தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சி என்கிறார் அண்ணாமலை.
சனி 05 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...62
வியாழன் 03 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...61
இராமாயண, வேத விற்பனர்கள்தான் கிறிஸ்துவன் மெக்காலே கல்வியை விரட்டி விரட்டி பாதிரியார் கல்வி நிறுவனங்களில் படித்தார்கள்.
மாணவி இறந்துவிடுவார் என உறுதியாக நம்பி இரக்கமில்லாமல் வீடியோவில் பேச வைத்து;
மதமாற்றம் என பொய் பேசி மகளின் மரணத்திற்குக் காரணமான சங்கிமலை கும்பலை கைது செய்வேண்டும்
இனியாவது செய்யட்டும் மதமாற்றம் | mathimaran Speech | வே.மதிமாறன் பேச்சு |
செவ்வாய் 01 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...60
வாய்ப்புள்ளவர்களுக்கு.....!!!!
The Underground Railroad ( web Series , Amazon Prime ) - 10 Episodes
கிட்ட தட்ட ஒன்பது மணி நேரம் , நாற்பத்தைந்து நிமிடங்கள் ....
ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை ...
மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் பார்க்கும் அதி அற்புதமான நீள் படம் ...
அமெரிக்காவின் நீண்ட நெடிய வரலாற்றில் கறுப்பின மக்கள் ( African Americans ) பட்ட வேதனைகளையும் , சோதனைகளையும் , பத்து எபிசொட் மூலம் , மிக அற்புதமான சொல்லும் நீள் படம் ( WEB SERIES ) .. ஒரு சில படம் எப்படா முடியும்னு இருக்கும் .. இந்த நீள் படம் , ஒவ்வொரு நிமிடமும் நம்ம மனச கொத்திகிட்டு போகுது .....
1700 களின் இறுதியிலும் , 1800 களிலும் , Slavery ( அடிமைத்தனம் ) , அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக இருந்த காலம் ... முக்கியமா கருப்பு இன மக்களை அடிமைப்படுத்தி செல்வத்தில் கொழித்த தெற்கு மாநிலங்கள் , எந்த அளவுக்கு கீழே இறங்கினார்கள் என்பதை சொன்ன படம் ...
அதி அற்புதமான ஒளிப்பதிவு , மற்றும் ஒலிப்பதிவு ....
பராசக்தி படத்துல வரும் வசனம் ஒண்ணு வருமே .. ஓடினாள் , ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடினாள் என்று ... அது மாதிரி இந்த படத்தில் Cora Randall என்னும் பெண் அமெரிக்காவின் georgia மாநிலத்தில் இருந்து , ஒரு வெள்ளையனை தற்காப்புக்காக கொன்ற காரணத்துக்காக , குற்றத்துக்காக தப்பித்து ஓடுகிறாள் .... ( South Carolena , North Carolena , Tennessee , Indiana போன்ற மாநிலங்களில் ஓடி ஒளிகிறாள் ... அவளை Arnold Ridgeway , என்னும் அடிமை பிடிப்பவன் (Slave catcher) கடைசி வரை துரத்துகிறான் , பிடிக்கிறான் ..துன்புறுத்துகிறான் .... ... நம்ம ஊர்ல புள்ள பிடிக்கிறவன் என்று சொல்வார்களில்லையையா .. அந்த மாதிரி .... இந்த நபருக்கு உதவி பண்றதுக்கு ஒரு விசித்திர குள்ளன் ... Homer என்னும் பைய்யன் ( சிறுவன் ) .. ஆகா என்ன அருமையான நடிப்பு .. அசந்து போனேன் ....
இந்த படத்தின் தலைப்பில் வருவது மாதிரி பூமிக்கு கீழ ரயில் ஓடியதாக ஆதாரம் இல்லை .. இதை fiction ( கற்பனை) என்று சொல்லலாம் ... ஆனா அந்த காலத்துல , இந்த மாதிரி , அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டு ஒரு மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்கு போவதற்கு பலர் உதவி இருக்கிறார்கள் ... இந்த set up ""Underground Railroad"" என்று அழைக்க பட்டதாக எடுத்துக்கொள்ளலாம் ... ஆனா இந்த படத்துல உண்மையா ரயிலை காட்டுகிறார்கள் .. அது சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை ....
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கதை ...பல பல பாத்திரங்கள் .. எல்லா கதா பாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள் ...
கண்டிப்பா பார்க்க வேண்டிய Web Series ....
திங்கள் 31 2022
ஞாயிறு 30 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...58
கனடா அமெரிக்க எல்லையில் நான்கு இந்தியர்கள் குளிரால் இறந்து போயிருக்கிறார்கள்.
மைனஸ் 35 டிகிரி குளிர். அநேகமாக சட்டவிரோத குடியேற்றத்துக்கு முயற்சி செய்தவர்களாக இருந்திருக்கக்கூடும். அமெரிக்காவுக்குள் அழைத்து செல்ல வேண்டிய வண்டி வராததால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று செய்தி.
ஒரு கணவர் மனைவி, பதின் வயது பிள்ளையொன்றும் கைக்குழந்தையொன்றும் இறந்திருக்கிறார்கள். அவர்களிடம் சில ஆடைகள், குழந்தைக்கான டயாப்பர் மற்றும் மருந்துகள் இருந்திருக்கிறது.
நான்கு பேர் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேற ஆகும் செலவில் இந்தியாவில் ஒரு ஜென்மத்தையே வாழ்ந்துவிடலாம். ஆனாலும் குடிகாரனை குவாட்டர் இழுப்பது போல இழுக்கிறது அமெரிக்கா.
இல்லற இன்பத்தை தொலைத்துவிட்டு லீவே எடுக்காமல் பிரஸ்மீட் கூட கொடுக்க நேரமில்லாமல் ஜீ ஒரு மாநிலத்தை பூலோக சொர்க்கமா மாத்தியிருக்காரு.
அந்த குஜராத்ல இருக்க பிடிக்காம ஒரு குடும்பம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சி செய்து செத்துப்போயிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...