பக்கங்கள்

வெள்ளி 28 2014

நாய் சும்மா இருந்தாலும் ...நாயின் வால் சும்மாயிருக்காது..

படம்---plus.google.com

வெள்ளிக்கிழமை மாலை ஒருநாள், நணபர்க்கு ஒரு நணபர் கைபேசியில் பேசினார்.

“ நண்பரே! நான் ஏற்கனவே, தங்களிடம் தெரிவித்தப்படி ஞாயிற்றக்கிழமை காலை ஒன்பது மணிக்கு  விழா அரங்கத்தில் இருக்க வேண்டும். ஆகையால் தாங்கள், உதவிக்கு தங்களின் மருமகனுடன்... ஞாயிற்றக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து. ரெடியாகி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்து விடவும் அங்கிருந்து நாம் சேர்ந்து செல்லலாம். நான்  தங்களை எதிர்பார்த்து காத்திருப்பேன் .

நண்பரும்.பதிலுக்கு பேசினார். “ அதிகாலை பனி நேரமாக இருக்கும் முடிந்தவரையில் நான்கு மணிக்கு எழுந்திருக்க முயற்சி செய்கிறேன். நான் வருவதற்கு சற்று தாமதமானால் காத்து இருக்கவும். வந்துவிடுவேன்.”

நண்பரிடம் வருவதாக ஒப்புதல் சொல்லிய நண்பர். அன்றைக்குரிய வேலைகளை திட்டமிட்டு முடிப்பதற்க்கு ஆயுத்தமாயினார்.

சனிக்கிழமை காலையில் திட்டமிட்டபடி வேலையை தொடங்கி செய்து கொண்டு இருந்தபோது மின்சாரம் தடை ஏற்ப்பட்டது. தடை பட்ட மின்சாரம் உடனே வருமா..? அல்லது இரண்டு மணி நேரம் கழித்து வருமா...? என்பது பற்றி தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தது.

 மின்சாரம் வந்து வேலையை தொடங்கி முடித்தபோது மணி பதினொன்றாகியிருந்தது. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு, படுக்கையில் சாய்ந்தபோது மணி பனிரெண்டாகியிருந்தது.  வேலையின் அசதியில் துாங்கியபோது.....  அவரின் மூத்த மருமகன் அவரை எழுப்பியது தெரிந்தது.

துாக்கம் கலைந்து எழுந்த போது மணி நாலேகால் ஆகியிருந்தது. அவரின் இளைய மருமகனை எழுப்பிவிட்டு . தன்னை தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

 இளைய மருமகன் தயாரானதும், இரண்டு சக்கர வாகனத்தில் மருமகன் ஓட்ட இவர் பின்னால் அமர்ந்து சென்ற போது மணி ஐந்தாகியது. அப்போது  அவரின் நண்பர் கைப்பேசியல் அழைத்தார்.

“ நண்பரே.!... என்ன .. ரெடியாகி விட்டீர்களா? ................

“ கிளம்பி..வந்து கொண்டு இருக்கிறேன்... நீங்கள் வந்து விட்டீர்களா...?

“ நான். மற்றும் சில நணபர்கள் வந்து விட்டார்கள். தங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.”.

 ”காத்து இருங்கள், இதோ வந்து விடுகிறோம்”.

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் வண்டியை நிறுத்தவதற்க்காக மருமகன் சென்ற போது,

“ என்ன இன்ன நேரம் இங்கே.... நல்லாயிருக்கிங்களா..என்று ஒரு நண்பர். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்தவாரே.”..அவரைக் கேட்டார்.

அவருக்கு, அவர் யாரென்று சற்றென்று நிணைவுக்கு வரவில்லை. அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாதவாறு. சொட்டர் அணிந்திருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை..

அவரும் அனிச்சைசெயலாக..“ ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்வதற்க்காக வந்துள்ளேன். நான் நலம், தாங்கள் நலமா..? என்று வினவினார்.

இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த நண்பரும். பதிலுக்கு நல்லது. நான் நலம் என்றவிட்டு தன்வண்டியை நிநுத்தவதற்க்காக இவரிடம் விடை பெற்றுச் சென்றார்.

மருமகனுடன், நண்பர்கள் இருக்கமிடத்தை அடைந்தபோது, நண்பர்கள் இவருக்காக காத்திருந்த நண்பர்கள் எழுந்து அருகில் இருந்த தேநிர் கடையில் சூடாக தேநீர் அருந்திவிட்டு பயணமானார்கள்.

பாயின்ட் டூ பாயின்ட. பேருந்தாக இருந்ததினால் இடையில் எங்கும் நிற்காமல் சென்றது. அதனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்னரே , நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தை அடைந்தனர்.

அங்கு கூடியிருந்த தெரிந்த நண்பர்களின் நலங்களை விசாரித்தப பின். சில நேரங்களில் நிகழ்ச்சி தொடங்கியது.

 நிகழ்ச்சி முடிந்தபோது மணி எட்டுக்கு மேலாகியிருந்தது. நிகழ்ச்சி அரங்கத்திலே இரவு உணவை முடித்துவிட்டு, பேருந்து பிடித்து மாட்டுத்தாவணிக்கு வந்து செர்ந்தபோது மணி பணிரெண்டுக்கு மேல் ஆகியிருந்தது.

இரண்டு சக்கர வாகனத்தில் இவரின் வீட்டுக்கு  அருகில் வந்து கொண்டு இருந்த  நேரத்தில் இரண்டு காவலர்களால் இவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு. வண்டிக்கான ஆவணங்களை எடுத்து  இவரின் மருமகன் காட்டினார். ஒவ்வொன்றாக பார்த்து வந்தவர். வண்டியின் கலர் மாற்றபட்டிருக்கிறது. ஆர்டிஓ ஆபிஸில்  பதிந்து இருக்கனுமே என்றுவிட்டு வண்டி ஓனர் யார் என்று கேட்டார்.

வண்டியின் உரிமையாளர் என்னுடைய மாமாதான். இவர்தான் என்று தன் மாமாவை சுட்டிக்காட்டினார்.

அந்தக் காவலரை பார்த்தபோது. தன்பகுதி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ.எஸ்.ஐயாக பனியாற்றியது  அவரது நிணைவுக்கு வந்தது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒருவழியாக எல்லா ஆவணங்களையும் பார்த்துவிட்டு போக அனுமதித்தார்.

அவரின் மருமகன் வண்டியை எடுத்த போது . சிறப்பு எஸ்எஸஐக்கு கீழ் இருக்கும் காவலர்.. வண்டியின் கலரை மாற்றிவிட்டீர்கள் நிறுத்துங்கள் என்றார்.

அபபோது, . “ சார் என்னைத் தெரியாதா என்று கேட்டு ,தான் தொழில் செய்யும் அறிமுகக் கார்டைக்  கொடுத்தார். வண்டியின் எப்சி. அடுத்த ஆண்டு முடியப்போகிறது. அப்பொழுது ஒரேடியாக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அதனால்தான்.....என்றார் இவர்.

“சிறப்பு எஸ்எஸ்ஐ இவரின் அறிமுகக் கார்டைப் பார்த்துவிட்டு, தெரியும் தெரியும், என்று சொல்லி போக அனுமதியளித்தார். உடன் இருந்த காவலர்க்கோ அவர்களை போகச் சொல்ல விருப்பமில்லை என்பது அவரது வார்த்தைகளளும் நடவடிக்கைகளும்  தெரிவித்தன..


வியாழன் 27 2014

சாதியை கேட்டதால் சூடு வாங்கிய பேக்கரி மாஸ்டர்...

படம்-www.a2ztamilnadu.com

முகப்பில் பேக்கரி ஸ்வீட் கடையும் பின்னால் பேக்கரி தயாரிப்பு தொழிலகமும் நடத்தி கொண்டு வந்த முதலாளியின் முன் மாடசாமி அழைத்து வந்த பத்தொன்பது வயது நிறைந்த  கணபதி மரியாதையுடன் நின்று கொண்டு இருந்தான்

அய்யா, இந்தப் பயல்தான் நான் சொன்ன பையன் இவனுக்கதான் வேலை தங்களிடம் வேலை கேட்டேன் என்றார் மாடசாமி.

மாடசாமி சுட்டிக்காட்டிய பையனை, பேக்கரி முதலாளி பார்த்துக் கொண்டே, உள்ளே ஒரு பையனை வர வழைப்பதற்க்காக , கடையிலிருந்த அழைப்பு மணியை அடித்துவிட்டு.... பணிவாக நின்று கொண்டிருந்தவனிடம் பெயரைக் கேட்டார்.

“பேரு..என்னப்பா”....

”கணபதி ங்க சார்,.........

“எந்த வேல கொடுத்தாலும் செய்விய்யாப்பா”...???

“ ..எந்த வேல கொடுத்தாலும் செய்வானுங்க” என்றார் மாடசாமி,

மாடசாமி சொல்வதை கேட்டப் பிறகும் கனபதியை  கேட்டார்.

“என்னப்பா.......... செய்வீய்யா”........

“ எந்த வேலையின்னாலும் செய்வேன் சார்”.......

“வேலைக்கு ஒழுங்கா..வந்துடனும். மாடசாமி....க்காகத்தான் உன்னை வேலைக்கு சேர்த்திருக்கேன். புரியுதா ” என்றார் முதலாளி.

“அவரு பேருக்கு பங்கம் வராம”..”நான் வேல பார்க்குறேன் சார்”..என்றான் கணபதி.

உள்ளேயிருந்து கனபதி வயதுடைய உழைப்பாளி ஒருவன் வந்து நின்றபோது கனபதியை சுட்டிக்காட்டி அவனை உள்ளே அழைத்துச் செல்ல பணித்தார்.. கணபதி மாடசாமியிடம் சொல்லிவிட்டு , வந்த பையனைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

பேக்கரி முதலாளி, சில ஸ்வீட் அயிட்டங்களை பையில் போட்டு மாடசாமி கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.

உள்ளே வந்தபோது பத்து பேருக்கு மேல் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தார்கள். புதிதாக வேலைக்கு வந்தவனை  எல்லோரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்கள் வேலையை கவனிக்கத் தொடங்கினார்கள்.

ஒவ்வொரும் வேலை செய்வதை கவனித்தபடி நின்று கொண்டு இருந்த கனபதியை அழைத்து வந்தவன்.  கனபதியை ஒரு தட்டு தட்டி வா... என்று சைகையால காட்டிவிட்டு முன்னே சென்றான். 

பின்னே சென்ற கணபதி, “பன், ரொட்டி தயார் செய்யும் சூட்டு அடுப்பங்கரைக்கு அருகில் வந்து நின்றான். அங்கு நீண்ட கரண்டியால் சூட்டு அடுப்புக்குள் இருந்து பன் அடுக்கி வைக்கபட்டு தட்டுகளை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தவரிடம் விடப்பட்டான்.

“மாஸ்டர் அண்ணே, முதலாளி உங்களிடம் அழைத்துச் செல்லச் கூறி”  கணபதியை சுட்டிக் காட்டினான்.

மாஸ்டர் அண்ணன் குட்டையாகவும் கட்டையாகவும் இருந்தார். அடுப்பக்கருகில் இருந்தாலும் கருத்துப் போகாமல் சிவப்பாகவே இருந்தார்.

மாஸ்டர் அண்ணன். கனபதியைப் பார்த்தார்.

“பேரு என்னடா”????

“கனபதி....ண்ணே.”.......

“யாருடா........ ஒன்ன கொண்டு வந்து விட்டா”.....???

“மாடசாமி, அண்ணண்ணே  ” 

“ யாருடா”....??  மாடசாமி, என்றபடி  மாவைப் பிசைந்து கொண்டு இருந்த உதவி மாஸ்டரைப் பார்த்துக்கேட்டார்” மாஸ்டர் அண்ணன்..

முதலாளி மாஸ்டரிடம் வருவதைப் பார்த்ததும்,“ கனபதியை காட்டிப் பேசினார்  மாஸ்டர்.  முதலாளி சொன்னதும் .கார்பரேசனில் வேலை பார்க்கும் மாடசாமியா.... என்று தெரிந்து கொண்டார். முதலாளியின் முன்னே கணபதியிடம் கேட்டார் மாஸ்டர்.

“ஏலே... மாடசாமி சொந்தக்காரா..”???

“  இல்லேண்ணே..... தெரிஞ்சவர்”

“ முதலாளிய பார்த்து, சரிங்க அண்ணாச்சி”....என்றார் மாஸ்டர்.

“ முதலாளி, கணபதிய பார்த்து சொன்னார். மாஸ்டர் சொல்றத கேட்கனும் என்று விட்டு ” நகர்ந்தார்.

முதன்முதலாக வேலைக்கு சேர்ந்த கனபதிக்கு எடுபிடி வேலை கொடுக்கப்பட்டது. டீ வாங்கி வரவும், டீ டம்ளரை கழுவி வைக்கவும், மற்றவர்கள் ஏவும் வேலைகள் மட்டும் கொடுக்கப்பட்டது. கனபதியும்  ஏவுன எல்லா வேலைகளையும் செய்து வந்தான். சில வேலைகளில் தப்பாய் செய்தபோது  மாஸ்டரிம் திட்டும் வாங்கிக் கொண்டான்.

இப்படியாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிவிட்டது. பேக்கரி கடைக்கு வேலைக்குச சேர்ந்தால், அங்கு வேலை செய்பவர்களுக்கு நன்றாக திண்ணக் கிடைக்குமென்று தன் நண்பர்களும், வேலைக்கு சேர்த்துவிட்ட மாடசாமி அண்ணனும் சொல்லக் கேட்டு இருந்தான். ஆனால் வெலைக்கு சேர்ந்த மறு நாட்களிலே புரிந்து கொண்டான் அவர்கள் சொன்னதெல்லாம் அத்தனையும் பொய் என்று....

ரொட்டி.பன், பட்டர்பன், பிஸ்கட், பப்ஸ் போன்றவற்றின் வாசனைதான் பிடிக்காலாமே  ஒழிய ருசிக்க முடியாதுன்று.. ருசிக்க கொடுத்து வைத்தவர்கள் மாஸ்டரும், முதலாளியும்தான்.

உடைந்துவிட்டதை கூட திண்ண முடியாது மாஸ்டர் சூடு போட்டு விடுவார்.

காலையில் எட்டு மணிக்கு வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு புறப்பட முடியும்.. வீடு வந்து சேர்வதற்குள் பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ஞாயிற்று கிழமை ஒருநாள்தான் விடுமுறை. சில நாட்களில் அந்த விடுமுறையும் பறி போய்விடும். ஆனால் மாஸ்டர்க்கும்,மற்றும் சிலருக்கும் அப்படியில்லை. மாஸ்டர் காலையில் வந்தால் மதியம் சாப்பாட்டுக்கு செல்பவர் நேரம் கழித்து புத்தம் புதிதாய் வருவார். சில நாட்களில் வராமலே இருப்பார். சில நாட்களில் காலையில் வராமல் மாலையில் வந்து பத்து மணிக்கு மேல் வேலை செய்வார். அந்த நாட்களில் மாஸ்டர் சொல்லும் நேரத்தில்தான் வீடு செல்ல முடியும். அப்படி நேரங்கழித்து வீட்டுக்கு சென்றால் மறு நாள் காலையில் எட்டு மணிக்குப் பதிலாக ஒன்பது மணிக்குவர சலுகை காட்டப்படும்.

மூன்று வாரத்திற்கு மேல் வேலை செய்ததால் மற்ற எல்லோரிடம் பழக்கம் ஏற்ப்பட்டது. காலையில் வந்தவுடன் எந்தெந்த வேலை செய்யவேண்டும். மாஸ்டர்க்கு உதவியாக என்னென்ன பொருட்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது.

காலையில் சரக்குகளை எடுத்துக் கொண்டு லைன்க்கு செல்பவர்களுக்கு வேண்டிய சரக்குகளை எடுத்து வைத்து பட்டர் பன்னில் கிரிம் தடவ வேண்டிதில் சீனி மாவு மற்றும் கத்தி முதலியவற்றை வைத்துவிட்டு. மாஸ்டரின் வருகைக்காக சூட்டு அடுப்பை உதவி மாஸ்டருடன் மற்றும் சிலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அந்த நேரங்களில் முதலாளி சொல்லும் வேலைகளையும் செய்து முடித்துவிடவேண்டும்

மாஸ்டர் வந்துடவுடன் சூட்டு அடுப்பு  அனலுடன்  மாஸ்டர் மனம் கோனாமல் நடந்து கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்யாதவர்களை மாஸ்டர் திட்டுவார். சில நேரங்களில் அவர்களின் சாதியைச் சொல்லித் திட்டுவார்.  அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.  மாஸ்டர் கெட்ட வாரத்தைகளாலும், சாதியச் சொல்லித் திட்டுவதும். கனபதிக்கு பிடிக்கவில்லை. புதிதாய் வந்த பயல் என்று திட்டாமல் இருக்கிறார் நாளைக்கு நம்மையும்“ இப்படித்தானே திட்டவார். என்று நிணைத்தான்.

கணபதி  மாஸ்டர் சொன்ன ஒரு வேலையைச் செய்ய சுனக்கம் காட்டியபோது திட்டி தீர்த்துவிட்டார். அப்போதுதான் கனபதியின் சாதியைப் பற்றிக் கேட்டார்.

“டேய், கணபதி...நீ என்ன சாதிடா...”?????

“ அப்படின்னா.....என்னாண்ணே..”......???

“ஏய,........ஏங்கிட்டயே.... ஓ..ன்  ரூட்ட காட்டூறீயா... தொலச்சு பிடுவேன்னு ”உன் சாதிய சொல்றா..நாயே...!!!”

“ அண்ணே .என்க்கு சாதியே இல்லேண்ணே....”.....

“ அப்போ....நீ சாதி கெட்ட  பயலாடா”.........

“ அதுவும் எனக்கு தெரியாதுண்ணே”......

“மாஸ்டருக்கு , கோபம் வந்தது.. போடாங்......... என்றபடி கெட்டவார்த்தை மெதுவாக சொன்னார்.

உதவி மாஸ்டரைப் பார்த்து “பய..நம்மல கேனையன்னனு நெணைச்சுகிட்டான் ”.....

“ஏடே....... சாதியே இல்லாதவன் எவனுமில்லடா....இந்த நாட்டிலே.... தேவடியாளுக்குகூட சாதி இருக்குடா” வெண்ணெ..... வானத்திலிருந்து வந்தவன் மாதிரி சாதியே தெரியாதுன்னு நடிக்கிற... சூத்துல சூடு வச்சுடுவோம்டீ..” ஒழுங்கா சாதியச் சொல்லு” என்றார் உதவி மாஸ்டர்.

அண்ணே. “ நிஜமாண்ணே... நான் என்ன சாதின்னெ எனக்கு தெரியாதுன்னே”..

“ அடங்கொக்கா,  ஓன் நடிப்ப எங்கிட்ட காட்டாதிடீ..” ஒழுங்கா..நீ என்ன சாதின்னு சொல்லிப்பிடு,

“என்னண்ணே, உன்மையைச் சொன்னா,...? நடிக்கிறேன்னு சொல்றிங்க....” என்னப் பாத்தா எந்தச் சாதின்னு ஒங்களுக்கு தோனுது”


“ங்கோத்தா.... அது தெரிஞ்சா... நான்.ஏண்டா ஒங்கிட்ட கேட்கிறேன்.,என்றார்.
 மாஸ்டர்

மாஸ்டரும்,உதவி மாஸ்டரும் மற்றவர்களும், கணபதி என்ன சாதின்னு . சொல்லச் சொன்னார்கள்,

“ தான் என்ன சாதியின்னு தெரிஞ்சக்கமா இவிங்க விட மாட்டோங்கே போலிருக்கே” என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தான். மாஸ்டர் திரும்பவும் கேட்டபோது.. எங்க வீட்டுல கேட்டு வந்து சொல்றேண்ணே என்று அன்றைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

மறுநாள். மாடசாமி அண்ணன பார்த்து.. சொன்னபோது , அவிங்க என்ன சாதிடா ” என்று கேட்கச் சொன்னதோடு....அங்கு எந்தச் சாதிக்காரன் அதிகமாக இருக்கானோ.. அவன் சாதிய சொல்லுடா...என்றார்.

மறு நாள் வந்தபோது, மாஸ்டர் வருவதற்கு முன்னே, வேறு ஒரு அண்ணன் கேட்டான்.

“ என்னடா. நீ என்ன சாதின்னு கேட்டு வந்தியா...”???

“ ஆமாண்ணே...... நான் சொல்வதற்கு முன் நீங்களெல்லாம் என்ன சாதின்னு சொன்னத்தான் , நான்.. என்ன சாதின்னு சொல்வேன்”

“ கத அப்படி போகுதா..... யாரும் சொல்லேன்னா... நீ சொல்ல மாட்டியாக்கும்”.

“ஆமாண்ணே”

“என்ன ஓமாண்ணே”.. மாஸ்டர் வரட்டும்டீ”....

“மாஸ்டர் வரும்போதே...முதலாளி பார்த்துவிட்டு வந்தார்.. வந்தவுடன் எதுவும் பேசாமல் வேலையை தொடர்ந்தார். வேலையின் இடையேதான் மற்றவர்களிடம் பேசினார்.  அப்பொழுது நாய் சும்மா இருந்தாலும் நாய் வாலு சும்மா இருக்காது என்பது மாதிரி. வேறு ஒரு அண்ணன்  கணபதி சாதியப் பத்தி கிளப்பிவிட்டான்.

மாஸ்டர். கணபதியிடம் என்னடா.... கேட்டீயாடா என்று கேட்டபடி ரெட்டிய எடுக்க பயன்படும்  சூடாகியிருந்த கரண்டியின் முனையை இலேசாக  கனபதியின் கையில் படும்படி செய்தார். சிறிது சூடு பட்ட கனபதி கைகளை உதறியபடி .... அண்ணே..... என்னண்ணே........ என்றான்.

“ இது கொஞ்சோனு சூடு... பெருசா வச்சா..தோலு வெந்து போகும் எப்படி வசதி ” என்றார் மாஸ்டர்.

மாஸ்டரை முதலாளி கூப்பிடுவதாக ஒருவன் வந்து சொன்னதும், கரண்டியை கணபதி கையில் கொடுத்துவிட்டுச் சென்றார் மாஸ்டர். உதவி மாஸ்டரோ மாவை பிசைந்து கொண்டு இருந்தார்.. கரண்டியை வெளியே எடுக்காமல் அடுப்புக்குள்ளேயே வைத்திருந்தான்.

மாஸ்டர் வந்தவுடன்.  ஏற்கனவே தயாராகி வைத்திருந்த அயிட்டங்களை தூக்கி பசங்களிடம் கொடுத்து கொண்டு இருந்தார். ... அடுப்புக்கு உள்ளே இருந்த தட்டுகளை எடுக்குமாறு கனபதியை திட்டினார். பதட்டத்தில் தட்டுகளை வெளியே எடுத்தவன். கடைசியாக இருந்த தட்டுகளை குனிந்து எடுத்துக் கொண்டு இருந்த மாஸ்டர் முதுகில் மேல் தவறவிட்டான்.

சூடு பட்ட மாஸ்டர் ஆ.வூவென கத்தி கணபதிய அடிக்க பாய்ந்தார். கணபதி சூட்டு கரண்டியை போட்டுவிட்டு  வேறு பக்கம் ஓடி பதுங்கிவிட்டான். முதலாளி மாஸ்டரின் சத்தம் கேட்டு ஓடிவந்தார் . உதவி மாஸ்டர் கணபதி முதுகில் மாவு கையோடு ஒரு அடி விட்டு, மாஸ்டரை தூக்க ஓடினார்.

சிறிது நேரத்தில்பேக்கரி தொழிலகமே அல்லோல்பட்டது. மாஸ்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்.. ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு முதலாளி கணபதியை திட்டி ரெண்டு போடு போட்டார்.

கணபதி தவறவிட்டுவிட்டான் என்று பார்த்தவர்களில் சிலர் சொன்னதும் முதலாளி உதவி மாஸ்டரை திட்டினார்.

“இவன் வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம் கூட ஆகல..அதுக்குள்ள இவன்கிட்ட ஏன்டா கரண்டிய கொடுத்து எடுக்கச் சொன்னிங்க”..என்று திட்டினார்.

வெளியே செல்லும் லைன்மேன் சொன்னார்.இதுக்கு முன்னாடி, கனபதி நல்லாத்தான் வேலை செய்தான் அண்ணாச்சி.... இன்னிக்கு பரபரப்புல விட்டுட்டான் அண்ணாச்சி என்று சொன்னதும் கனபதி மேல் இருந்த கோபம் முதலாளிக்கு சற்று குறைந்தது.

அன்று எல்லோரிடமும் திட்டும், அடியும் வாங்கியும், நாள் முழுவதும் சாப்பிடாமல் வந்த சோர்வும், பயத்தால் வந்த கலக்கமும். தெரியாமல். அன்று அவனது மனம் புத்துணர்ச்சியாக இருந்தது





புதன் 26 2014

அந்த முன்னுரைக்கு இதுதான் கதை....


முன் கதையை படிக்க----அந்த கதைக்கு இதுதான் முன்னுரை

பேக்கரி தொழிலகத்தில்  பல பெண்களுடன்  வேலை செய்துவருபவர் ரமா . அதே தொழிலகத்தில் சில ஆண்கள் எண்ணிக்கையில் வேலை செய்து வருபவர் சந்திரன்.

எப்போதும் போலவே.. தயாரான பேக்கரி அயிட்டங்களை வேன் வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். சில பெண்கள் பேக்கரி  வகைகளை சுமந்து வந்து வேனுக்கு உள்ளே இருந்த ரமாவிடம் கொடுக்க.. சந்திரன் ரமாவிடம் இருந்து பேக்கரி வகைகளை வாங்கி பாதுகாப்பாக வரிசையாக அடுக்கி கொண்டு இருந்தான்.

இப்படி ஒவ்வொரு தடவையும் பேக்கரி பொருட்களை வாங்கும்போது ரமா வின் கை சந்திரன் கையில் படுவதும், சந்திரன் கை ரமாவின் கையில் படுவதுமாய் இருக்கும். இதற்கு முன் ரமா இருந்த இடத்தில் சீதாத்தான் இருந்தாள். சீதாவுக்கும்  சந்திரனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு.சீதா பாதிப்படைந்து விட்டதால் சீதா வேலையிலிருந்து நின்று விட்டாள். சீதாவுக்கு பதிலாக சீதாவின் தோழி ரமா இந்த இடத்தில்....

சந்திரனுக்கு திருமணம் முடிந்து ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரமாவுக்கு இன்னும் ஆகவில்லை.சாதி வழக்கப்படி பெண் கேட்டு வந்த ஒன்றிரண்டு பேர்கள்  சீர்செட்டு மற்றும் வரதட்சனைகள் கூடுதலாகக் கேட்டதால்.. தடை பட்டுக்கொண்டு வந்துள்ளது.

ரமா பார்ப்பதற்கு மற்ற பெண்களைப்போல அழகாக இருந்தாலும். ரமாவின் உடல் வளர்ச்சி..மற்றவர்களை ஏறேடுத்து பார்க்க வைத்துள்ளது. ரமா வேலை செய்யும் இடத்தில் உள்ள ஆண்களை ரமாவுக்கு பிடிக்கவில்லை.. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் கிண்டல்,கேலி,ரெட்டை வசனங்கள் இருந்தாலும் அவைகளை ரமாவால் ஒதுக்கி விட முடியவில்லை....

 வேலையின் போது மற்றவர்களை விட சந்திரன் ரமாவிடம் ரெம்பவும் கேலி .கிண்டல், செய்வான்..  சந்திரனும் ரமாவும் உறவுறுக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஒரே சாதி என்ற அடிப்படையில் இரு வீட்டார்களும் ஒறவுக்காரகாளக இருந்து வந்துள்ளனர். ரமா வீட்டுக்கச் சற்று தள்ளியுள்ள காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில்தான் தன் மனைவியுடன் வசித்து வருகிறான்..

வேலையின் போது கைகளை பிடிப்பது, போகும்போதும், வரும்போது உரசிக் கொள்வது. அப்புறம் முட்டிக் கொள்வது பிறகு அதற்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வது இதெல்லாம் நடந்து கொண்டு இருந்தது.  இதற்கெல்லாம் ரமாவும் தடை சொல்லாமலும் எதிர்த்து கேள்வி கேட்காமலும் இருந்து வந்தாள் .

இப்படியாக எந்த எதிர்ப்பும், முனு முனுப்பும் காட்டாததால் சந்திரனுக்கு ரமா மீது ரெம்ப ஆசை வந்து விட்டது. தீபாவளிக்கு சிறிது நாளுக்கு முன்பே போனஸ் போடப்பட்டது. எல்லோரும் போனஸ் வாங்க வரிசையில் நின்றபோது  . ரமாவை தன்னை பார்த்துவிட்டு செல்லுமாறு கூறினான் சந்திரன்.

முதலாளி வேறு ஒரு வேலையாக சந்திரனை வெளியே அனுப்பிய போது, அவன் வரும்வரை காத்திருந்து அவனை பார்த்துவிட்டு வந்தாள் ரமா... அவனை பார்த்த போது , விலை உயர்ந்த சேலை ஒன்றினை பரிசாக அளித்தான்.

ரமா  அதை வாங்க மறுத்தபோது. சின்னஞ்சிறு கதைகளச் சொன்னான். ரமாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் முன் தான் வாங்கிக் கொடுத்த சேலையை கட்டிக் கொண்டு நின்றால்...மாப்பிள்ளை மயங்கி உன்னைக் கட்டிக் கொள்வான் என்றான்.

பிறகு என்ன நினைத்தாளோ... அவன் பேச்சில் மயங்கியவளாக சேலையை பெற்றுக் கொண்டாள்..

 இதற்கிடையில் ஒரு நாள்  தொழிலகத்தின் சாப்பாட்டு இடைவேளையின் போது சந்திரன் ரமாவிடம் ,“ நாம இருவரும் அப்பா- அம்மா விளையாட்டு விளையாடலாமா...? என்று கேட்டான்.

அப்பா-- அம்மா வியைாட்டா.... என்று அதைப்பற்றி தெரியாதவள் போல கேட்டாள்.

ஒனக்கு தெரியலையா.... நான் சொல்லித் தருகிறேன் என்றபோது... ஓஃஓ. அந்த விளையாட்டா... எனக்குத் தெரியுமே...? எங்கம்மா..எங்கப்பாவ பின்னி எடுத்துடுவாங்க..... அப்போ ..எங்கப்பா அழுகிறத  பாத்தா..பாவமா..இருக்கும் என்றாள்.

அவன் “ எங்க வீட்டுல எங்கப்பாதான் - எங்கம்மாவ  வெளுத்து வாங்கவார்.

அவன் மேற்கொண்டு பேசும்போது உடன் வேலை செய்யும் சரசக்கா வந்ததால்  சந்திரன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

அவன் சென்றதை கவனித்துவிட்டு. சரசக்கா..ரமாவிடம்  சந்திரன் சென்ற திக்கை பார்த்தபடி கிசு கிசு த்தாள்.  சரசக்கா சொல்வதைக் கேட்டு ரமா பல்லை கடித்துக் கொண்டாள்.

 தீபாவளியும் வந்து போனது.. தீபாவளிக்காக கூடுதலாக மூன்று நாட்கள் பேக்கரி தொழிலகம் விடுமுறை விடப்பட்டு இருந்தது.   தீபாவளியிலிருந்து ரமாவிடம் விளையாடுவதற்குக்கான  தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு  ரமா மட்டும் வீட்டில் தனியாக இருப்பது  தெரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்க்காக ரமா வீட்டிற்குச் சென்றான் சந்திரன்.

 வீட்டிற்குள்  சந்திரன்   வந்து நின்றதும் ரமா பயந்து  போனாள்..பொருக்கிபய இப்படி சமயம் பாத்து வந்து தொலைப்பான் என்று நிணைக்க வில்லை. சிறிது நேரம் கைகால் உதறல் எடுத்தது. வந்தவனை உட்கார வைத்துவி்டடு பாத் ரூம்க்கு போயிட்டு வருவதாக ஒரு விரலை காட்டியபடி வெளியே வந்தாள்.

அடுத்தடுத்த வீடுகளிலுள்ள அக்கா மார்களை கூப்பிட்டு பார்த்தாள். யாரும் இல்லை. என்பதை தெரிந்து கொண்டுதான் இவன் வந்திருக்கான் தெரிந்து கொண்டாள். சீதாவுக்கு இவன் செய்த துரோகத்துக்கு சரியான பாடம் கற்பிக்கனும்.  என்று மனதில்   நிணைத்தவாறு வீட்டுக்குள் வந்தாள்.

சந்திரன் ரெம்பவும் மகிழ்ந்தவனாக  விளையாட்டைத் தொடங்கலாமா ??ஃ என்று கேட்டவாறு  எழுந்தவன் கதவை அடைக்கச் சென்றான்.

கதவை அடைக்க வேண்டாம் .லேசாக சாத்திவிட்டு..வா...என்றாள் ரமா...

ரமாவின் உத்தரவுக்கு கிழ்படிந்தவனாக வெறுமனவே கதவை சாத்திவிட்டு திரும்பியவனுக்கு எதிர்பாராமல்  முகத்தில் விழுந்த அடியால் நிலை குலைந்து போனான் முகத்தில் அடியோடு.. மேலும்  மேலும் விடாமல் அடி விழுந்தது. அவன் சுதாகரிப்பதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாமல் அடி திடிர் திடிர் என்று விழுந்தது. விழுந்த ஒவ்வொரும் அடியும் ஒவ்வொரு வார்த்தை வசவுகளாக சொல்லி சொல்லி விழுந்தது.

அப்பா..அம்மா விளையாட்டா கேட்குது.. இதுதாண்டா-. எங்கப்பா  ஒன்ன மாதிரி  அடுத்த பொம்பளயோட ..அப்பா அம்மா விளையாடும்போது எங்கம்மா கொடுத்த அடி....., இப்படித்தனடா சீதாவைச்  கெடுத்த பொறுக்கி நாயே என்று சொல்லி .ஒரு பேச்சுக்கு ரெண்டு அடி வீதம்  ரமாவின் தம்பிய வைத்திருந்த கிரிகெட் பேட்டால் வெளுத்து வாங்கி விட்டாள்.

நாயடி.. பேயடியால் நிற்க முடியமல்...முனங்கியபடி கீழே விழுந்தவனை வெளியே இழுத்துப்  போட்டாள்..... என்னை என்ன கேனச்சின்னு நிணச்சியாடா உசிலம்பட்டி கள்ளச்சிடா......  நீ எந்த ஊரு கள்ளன்டா  பொறுக்கி நாயே என்று திட்டியபடி மீண்டும் அடித்தாள்

ரமாவின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து ரமாவை சமாதனப்படுத்தினார்கள். வேலையின் போது சந்திரன் செய்த ஒவ்வொரு சில்ஷிமம்.கிண்டல் நக்கல்கள்  ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி அடித்தாள். அங்க கடிச்சு இங்க கடிச்சு .இப்போ என் வீட்டுகுள்ளே கடிக்க வந்துட்டியாடா. பொறுக்கி.என்று அடி போட்டாள்..

அவனால் சத்தம் போட முடியாமல் கத்தினான். பின் ரமாவீட்டாரும் மற்றவர்களும் சேர்ந்து  போலீஸ் வழக்கு என்று போகாமல் பிரச்சினையை அப்படியே அமுக்கி விட்டனர்.

ரமா சொல்லிச் சொல்லி சந்திரனை அடித்ததைத்தான் கடையில் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள். வெளியில் தெரிந்தால் பிரச்சினை என்றுதான் என்னைக் கண்டதும் அமைதியானார்கள்.

ரமா.. சொந்த சாதிக்காரனை திருமணம் முடித்தாலும்... தனக்கு பிடித்தவனை சாதி மறுப்பு திருமணம் முடித்தாலும் ..ரமாவை பழிக்கு பழியாக பழிவாங்க..சந்திரன்தான்  சாதிவெறி அஸ்திவார புத்தியுடன் முதலில்  நிற்பான் என்று எனக்கு  அப்போது  தோன்றியது..




செவ்வாய் 25 2014

அந்தக் கதைக்கு இதுதான் முன்னுரை....

படம்-tamil.filmibeat.com

அறிவுதான் வளர மறுக்கிறது என்றால்..தலையில் வளரும் முடியும் வளர மறுக்கிறது. ரெண்டுகெட்டான் நிலையில் பாதியோடு நின்றுவிடுகிறது.

பார்ப்பவர்களெல்லாம் தலை முடியைப் பார்த்து என்ன..கோயிலுக்காக...?? என்கிறார்கள். வழுக்கையாக இருந்தால் அறிவு வளர்ந்ததால் இப்படி வழுக்கையாகிவிட்டது என்று பெருமையாக  வழுக்கைக்கு  ஒரு காரணத்தை  சொல்லிக் கொள்ளலாம். அந்த நிலைமையும் ஏற்பட வழியுமில்லை.

என் தாயார், என்னுடைய சிறு வயதில்,தந்தை இல்லாத என்னை நோய் நொடி எதுவும் தாக்கக்கூடாது என்று  கோயிலுக்கு வேண்டிக் கொண்டு மாதத்தில் ஒரு தடவையாவது மொட்டை போட்டுவிடுவார்.

எனக்கு விபரம் தெரிந்து  நான் கடவுள் மறுப்பு கொள்கையாளனாக ஆகும் வரைக்கும் மொட்டை போட்டதால்  தலை முடி ஒவ்வொன்றும் தட்டையாகவும் தடிமனாகவும் மாறிவிட்டது. அதனால் முடி வணங்காமுடியாக கொஞ்சமாக இருந்தாலும்  நெஞ்சை தூக்கி நிமிர்த்தி நிற்கிறது.

இப்படியான வணங்கா முடியை குறைப்பதற்க்காக மருத்துவர் சங்க செயலாளர் பாண்டி நிலையத்துக்கு செனறேன். கலகக்கார சாதிவெறி மருத்துவர் கொய்யாபழம் சொன்னமாதிரி..அவுக அவுக சொந்தத்திலே முடிய வெட்டிக் கொள்ளுங்கடா.. என்பதை மருத்துவர் பாண்டியும் ஏற்றுக் கொண்டு இருந்தால்.. பாண்டி பாடு திண்டாட்டமாக போயிருக்கும். என்னை மாதிரியான வணங்கா முடிகாரர்களுக்கும் ஒரே அவஸ்தையாக இருந்திருக்கும்.

மருத்துவர் பாண்டி, சாதிவெறி மரத்துவர் கொய்யப்பழம் சொன்னதை..“ அவிங்கெடக்கிறான் பீத்தப்பய” ன்னு ,சொல்லி,அந்தாளு சொன்னத நா...கேட்டா எனக்கு வேலை தருவது யாரு ? வீட்டுவாடகை, கடை வாடகை அந்தாளா தருவரு என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால் தன் கிளினிக்கை அனைவருக்கமான கிளினிக்காக நடத்தி வருகிறார்.

பாண்டி கிளினிக்கு நான் போன சமயம், கிளினுக்குள்ளே ஒரே சிரிப்பும் பேச்சு சத்தமுமாய் இருந்தது. சிவ பூஜையில் கரடி நுழைந்த கதையாக இருக்கக்கூடாது என்று நிணைத்து மெதுவாக கடையின் வாசலில் போய் நின்றேன்.

பேசிக் கொண்டு சிரித்தவர்கள் என்னைக் கண்டவுடன்.அங்கு அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பது மாதிரி ,அப்படியே சப்த நாடியும் அடங்கியவர்களாக அமைதியானார்கள்.

மருத்துவர் பாண்டி  தன் தொழிலின் சாதனமான கத்தரிக் கோலால் கஜக்..கஜக.கஜக் என்று சேரில் அமர்திருந்தவரின் தலை முடியை குறைத்துக் கொண்டு இருந்த சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தது.

என்னாடா.. இது..... என்னைக் கண்டவுடன் எல்லோரும் இப்படி மவுனமாகிவிட்டார்கள் என்று. ஆச்சரியப்பட்டு அதன் காரணம் அறிய ஒவ்வொரு முகத்தையும்  ஒரு வித எள்ளலோடு கவனித்தேன்.

நான் அப்படிப் பார்ப்பதைக் கண்ட ஒருவர்  வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சத்தத்துடன் சிரித்துவிட்டார். எல்லோரும் அவரை முறைத்தார்கள்.

அந்த முறைத்தலை..திசை திருப்புவதற்க்காக நான் இப்படிக்கேட்டேன.

என்னங்கப்பா...... ஒரே சிரிப்பும் பேச்சுமாய் இருந்தவர்கள். என்னைக் கண்டதும் அப்படியே பேச்சு மூச்சும் இல்லாமல் அமைதியாகிவிட்டீர்கள். நான் இடையூறு எதுவும் செய்து விட்டேனா..... வேனா..நான் போயிட்டு..அப்புறமா..வரவா... என்றுவிட்டு மருத்துவர் பாண்டியின் ஒப்புதலுக்காக பாண்டியைப் பார்த்தேன்.

அப்படியெல்லாம் ஒன்னுமில்லண்ணே...... வேறு ஒரு சம்பவத்தை பத்தி சொல்லி சிரிச்சு கிட்டு இருந்தாங்க..... நீங்க வந்தவுடன் மரியாதைக்கு அமைதியாகிட்டாங்கண்ணே என்றார்.

பெரிய நகைச்சுவை சம்பவமாக இருக்கும்போல...... அந்தச் சம்பவத்த பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா????? நானும் சிரிச்சு அதிக நாளாச்சு என்றும், உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சொல்ல வேண்டாம் என்றேன்.

“இது வேறண்ணே“ என்றார். சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தவர்.

பாண்டியிடம் மெதுவாக பேசினேன்.  கைப்பேசியில் அந்தப்படம் பார்த்து அதில் வந்த காட்சியைப் பற்றி சிரித்தீர்களோ..அதனால்....இழுத்தேன்.

மருத்துவர் பாண்டி.. அது இல்லேண்ணே , இது வேறுண்ணே என்றுவிட்டு மற்றவர்களை பார்த்து கண்சாடையாக சொல்வதற்கு அனுமதி கேட்டார்.

 மற்றவர்கள் சிறிது நேரத்துக்குப்பின் எனக்கு  எச்சரிக்கையுடன் .ஒரு நிபந்தனை விதித்து நடந்த சம்பவத்தை அதாவது சிரித்து பேசிக் கொண்டு இருந்த நிகழ்ச்சியை  பாண்டி சொல்ல அனுமதித்தனர்.

சம்பவத்தை தெரிந்த நானும் அட, அப்படியா...!!! நிஜமாகவா...!! என்று ஆச்சரியம்  அடைந்தேன.

நான் ஆச்சரியம் அடைந்த, அந்த சம்பவத்தை அடுத்த பதிவில்  கதையாகச் சொல்கிறேன்.

திங்கள் 24 2014

இது என் வலி அல்ல....சமூகத்தில் நிலவும் அவ(ள்/ன்)ர்களின் வலி...

குறும்படத்தின் முன்னுரைக்கு படிக்க---
-http://socratesjr2007.blogspot.in/2014/11/blog-post_23.html


வலி - தமிழ் குறும்படம் (ஆங்கிலம் வரிகள் மூலம்)





மேற்கண்ட குறும்படம் தெரியவில்லை என்றால் இந்த சுட்டியில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=7v85vzziBd8

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...