பக்கங்கள்

சனி 08 2017

என்னப்பா இது ஒரே குசராத்தி மயம்மா இருக்கு........!!!!!!!!



பல நாடுகள்
சேர்ந்த இந்தியாவில்
அந் நாட்டின்
பிரதமர் ஒரு
குசராத்தி அந்த
நாட்டின் பிரதமரின்
கட்சியை சேர்ந்தவர்
ஒரு குஜராத்தி
அந் நாட்டின்
ரிசர்வ் வங்கியின்
கவர்னரும் ஒரு
குஜராத்தி அந்த
நாட்டின் தலைமைத்
தேர்தல் அதிகாரியும்
ஒரு குஜராத்தி
என்னப்பா இது
ஒரே குசராத்தி
மயம்மா இருக்கு
இந்தக் கூட்டம்
ஒன்று போதுமே
சுடுகாடான இந்தியாவை
பாலைவனமாக ஆக்க....!!!!!!!!!





!

வியாழன் 06 2017

அந்தப் படத்தை தூக்கி எறியுங்கள் தூரமாய்..!!!!!!!!!!


இந்த படம் சமத்துவத்தை அழிக்கும் படம்





இது ஒரு
 வண்ண ஓவியம்
இது என்ன 
செய்துவிடும் மனிதர்களுக்கு

ஏழைகளின் துயரத்தை
போக்கி விடுமா..?
இழி பிறவிகளின்
இழிவுகளைத்தான் துடைத்திடுமா..

இந்த ஓவியத்தை
வீட்டுச் சுவற்றில்
மாட்டி தெய்வமென
வழிபடும் கூட்டத்தின்
இல்லாமையைத்தான் நீக்கிடுமா..???



அநியாயம் செய்யும்
துப்பு கெட்ட
ஆட்சியாளர்களையும்
அதன் படைகளையும்
தண்டித்து விடுமா..???


ஒரு உயிர்
என்றால் தின்பதும்
கழிப்பதும“ உழைப்பதும்
இயற்கையில் நடப்பது
நியதி அந்த
ஒவியத்தில் உள்ள

கடவுளார்களுக்கு இயற்கை
 நியதிதான் உண்டா...??

கடவுள் பக்தன்
படைத்துள்ள படையலைத்தான்
உண்ண  முடியுமா..?????

பக்தனுக்கு எதுவும்
செய்ய வேண்டாம்
அவன் வீட்டில்
வீசும் காற்றில்
பட படக்காமல் 
இருக்கத்தான் முடியுமா...?????

கடவுள் என்று
வண்ணங்களால் படைத்து
விட்டான் ஒருவன்
அவனுக்கு இந்தக்
கடவுள் என்ன
செய்திட முடியும்..??

இதனை கடவுள்
என்று நம்புகிற
முட்டாள் மனிதர்கள்
சமூகத்தில் இருக்கும்
வரை மனிதர்களிடையே
சமத்துவத்தை படைக்க
முடியாது ஆகையால்
கடவுள் என்று
பொய்யுரைக்கும் அந்தப்
படத்தை தூக்கி
எறியுங்கள் தூரமாய்.........


புதன் 05 2017

ஒரே நாடு..ஓரே வரி, ஓரே சந்தை....

ஒரே நாடு
ஒரே வரி
ஒரே சந்தை
இருந்தால் தானே
பன்னாட்டு உள்நாட்டு
கார்ப்பரேட்டுகள் எளிதில்
கொள்ளை அடிக்க
இயலும் ஏகபோக
நலன்களை மூடி
மறைக்க முடியும்
பாசித்தை இன்னும்
மூர்க்கமாக பலப்
படுத்த முடியும்
கோமாதா பெயரில்
படு கொலைகள்
நடத்த முடியும்
சாதி-மத
கலவரங்களை தூண்ட
முடியும் அதன்
மூலம் ஆர் எஸ்எஸ்
அமெரிக்க தொண்டு
நிறுவனங்கள் மூலம்
நிதி பெற முடியும்

இப்படியான பணி
மூலமாகத்தானே பெரியார்
மண்ணில் மூவாயிரம்
கிராமங்களில் ஆர் எஸ் எஸ்
கிளைகளை அமைக்க
முடிந்து இருக்கிறது..
அமெரிக்காவின் புதிய
காலனிய ஆதிக்கம்
இண்டியா வாழ்க!!
கூட்டிக் குடுக்கும்
காட்டிக் கொடுக்கும்
கும்பல்கள் வளர்க!!


  

திங்கள் 03 2017

ஒரு நாதியற்றவரின் அங்கலாயிப்பு....!!!

வட 
இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டார்கள்;

கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள் 
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள் ;

பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றார்கள்

சப்புக்கொட்டி.
மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டார்கள

தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனையும் தமிழையும் சேர்த்தே விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

இலங்கையில் கொன்றார்கள் பொறுமை
கொண்டார்கள்

கச்சத்தீவு இல்லை.
பொறுத்துக்
கொண்டார்கள்

அணுமின் நிலையம்
பொறுத்துக்
கொண்டார்கள்

கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டார்கள்

நியூட்ரினோ ஆராய்ச்சி
பொறுத்துக்
கொண்டார்கள் 

ஆத்து மணல் கொள்ளை/ மலைகள் குவாரி பொறுத்துக்
கொண்டார்கள.



ஆந்திராவில் கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

கர்நாடகாவில் எரித்தார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

முல்லை பெரியாறில் விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டார்கள்

இனி நீட் மூலம்  இங்குள்ள மருத்து மனைகளுக்கும் வியாபாம் மாதிரி சதி செய்து பின்வாசல் வழியாக வந்து விடுவார்கள். பொறுத்துக்
கொள்வார்கள். 

தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என தாமரைக் கட்சியினர் சொன்னார்கள் 

நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள் பொறுத்துக்
கொள்வார்கள்

தமிழர்கள் நாமும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்ள சொல்வார்கள்,

 நமக்குத்தான்
இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சரக்கும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதி வெறியும் எளிதாக கிடைக்கிறதே.

இப்படிக்கு

*சாதி மதத்தால் பிளவுபட்டு, தனித்தொன்மை வரலாற்றின் வீரமும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு நாதியற்ற இனத்தின் மகன்.....!!!!!!!*

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...