லி இருக்குதுப்பா...”..

“அ...அ...அதான் அந்த பல்லிதான்டா சொல்லிச்சி..மவனே”

“ அடப் போப்பா... பல்லி சொல்லிச்சி..பட்சி சொல்லிச்சின்னு..என்னை படிக்கவிடாவம கெடுக்கிற.... அம்மாவ கூப்பிடவா..”.   அம்மா   என்று மகன் கூவியுடன்.....

“ சட்டென்று எழுந்து தன் பழைய இடத்தில் வந்து படுத்துக் கொண்டான் அந்த டாஸ்மாக் ஆத்தாவின் தொண்டன்...
.


திங்கள் 01 2016

தமிழ் நாட்டை ஆண்ட சாதிகள்..

2016 தேர்தலில் யார் செயிப்பார்..யார் தோற்ப்பார்..யார் யார் கூடுவிட்டு கூடு பாய்வார்.. யார் யரெல்லாம் அந்தர்பல்டி கிந்தர் பல்டி அடிப்பார்  யரெல்லாம் கிடா முட்டு முட்டுவார்...என்பதெல்லாம்..கிடக்கட்டும்.. முதலில்

ஏற்கனவே..கல்லு தோன்றா, மண்ணு தோன்றா காலத்துக்கு முன்னாடியே தோன்றிய மூத்த குடி (டாஸ்மாக)  மகனான தமிழனை,....தமிழன் வாழும்  தமிழ் நாட்டை யார் யரெல்லாம் சாதி பெருமை பீத்திய எந்தெந்த சாதிவெறிமார்கள் எல்லாம் ஆண்டார்கள் என்பதை  முதலில்   தெரிந்து   கொள்லுங்கள்...பாஸ்....



ஞாயிறு 31 2016

உண்மையான அகிம்சைவாதி ......!!!

படம்-https://ta.wikipedia.org/s/ad கசையால் அடி வாங்கும் இயோசு


பாஸ்..இன்னைக்கு நூறு  ஐநூறு
ரூபா நோட்டுல இருக்கிறவரோட
நிணைவு தினமாம் பாஸ்....

ஏம்..பாஸ் ஒரு அடி உதை
எதுவுமே வாங்காம எப்படி
பாஸ் அகிம்சை வாதியா
ஒருவரு  இருக்க முடியும்

அப்படி ஒருவரு இருக்க முடியும்ன்னா
அது  இந்தீ யாவில்தான் மட்டும்தான்
 இருக்க முடியும் பாஸ்  என்னங்க பாஸ்

எனக்கு தெரிந்து உண்மையான
அகிம்சாவாதி இயோசு என்பவர்தான் பாஸ்
உண்மையான அகி்ம்சா வாதிய தெரியுறாரு

ஆட்டுப்பால் குடிக்காமே.. பிர்லா
மாளிகையில தங்காமே... வயசான
காலத்திலே கட்டின பொண்டாட்டிக்கு
துரொகம் பன்னி  ஆ..ஆத்ம சோதனைன்னு
 சின்ன குட்டிகளோட படுத்து கிடக்கம

பிலாத்துவின் போலீசிடம் கசையடி
வாங்கி தலையில முள் கிரிடம்
சூட்டப்பட்டு  கதற கதறசிலுவையில
அறையப்பட்டும்கூட  கோபம் கொண்டு
 எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காம  அமைதியா
சாத்வீதமா..இருந்திருக்காரு   பாஸ்

உண்மையான அகிம்சாவாதின்னா இயேசுதான் பாஸ்




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...