பக்கங்கள்

சனி 23 2014

குஜராத்திகாரரின் ஞானக் கண்ணை திறந்துவிட்ட குஜராத்திகாரர்


படம்-pulivalammuslim.blogspot.com




பெரியதும் சின்னதுமாய் ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செய்து வந்த பல சமஸ்தானங்களை நைச்சியமாக பேசியும், மடக்கியும், மசியாதவர்களை மிரட்டியும், எதிர்த்தவர்களை படை கொண்டு அடக்கியும் இந்தியா என்ற பேரரசை நிறுவியவர்   குஜராத்திகாரர் .

இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும். பசியாலும்.பட்னியாலும். உடுத்திய அரை ஆடையுடனும், ஆயிரம் ஓட்டைகள் உடைய ஓலைக் குடிசையில் தங்கி. ஏழைக்களுக்காகவும், அரியின் புதல்வர்களுக்காகவும்,  தன் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயரை எதிர்த்து வாழ்வா? சாவா? என்று அகிம்சை வழியில் நின்று போராடிக் கொண்டு இருந்தவர் குஜராத்திக்காரர்.

இப்படி... இந்திய சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரர்க்கு   தினம் பத்து பேரிச்சம் பழங்களை ஊற வைத்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.

ஒரு நாள். போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரரை  மரியாதை நிமித்தமாக காணச சென்றார் . இந்திய பேரரசை நிறுவிய  குஜராத்திக்காரர். அப்போது  அந்த குஜராத்திக்காரர் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதைக் கண்ட இந்த குஜராத்திக்காரர். . மேலும் ஐந்து பழங்களை தந்து இதையும் சேர்த்து சாப்பிடுங்கள் என்று  கொடுத்துவிட்டு,..பத்துக்கும் பதிணைந்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்.

உடனே,  பேரிச்சம்பழம் சாப்பிடும் பழக்கமுள்ள குஜராத்திக்காரர்,  கூடுதலாக பேரிச்சம் பழங்கள் கொடுத்த குஜராத்திக்காரரைப்  பார்த்து ,“நீ.என் ஞானக் கண்ணை. திறந்துவிட்டாய்” 

பத்துக்கும் பதிணைந்துக்கும் வித்தியாசம் இல்லையென்றால், பத்துக்கும்,ஐந்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. “இனி எனக்கு பத்தோ,பதிணைந்தோ பேரிச்சம் பழங்கள் வேண்டாம். ஐந்து பேரிச்சம் பழங்களே போதும் என்று சொல்லி விட்டார். அந்தக் குஜராத்திக்காரர்..

.

.


வெள்ளி 22 2014

சாஸ்திரம் பார்த்த சாஸ்திரக்காரன்......

படம்-udhayasankarwriter.blogspot.com


மழையுமில்லாமல் விளைச்சலுமில்லாமல் வருமானமும் இல்லாமல் தவித்து  கொண்டு இருந்த நேரம்.

கிராமத்து மக்களில் பலர் பொழைப்பு தெடி நகரத்துக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்படி போய் கொண்டு இருந்தபொழுது,பக்கத்து ஊரில் இருந்த நல்ல மனசுக்காரர் ஒருவர். வழி நடையாய் செல்லும் மக்களின் தாகம் தணிக்க , தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்கி கொண்டு இருந்தார்.

வழிநடையாய் சென்ற மக்கள் அந்தத் தண்ணீர் பந்தலில் உள்ள கம்புகளில் மாட்டி வைக்கப்பட்டு இருந்த குவளைகளை எடுத்து தண்ணீர் வாங்கி குடித்து விட்டு அந்தக் கம்புகளிலே குவளையை மாட்டி விட்டுச் சென்றனர்.

சாஸ்திரம் படித்த சாஸ்திரர்க்காரர் ஒருவர் வந்தார். வந்தவர். மாட்டி வைக்கப்பட்ட குவளைத் தொடாமல் .பந்தலுக்குள் வைத்திருந்த புத்தம் புதிதான குவளையில் தண்ணீர் கேட்டார்.

அதைக் கேட்டு கொண்டு இருந்த தண்ணீர் வழங்கி கொண்டு இருந்த பணியாளர். ஒருவர். “அய்யா, இங்கு மாட்டியுள்ள குவளைகள் புதிதானவைதான், தாங்கள் அதிலே தண்ணீர் வாங்கி பருகலாம் என்றார்.

அது கேட்ட சாஸ்திரர்காரர் சுத்தமானவையாக இருந்தாலும். சுத்தமில்லாத நீசர்கள்  தொட்டு குடித்துவிட்ட குவளைகளில் குடிப்பது நான் கற்ற சாஸ்திரத்துக்கு எதிரானது . அதனால் உள்ளே இருக்கும் குவளையில் தண்ணீர் தாரும் என்றார்.

 அய்யா, வாய் வைத்து குடிக்கும் சிறுவர்களுக்கான குவளைகள் தனியாக இருக்கிறது. உங்கள் முன் இருப்பவைகள் எல்லாம்  அன்னாக்க குடித்துவிட்டு வைத்ததுகள். நிீங்கள் நோக்கு,கழிப்பு பார்த்தால் ,உங்கள் திருப்திக்கு கழுவி விட்டு கொண்டு தண்ணீர் வாங்கி குடியுங்கள் என்றார்.

தண்ணீர் குடித்துவிட்டு சென்றவர்கள் என்னென்ன சாதிக்கார்கள் என்று தெரியாது . அதோடு குவளையை கழுவினால் தண்ணீர் வினாகும் அப்பா... அதனால்தான் அங்கியிருக்கும் புதுக் குவளையை கேட்கிறேன் என்றார் சாஸ்திரக்காரர்.

சாஸ்திரக்காரரும்,பணியாளரும் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில்,  தண்ணீர் வழங்க  ஏற்ப்பாடு செய்த நல்ல மனசுக்காரர் வந்து சேர்ந்தார். சாஸ்திரக்காரரர் கோரிக்கையை கேட்டவர். 

அய்யா சாஸ்திரக்காரரே...... பஞ்சத்தால் எல்லோரும் பரிதவித்து இருக்கையிலே... இப்படி குடிக்கிற தண்ணியிலே.. சாஸ்திரம் பார்க்கிறீரே அய்யா...நீர் என்ன ஜென்மம் அய்யா.....என்று திட்டியபடி .. உள்ளே இருந்த புதியக் குவளையில் எடுத்து தண்ணீர் வழங்கும்படி பணியாளரை பணித்தார்.


புதியாய் இருந்த குவளைகளோ....உடைந்து இருந்தாலும். அதிலேயே தண்ணீர் வாங்கி குடித்தார்..சாஸ்திரம் பார்த்த சாஸ்திரக்காரர்.

.


வியாழன் 21 2014

சாதியாய் பிரிந்து ... சாதிவெறியால் இணைந்த சாதிவெறித் தமிழர்கள்..!!

படம்-www.vinavu.com

புலியை முறத்தால்
விரட்டி அடித்தாள்
வீரத் தமிழச்சி.....

குற்றமிழைத்தவன் தன்
மகன் என்றும் பாராமல்
தேர்க்காலில் ஏற்றிக்
கொண்றார் மனு நீதி சோழன்...

போரில் புறமுதுகில்
வேல்வாங்கி வந்தான்
மகன் என்று அவனுக்கு
பாலூட்டிய முலைகளை
அறுத்து எறிந்தாள்...
மாணமிகு தமித்தாய்........

கனக விசயனின் தலையில்
கல் சுமந்து வந்து
 கண்ணகிக்கு சிலை
வடித்தான் சேரன் செங்குட்டுவன்...

இமயத்தில் மீன் கொடி 
ஏற்றி பாரில் தமிழ்
பெருமையை பறை
சாற்றினான் பாண்டியன்..

தமிழனின் தமிழச்சியின்
விரத்தையும்,மானத்தையும்
நீதி தவறாத பண்பையும்
மேடைதோறும்,அரங்குதோறும்
முழங்கி வந்த சாதியத் தமிழர்கள்

தனியார்மயம்,தாரளாமயம்,
உலகமயத்தால் வந்த வாழ்வையும்
அடக்கு முறையின் விதியையும்
கண்டு தப்பிக்கிறார்கள்.......

சாதியாய் பிரிந்து சாதி 
வெறியால் இணைந்த
சாதிவெறித்தமிழர்கள்.


புதன் 20 2014

அடுத்த கவளம் கொய்யா பழத்துக்குதான்..


படம்-www.vinavu.com


இல்லாதவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாலுகால் நாய்கள்., தெருப்பொறுக்கும் வேலைகளோடு.  இல்லாத வீட்டு எஜமானர்கள் சாப்பிடும் நேரத்திற்கு சரியாக ஆஜராகி. அவர் முன் அமர்ந்திருக்கும்.

அந்த நேரத்தில் எஜமானவர் சொத்தை பிசைந்து, ஒவ்வொரு கவளமாக வாய்க்குள் திணித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு கவளமாக உள்ளே போய் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கும் நாலுகால் நாயானது அடுத்த கவளம் அதாவது அடுத்த கவளம் .தனக்குத்தான் என்று ஒவ்வொரு தடவையும் நிணைத்துக் கொண்டு, தலையையும் காதையும் அப்படியும் இப்படியும்  ஆட்டியும் விரித்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும். 

அந்த நாலுகால் நாய் நிணைத்தது   போல் அடுத்த கவளம்  கடைசியல்தான்  கிடைக்கும் என்பது பலதடவை அதுக்கு தெரிந்திருந்தாலும் அந்த நாலுகால் நாய் அதை மனிதில் கொள்ளாது. அடுத்தது நமக்குத்தான்  நமக்குத்தான் என்று  நிணைத்து கொண்டு இருக்கும்.

அது  ... மாதிரிதான். தைலாபுரத்து கொய்யாப்பழமும் “மக்கள் பிரச்சனையில் நான் முன்மொழியும் கருத்தைத்தான் இதர தலைவர்களும் வழிமொழிகிறார்கள்” என்று பெரிய பில்டப்பை கூறி அடுத்த 2016 ஆட்சி நமக்குத்தான் ஆசையில் மிதந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு மேல் பல அப்பன்கள் அம்மன்கள் இருப்பைதையே மறந்துவிட்டு.........

இதிலிருந்து அடுத்த கவளம் தைலாபுரத்து கொய்யாப்பழத்துக்குத்தான் என்பது ஊர்ஜதமாயிருச்சு.......என்பது தெளிவா தெரியுது....

திங்கள் 18 2014

குத்துகாலிட்டு உட்கார்ந்த நிலையை என்னவென்று சொல்வார்கள்??



படம்-www.katturai.com


கிராமப்புறங்களில், மறைவான இடங்களில். ஆண்,பெண், சிறுவர்கள், சிறுமியர்கள் குத்துகாலிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலையை பார்ப்பவர்கள்  என்னவென்று சொல்வார்கள்.

இதே போல் நகரத்தில் உள்ள நடுத்தரமான வீடுகளிலுள்ள கழிப்பறையிலோ, நகரத்து வீதிகளில் உள்ள கட்டண கழிப்பறைகளிலோ,  குத்துகாலிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலைகளை என்னவென்று சொல்வார்கள்.

காலையில் இருந்தால் காலைக்கடன் என்றும் மாலையில் இருந்தால் மாலைக்கடன் என்றும் இரவில் இருந்தால் இரவுக்கடன் என்றும்,ரெண்டுங்கெட்டான் நேரத்தில் இருந்தால் ரெண்டுங்கெட்டான் கடன் என்பார்கள் நாகரிகமாக............

என்னுடைய மொழிகளில் சொல்வதென்றால் வெளிக்குப் போவதை சாமி கும்பிடுவது என்று சொல்வேன்.அவசரமாக வருவதை, அருள் வந்துவிட்டது என்று சொல்வேன். கழிப்பறையை கோயில் என்று சொல்வேன்.

இந்தக் கோயில்களிலும்  பாகுபாடு உண்டு. ஒன்று கட்டண தரிசனக்கோயில், மற்றொருன்று கட்டணமில்லா தரிசனக்கோயிலிலும் இரண்டு வகையுண்டு. ஒன்று தங்கள்  வீடுகளில் சொந்தமாக கழிப்பறை வைத்திருப்பவர்கள்,இரண்டு  இல்லாமல்  திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்கள்.

இப்படிபட்ட கோயில்களில் மனிதன் திண்டதில் மிச்ச மீதி கழிவுகளை வெளியேற்ற  குத்துகாலிட்டு உட்கார்ந்திருக்கும் நிலைக்கும் ஒரு ஆசனத்தின் பெயரைச்சூட்டி, அப்படி அமர வைத்திருக்கும் ஒரு கற்சிலையையும் சுட்டிகாட்டி  அதற்கும் ஒரு அவதார வரலாற்றுக் கதையென்று ஒன்றை பரப்பி.

 வெளிக்கு போக குத்துகாலிட்டு உட்கார்ந்து இருப்பது  குக்குடம் ஆசனம் என்றும்,  வெளிக்கு இருக்கும்  கோலத்தில்  ஐயப்பன் சிலை அமர்ந்திருப்பதை ஒலி-ஒளி காட்சியளித்து . அந்தச் சிலைக்கு கண்,காது,மூக்கு வைத்து வைத்து  பரப்பி விடுவது இருக்கே....................


இதைத்தான்.....   மகா......மகா.............. புல்லூருவித்தனம் என்பார்களோ???

ஞாயிறு 17 2014

சாகப் போகையிலே...சங்கரா.....சங்கரா....

படம்-www.dinakaran.com


ஆட்சியில் இருக்கும்போதோ பதவியில், அதிகாரத்தில் இருக்கும்போதோ. தன் கண்முன்னோ , அல்லது தனக்கு தெரிந்தோ,அல்லது தாங்கள் கண்டு பிடித்தோ, அல்லது பரவலாக பேச்சு அடிபட்டபோதோ, தவறுகளோ, முறைகேடுகளோ, கொடுமைகளோ, ஊழல்களோ, எதாவது ஒன்று நடந்த பொழுது, நடக்கும் பொழுது , நடந்து முடிந்த பொழுது, 

அதனால் தங்களுக்ககோ, தங்களைச சேர்ந்தவர்களோக்கோ பாதிப்போ, குறைபாடுகளோ, இம்சைகளோ வந்தால் அதைப்பற்றிய விவரங்களை மூடி மறைப்பது, அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பது, தங்களுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தால், அதைப்பற்றி உலகத் தத்துவம் பேசுவது.. இப்படியாகத்தான்  மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டவரையிலுள்ள ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்   இருந்து வந்துள்ளார்கள்.

நல்லா இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள், மற்றவர்கள் ஆடிய ஆட்டத்தைக கண்டு காணாமல் இருந்தவர்கள். சாகும்போது சங்கரா....சங்கரா...என்று புலம்புவது மாதிரி..................

முன்னால் உச்சி குடுமி மன்றத்தில் உச்சி குடுமியாக இருந்தவர். தாம பதவியில் இருந்தபோது நடந்த ஊழல்களை பற்றி வாய் திறக்காமல் இருந்தவர். தனக்கு தெரிந்த சட்டவழி முறைகளின்படியே வெளியே தெரியப்படுத்தாமல்,அம்பலத்துக்கு கொண்டு வராமல்.. இருந்தவிட்டு

பதவியில் ஓய்வுப் பெற்று. பதவிக்கான பணப்பலன்களை எல்லாம் பெற்று விட்டு, தனக்கு இனி எந்தப் பாதிப்பும் வராது என்று தெரிந்த நிலையில் தன் பதவிக் காலத்தில் நடந்த  நீதிமன்ற ஊழலை வெளிப்படுததுவதால் என்ன பலன் , என்ன நடவடிக்கை  வந்து விடப்போகிறது...

சரி.. சொல்வதிலும் நடுநிலையுடன் எல்லாவற்றையும் சொல்லாமல் ஒரு பக்கம் மட்டுமேயான ஊழலை சொல்லிவிட்டு, மறுபக்க ஊழலை பற்றி தனக்கு தெரியவே தெரியாது என்று மறைப்பது....    அக்கம்பக்கம் பார்க்கக்கூடாது என்று குதிரையின் கண்ணை மறைப்பது போல்தானே.... இப்படித்தான் இவரின் பணியின் போது இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

இதுவும் மக்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது.....மக்களைத்தான் தட்டிவிட்டா ...சுத்தும் .....செக்குமாடா  மாத்திப்பிட்டாங்களே!!!


சாகும் தருவாயில் இருப்பவர்கள்..சங்கரா....சங்கரா.....என்று புலம்புவது போல்தான்  இருக்கிறது.. இவர் சொல்வதும்

ஊழலில்  திளைத்தவர்கள்   பேருக்குக்கூட............                                                         

அரிச்சந்திரனாக....மாறிவிடப்போவதில்லை. மறைந்திருந்திருந்து  வாலியை தாக்கிய  பின்  வெளியே வரும் வில்லன் ராமனைப் போல் தைரியமாய் உத்தமபுத்திரர்களாக  வெளியே  வந்து அதற்கும் ஒரு கதை.ஒரு வரலாறு எழுதுவார்கள்.

வாழ்க! ஊழல்!     வளர்க!!ஊழல்!!!



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...