பக்கங்கள்

வெள்ளி 09 2013

லஞ்சம் வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகுமா???........

ஒன்றை லட்சத்தில் டாடாவின் நானோ கார்வாங்கியவர் தினசரி அலுவலகத்துக்கும், வீட்டுக்கும்  பந்தாவா போயிட்டு வருவதற்கும் 

நாளுக்கு நாள் விலை ஏறிவரும் பெட்ரோல் அன்றைய விலை நிலவரத்துக்கு ஏற்றாற்போல கணக்கு போட்டாலும்.........

குறைந்த பட்சம்  ஒரு வருடத்துக்கு ஒன்றை லட்சம் ஆகிறது. இந்த ஒன்றை லட்சத்தை  எப்படி ஈடுகட்டுவார். 

அதாவது சம்பளத்தில் செலவு செய்யாமல் சரிகட்டுவார். 

லஞ்சம் வாங்கித்தான் நானோ காரில் ஹாய்யாக பவனி வருவார்.........

இதுதான் எங்களுக்கு தெரியுமே என்கிறீர்களா..........!!!!!

எனக்கு இப்பத்தான் தெரியுது ...............

வியாழன் 08 2013

இதனால்தான் சேரனும் திவ்யாவின் தாயும் புலம்புகிறார்கள்.......

.

சினிமாத் துறையில் பணமும் புகழும் பெற்ற சேரன். தன் மகளை மீட்க வேண்டும் என்று நீதிமன்ற வாயிலில் தொலைகாட்சிக்கு பேட்டியளிக் கிறார்.

திவ்யாவின் தாயார் தேன்மொழியும்.தன் காதலனுடன் திருமணம் முடிந்து கணவன் இளவரசன் வீட்டில் இருந்த  தன் மகளை  தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.

இரண்டும் வேறு  வேறு வழியில் வந்ததாக இருந்தாலும் ஒரே நோக்கத்துடனும் சுயநலத்துடனும் ஒரு வித ஆதங்கத்துடனும் கோபத்துடன்தான் செயல்பட்டார்கள்.

ஒன்று சாதிவெறி என்று பகிரங்கமாக தெரிந்தது.இன்னொன்று மோசடி,ஏமாற்று என்று வேறு முகமாக வருகிறது.

இதில்.இறந்துபோன இளவரசன், ஒரு சாப்ட்வேர் பொறியாளராக வெளி நாட்டில் வேலை பார்ப்பவராகவோ, அல்லது வேறு தொழில் அதிகாரியாகவோ இருந்திருந்தால், 

திவ்யாவின் தந்தை நாகராசனும், ஆட்கொணர்வு மனு போட்ட தேன்மொழியும்  சாதி வெறியர்களின் தூண்டுதல்களுக்கும் சாதிவெறிக்கும் பலியாகி இருப்பார்களா?. 

அட,திவ்யாவுதான் நான் அம்மாகூட இருப்பேன்னு சொல்லியிருக்குமா?

.இன்நேரம்.சாதிவெறிக்கும், தங்களை தூண்டிவிட்ட சாதி வெறியர் களுக்கும் பாடை கட்டி இருப்பார்கள். துள்ளி குதிக்கும் உள்ளுர் சாதி வெறியர்களுக்கு எதிராக, தனக்கு பிடித்த கணவருடன் வெளிநாட்டில் வாழும் என் மகளின் வாழ்வை கெடுக்கும் சாதி வெறியர்களை தண்டிக்க்கோரி புகாரும் கொடுத்து இருப்பார்கள்..

இங்கு சாதி வெறிக்கு மாற்றாக கொஞ்சம் பொருளாதாரம் மாற்றாக இருக்கிறது

சேரன் மகள் விசயத்திலும் பொருளாதாரம்தான் பிரதானமாக இருக்கிறது. தாமினியின் காதலன் சந்துரு. ஒரு அமைச்சரின் மகனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ, இல்லை.சேரன் சார்ந்திருக்கிற சினிமாவிலோ பிரபலமான இயக்குநகராகவேர், நடிகராகவே இருந்திருந்தால்,

சேரனும்.அமிரும் சொல்கின்ற  சந்துருவின் கெட்ட பழக்கவழக்க நடவடிக்கைகள்  பணக்காரரின் அந்தஸ்தாக மாற்றப்பட்டு இருக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டு இருக்கும்.

கேட்கும் வரதட்சனை கொடுத்தும், மனதுக்கு பிடித்த மாப்பிள்ளையை மணமுடித்தும், பெற்றொர்களால் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது.

அல்லது உயிர்க்கு உயிராக காதலித்து,காதலுக்கு எதிராக நின்ற பெரும் படையை எதிர்த்து திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது. அல்லது தோன்றாமல்தான் இருக்கிறதா?

பிரச்சனையே இல்லாத மனிதர்கள்தான் உண்டா?? சமூகமும்தான் உண்டா? ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பஸ்தர் ஒருவர். தன் வீட்டுப் பெண்களை தன்னைப்போல் கஷ்டப்படும் நபருக்கு மணம் செய்து கொடுக்க  முன்வருவரா? வரமாட்டார். அப்படியே அவருக்கு மணம் வந்தால் அவருடைய துனைவியார், மணக்கபோகும் பிள்ளைகள் சம்மதிக்குமா??.

ஒரே சாதியில் உள்ள ஆதிக்கசாதிவெறியர் தன் மகளையோ, மகனையோ தன் சாதி வெறிக்கொடி வளர,  இல்லாத வீட்டிலுள்ளவர் நல்லவராக, தன்சாதிக்காக பாடுபவராக இருந்தாலும் அவர்களுக்கு  மணம்தான் செய்து கொடுப்பாரா??? இல்லை.அந்த வீட்டீல்தான் பெண் எடுப்பாரா ?

கஷ்டப்படுபவரே,தன் குடும்பத்தைவிட சற்று வசதிபடைத்த குடும்பத்தைதான் தேடுகிறார்கள். அது காதலாக இருந்தால் ரெம்பவும் வரவேற்று காதலுக்கு பச்சை கொடி காட்டி தாங்கள் காதலுக்கு ஆதரவாளராக காட்டி பீற்றிக் கொள்கிறார்கள்.இப்படித்தான் செல்வந்தர்களின் காதலும்,


இதுவன்றி,அவர்களுக்கு, தங்கள் எண்ணத்துக்கு விரோதமாகவா, எதிர்கால திட்டத்துக்கு மாறாகவோ, காதல் கீதல் என்று எதுவும் நடந்துவிட்டால், சிங்கமாக,புலியாக,சிறுத்தையாக மாறிவிடுவார்கள்.

சேரன்கூட தான் இயக்கிய பொற்காலம் படத்தில் முரளி தன் தங்கை ஊமைப் பெண்ணுக்கு தன் அந்தஸ்க்கு மேல்தான் மணமகன் பார்ப்பார். அந்தச் சிந்தனைதான் சேரனின் சொந்தப்பிரச்சனையிலும் தெரிகிறது.

பொற்கால படத்தில் முரளியுடன் இருக்கும் வடிவேலு முறை மாப்பிள்ளையாக இருந்தாலும், வடிவேலு பேசும் வசனங்கள் சேரனுக்கு சினிமாத்தனமாக தெரிகிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்கிறவர்கள்கூட, தங்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றபடி வசதியான குடும்பத்தில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது மாதரி....

புரட்சிகர கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் கூட கட்சிக்காக பாடுபடும் ஏழைத்தோழன் குடும்பத்துக்கும், வசதியானதோழனின் குடும்பத்துக்கும் திருமண சம்பந்தமும் சுலபத்தில் ஏற்ப்படுவதில்லை . 

இப்படித்தான் எல்லோரும் காதலுக்கு மரியாதை செலுத்து கிறார்கள.

கெட்டவனோ,கெட்டவளோ,புரிந்த காதலோ,புரியாத காதலோ,சாதிவெறியர்கள் சொல்லும் நாடகக்காதலோ, காசு பறிக்கும் காதலோ,உண்மைக் கதலோ, கள்ளக் காதலோ, அத்தகைய காதலை 

மனித நேயத்துடன் சீர் தூக்கி பார்த்து அங்கீகரிக்கும் அளவுக்கு நாகரிகமுள்ள  மேன் மக்கள் நிறைந்த அளவுக்கு வளர்ந்தவிட்டதாக சொல்லப்படும் சமூகத்தில். அந்த சமூகத்தில் வாழுபவர்களும் சரி,  மேன் மக்களும்சரி, இன்னமும் மனிதர்களாய் வளரவேயில்லை.

ஒரு ஏழையின் காதல் வளர்வதற்கும் உண்மைக்காதல்வெற்றி பெறுவதற்குமான ஒரு சமூகம்.

அப்படி,  எந்த ஒரு வேறுபாடு அற்ற சமூகம் வளர்வதற்கும், தோன்றுவதற்க்கும் எந்தவித அறிகுறியும்  தெரியவில்லை, 

இதனால்தான்  காதலித்து வெற்றி கண்டதாக சொல்பவர்களும்  களத்தில் குதித்து சாதிவெறியர்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக, காதலை எதிர்த்து புலம்புகிறார்கள்.  

இதனால்தான் உண்மைக்காதல் தொடர்ந்து பலியாகி வருகிறது. .உண்மைக்காதலர்களும்  பலியாடுகளாக இருக்கின்றனர். .



புதன் 07 2013

ஒரு சாதிவெறி கட்சியின் கூட்டணி குழப்பம்..............



வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலின் போது திராவிட கட்சிகளோடு ஒட்டோ,ஒறவோ இல்லை என்று முடிவு எடுத்துவிட்ட பிறகு கழகம் அல்லாத மாநிலக்கட்சி.எந்த தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது பற்றிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

காங்கிரசுடன் சேர்ந்தால் திமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தன்னை தனிமை படுத்திவிடுவார்களோ என்ற பயம்.

பஜகவுடன் சேருவதாக இருந்தால் அந்தக்கட்சி தேமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம்.

மாம்பழ சீசன் மடிந்துவிட்ட நிலையில் எல்லோருமாக  சேர்ந்து தங்களை தனிமை படுத்திவிட்டால் என்ன செய்வது என்று குழம்பி போயி இருக்கிறது.சாதிவெறிக்கட்சி தலைமை.

 75 தாக்குதலும் 75 சம்மனும் பெற்ற அந்தக்கட்சியின் சாதிவெறித்தலைவரின்  வாரிசின் பதவிவெறித் தலைவரோ“ தான் பேசும் இடத்திலெல்லாம் தனித்து நின்று 15 இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம். என்று உளறிக்கொண்டு இருக்கிறது.

 இனி வெள்ளி விழாவென்ன, கொள்ளி வைக்கிற விழா நடத்துறதுதான் அந்த சாதிவெறிகட்சிக்கு  பாக்கி இருக்கிறது

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...