பக்கங்கள்

சனி 27 2013

அன்பு வாசகர்களுக்கும்-பதிவர்களுக்கும் ஓர் அறிவிப்பு!!!!!



என் வலைதளத்தில் நான் எழுதிய பல பதிவுகளை, பதிவுகளின் கருத்துக்களை பிடிக்காதவர்கள். தங்களுடைய இணைய அறிவின் வல்லமையால் மட்டமான வேலையை செய்துள்ளார்கள்.

இந்த மட்டமானவர்களின் மட்டமான செயல்கள் தற்போதுதான் என் கண்ணில் பட்டது.

 ஒரு கருத்து பிடிக்கவில்லை என்றால் கருத்தால் மோத வேண்டும்.

அல்லது அரட்டையில் திட்டவேண்டும்.. என் சிந்தனைக்கு என்ன தோன்றியதோ அதை பதிவிட்டு இருக்கிறேன்.

அது  உண்மையிலே தவறாக இருக்கும் பட்சத்தில் எவ்வித சமரசமின்றி தவறை திருத்திக் கொள்வேன்.

அதவிட்டுபுட்டு, இப்படி கில்லித்தனமா, புல்லூருவித்தனமா, பதிவில் சில இடங்களில் வெள்ளை கோடிட்டு அழித்திருப்பது. இணையத்தில் உலாவுகிற ஆபாச படத்தைவிட மகா..மகா மட்டமான, மோசமான செயல், என்று எனக்கு படுகிறது.

 எனவே, வாசகர்களே! பதிவர்களே! இப்படிபட்ட கேடு கேட்ட தனத்தில் ஈடுபடுவர்கள் தங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அறிவுரை கூறுங்கள்,

கேட்காவிட்டால்............ அந்த மூஞ்சியை எனக்கும்  காட்டுங்கள்.

நானும் ஒருவாட்டி அந்த மூஞ்சியை பாத்துக்கிறேன்.

இதை தடுப்பதற்கு வேறு வழி இருந்தால் கூறுங்கள்.
நானும் தெரிந்து கொள்கிறேன். அதற்கு

குரு தட்சனை எதுவும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

நன்றி!!!!

வெள்ளி 26 2013

குண்டலகேசி என்ற சுருண்ட மயிரையுடைவள்..........


இராசகிரகம் என்னும் நாட்டை ஆண்ட அரசனின் மந்திரிக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் பத்திரை

ஒரு நாள் இவள் மாளிகையின் மேல் உலாவிக் கொண்டு இருந்தபொழுது... கட்டழகு மிக்க காளையன் ஒருவனை கொலை களத்துக்கு சேவர்கள் இழுத்துச் செல்வதைக்கண்டாள்.

குலம்.கோத்தரம் எதுவும் பார்க்காமல் அந்தக் கட்டழகு காளையின் மேல் காதல் கொண்டாள்,மணந்தால் அவனையே மணம் புரிவேன் அவன் இல்லையெல் உயிர் விடுவேன் என்று பிடிவாதம் செய்தாள்...... இன்றைய அப்பன்கள் மாதரி இல்லாத பத்திரையின் தந்தையான மந்திரி, கொலையாளர்களான சேவர்களுக்கு கைக்கூலி கொடுத்து கட்டழகு காளையனை மீட்டு தன் மகள் பத்திரைக்கு அவனை மண முடித்து வைத்தார்.

ஒரு நாள் மணமக்களின் ஊடலின்போது, பத்திரை, தன் கணவனை.“ நீ கள்வன்தானே என்றாள்.. இது அந்தக் காளையனுக்கு தன்னை அவள் இகழ்ந்தாக நிணைத்து தன் மனதிலே வஞ்சக எண்ணம் கொண்டான்.

அந்த வஞ்சகம் கொண்ட எண்ணத்தின்படியே, ஒருநாள். பத்திரையை குல தெய்வத்தை வழிபட செல்வோம் என்று கூறி மலையுச்சியிலுள்ள  கோயிலுக்குஅழைத்து சென்றான். அங்கு சென்றபின்.

பத்திரையைப் பார்த்து என்னைக் களவானி என்று இடித்துரைத்தாயே!.அதற்கு பலனாக உன்னை கொல்லப் போகிறேன். உன் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொள் என்றான்

திடுக்கிட்ட பத்திரை பதறாமல்,தற்கொல்லியை முற்க் கொல்ல வேண்டும்என்ற முது மொழியை சிந்தித்து அதன்படி. அவனுக்கு கீழ்படிவது போல் நடித்து.

என் கனவனாகிய உன்னையன்றி எனக்க வேறு தெய்வம் ஏதுஎன்று கூறி அவனையே வலம் வருவதாக கூறி. அவனை சுற்றி வலம் வரும்போது அவனின் பின்புறமாகவந்து அவனை கீழே தள்ளிவிட்டாள்.

 மலையுச்சிலிருந்து விழுந்த காளையன் மாண்டுபோன பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவளாக சைனமத்த்தில் சேர்ந்து துறவு கொண்டாள். சைனமத கொள்ளைப்படி
துறவியான பத்திரையின் தலைமுடி கயைப்பட்டு மொட்டையாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் தலைமுடி வளர்ந்து சுருண்டு காணப்பட்டது.

இதனால்தான் பத்திரையானவல் சுருண்ட மயிரையுடையவள் என்று பொருள் படும்படி குண்டலகேசி என்று அழைக்கப்பட்டாள்.

பின்னாளில் சைனமதத்தைவிட்டு புத்த மத்த்துக்கு மாறியபோதும் குண்டலகேசி என்றே அழைக்கப்பட்டாள்.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலிருந்து.....



வியாழன் 25 2013

எட்டடி பாய்ந்த நீதிபதியும்...பதினாறு அடி பாய்நத வழக்குரைஞர்களும்........


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்  என்று  முன்பு ஒரு சமயம் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவர் வழக்குரைஞர் பகத்சிங் என்பவர்.

மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த வழக்கானது .நீதிபதி மணிக்குமார் முன்பு விசாரனைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கரைஞர் பகத்சிங்  தமிழில் வாதாடினார்.

இந்து மகாக் கடவுளுக்கே தமிழ் மொழி தீட்டு மொழியாக இருக்கும்போது. மதுரைக்கிளையில் மட்டும் தேவ பாஷையாகவ இருக்கும்.

இதை அறிந்த நீதியரசர். பதறி துடித்துபோய், “தமிழில் வாதாட அனுமதியில்லை என்றார். இந்தியாவை அடிமைபடுத்திய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே வாதாட வேண்டும் என்றார்.

நீதியரசரின்  வார்த்தயை மீறி வாதாடியாதால் வழக்குரைஞரின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

மதுரைக்கிளையின முகப்பில், நிற்க முடியாமல். ஊன்று கோலுடன்  வாசலை வெறித்து படி வெயிலிலும், பனியிலும் ஆடி காற்றிலும் ஆடாமல் அசையாமல் நிற்கும்  காந்தியாரின் உருவம் பொறித்த இந்திய ரூபா நோட்டீல் அச்சிடப்பட்டிருக்கும் 15 மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்பது  ரூபாய்க்கு மட்டும்தான் போலிருக்கிறது.

தமிழில் வாதாடியதால்  தள்ளுபடி செய்யபட்ட மனு விபரத்தை தெரிந்த வழக்குரைஞர்கள்  தமிழில் வாதாட அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

 வழக்கரைஞர்களின் போராட்டம் எதிரோலியோ, வேற்று நாடான வட நாட்டில் உள்ள  தில்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளுர் மொழியான இந்தியில் வாதாடுவது தெரிந்தோ, நீதிபதிகளின் குழு வின் கூட்ட முடிவோ, ஏதோ ஒரு காரணத்தால்...........

தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை அந்த நீதிபதியே. மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொண்டார்.

அப்போது, பகத்சிங் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வழக்குரைஞர் களின் சங்க செயலாளர் ஏ.கே. ராமசாமி தலைமையில் 25 வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.

நீதிபதி, “தான் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்படவதாகவும், இந்த வழக்கில் தமிழில் வாதாடலாம் என்று அறிவித்தார்.

 அது கேட்ட வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தவிட்டு  இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பபெற அனுமதிக்க மாட்டோம் என்றும். மேல்மறையீடு  தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு.........

காந்தி சிலை முன்பு , மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் தமிழை  வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உலகையே சுருக்கிவிட்ட கூகுள், பேஸ்புக் போன்ற இணையதளங்களிலே அந்தந்த மொழிக்களுக்கேற்ப எழுத.படிக்க, கருத்துக்கூற, மொழியாக்கம் செய்ய போன்ற வசதிகள் தரும்போது,

தமிழ்நாட்டில்....அதுவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழில் வாதாட  அனுமதி மறுப்பது, நாடு இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதையே  காட்டுகிறது..

ஒரு ஊமை பேசியதே.................

பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், ஊமை ஊரக் கெடுக்கும், ஆனால் இந்த ஊமை ஒரு நாட்டையே கெடுத்திருக்கு..........



இந்த உஊமை இதுவரை  1300 தடவை பேசியிருக்கு,

அதில் விலை வாசி உயர்வு வருத்தம் அளிக்கிறது என்று 500 தடவையும்,

ஊழல் கவலையளிக்கிறதுன்னு 300 தடவையும்,

பயங்கர வாதத்திற்கு பதிலடி கொடுப்போமுன்னு 250 தடவையும்,

மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று 200 தடவையும்,

பிரதமர் பதவிக்கு ராகுல் விரும்பினால் வழிவிடத் தயாருன்னு 50 தடவையும்

இந்த அமெரிக்க கைக்கூலி ஊமை பேசியிருக்கு...................

தகவல்..---அடடே,மதி (தினமணியிலிருந்து)

புதன் 24 2013

நிம்மதியா போய் கிட்டு இருந்த பொழப்புல மண்ணள்ளி போட்டது வினவு.

வினவு-ஆறாம்  ஆண்டு பிறந்த நாளுக்காக .வினவு்-ன் அய்ந்தாண்டு பதிவுகளைப்பற்றி வினவு- வின் வாசகர்கள். அவரவர் பார்வையில் வினவு- குறித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்தில்  புதிய கலாச்சாரம் புத்தக விற்பனையில் எனக்கு ஏற்ப்பட்ட
அனுபவத்தைப்போல, நண்பர் பால்ராஜ் அவர்களுக்கு.வினவு-வைப்பற்றி அவர்க்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை உள்ளது உள்ளபடி கூறுகிறார். அவர் அனுபவத்தையும் படித்துப் பாருங்கள்

 

முன்னெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. நினைச்சா சினிமா, பசங்களோட வாரா வாரம் தண்ணி, அப்பப்போ நெட்டுல பிட்டு...  இணையத்துல சும்மா மேம்போக்கா சுத்திக்கிட்டு இருந்தவன, "போடா, போய் வினவு படி" ஒருத்தன் சொன்னான். அன்னிக்கி பிடிச்சுச்சு சனி. நிம்மதியா போய் கிட்டு இருந்த பொழப்புல மண்ணள்ளி போட்டது வினவு.

 

வினவு படிக்க ஆரம்பிச்சதுல இருந்தே இம்சையும் ஆரம்பிச்சுருச்சு. ஊருக்குள்ள நாலு பேரு கூட நல்லதா நாலு வார்த்தை பேச முடியல.  

இப்படித்தான் ஒரு நாள் அதிகாலை எட்டறை மணிக்கு, கண்ணு முழிச்ச கையோட பல்லு கூட விளக்காம டீக்கடைக்கு போய் பேப்பர (தினத்தந்தியோ என்ன எழவோ) பொரட்டிக்கிட்டு நின்னேன். 

கன்னித்தீவு கூட படிக்காதவன் பேப்பர் படிக்கிரானேன்னு சுத்தி 
இருந்தவுக ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் பேப்பர் படிக்கறதுக்காண்டியே டீ கடைக்கு போவதுன்னு பழக்கமாயிருச்சு. வினவு படிக்கப்போய் பேப்பர் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். 

வினவு சனியன் அத்தோட விடல, ஒரு நாள் பேப்பர்ல ஒரு விபத்து பற்றி செய்தி. அரைபாடி லாரி ஒண்ணு டூவீலர் மேல ஏறி ஒருவர் சாவுன்னு செய்தி.

டீ கடைல அவனவன் இதபத்தி தான் பேசிக்கிட்டு இருக்கான், ஆனா அவனவனும் கண்டபடி பேசிக்கிட்டு இருக்கான். "தண்ணிய போட்டு போய் மோதியிருப்பான்" ங்கறான் ஒருத்தன். இன்னொருத்தன் 

"இந்த லாரிகாரங்களே இப்படித்தான்" ங்கறான். "டூவீலர்காரன் பிளேன்ல போரா மாரி போய்ருப்பான்" ங்கறான் இன்னொருத்தன். 

எனக்கு பயங்கரமா கோவம் வந்துருச்சு ,"என்னய்யா பேசுறீங்க, ரோட்ட கேவலமா போட்டு காசு பாத்த காண்டிராக்டர், லஞ்சம் வாங்கிக்கிட்டு ஓட்ட வண்டிக்கு எஃப்சி குடுத்த ஆர்டிஓ, இன்னும் ரெண்டு டிரிப் அடிச்சா 200 ரூவா கிடைக்குமேன்னு நினக்க வைக்கிற டிரைவர் வீட்டு நிலைமை, முக்குக்கு முக்கு திறந்து வைத்திருக்குற டாஸ்மாக் எல்லாம் தான் காரணம். இது விபத்து கிடையாது அரசு செய்த படுகொலை" ன்னு ஆத்து ஆத்துன்னு ஆத்தினேன் பாருங்க ஒரு சொற்பொழிவு

 (உபயம்_வினவு தந்த அறிவு). அவனவன் எம்மூட்டு பிள்ளைக்கு இம்பூட்டு அறிவாங்குற மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அப்புறம், பேச ஆரம்பிச்ச வாய் நிக்கவே இல்ல. (வினவ நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்).  அரசியல், சினிமா, அது இது என்று எத எடுத்தாலும் சொற்பொழிவுதான்.

 ஒரு நாள் டீ கடைக்காரர் தனியாக கூப்பிட்டு, "தம்பி, உங்கப்பாவ எனக்கு ரொம்ப நாளா தெரியும், அதனால சொல்றேன் இனிமே டீ குடிக்க வேற கடை பாத்துக்குங்க" என்று விட்டார். இவ்வளவிற்கும் நான் கடன் சொல்லவே மாட்டேன்.

இப்படியான காலத்தில் தான் ஒறமொற (உறவு) ஒண்ணு வீட்டிற்கு வந்தது. ஊர்கதை எல்லாம் பேசியான பின், வந்தவன் சும்மா இல்லாமல், "தங்கச்சிக்கு நல்ல இடம் இருந்தா சொல்லு பங்காளி" என்றது. உரம், பூச்சி மருந்து எல்லாம் போட்டு மூக்குக்கு கீழே மயிர் விவசாயம் செய்யும்

அந்த ஜந்துவிடம், "சூப்பர் பையன் ஒருத்தன் இருக்கான். நல்ல வேல, நல்ல சம்பளம், கெட்ட பழக்கம் ஒன்னும் கிடையாது (இது மட்டும் பொய். அவரும் வினவு படிப்பார்) சாதி மட்டும் வேறு. நீ ம்னு சொல்லு ஒடனே முடிச்சுருவோம்" என்றேன். 

ஏதோ நான் வேண்டுமென்றே அந்த ஜந்துவின் வேட்டியை உருவி வீதியில் விட்ட மாதிரி, மானம் போச்சி, அது போச்சி, இது போச்சி என்று கண்ட படி கத்தி விட்டு போனது அந்த ஜந்து. வீட்டில் உள்ளவர்களோ, என்னை எந்த கோவில் பூசாரியிடம் மந்திரிக்கலாம் என ஆலோசிக்கிரார்கள். பைத்தியகார பய பட்டம் மட்டுமே பாக்கி.

 

சரி ஆணியே புடுங்க வேண்டாம், வினவு படிக்கவே வேண்டாம், என முடிவெடுத்து பேஸ்புக், டிவிட்டர் என்று 2 நாள் சுற்றினேன்.


அங்கியும் அம்மாளுக விட்டேனா பார் ன்னு வினவுல இருந்து ரெண்டு ரெண்டு வரிய டிவிட்டி உசுர வாங்குறாக. முழுசா படிக்கலின்னா எங்கே ருத்திரன் சார் கிட்ட போகவேண்டி வந்துருமோன்னு எனக்கே டவுட் வந்துருச்சு.............


*குடும்பத்தோட சினிமா பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ?( அஞ்சு வருசமாம். வினவு சொல்ராரு.)

*மேலுக்கு முடியலன்னு ஆஸ்பத்திரிக்கு நிம்மதியா போக முடியுதா? (தனியார் மருந்து கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு, தேவையற்ற மருந்து எழுதும் டாக்டர். அரசு மருத்துவமனை அவலம். மருத்துவ சேவையிலிருந்து விலகும் அரசு.... வினவு கட்டுறைக டான்னு மூளைல ஆஜராயிரும்ல)

*பிள்ளைய பள்ளிகூடத்துல கூட சேக்க முடியல. எப்பப்பாரு அரசு பள்ளி, தனியார் பள்ளி, கட்டண கொள்ளைன்னு.....

    வீட்டில் மனைவின் முனுமுனுப்புகள் வரவர வால்யூம் அதிகமாகிறது.

 

இவ்வளவு ஏன் இன்று காலை கக்கூசுக்கு போய்விட்டு குண்டி கழுவும் போது, சுத்தம் செய்யும் இந்த கையை நொட்டான் கை (ஒட்டான் கை) என இழிவு படுத்தும் சமூகம் பற்றி கோவங்கோவமாய் வந்தது.

 

வேறு வழியில்லை. வினவு படித்து மூளை குழம்பி போவதை விட. அம்மணக்கட்டை ஊரில கோவணங் கட்டி பயித்தியமாவதை விட‌....

அனைவரையும் வினவு படிக்க வைத்து எல்லோர் இடுப்பிலும் துணி கட்டிவிட வேண்டியது தான்.

 

பால்ராஜ்



ஞாயிறு 21 2013

ஒரு துரோகியின் துரோகத்தின் பட்டியல்...............



காந்தி என்றால் துரோகம்,துரோகம் என்றால் காந்தி. அந்த துரோகத்தின் பட்டியல்கள்.

1.காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பாக பகத்சிங்கை தூக்கிலிடும்படி காலனியவாதிகளிடம் கோரினார்.

2.பகத்சிங் விடுதலையைக் கோரும் இயக்கத்தை பிசுபிசுத்து போகும்படி செய்வதற்கு தன் செல்வாக்கை பயன்படுத்தினார்.

3.பகத்சிங்கின் வண்முறைப் பாதையைக் கடுமையாக சாடினார்.

4.ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தை திசை திருப்ப சத்தியா கிரகத்தை முன் வைத்தார்.

5.மக்கள் போராட்டம் வலுத்த போதெல்லாம் காலனியவாதிகள் இராணுவத்தை ஏவி படுகொலை செய்தபோது,மக்கள் திருப்பி தாக்கியபோதும் புரட்சிகரமான பேராட்டங்களில் இறங்கியபோதும் மிருகத்தனமான,காட்டமிராண்டித்தனமான செய்கை என்று கணடித்தார்.

6.ரௌலட்சட்டத்தையும்,போலீஸ்அடக்குமுறையையும் எதிர்த்து நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களைஜாலியன்வாலாபாக்மைதானத்தில்,படுகொலைசெய்தபோது,அந்தக்கூட்டமே,பொறுப்பற்றவர்களால் கூட்டப்பட்டதாக கை கழுவி விட்டார்.

7.ஜாலியன்வாலா படுகொலையை திட்டமிட்டு நடத்திய காலனிய சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளை பதவிகளிலிருந்து நீக்கினால் போதும் அதுவும் மேண்மை மிகு பிரிட்டீஷ் அரசரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்ப்படும் வகையில் செயல் பட்டதாக அவர்களை விலக்கி வைக்க வேண்டும். வேறு நடவடிக்கை தேவையில்லை என்று இவரும் இவரின் காங்கிரசும் சிபாரிசு செய்தன.





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...