பக்கங்கள்

சனி 15 2014

போங்கடா நீங்களும் ஒங்க சமத்துவமும்.

Kandasamy Muthurakku
தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்களா ? -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா --- அய்யயோ அதெல்லாம் முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்குள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டு உள்ள விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி

தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒன்னா சமமா வாழ விடுவீங்களா -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில அவங்க ஊருக்கு ஒதுக்குபுறமா சேரில தான் வாழனும்.

சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க/ எரிக்க விடுவீங்களா -- அய்யயோ அதெல்லாம் முடியவே முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்க தனி இடுகாடுல தான் புதைக்கணும்.

தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க -- அது எப்படிங்க ஞாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா. எல்லாருக்கும் சமமா தான் இருக்கனும் இப்படி பிரிக்க கூடாது.

செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிரா பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம்.

போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்.

(முகநூலில் கண்டது)

வெள்ளி 14 2014

வாழவும் விடுவதில்லை..தப்பித்து போகவும் விடுவதில்லை..

 ஒரு இனத்தையே அழித்த இட்லரின் வாரிசு ராஜபட்சியின் கொடூரத்தால் மட்டகளப்பு மாவட்த்திலிருந்து அடைக்கலம்கோரி,

வழக்கமான ஆஸ்திரேலியாவை தவிர்த்துவிட்டு முதன்முறையாக நியூஸிலாந்து நாட்டுக்கு செல்லாம் என்று்.......நிணைத்து..
தப்பிச்செல்ல முயன்ற 75 பேர் ,மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பெண்களும் ஆறு சிறுவர்களும் அடங்குவர்.

 வாழவும் விடுவதில்லை, தப்பித்துச் செல்லவும் விடுவதில்லை ராஜேபட்சி.........

வியாழன் 13 2014

மேல் சாதிக்காரர்கள் மதம் மாறலாம் சாதி மாறலாம்.ஆனால்.......

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து டீக்கடை வைத்த அங்கயற்கன்னி என்பவர்க்கு . அன்று அவர்க்குதபால் வரும்போது அங்கயற்க்கன்னி வலையன் என்று வரும்.

அந்த அங்கயற்கன்னி வலையன் இன்று..அங்கயற்கன்னி பிள்ளையாக மாறி.சேனைத்தலைவர் அறக்கட்டளையின் முக்கியஸ்தராகவும்,வ.உ.சி பேரவையின் பிரமுகராகவும் மாறிவிட்டார்.

அந்த பிள்ளை சாதியைச் சேர்ந்த ஒருவர். அய்யர்வீட்டுப் பொன்னை கலியாணம் செய்து பிறந்த தன் மகன்களை அய்யராக்கி சான்றிதழும் பெற்றுவிட்டார்.

பிரமலைக்கள்ளர், சேர்வை,கள்ளர் இந்த சாதியை சேர்ந்தவர்களெல்லாம் தேவர்சமூகமாகவும் முக்குலுத்தோராகவும் மாறிக்கிறலாம்.  அல்லது சாதி மாறாமல் கிறிஸ்தவ மதத்துக்கும்  மாறிக்கிறலாம்

இப்படி மேல் சாதியின்னு சொல்லிக் கொல்பவரெல்லாம் மதம் மாறாமல் சாதி மாறலாம்...அல்லது மதம் மாறலாம் சாதி மாறலாம்  ஆனால்..........

காலங்காலமாக மேற்படியார்களால் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் மதம் மாறினாலும்,பெயர் மாறினாலும் சாதி இழிவு மட்டும் மாறுவதில்லை, சாதியை மாற்றிக் கொண்டாலும் சாதிவெறிக்கொண்ட சமூகக்கூட்டம். மாற்ற விடுவதில்லை. சரி...

சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம் என்றால் அரசும் விடுவதாக இல்லை.

புதன் 12 2014

சாதிவெறி குல தெய்வத்துக்கு தங்கக்......காப்பு......

தலைக்கு,கைக்கு,மார்புக்கு,இடுப்புக்கு,இடுப்புக்கு கீழ்....இப்படி ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 13 கிலோ எடை கொண்ட 4கோடியே 70 இலட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தை “ சாதிவெறி குல தெயவத்துக்கு தமிழகத்து அனைத்து மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தன் வேண்டுதலை . வீடியோ கான்பிரசிங் மூலம் அல்லாமல் நேரடியாக வருகை தந்து  தமிழகத்தை ஆளும் புர்ச்சி தலவி தன் பொற்கரங்களால் அணிவித்தார்.

இந்த 13 கிலோ எடை கொண்ட தங்கத்தை,உள்ளுர் கொள்ளையர்களோ, வெளியூர் கொள்ளையர்களோ,வீராதி வீரர்களோ,சூராதி சூரர்களோ,அபேஸ் பண்ண முடியாத அளவுக்கு உள்ளேயும் வெளியேயும்,24 மணி நேரமும் விட்டால் 48மணி நேரமும் தங்கத்தை பாதுகாக்க பாதுகாப்பு ஏற்ப்படுத் தப்பட்டுள்ளது.

இத்தகைய பாது காப்பையும் மீறி ஹைடெக் திருட்டு கொள்ளையர்களின் திறமையை மனதிற் கொண்டு.......

சாதிவெறிகுல தெய்வ கொண்டாட்டத்தின் போது தங்கத்தை அணிவிப்பதும் சாதிவெறி கொண்டாட்டம் முடிந்த பின்பு தங்கத்தை கழட்டுவதும் இப்படி ஒவ்வொரு சாதிவெறி விழா கொண்டாட்டத்தின் போது மாட்டுவதும் கழட்டவதும்

அப்படி கழட்டப்ட்ட தங்கத்தின் எடையை பரிசோதனை செய்து. பரிசோதனை முடிந்த பின் பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இத்தகைய நிகழ்ச்சிகளால் சாதிவெறியை பாதுகாத்ததுமாச்சு,அந்த
சாதிவெறி குல தெய்வத்துக்கு  தங்கம் அணிவித்த பேரும்மாச்சு.......
அடுத்த ஆதிக்க சாதித்தலைவர்களும் தங்கம் கேட்க வழிகாட்டியதுமாச்சு, தமிழக வரலாற்றில் சாதிவெறி குலப் பெருமையை நிலை நாட்டிய  தங்கத்தாரகை என்ற பெருமையும்மாச்சு........எப்படி!!!

செவ்வாய் 11 2014

நல்லம்மாள் மகன் என்ன லூசா..? உண்மைக்கதை

மாநகராட்சியின் 69 வது வார்டில் துப்பரவு ஊழியராக பணியாற்றி தனது 58 வயதில் பணி நிறைவு பெற்றவர் திருமதி நல்லம்மாள்.

திருமதி நல்லம்மாளுக்கு முதலாவதாக ஒரு பொண்ணும் இரண்டாதவதாக ஒரு ஆணும் உள்ளனர். திருமதி நல்லம்மாளின் கனவர் ,மகனின்  நான்கு வயதில்  பரலோகம் சென்று விட்டார்.

படிப்பும்,விவரமும்,ஆதரவும் இல்லாமல் திக்கு தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட நல்லம்மாள் தவியாய் தவித்துப்போனார். தனது கனவர் பன்னை அடிமையாய் வேலை பார்த்த ஆண்டைகளின் வீடுகளிலே வீட்டுப் பணிப்பெண்ணாக தன் வாழ்வைத் தொடர்ந்தார்.

வீட்டு வேலை செய்து வந்தபோது  சில நல்லவர்களின்  மனைவிமார்களின் உதவியால் ஊராட்சி வார்டுகளில்  துப்பரவு சிப்பந்தியாக  சேர்க்கப்பட்டு, ஊராட்சி வேலை நேரம் போக , மீதி நேரத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டதுக்கு நன்றிக்கடனாக ஆண்டைகளின் வீடுகளிலும் வேலை செய்து வந்து தன் குடும்ப வண்டியை ஓட்டி வந்தார் திருமதி நல்லம்மாள்.

ஊராட்சி நகராட்சியாக மாறி நகராட்சி மாநகராட்சியாக ஆகி 35ஆண்டுகள்  பணியாற்றி 58வயது ஆகியவுடன் பணி ஓய்வு பெற்றார். .தன்னுடைய பணப்பலன் பெருவதற்க்காக மூன்று ஆண்டு காலமாக  நல்லம்மாளின் மகன்  மண்டல அலுவலகத்துக்கும் தலைமை அலுவலகத்துக்குமாக அலைந்து போட வேண்டியவர்களுக்கு போடு பணம் போட்டு,மொய் செய்ய வேண்டியவர்களுக்கு மொய்யெழுதி .கடைசியாக 35 வருட பணிக்காலத்தை கணக்கில் சேர்க்காமல் 28 வருடத்தை மட்டும் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு .ஒரு லட்சத்து அய்ம்பத்திஅஞ்சு ஆயிரத்தை   பணப்பலனாக பெற்றார் திருமதி நல்லம்மாள்.

அந்த ஒரு லட்சத்து ஐம்பதைந்தாயிரத்துக்கான செக்கை.“பாக்கியா” பைன்னாசில் கொடுத்து பணமாக பெற்று.....திருமதி நல்லம்மாளும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கியதுமே.........அவர்களை சுற்றி  ஒரு கூட்டமே கூடியது.

கூடி நின்ற கூட்டத்திடம் நல்லம்மாளின் மகன் சொன்னான். “அய்யா. அம்மா உங்களிமிடருந்து என்அம்மா வாங்கிய கடனை இல்லை என்று சொல்லவில்லை.  என் அம்மாவின் பணப்பலன் குறைவாக வந்துள்ளது. எனது தாயாரின் பணிப்பதிவேட்டில் பணிபுரிந்த நாட்களை பதிவு செய்யும் அலுவலர்கள் ஆறு வருடங்களை பதிவிடாததால். பணப்பலன் குறைந்தற்கு காரணம்.

இந்த ஒரு லட்சத்து அய்ம்பத்திஅய்ந்தாயிரத்தை வைத்துக்கொண்டு .வட்டியும் அசலுமாக சேர்த்து உங்கள் அனைவரது கடனையும் அடைக்க முடியாது. ஆகையால் வட்டியை கேட்காமல்.அசலை மட்டும் வாங்கிச் செல்லுமாறு உங்கள் பனிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்றான்.

 கடன் கொடுத்த கூட்டத்திலிருந்து பிச்சைத்தேவரும், கழுவாயி யாத்தா,மாயக்கா,பேச்சியக்கா.ஆகியோர் அவர்களுக்கே உரித்தான
வட்டார மொழியில் சத்தம் போட்டார்கள்.

யப்பே.....ய்........ய்...... என்னா............ம்..... இதென்னப்பா பேச்சு......வட்டி என்ன கொஞ்சமா? .விடுறதுக்கு..... .......ஏய்ய் நல்லம்மா.......என்னா..........ஓ.........மகன் இப்படி சொல்றான்.       இதுக்குத்தான் நீ கேட்டவுடனே........கடன தந்தோம்மாக்கும்...........இதென்ன  வழுவட்ட பேச்சு என்றார் பேச்சியக்கா..

என்னப்பா...............நல்லம்மா மகனே..........இதுதான் உன் நேர்மையாக்கும சரியில்லப்பா.....வட்டியும் அசலையும் கொடுக்கப் பாரு .என்றார் பிச்சைத்தேவர்.

“யப்பா.........ய்ய்....நல்லம்மா மகனே..........ஒங்கம்மா கூட வேல பாக்கறவளுக்கு ஓங்கம்மா எங்கிட்ட கடன்வாங்கிக் கொடுத்தா............அவளுக ஒங்கம்மாவ ஏமாத்தி புட்டாளுக.............. அவளுக மாதிரி நீ...........எங்கள ஏமாத்திரி யாக்கும்
ஒழுங்கா..மரியாதையா வட்டி மொதலுமாக காச வச்சுட்டு போ..........ஆமா.
நீ ஏமாந்ததுக்கு நாங்கலா பொறுப்பு......சே.....என்றார் கழுவாயி.யாத்தா......

சரித்தா................எங்கம்மாவின் இரக்க குணத்த சாதகமாக பயன் படுத்திக் கிட்டாக......அவுககிட்ட கேட்டபோது,வாங்கினவுகல்ல பூச்சான் வீட்டுக்காரம்மா மட்டும்தான்  உங்ககிட்டஒத்துகிட்டு  .நல்லம்மக்காகிட்ட கேக்காதீங்க நானு தந்துரேன் சொன்னாங்க.......மத்தவங்க எங்கம்மாகிட்ட கடன் வாங்கித்தரச் சொல்லவே இல்லேன்னு சொல்லிட்டாங்க.....அவுககிட்ட எப்படி வாங்குறதுன்னு சொல்லுங்க  என்றான் நல்லம்மா மகன்.

கந்தசாமி பிள்ளை மட்டும்..அய்யா,நல்லம்மாமகனே,...... எங்களுக்கு ஒழிச்சுவிடப்பா............... நாங்க போறோம்............என்றார்.

ஏற்கனவே தனது தாயிடம் யார் யாரிடம் கடன் வாங்கிய விபரம்.வட்டி கொடுத்த விபரம், உடன் வேலை பார்த்தவங்களுக்கு கடன் வாங்கி கொடுத்த விபரத்தையெல்லாம் தன் தாயிடம் கேட்டு எழுதி வைத்துக்கொண்டதைக் கொண்டும் .அதோடு கடன் கொடுத்தவர்கள் உண்மையைச் சொல்கிறார்களாக என்றும். அவர்களிடம் மீண்டும் கேட்டு அவர்களிமிருந்து தனது தாயார் வாங்கிய கடன் பணத்தை  எண்ணிக் கொடுத்தான்.

 அரிசி கொடுத்தே கடனை எற்றி வைத்த அரிசிகாரம்மா . மட்டும் பத்தாயிரத்துக்கு இருபதாயிரம் என்று சத்தியம் பன்னி சாதித்தார்.

அரிசிகாரம்மா...........நீங்க ரேசன் அரிசிய தீட்டி நல்ல அரிசின்னு  அதிக விலைக்கு வித்து கடன ஏத்தினது எல்லாம் எனக்கு தெரியும்.......ம்மா....... என் அம்மாவால நானும் ஏமாந்தினது வாஸ்தவம்தான். அதுக்காக இன்னமும் ஏமாத்தினா எப்படிம்மா...............

ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க..........ஒங்களுக்கு பயந்துகிட்டு.
நான் பணம் தரல...............எங்கம்மா ஒங்கிட்ட கை நீட்டி வாங்கியிருச்சென்னு தான் . வாங்கின பணத்தை திரும்பத் தர்ரேன். போலீஸ.கோர்ட்டு போனால் ஒங்களால் கொடுத்த பணத்தை வாங்க முடியுமா......??? எங்கம்மா என்ன ஒங்களிடம் எழுதியா.......கொடுத்திருக்கு..............நான்  பணம் இல்லேன்னா என்ன செய்விங்க..........கொன்றுவிங்களா......... அவனவன் எழுதிக் கொடுத்த பணத்தையே வாங்க முடியுமா..???....தவிக்கிறது ஒங்களுக்கு தெரியுமா.?.........

அரிசிகாரம்மாவுடன் கூட வந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும்.
“இந்தாம்மா...........நல்லம்மா மகன் பொய் சொல்லமாட்டான். அவன் அப்பன் அம்மாவை விட ஒருபடி மேல இருக்கான்..  கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிறது பெரிய விசயம்.. நீ ரேசன் அரிசிய கொடுத்து கடன ஏத்தினத புட்டு வச்சிட்டான் ....உள்ளது மோசம் போயிரும் பாத்துக்க என்றதும்.

நல்லம்மா மகனே............மன்னிச்சிருப்பா...............சும்மா....சொன்னேன்ப்பாஃ
எல்லாக் கடனும் பத்தாயிரத்துக்குல்லதான் வருது. மன்னிச்சுறுப்பா நல்லம்மா மகனே......நீ கொடுக்கறத.............கொடுப்பா என்றார் அரிசிகாரம்மா.

கடைசியாய் பிச்சைத்தேவர்.மாயக்கா.பேச்சியக்கா........ மூவரும்  புலம்பியபடி சரி....நல்லம்மா மகனே, அசல கொடு.......... ஒங்கத்தாவின் வேறுபணம் எதுவும் வாங்கினால்...பின்னாடி......வட்டிய கொஞ்சம் கொஞ்சமாக கொடு என்றார்கள்.

பின்னாடியெல்லாம் கொடுக்க முடியாது. எங்காத்தாவுக்கு பென்சனே ரெண்டாயிரம்தான் வரும்....... அதவச்சுதான் நானும் எங்காத்தாவும் கஞ்சி குடிக்கனும்.......அதையும் ஒங்கிட்ட குடுத்திட்டா நாங்க எப்படி கஞ்சி குடிக்கிறது என்றபோதுதான்

நல்லம்மா மகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற விபரம் அங்கு இருந்தவர்களுக்கு தெரிந்தது.

திருமதி நல்லம்மாளின் ஓய்வுப் பணத்தை கொண்டு திருமதி நல்லம்மாள் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய கடனையும் தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடனையும் தன் மகன் மூலமாக அனைத்து கடனையும் அடைத்துவிட்டு மீதி இருந்த ஒன்பதாயித்து சில்லரையுடன்  நல்லம்மா கவலையுடன் தன் மகனை தொடர்ந்தார்.

நல்லம்மாள் கவலையுடன் இருப்பதை பார்த்ததும் நல்லம்மா மகன் சொன்னான். அவுங்ககிட்ட வாங்கின பணத்தை தானே அடச்சோம் கவலைய விடும்மா..... கஞ்சி இல்லேன்னாலும் கடன் இல்லாம இருக்கலாம் என்று தேற்றினான்.

 திருமதி.நல்லம்மாளின் ஓய்வூதிய பணப்பலன் பணத்தை நல்லம்மா மகன் கூடி நின்ற கூட்டத்திடம் எண்ணி கொடுப்பதைக்.தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என்னவென்று  விசாரித்து தெரிந்து கொண்ட பின்.................

”நல்லம்மாள்  மகன் என்ன லூசா” என்று கேட்டபடி வியப்புடன் சென்றார்கள்.






....


திங்கள் 10 2014

“வெற்றி” என்பது எது?.............

நாலு வெங்காயங்கள் சேர்ந்து “வெற்றி” என்பது எதை குறிக்கும் என்று முடிவு எடுக்க விவாதம் செய்து கொண்டு இருந்தனர். அதில்

முதலாவது வெங்காயம் சொல்லுச்சு....“ விரட்டிக் கொண்டு வரும் போலீசிடம் திருடன் பிடிபடாமல் தப்பித்து விடுவதுதான் “வெற்றி” எனப்படும் . என்றது.

ரெண்டாவது வெங்காயம் .......அதுல்லடா.....“ஒரு பலசாலியை.வத்தலும் நோஞ்சானுமான ஒருத்தன். அடித்து துவைத்து எடுப்பதுதாண்டா “வெற்றி” என்றது..

மூனாவது வெங்காயம் சொன்னான்..... போங்கடா.......“டாஸ்மாக்கில் ஒரு புல் அடித்துவிட்டு ரோட்டுல படுத்துக்கிடக்காமல், ஸ்டெடடியா...........வீடு போய் சேர்வதுதான்டா “வெற்றி” என்று சொன்னது

நாலாவது வெங்காயம்----  இப்படியா?... சே.........இதெல்லாம் இல்லடா, “விஜயகாந்து நடத்திய ஊழல் எலுப்பு மாநாடு ”மாபெரும் வெற்றியின்னு சொன்னாரு.......எத வச்சு சொன்னாரு தெரியுமா..?

மாநாட்டுக்கு “செம கூட்டம் கூடியத.. வச்சு  சொன்னாரு,செம கூட்டம் கூடியதுக்கு ஆதாரமா.......அங்குள்ள .டாஸ்மாக் கடைகளும் அன்னிக்கு செம கல்லா கட்டியிருக்கு................அதனால ஒரு கூட்டத்துக்கோ.........மாநாட்டுக்கோ செம கூட்டம் கூடினால்..........அதான் “வெற்றி“க்கு அடையாளம்டா என்றது.
..

நாலு வெங்காயங்களும் “வெற்றி”யைப்பற்றி நாலு விதமாக  கருத்து சொன்னதால்..........ஒத்த கருத்து எட்டப்படவில்லை. ஆதலால் முதல் சுற்றை முடித்துவிட்டு............இரண்டாவது சுற்று தொடங்கப்பட்டது.


இரண்டாவது சுற்று.

முதல் வெங்காயம்.-----  மாப்ளே..........,என் பொன்டாட்டி. கோபமா கூப்பிடுறாடா?”....... அங்க..பாரு......நிக்கிறாடா.,..... நான் வர்ரெண்டா...என்றது.

“இந்தா......வந்துட்டேன்மா”.................. என்று சைகையாலும்,வாயாலும் சொல்லியபடி............தன் பொன்டாட்டியை நோக்கி நடையை கட்டியது.“

ரெண்டாவது வெங்காயம்.- செல் போன் சினிங்கியவுடன் பேசியவுடன்

 “மச்சான், என் ஆளு பஸ் இல்லாததால்  எனக்காக பஸ் ஸ்டாப்புல நிக்கிறாடா.”......... நா.. போயி..........அவள....்வீட்டுல போயி பத்திரமா.... விட்டுட்டு வந்துரேண்டா....................செல்போனில் குழைந்தபடி நகர்ந்தது..

மூனாவது வெங்காயம்--- நாலாவது  வெங்காயத்த பார்த்து,  கேட்டது..

“ என்ன மச்சி.நீ..........என்ன சொல்லப் போற...........

நாலாவது  வெங்காயம்-------. நீ............சொன்ன பின்னாடிதான். நா.....   ன். சொல்லனும். நீ............சொல்ரா.........மொதல்ல..............என்றது..

மூன்றாவது வெங்காயம்---  யோசனைக்கு பின்.....இப்படிச் சொன்னது.

“ பொண்டாட்டி மார்களிடம் பயப்படாமல் இருப்பதுதாண்டா ”, “வெற்றி” என்றது..

நான்காவது வெங்காயம்---- போடா..............பூல்......,“காதலி போன் அடித்த மறு நிமிடத்தில் அவள் முன், நிற்பதுதான்டா.............வெற்றி........என்றது அது.

இரண்டாவது சுற்றில் இருவர் கழன்டு விட, இருவர் சொன்ன கருத்தும் வெவ்வேறாக இருப்பதால்...........இரண்டாவது சுற்றிலேயும் ஒத்த கருத்து எடுக்கப்படவில்லை............

மூன்றாவது சுற்று------------

என்னாது...........மூன்றாவது சுற்றா...............

இந்த நாலு வெண்ணைய்களும்  அடுத்த அமர்வில் கூடும்போது  “வெற்றி” என்பது  என்ன பற்றி  வி.ரி வாக.....வி.....வாதம்  நடாத்தி    முடிவு எடுக்கப்படும்.




ஞாயிறு 09 2014

வசூல்ராஜாக்கள் எம்பிபிஎஸ்ஸிடம் சிக்காத தமபதிகள்.......

இருக்கிறவங்களும்.இனிமேல் வரப்போறவங்களும், போய் சேர்ர வரைக்கும் எப்படியாவது எந்த சுத்துல லாவது வசூல்ராஜாஎம்பிபிஎஸ்ஸிடம் மாட்டாமல் அவரிகளிடமிருந்து தப்பித்து மேலோகமோ, கீழோகமோ போய் சேர முடியாது.

இதன் காரணகர்த்தா தனியார்மயம்,தாராளமயம், உலகமயம்.

இந்த மயங்கள் வந்து கோலோச்சுவதற்கு முந்தி வந்த ஒரு தம்பதியினர் , தற்போது  நிலவும்  வசூல்ராஜாவிடம்  சிக்காமல் தப்பித்து, போய் சேர்ந்துவிட்ட தம்பதிகளை   பற்றியது..

சிவ கங்கை மா வட்டம் மானா  மதுரை அருகே வேதியரேந்தல கிராமத்தை சேர்ந்தவர் பொலயப்பன் இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களின் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பாகும். ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது.விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துவந்தனர்.

 நான்கு தலைமுறை கண்ட பொலயப்பன்-முத்துப்பிள்ளை தம்பதியினர் வழியில் 126 பேர்கள் உள்ளனர்.

மழைக்குக்கூட மருத்துவமனைப் பக்கமோ.அதன்  அருகில்கூட ஒதுங்கவோ, எட்டிப்பார்க்கவோ இல்லை இந்த தமபதியினர்.

பொலயப்பன் தனது 112 வயதில் முன்னே செல்ல முத்தப்பிள்ளை தனது 113 வயதில் பின் சென்று பொலயப்பனை அடைந்தார்.

21 ம்நூற்றாண்டில் இந்த தமபதியர்கள் வசூல்ராஜாக்கள் எம்பிபிஸ்ஸிடம் சிக்காமல் தப்பித்து சென்றது. வியப்பாக இருக்கிறது. கொடுத்து வைத்தவர்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...