பக்கங்கள்

சனி 08 2013

ஏன்?திவ்யா..............பின்வாங்கி விட்டாய்.!!!!!!!


பாஞ்சாலி,
.தன்னை வைத்து சூதாடிய 
கணவனிடத்தில் விளக்கம்
கேட்டாளே தவிர, 
விட்டு விலகவில்லை.

சீதை சிதையிலே 
இறங்கினாலே தவிர .
ராமனை விட்டுப 
பிரியவில்லை,


சந்திரமதி,
அரிச்சந்திரனின் செயலுக்கு
தன்னை அர்ப்பனித்தாளே 
தவிர.அவனைவிட்டு
போகவில்லை ,

காதலை விட்டுவிடு
என்ற தந்தையின்
மந்திரத்தையும்
மந்திரம் சொன்ன தந்தை
மரித்த பினபும்  தீர
முடிவெடித்து
பிரியாத திவ்யா...........
இளவரசன், திவ்யா

நாயக்கன் கொட்டாய் இளவரசன்
உன் சொல்லுக்கு தானே ஆடினான்
உன்னை மணமுடித்தான்..............

சாதிவெறியர்களால் பாதிக்கபட்ட
மக்கள் சொன்னபோதும், இயற்கை
உன் கருவை அழித்தபோதும்.......
இளவரசவன் உன்னைவிட்டு
பிரிந்தானில்லை..........பின்..............
வாங்கினானில்லை...........

ஏன்? திவ்யா..................அக்னிக்கு
பிறந்தவர்களின் சாதிவெறி
கொல்லும் என்றா......................
பின் வாங்கி விட்டாய்!!!!!!!!!!!.



வெள்ளி 07 2013

கழுத்தை சுத்தி மூக்கை தொடும் தினமணி!!!


 நவீன மிட்டா மிராசுதாரர்கள் என்ற தலைப்பில் தினமணி திட்டியிறுக்கும் தலையங்கத்தை படித்தால்,அது கழுத்தை சுத்தி மூக்கை தொடுவது புரியும்.

தினமணியின் இந்த தலையங்கத்துக்கு முன்னரே.... தமிழகத்தில்உள்ள மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் முன்னணி,புதியஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்றவைகள்.

தமிழகத்து திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்து தமிழகம் தழுவிய இயக்கமே எடுத்தது.
படியுங்கள் புதிய ஜனநாயகம் - மார்க்சிய லெனினிய அரசியல் ஏடுபடியுங்கள் புதிய கலாச்சாரம் - மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
வினவு தளத்தையும்,புதிய கலாச்சாரம்,புதிய ஜனநாயகம்.இதழ்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு  நன்கு புரியும்.

திடீர் பணக்கார அரசியல் ரவடித்தலைவர்களை எதிர்த்து கழுத்தைச்சுத்தாமல் நேரிடையாகவே மூக்கை தொட்டது இவ்வமைப்புகள்.

திடீர் பணக்கார அரசியல்தலைவர்களை எதிர்த்து வெளியிட்ட ஒலிப்பேழையும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தது. அந்த ஒலிப்பேழையின் ஒருபாடலான....
அண்ணன்...வர்ராரு.....
அண்ணன் ..வர்ராரு...
வள்ளல்.... வர்ராரு
எல்லாரும் ஒதுங்கி
நில்லுங்க............ என்ற பாடலே திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கும்.


நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட தினமணிக்கு நவீன மிட்டா மிராசுதார்கள் இப்பொழுதான் கண்ணில் பட்டு இருக்கிறார்கள். திடிர்பணக்கார அரசியல் ரவடிகளை பற்றி நவீன மிட்டாமிராசுகள் என்று தலையைசுத்தி மூக்கை தொட்டு இருக்கிறார்கள்..ஃ




வியாழன் 06 2013

துக்கத்தில் எழுதபட்டதுக்கு நோபல் பரிசு.....................

ரவிந்திரநாத்தாகூரின் ஒரே மகன்,ஒரேமகள்,ஒரே மனைவி மூவரும் இறந்த துக்கத்தில் எழுதப்பட்டதுதான் கீதாஞ்சலி..........

செத்துப்போனவர்களைப்பற்றி துக்கத்தில் எழுதப்பட்ட கீதா அஞ்சலிக்குத்தான் நோபல் பரிசும் கிடைத்தது.



புதன் 05 2013

கடவுளாக ஆக்கப்பட்டவர்கள் கூறிக்கொண்டது



புத்தர்--- தாம் அறத்துக்கு வழிகாட்டி என்றார்.
 
ஏசுநாதர்—நான் கடவுளின் மகன் என்றார்.

  
நபிகள்நாயகம்—தான் கடவுளின் கடைசித் தூதன் என்றார்


 
கிருஷ்ணன்—தானே கடவுள் என்றான்.

செவ்வாய் 04 2013

இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே...இல்ல..லே.....!!



வயிற்று பசிக்கு கூழ் கிடைக்காம தவிக்கும்போது கொண்ட மசிறு பூ கேட்டு அழுதுச்சாம்..அது மாதிரி
“உளுந்தம் பருப்பை நெய்யிலே வறுத்து பொடியாக்கி பாலில் கொதிக்க வைத்து அதனுடன சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரனு அதிகரிக்கும்

ங்கொய்யாலே, இங்க கஞ்சிக்கே வழியில்ல, உயிரனு உற்ப்பத்தியாம்லே...... இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே........இல்லே............லே...........



ஞாயிறு 02 2013

தேர்தலை புறக்கணிக்கும் ஒரு நீதிபதி........




..

90 சதம் மக்கள் ஆடுமாடுகளாக வாக்களிக்கிறார்கள். இதனால் இந்தீயாவை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது.

சாதி,மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களால் நாடு நிர்வகிப்பதால்.ஆடு,மாடுகளைப்போல் வாக்களிக்க விரும்பவில்லை.

நாட்டில் தார்மீக நெறிமுறைகள் இல்லாதபோது.ஊழலை ஒழிப்பேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஊழலை ஒழிக்க முடியாது. 

இதனால் என்னுடைய வாக்குக்கு அர்த்தமில்லாத நாட்டில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போட விரும்பவில்லை என்றார்.உச்சி குடுமி மன்ற முன்னால் தலைமை நீதிபதி......

20 ஆண்டுகள் என்ன 20 நூற்றாண்டே ஆனாலும் ஊழலை ஒழிக்க முடியாது. 

ஓட்டுப்போடும் வாக்காளர்க்கு எந்த உரிமையும் இருக்காது.

இதனால்தான் இந்திய நக்சல்பாரி வழியில்வந்த கம்யூனிச புரட்சியாளர்கள் சொல்கிறார்கள்


புதியஜனநாயக புரட்சியின் மூலமே ஊழலை ஒழிக்க முடியமென்று...........


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...