பக்கங்கள்

சனி 15 2015

இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க “இந்து” தீயர் மறுப்பு

படம்-yourkattankudy.com


கடந்த ஆண்டில்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும்
கடும் போர் நடந்த்து.

அந்தப் போரில்
மனித உரிமை
மீறல் நடந்ததால்
இஸ்ரேலுக்கு எதிராக
ஐ.நா. மனித
உரிமை கவுன்சீலில்
விசாரணை கமிசன்
அமைக்கும் தீர்மானத்திற்கு
ஆதரவாக 41 நாடுகள்
வாக்களித்த போதும்
அமெரிக்கா மட்டுமே
இஸ்ரேலுக்கு ஆதரவாக
வாக்களித்தது இந்நிலையில்

அடுத்தாண்டு துவக்கத்திலோ
அல்லது இந்தாண்டு
இறுதியிலோ இந்தீயாவின்
உலகம் சுற்றும்
கிழவர் இஸ்ரேலுக்கு
சுற்றுலா செல்ல
இருப்பதால் இஸ்ரேலுக்கு
செல்லும்  முதல்
இந்தீய  கிழவன்
என்பதால் இஸ்ரேலுக்கு
எதிராக வாக்களிக்க
இந்து தீயர் மறுப்பு

வெள்ளி 14 2015

மதுக் கடையை மூடச் சொன்ன மந்தி..ரி.

படம்-ta.wikipedia.org



சுதந்திர தினத்தன்று மதுக்கடையை அதாவது சாராயக் கடையை மூடச் சொல்லி உத்தரவு இட்டு இருக்கிறது புர்ச்சி நடிகையின் அரசு...  அன்றைய தினம் இதுவரை சுதந்திரமாக மதுச் சாராயம் விற்றத்தை நிணைவு கூர்ந்து  கொடிய்யேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுக்கும் விழாவும் கொண்டாடுகிறது.

இந்தக கொண்டாட்டத்தை  சகிக்காத மது குடிக்காத..அதாவது குடிமக்கள் அல்லாதவர்கள்...  குடி கெடுத்த அரசே.தமிழ் மக்களின் குடியை அழித்த்து போதும் . மதுக்கடையை மூடு என்று “மக்கள் அதிகாரம்“ அமைப்பைச் சேர்ந்தவர்களின் போராட்ட வழிமுறைகளை பின்பற்றி  குடி கெடுக்கும்,  இன்னும் கெடுத்துக கொண்டு இருக்கிற புர்ச்சி நடிகை ஆளும் அரசுக்கு எதிராக  குடி கெடுத்த அரசே , குடியை கெடுக்கும் குடி கடையை இழுத்து மூடு என்று போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பழைய பேப்பர். ஒன்றை ஏதைச்சையாக பார்த்த போது.. புர்ச்சி நடிகை ஆளும் அமைச்சரவையில் மந்தியாக இருக்கும் அமைச்சர் ஒருவரும்.. மதுக்கடையை மூடச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அதிசியம் அதில் தெரிந்தது. விசயம் முடிந்து போனதாக இருந்தாலும்.  எனக்கு தெரிந்த அந்த அதிசியமானது என்க்கு மட்டும் தெரிந்தால்  போதும் என்று இருந்தால் அது சமூகக் குற்றமாகி விடும“ என்பதால் அந்தக் கதையை எனது பாணியில் இந்தச் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகிறது.

அதாவது வந்துங்க... மதுரையில்.. பாண்டி கோவில் என்ற கோயில் ஒன்று உண்டுங்க... அந்தச் சாமி அசைவ சாமிங்க.... அதாவது சரக்கு அடித்து கறியை திண்டு ஆட்டம் போடும் சாமிகளின் வரிசையில் முதன்மையானதுங்க... இது பக்தர்களுக்கும் பக்தர் அல்லாதவர்களுக்கும் தெரிந்த சேதி....

இந்த பாண்டிச் சாமியின் பக்தர்கள்.. தங்களின் நேரத்திக் கடனுக்கு பரிகாரமாக ஆடு. கோழிகளை பலியிடுவார்கள்., இதில் மாடு மட்டும் விதிவிலக்கு ஏனென்றால் , நாலு வர்ணத்தில் கீழே உள்ளவர்கள் அதாவது இடமில்லாத்தால் தரையில் பிறந்த வர்ணத்தாரின் பிரதான உணவாக இருப்பதால்... மாடு பலியிடப்படுவதில்லை.

இப்படி நேர்த்திக்கடனுக்காக பலியிடப்படும் ஆடு, கோழிகளை உணவாக சமைத்து உற்றார் உறவினர். நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து. நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அணைவருக்கும் . விருந்து படைப்பது தொன்று தொட்டு தொட்டு வரும் பழக்கம்.

அந்தப் பழக்க வழக்கத்தின் படி, புர்ச்சி  நடிகருக்கு பின் ஆட்சிக்கு வந்த புர்ச்சி நடிகை முறைகேடாக சேர்த்த சொத்தின் பேரில் நடந்த  சொத்து குவிப்பு வழக்கில் “நாலு மூனும்  எட்டு என்று தீர்ப்பு கூறிய அறிவாளி  கணக்கு சாமியால் புர்ச்சி நடிகை விடுதலை செய்யப்பட்டார்.

புர்ச்சி நடிகையின் அமைச்சரவையில் மந்தியாக இருந்த ஒருவர். புர்ச்சி நடிகை விடுதலை யாக வேண்டியதால். அந்த வேண்டுதலை நிறை வேற்றும் பொருட்டு  புர்ச்சி நடிகையின் பொற் பாதங்களில் விழுந்து  பதவி பெற்ற அந்த மந்திரியானவர். தன் நேர்த்திக் கடனை செலுத்தும் விருந்துக்கு  ஏற்பாடு செய்தார்.

இந்த நேர்த்திகடன் செலுத்தும் விருந்து நிகழ்ச்சியில்  புர்ச்சி நடிகையின் ஆசி பெற்ற அதிமுகவின் குடிமகன்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு....

அதாவது கறி விருந்து நிகழ்ச்சியில் வழக்கமான, புக்ழ்பெற்றதுமான. வசனங்களான... “ கறி வைக்கிறவன் ஆளைப் பார்த்து வைக்கிறான்”, “எனக்கு கொஞ்சமா..வைக்கறான்,..  “பாவிப்பயல் எனக்கு கறியே வைக்காமல் போறான்என்ற வீர வசவுகளையும் வீரத்தை நிலைநாட்டும் சண்டைகள்  முதலானவைகள் இல்லாமல் இருக்க.......அதன் அச்சரமாக..
 பாண்டிச் சாமியின் அருகில் இருக்கும் அரசு சாராய மதுக்கடையை மூட வேண்டும் என்று நேரத்திக் கடனுக்குகூட  கூலி கொடுத்து பேரு வாங்கின அந்த மந்திரி மாவட்ட ஆட்சியரை  சந்தித்து மனு கொடுத்தார்.

பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் மதுக்கடையை மூடச் சொல்லி   கொடுத்திருந்த பல மனுக்களை ஏறடுத்து பார்க்காத மாவட்ட ஆட்சியர். மந்தியின்  மனுவை ஏற்றுக் கொண்டு . பாண்டி கோவில் அருகிலுள்ள அரசு மதுக் சாராய கடையை மூட வேண்டும் என்று கலால் துறையின் உதவி கமிசனருக்கு வாய் மொழி உத்தர விட்டார்.

இதனால்.. சுதந்திர தினத்திற்கு அரசு சாராய மதுக் கடை விற்பனைக்கு  விடு முறை விடப்பட்டது போன்று புர்ச்சி நடிகையின் விடுதலைக்கான நேர்த்திக் கடன் செலுத்த கறி விருந்து படைக்கும் நிகழ்ச்சி அன்று மட்டும் பாண்டி கோவில் அருகிலுள்ள மதுச் சாராயக் கடை மூடப்பட்டது...

...................................

அவன் குடிக்காமல் இருப்பது தற்காலிகம்தான்.

Image result for குடிகார சமூகம்,
படம்-www.tutyonline.ne
1
பட்ம்-வினவு


2
படம்- வினவு



3
படம்- வினவு


ஒரு சமூகத்தையே
குடிகார சமூகமாக
மாற்றிய ...மாறிய
பிறகு அந்த
குடிகார சமூகத்தில்
இருக்கும் ஒருவர்
தெருவுக்கு தெரு
குடிகார னாக ஆக்கும்
கடை திறந்து
இருந்த பொழுதும்
நான்  குடிக்காதவன்
என்று  பீத்திக்
கொள்வது அந்த
குடிகார சமூகத்தில்
அது தற்காலிகம் தான்.

வியாழன் 13 2015

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல .....


மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.

உதாரணத்திற்கு சில:

 - மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா?
"................" ???

- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. "தேசங்களின் செல்வம்" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? "................" ???

- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்?
 ".................." ???

- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உங்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா?
"..............." ???

- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா?
 "............." ???

இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது.

உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? முதலாளித்துவ ஆதரவாளர்களே! அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்! குருவையே மறக்கலாமா?

ஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன!

இதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.

அதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.

ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அத்திகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.

இன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், "முதலாளித்துவ அறிஞர்" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."

நன்றி!    கலையகம்

செவ்வாய் 11 2015

“இந்து”தீயரின் கனவு அறிவிப்புகள்.......


படம்-puduvairamji.blogspot.com

2022ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம்
மெகாவாட் சூரிய ஒளி பெற
இலக்கு நிர்ணயிப்பு..

நகரத்தில் இரண்டு கோடி வீடுகளும்
கிராமத்தில் நான்கரை கோடி வீடுகளும்
கட்டித் தரப்படும் ………

நாள்ஒன்றுக்கு 30 கிலோமீட்டர்க்கு
சாலை அமைக்கப்படும் …….

இதுமட்டுமா......

ஏழு கோடி கழிப்பறைகள் கட்டி
முடிக்கப்படும் என்று மேக் இன்

நாயகர்கள் அறிவித்து உள்ளார்கள்.

கேப்பையில் நெய் வடிகிறது
என்று சொன்னால் நம்புகிறவர்கள்
நம்பி நம்பியே  சாகலாம்.......



திங்கள் 10 2015

சிசேரியன் பெயர் வநதக் கதை

படம்-makkalnanpan.com

 அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள  திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் அவர். அப்போது அங்கு வந்த ஒருவர்

எண்ணண்ணே.... வேலை இல்லீயாக்கும்.   அதனால்தான் இங்க உட்காந்து “சைடஅடிச்சிகிட்டு இருக்கீங்களா..? என்று கேட்டபடி வந்து அவரும் அந்த திண்டில் அமர்ந்தார்.

“என்னப்பா, எனக்கு “சைட்அடிக்கிற வயசா.....

அய்யே.... நீங்க..அந்த அர்த்த்திலே நிணச்சுகிட்டேங்களா..... இல்லேண்ணே...“சைட்ன்“னா பார்க்கிறது. நீங்க.... ரோட்டுல போறவுகள..வாரவுகள..த்தானே பாத்துகிட்டு இருக்கீக...

சரிப்பா.....சரி....  மேற்கொண்டு பேசாமல் அமைதியானார்.

வந்தவரே... பேசினார்....ஆளையே பார்க்க முடியலேண்ணே.....

இந்தா.... வந்திருக்கேன்ல.... இப்ப பாத்துக்கோ....... என்றார்

இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில்.. அவர்களுக்கு அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து யார் இறங்குகிறார்கள் என்று இருவரும் விழித்த கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தபோது  இருவருக்கும் தெரிந்தவரே கையில் சில பொருட்களுடன் இறங்கினார்

ஆட்டோவை அனுப்பி வைத்தபின் அவர்களை பார்த்தபோது. இரண்டாவதாக வந்தமர்ந்தவர் கேட்டார்.

என்னப்பா, குழந்தை பிறந்திருச்சா.....  என்ன குழந்தை என்று கேட்டார்.

ஆமங்க... பெண் குழந்தை பிறந்திருக்கு என்றார்.

தாயும் சேயும் நலமாக இருக்குறார்களா?? என்று அண்ணன் கேட்போது
சுருதி குறைந்து சொன்னார். பரவாயில்லணே..சிசரியேன் செய்து குழந்தை பிறந்த்தினாலே... இழுத்தார்.... அவருக்கு ஆறுதலும் தைரியமும்  சொல்லி அனுப்பி வைத்தனர்..இருவரும்

அண்ணே..சிசேரியன் என்றால் எண்ணண்ணே என்று கேட்டார்.

ஒனக்கு நிச்சயமாக தெரியாதா என்றார் அண்ணன்.

சத்தியமாக தெரியதுண்ணே....என்றார்.

அதாவது இயற்கையான வழியில் மூலம் குழந்தை வெளியே வர முடியாதபோது , சில சமயங்களில் அவ்வாறு வருவது நல்லதல்ல என்று தோன்றும்போது தாய் சேய் இருவர் உயிரையும் காப்பதற்க்காக ,வயிறு. கருப்பை ஆகிய இரண்டையும் நடுவில் கிழித்து குழந்தையை எடுக்கும் ஒரு சாஸ்திர சிகிச்சையைத்தான் சிசேரியன் என்று சொல்லப்படுகிறது. சீசர் என்ற புகழ் பெற்ற அரசர் ஒருவர் இவ்வாறு பிறந்ததாக கூறப்படுவதால் சிசேரியன் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறார்கள்.என்றார்.

அண்ணே.... சொன்னா..கோபிக்க..மாட்டிங்கள்ல... என்றார் பீடிகையுடன்.

சொன்னாத்தானே..... கோபிப்பேனா... கோபிக்க மாட்டேனா என்பது தெரியும்  மொதல்ல சொல்லு என்றார் அண்ணன்.

அவரும் சிரித்துக்கொண்டே சொன்னார்.....55வயதாகியும் கல்யாணமே ஆகாத ஒங்களுக்கு... இதெல்லாம் எப்படிண்ணே தெரியும்......

.ஒனக்கு தெரியாத...ஒன்ன மாதிரி நானும்  ஒருத்தருகிட்ட கேட்டதுதான் தம்பி.. சொன்னவரு காமராசர் பல்கலைகழத்தில பிஎச்டி படிச்சவரு தம்பி  என்று சொல்லியபடி எழுந்து  தன்னுடைய பின்பகுதியை தட்டிவிடடபடி தன் வீட்டை நோக்கி நடந்தார்.


ஞாயிறு 09 2015

பொய்களையே சரித்திரமாக்கிய பொய்யர் போய் சேர்ந்தார்

படம்-கலையரசன்.





Kalaiy Arasan

Shared publicly  -  17:27
சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்" பற்றிய பொய்களை பரப்புரை செய்த, மேற்குலக "சரித்திர" ஆசிரியர் காலமானார். ஆங்கில-அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த Robert Conquest, பனிப்போர் காலத்தில் டாலர்களை அள்ளிக் கொடுத்த, எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, "ஸ்டாலினின் பயங்கரம்" என்ற நூலை எழுதினார்.


"கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பைபிள்" என்று கருதப் படும் அந்த நூலை மேற்கோள் காட்டியே, இன்று வரையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகள் பரப்பப் பட்டு வருகின்றன. ஸ்டாலின் இருபது மில்லியன் பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் "புள்ளி விபரம்(?)", அந்த நூலில் இருந்து தான் பெறப் பட்டது. (அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே எழுதி இருந்தார்.)



திருஞான சம்பந்தர் தனது ஞானக்கண்ணால் கோயிலைப் பார்த்து தேவாரம் பாடியதைப் போல, இந்த "சரித்திர" ஆசிரியரும், சோவியத் யூனியனுக்கு செல்லாமலே, கற்பனையில் கண்ட காட்சிகளை புத்தமாக எழுதினார். அந்த ஆதாரமற்ற பொய்களை இன்றும் பலர் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



பிரச்சார நோக்கில், வேண்டுமென்றே எண்ணிக்கைகளை மிகைப் படுத்தி எழுதுவதாக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்த இரகசிய ஆவணங்கள், இவரது "தகவல்கள்" யாவும் மிகைப் படுத்தல்கள் என்பதை நிரூபித்து இருந்தன.



மேற்குலகின் தீவிர முதலாளித்துவ ஆட்சியாளர்களான, ரொனால்ட் ரீகன், மார்க்கிரட் தாட்சர் போன்றோரால் கௌரவிக்கப் பட்டார். அண்மையில் கூட, இனப்படுகொளையாளி ஜோர்ஜ் புஷ் இவருக்கு விருது வழங்கி இருந்தார்.



மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.


நன்றி!    Kalaiy Arasan

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...