பக்கங்கள்

சனி 21 2017

ஒரு தனியார் பள்ளியின் விழாவில்.....




சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தார் அவர்..பேசுவதற்கு முன்னால் ஒரு அறையில் உட்கார வைத்திருந்தார்கள். அவர்  பக்கத்தில்  அமர்ந்திருந்த  தமிழ் டீச்சர். 

சார் எங்க students சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க படிக்கிறீங்களா?' என்றார். 

பேசப் போகும்     அவருக்கும் பொழுது போகனுமே ,கொடுங்க' என்றார்..

 அந்த டீச்சர்  பெருமையோடு மூன்று கவிதைகளை எடுத்து வந்தார். 'நிலா' ன்னு தலைப்பு கொடுத்திருந்தோம் சார். இவங்க மூணு பேரும் சூப்பரா எழுதியிருந்தாங்க '

'எந்த வகுப்பு படிக்கிறார்கள்?  ' என்றார்.

 '6 லிருந்து 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சார் '.

' ஏன் 9th to 12 th என்னாச்சு?

 'அவங்களை ஸ்டடிஸ்ல  மட்டும் concentrate பண்ணச் சொல்லி பிரின்ஸிபால் மேடம் சொல்லிட்டாங்க சார்

 'சாப்பிடவாவது விடுவீங்களா?' 

அவருடைய கிண்டல் அவருக்குப் புரியவில்லை.

 'நல்ல ஹெல்த்தி அண்டு ஹைஜீனிக் ஃபுட் தரச் சொல்லி பேரன்ட்ஸ ஃபோர்ஸ் பண்றோம் சார். but அவங்க சரியா கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குறாங்க சார் '
சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்

.கவிதைகளைப் புரட்டினார். மூன்றில் ஒன்று பாரதிதாசன் கவிதை 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து '.இன்னொன்று 'வண்ணதாசனின்'நிலா பார்த்தல்.மூன்றாவது கவிதையும் சொந்தக் கவிதையில்லை.யாரோ ஒரு உள்ளூர் கவிஞர் எழுதித் தந்ததாயிருக்கும் என்று மட்டும் ஊகித்தார்.

 டீச்சரிடம் 'வண்ணதாசன் கவிதை படித்ததில்லையா?' கொஞ்சம் கோபமாகக் கேட்டார். 

அவர் ரொம்ப அப்பாவியாய் 'யார் சார் அது? ' என்று வினவவும் சிரிப்பு வந்து விட்டது.

 பாரதிதாசனின் 'நீலவான் ஆடைக்குள் கூட படித்ததில்லையா?

 'பாரதிதாசன் தெரியும் சார்.  அவர் பாவேந்தர். புதுச்சேரியில் பிறந்தவர். குயில் என்ற இலக்கிய  இதழை நடத்தியவர். 1964 ல் இறந்தார். இது அவர் கவிதையா?  படிச்சதில்ல சார் ' என்றார்.

 நீங்க  எங்க படிச்சீங்க 'என்று கேட்டார். ' 

 'கரஸ்ல சார். ட்வெல்த் முடிச்சதும் கல்யாணம் ஆயிருச்சு. வீட்டுக்காரர் வாத்தியார் சார். அவர்தான் சொன்னாரு,தமிழ்  எடுத்தா கஷ்டப்படாம டிகிரி வாங்கிடலாம்னு.அதான் சார் எடுத்தேன். ஆனால், ஸ்கூல் படிக்கறப்பல்லாம் எனக்கு தமிழ்னா அலர்ஜி சார் ' என்றார்

அவர் ஒரு நிமிடம் அரசுப்பள்ளிகளின் தரமின்மை குறித்து பொளந்து கட்டும் சில  அறிவுஜீவிகளை நினைத்துக் கொண்டார். 

'ஒரு உதவி செய்றீங்களா?நீங்க ரிஜக்ட் பண்ணிய கவிதைகளை எடுத்துட்டு வர்றீங்களா?என்று கேட்டார் ' '


' எதுக்கு சார் '

'பொழுது போகனும்ல'எனக்கு என்றார்

'ஓகே சார் '

ஒரு கட்டைக் கொண்டு வந்தார். 20 கவிதைகள் இருக்கும். பெரும்பாலான மாணவர்கள் நிலா நிலா ஓடி வா' பாடலையே எழுதி வைத்திருந்தனர். அதையே ஒருவன் வித்தியாசமாக  எழுதியிருந்தான்.

'நிலா நிலா ஓடி வா!
ஜீன்ஸ் பேன்ட் கொண்டு வா!
ஜிப்பு போட்டு கொண்டு வா!
நடு வீட்டில் வை
மிஸ் வந்தா பொய் '

அதை எடுத்து  ஓரமாக வைத்தார். அந்தத் 'தமிழரசி ' இதைக் கவனித்தார். 

'பெரிய அராத்து சார் இவன் .கவிதையை வகுப்பில் வச்சு வாசிச்சு காட்டி நல்லா திட்டி விட்டுட்டேன் '

'ஆமா, தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடனும் இல்லையா,?என்றார்

அவர் அதற்கும் ' எஸ் சார் '  என்றார். 

மற்றொருவன்

'நிலா 
உலா 
பலா 
கலா 
டீலா நோ டீலா? ' 

என்று முடித்திருந்தான்.டிஆரின் தாக்கம் இந்தத் தலைமுறை வரை நீடிப்பதைக் கண்டு வியந்தார். 

' வானத்தில் 
யாரோ 
ஆப்பம் 
சுட்டு வைத்திருக்கிறார்கள்;
மனிதர்கள் 
தூங்கி விட்டார்கள்; 
விண்மீன் பூச்சிகள் 
தின்ன வருகின்றன '
என்று  ஒரு கவிதை.- இதையும் ஓரமாக வைத்தார்.. 

'இதுவும் அராத்துதான் சார்! ஆனா என்ன கொஞ்சம் நல்லா படிப்பான். அதனால திட்டு வாங்கறதில்ல'

கடைசியாக  ஒரே ஒரு கவிதை எஞ்சியிருந்தது. 

'நிலா 
வானத்தில்;
அம்மா 
என் மனதில்; 
அம்மா 
சோறு தருவாள்; 
ஆனால், 
நிலா 
இருந்தால்தான் பசிக்கும். 
நிலா 
போனால் 
வந்து விடுகிறது
அம்மா? '

சட்டென்று மனம் கலங்கியது அவருக்கு.. இது ஒரு நல்ல கவிதை இல்லைதான். ஆனால், கவிதைக்கான ஏதோ ஒரு விதை இதை எழுதிய கரங்களுக்குள் ஒளிந்திருப்பதாகவே உணர்ந்தார்
'எனக்கு இன்னொரு உதவி செய்யுங்க! பரிசு வாங்குன மூணு பேரை முதலில் வரச் சொல்லுங்க!  அவங்க போனப்புறம் இதை எழுதுன பொண்ண வரச்சொல்லுங்க என்று விட்டு .பேப்பரை தமிழரசியிடம்' கொடுத்தார். 

'பிரின்ஸிபால் கிட்ட கேட்டுட்டு கூட்டி வர்றேன் சார்' என்றார்

அவர் பிரின்ஸிபால் அனுமதித்த பிறகுதான் முதலிரவு அறைக்குள் கூட போயிருக்கக் கூடும். என்று நிணைத்தார்

அந்த மூன்று பிள்ளைகளும் வந்தார்கள். மூவர் முகத்திலும் கொஞ்சம் பணக்கார களை. இயல்பாக இருந்தது. வரவழைக்கப்பட்டவர்களில். மூவரில் இரு சிறுமிகள்; ஒரு சிறுவன். இரண்டு பேரும் சீக்கிரமாகவே ஒத்துக் கொண்டார்கள். ஒரு சிறுமியின் சித்தப்பா தமிழ்ப்பேராசிரியராம்.இன்னொரு சிறுமியின் அத்தை தமிழ் ஆர்வம் கொண்ட மேத்ஸ் டீச்சர்(அவர்தான் வண்ணதாசனை கடத்தி வந்து தன் மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார்).

பையன் லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.'என் கவிதைதான் இது ' என்று  அடம் பிடித்தான்.' சரி, அந்தக் கவிதை என்ன சொல்லுதுன்னு சொல் பார்ப்போம் 'என்றவுடன்  அந்தக் கவிதையை பார்க்காமல் அப்படியே ஒப்பித்தான்.

'தலைவா நான் கேட்டது மீனிங் '

இப்போது லேசாய் தலை கவிழ்ந்து நின்றான். 

அவன் அப்பா தாசில்தார். அவர் ஒரு தமிழாசிரியரைப் பிடித்து, அந்தத் தமிழாசிரியர் ஒரு உள்ளூர் கவிஞரைப் பிடித்து  இந்தக் கவிதையை வாங்கி வந்து  அவனிடம் தந்திருக்கிறார்  (தந்தை மகற்காற்றும் உதவி)

'உங்களுக்கு கவிதை வரலைல. நீங்க  ஏன் கவிதை போட்டில சேர்ந்தீங்க? கொஞ்சம் கோபமாகக் கேட்டார். 

'மிஸ் தான் கண்டிப்பா சேரச் சொன்னாங்க 'மூவரும் கோரஸாகச் சொன்னார்கள். 

'இல்ல சார், நல்லா படிக்கிற புள்ளைகண்ணா கவிதை எழுதிட்டு வந்துரும். அதான் இவங்களை ஃபோர்ஸ் பண்ணினேன் 'என்றார் தமிழரசி

'நல்லா படிக்கிற புள்ளைகளுக்குத்தான் கவிதை வரும்ம்னு உங்க கிட்ட சொன்னது யாரு?  என்று கேட்டார் 

' பிரின்ஸிபல் சார் '

அப்போது அந்தச் சிறுமி உள்ளே வந்தாள். கீழ்நடுத்தரக் குடும்பம் என்பது பார்த்த  உடனே தெரிந்தது. பெற்றோர்களின் டவுசரையும் உருவிக் கொண்டு திருப்பியனுப்பும் இந்தப் பள்ளியில் இவளைச் சேர்த்ததற்காக இவள் அப்பா யாரோ ஒருவனுக்கு கண்டிப்பாய் கடன்காரனாகியிருப்பார்.என்று......

'அம்மா என்ன செய்றாங்க?' அவள் கைகளைப் பற்றியபடி கேட்டார்.. 

'செத்துப் போயிட்டாங்க சார் '

அவள் அழுகையை மென்று முழுங்குகிறாள் என்பது தெரிந்தது.
' எப்ப? 

அவர்  குரலும் லேசாக  உடைந்திருந்தது. 

'போன மாசம். தீ வச்சுக்கிட்டாங்க'

அவர் ஏன் என்று கேட்கவில்லை. 'தமிழரசிக்கும்' அது அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும்.  அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது. இதையெல்லாம் பிரின்ஸிபல் கேட்கச் சொல்லியிருக்க மாட்டார். 

'கவிதை உன்னுதா? பேப்பரைக் காட்டிக் கேட்டார்.. 

'சத்தியமா என்னுது சார் 'ஒரு கையை இன்னொரு கையின் மேல் வைத்துச் சொன்னாள்.

.'நல்லா இருக்கு. ....கவிதையெல்லாம் படிப்பியா?'

'தமிழ் புக்கில் உள்ள கவிதையெல்லாம் மனப்பாடமா தெரியும். அப்பப்ப தோணுறத நோட்டில் எழுதி வைப்பேன் '

பரிசு பெற்ற மூன்று கவிதைகளையும் அவளிடம் நீட்டினார். 

'இதைப் படி '

'சார், இந்தக் கவிதை எனக்குத் தெரியும் '
'
எங்க படிச்சிங்க..”

படிக்கல சார். டிவில போட்ட பட்டிமன்றத்தில் கேட்டேன். பாரதிதாசன் எழுதுனது '

அவர் ஒரே ஒரு நிமிடம் திருப்பி தமிழரசி  டீச்சரைப் பார்த்தார்.. 

மற்ற  இரு கவிதைகளையும் படித்தாள். இடையிடையே நிறைய சந்தேகம் கேட்டாள். 
'கவிதை என்ன சொல்லுது 'என்று கேட்ட போது கிட்டத்தட்ட சரியாகவே சொன்னாள். 

அவர் டீச்சரிடம் சொன்னார். 

'இந்தப் பொண்ணுக்குத்தான் ஃபர்ஸ்ட் கொடுக்கனும் '

'சார், பிரைஸ் லிஸ்ட் ஏற்கனவே பிரிப்பேர் பண்ணியாச்சு ' என்று தமிழரசி டீச்சர் 'பதட்டத்தோடு பதில் சொன்னார். 

'மந்திரிகள் பேரையே  தமிழ்நாட்ல  அடிச்சு அடிச்சு எழுதுறாங்க.  இதுவா கஷ்டம்? என்றவர்.  நான் சொன்னேன்னு பிரின்ஸிபல் கிட்ட சொல்லுங்க 'என்றார்

'ஓகே சார் ' 

'தமிழரசி ' முதல்வர் அறையை நோக்கி நடந்தார். அந்தச் சிறுமி என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். 

'சார்,நான்தான் ஃபர்ஸ்டா?'என்று கேட்டாள் சிறுமி..

அந்தக் குரலில் அப்படி ஒரு சந்தோஷம். அந்த முகத்தில் ஒட்டிக் கிடந்த நெடுநாள் சோகம் இப்போதுதான் இந்த  அறையில் உடைந்து சிதறியிருக்க வேண்டும். 

'ஆமா ' என்று அவரும் பூரிப்போடு சொன்னார்.

'சார் நான் அப்ப  அகமது, ஜெயந்தி கிட்ட நான்தான் ஃபர்ஸ்ட்ன்னு சொல்லிடவா? '

அகமது  ஜெயந்தி.... 'யார் அவங்க'.....

'என் ஃப்ரெண்ட்ஸ் ' சார்...

அவள் அந்த  அறையிலிருந்து வெளியேறவில்லை. கிட்டத்தட்ட பறந்து போய்க் கொண்டிருந்தாள்.

அந்த   விழாவில் அவர் பேசி முடித்து விட்டதும்். டிஎஸ்பி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். இலக்கியப் போட்டிகளுக்கு அவர்தான் பிரிசு வழங்க வேண்டும். அந்தச் சிறுமிக்கு கை தட்டு கிடைக்கப் போகும் தருணத்தைக் காண ஆவலாயிருந்தார்.. 'கவிதைப் போட்டி 'என்று மைக்கில் அறிவித்த.  உடனே முன்னால் ஒரு பலூன் உடைந்து சிதறியதைப் போல் இருந்தது அவருக்கு... நிகழ்ச்சிக்கு முன்பு கொடுத்த  லிஸ்டில் இருந்த,  அறையில் வைத்துப் பார்த்த  அந்த மூவரும்தான் அவரிடம்  பரிசு வாங்கிப் போனார்கள்.அவர்களின் முகங்களில் எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லை. அவரை  விட  அழகாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.

அவர் 'தமிழரசியை'சைகையால் அழைத்தார். அவர் பேசுவதற்கு  முன்னால் அவரே அவசரமாக 'சார் நீங்க சொன்னத பிரின்ஸிபல்கிட்ட சொல்லிட்டேன் சார்  என்றார்' அம்பை நொந்து என்ன பயன்?பிரின்ஸிபல் அவர் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார்.

 'மேடம்! தமிழ் மேடம் கவிதை போட்டி ரிசல்ட் பற்றி உங்க கிட்ட சொன்னாங்களா?

'சொன்னாங்க சார் ' அகலமாய் புன்னகைத்தார். 

'பிறகு ஏன்? '   கோபத்தில் அவருக்கு  உடல் படபடத்தது.

'கரெஸ்பான்டன்ட் ஆர்டர் சார்'

மீண்டும் அதே அகலமான  புன்னகை. இது மற்றொரு அம்பு.
அவருக்கு ரொம்ப தவிப்பாய் இருந்தது. அவர் முன்னாலிருந்த அந்தக் கூட்டமே சிறுமியின் கண்களாய் மாறி அவரை துளைப்பதாய் உணர்ந்தார். 

அகமதுவும்,ஜெயந்தியும் அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?'போடி பொய் புளுகணி'என்று  அந்தக் குழந்தையிடம் பேசாமல் விலகிப் போய் விடுவார்களோ?அவர் பார்த்தே இராத அவள் அம்மா எரிந்து விழுந்த காட்சி ஒருகணம் அவர்  கண்களில் வந்து போனது. அவருக்கு முன்னால் பரிசு வாங்கிய  அந்த மூவரும்' இந்தியாவின் எதிர்காலமே அவர்கள்தான் 'என்ற பாவத்துடன் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தனர்.'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.  அவரும்தான் எழுந்து நின்றார்

நன்றி! மானசீகன்...

வெள்ளி 20 2017

நீங்கள் நட்ட மரம் அழுகிறது !





ஒரு நன்மை செய்து அதை மிகப்பெரிய விளம்பரமும் செய்துவிட்டு. அதைவிட பத்து மடங்கு தீமையை மகிழ்ச்சியோடு செய்கிறீர்கள். 

"மரம்"மாசுகலந்த காற்றை சலவை செய்கிறது அதற்காக காற்றிடம் எதிர்ப்போராட்டம் நடத்தி தன் இலைகளையும் கிளைகளையும் பறிகொடுத்து உங்களுக்காக நாள்தோறும் காற்றை சுத்தம் செய்கிறது. இயல்பாக ஏற்ப்படும் மாசுகளை சுத்தம்செய்யவே மரங்கள் கண்ணீர்வடிக்கிறது.

தீபாவளி என்ற பெயரில் வெடிமருந்துகளைக்  கொளுத்தி மகிழ்ச்சி என்ற பெயரில் காற்றையே நஞ்சாக்கி மரங்களின் வளர்ச்சியையும் குன்றச் செய்துவிட்டு பிறகு மானிட அக்கறை உள்ளவர்களைப்போல் மரம் நடுவது எதற்கு ?

இயற்கையைப் பாதுகாக்க என்னாலும் மரம் வளர்ப்போம் என்று பேசியவர்களும் செயல்பட்டவர்களும் கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள் கனவான்களே!  தீபாவளி என்ற பெயரில் மனிதன் தன்னைதானே அழித்துக் கொண்டு பிறரையும் அழிக்கும் கொடுமைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ உங்களின் மௌனங்களும் காரணமாகும்.

"மகிழ்ச்சி"மரங்களை நடுவதில் இருக்கிறது !
"மகிழ்ச்சி"காற்றை மாசுபடுத்துவதில் இல்லை !

இயற்கையைப் பாதுகாப்போம் என்றும் சொல்கிறீர்கள்.
மகிழ்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கவும் செய்கிறீர்கள்.

உங்களால் மரம் அழுகிறது ! 
நீங்களோ மகிழ்ச்சியில் சிரிக்கிறீர்கள் !

கொஞ்சம் சிந்தியுங்கள்...மானிடர்களே!!!!!!!!!!!!!!!!!

புதன் 18 2017

புளூ வேல் கேம்மை விட ஒரு மூளைச்சலவை

புளூ வேல் கேம்மை விட மோசமான ஒரு மூளைச்சலவைல உங்கள் வீட்டு பிள்ளை இருக்கானா எனக் கண்டறியுங்கள்.

அறிகுறிகள்:

. சூரிய நமஸ்காரம் சொல்லி தந்தாங்க என சொல்லுவான்

. கராத்தே சொல்லி தந்தாங்க என சொல்லுவான்

 "சாகா" னு வாரா வாரம் பள்ளி மைதானத்துல நடக்குதும்மானு சொல்லுவான்.

 அரையாண்டு விடுமுறையில் 3 நாள் கேம்ப் போறேன் என சொல்லுவான்.

 திடீர்னு "காந்தி" பண்ணுனது தப்புமா என சொல்லுவான்.
.
 குங்கும போட்டு வைச்சுக்குவான்

 ஆரஞ்சு கலர்ல கையில் கயிறு கட்டுவான்.

 நண்பர்கள் மத்தியில் "ஜி"னு பேசுவான்.

 இந்தியான்னு சொல்லாம "பாரதம்"னு பேசுவான்.

 காக்கி கலர்ல ஒன்னு ரெண்டு பேண்ட் வாங்குவான்.

கடைசில, கலவரம் பண்ண கிளம்புவான். கொலைகாரன் ஆவான்.​ வெள்ளை சட்டை / காக்கி பேண்டை ஒரு கேரி பேக்ல போட்டு சாகாவுக்கு போறேன் என அவன் சொல்லும் முன் அவன் கவனத்தை "சரியான அரசியல்" பற்றி நீங்களோ அல்லது நண்பர்களோ சொல்லி திருத்துங்கள்.

உங்கள் குழந்தைக்கு அனைத்து அரசியல் தத்துவம் / தலைவர்கள் பற்றிய குறைந்த பட்ச அறிமுகம் கிடைக்க செய்யுங்கள். எளிய அரசியல் வரலாற்று புத்தகங்களை , ஆவண படங்களை பார்க்க வையுங்கள்.

காந்தியை கொன்னது RSS
காமராஜரை கொழுத்த முயற்சித்தது RSS
ஓட்டுக்காக காவேரி கலவரம் செய்வது RSS
எழுத்தாளர்களை கொலை செய்வது RSS

தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் திட்டம் கொண்டது RSS என்பதையெல்லாம் புரிய வையுங்கள்..

காவிகளின் மூளை சலவையின் நோக்கம் பக்தியோ, ஆன்மீகமோ அல்ல.,ரத்த வெறி கொண்டு கொலை செய்வது மட்டுமே.

புளூ வேல் கேம் விளையாடுபவர்களை விட அடுத்தவர் ரத்தத்தை பார்க்க நினைக்கும் RSS காரனாக மாறுவதை தடுங்கள்.

செவ்வாய் 17 2017

"கடவுள் இல்லை” என்றவர்கள் செய்த அரும்பணி....




"கடவுள்  இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளே இல்லை என்ற பகுத்தறிவாளர்கள், இயக்கங்களெல்லாம், ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடணும்ன்னு சொல்றாங்க..?", "சாமிதான் இல்லன்னு சொல்லறாங்களே, அப்புறம் எதற்கு இத பத்தி அவங்க ஏன்? பேசறாங்க..?"

-- சாதி வெறியும், மத வெறியும் கொண்ட சிலர், தாங்கள் என்னவோ சாமர்த்தியமாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.....

கடவுள் இல்லை என்றவர்கள் தான் எல்லா சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் பெண்களை தேவடியாக்களாய் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை சட்டம் போட்டு தடுத்தார்கள்...

கடவுள் இல்லை என்றவர்கள் தான் சதி என்ற பெயரில் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், தமிழ் மொழியிலும், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை சட்டத்தில்  அளித்தார்கள்...

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், கோயில் சொத்துக்களும், நிலங்களும் கொள்ளைபோவதை தடுக்க, ஹிந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்தார்கள்.

இப்படி ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் " கடவுள் உண்டு" என்றவர்கள், மதவெறி கொண்டு, மூர்க்கமான வெறித்தனத்துடன் அத்தனை நல்ல காரியத்தையும் எதிர்த்தார்கள். 

எல்லா சூழலிலும் அவர்கள் உச்சமாய் கத்திய ஒரு சங்கதி என்னவென்றால் "சாமி இல்லை என்பவனுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளை மறுக்கும் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இதில் என்ன அக்கறை" என்பதுதான்.

எல்லாக் கால கட்டத்திலும் இந்த மதவெறியர்களை, சாதிவெறியர்களை மீறித்தான் இதுபோன்ற  காரியங்களை, மக்கள் சமத்துவ செயல்களை, சாதித்திருக்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அது போலவே, முறையான பயிற்சி முடித்தவர், எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும், கோயில் அர்ச்சகர் ஆகுவதையும் சாதிப்பார்கள்.....

நன்றி!  ஜே.பி

ஞாயிறு 15 2017

டாட்டாவும்,அம்பானியும் வேர்வை சிந்த உழைத்த கதை



டாட்டாவும்,அம்பானியும் 10 வருடங்கள் முன்பு சென்ட்ரல் வங்கியில் 45 ஆயிரம் கோடி கடன் பெற்றனர்.

எதற்காகக் கடன் பெற்றார்கள்? 

அணுமின் நிலையம் தொடங்குவதற்கு.

 எதற்காக? மின் உற்பத்தி செய்வதற்காக.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக தொடங்கவில்லை. 

பத்துவருடமாக தொடங்காதவர்கள் இப்போது தொடங்குகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.

ஆனால் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரு டன் ரூபாய் 2500 க்கு தர வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள்.

ஒரு டன் நிலக்கரி 25ஆயிரம் விலை இருக்கும்போது எப்படி ரூ 2500 க்கு கொடுப்பது என கோல் இந்திய சேர்மன் மறுத்துவிடுகிறார்.

உடனே பிரதமர் தலையிடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் டாட்டா அம்பானி ,கோல்இந்திய சேர்மன் பேச்சுவார்த்தை நடந்தது.

உலகப் பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி முடிவெடுத்தார். அதாவது இந்திய மக்கள் வரிப்பணத்தில் இயங்கும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் ஒரு டன் நிலக்கிரியை 25ஆயிரத்திற்கு ஆஸ்திரேலியா,இந்தோனிசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வாங்கி ரூபாய் 2500 க்கு டாட்டாவுக்கும், அம்பானிக்கும் கொடுப்பதற்க்கா...

மக்கள் வரிப்பணத்தை யாரிடமிருந்து பிடுங்கி ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி யாரிடம் கொடுக்கிறார் என்பதை இந்த நாட்டின் கோவணங்கட்டி விவசாயிகளும், நடுத்தர வர்க்க முழி பிதுங்கிகளும் தெரிந்து கொண்டீர்களா?.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...

இத்தோடு கதை முடியவில்லை. இனிதான் இருக்கிறது உச்சகட்டம். அது என்னான்னு கேக்குறீங்களா? பொறுங்க... சொல்றேன்...

கோல் இந்தியா நிறுவனம் டாட்டாவுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வாங்குகிறதில்லையா?  

அந்த ஆஸ்திரேலியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்டிராக்ட் பணியை யார் செய்கிறார்கள் தெரியுமா?
சென்ட்ரல் பேங்க்ல லோன் வாங்கிய  அம்பானியும்,டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.

அதாகப்பட்டது, டாட்டா,அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியை, இருவரிடமிருந்து  ஒரு டன் ரூபாய் 25ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு  நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள்.  இப்ப புரிந்து இருக்குமே...!!! இப்படித்தான் இந்தியா வளர்ச்சி பெறும் வழி!!

ஊரான் வூட்டு நெய்யே, ஏம் பொண்டாட்டி கையேன்னு சொம்மாவா சொன்னாங்க?

100 வருசத்துல இந்தியப் பெருமுதலாளிகளோட சொத்து 26% உயர்ந்திருக்குன்னா, எம்மாம் வேர்வை சிந்தி உழைச்சிருக்கானுங்க!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...