பக்கங்கள்

சனி 09 2011

குடைக்குள் முத்தம்(நேரில் கண்டவை)

ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து
சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும்
போக்குவரத்தும் குறைந்திருந்தது.

துாறல் மழையில் நனைந்தபடி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.பஸ் நிறுத்தத்தில் நான் போய் நின்ற சமயம் நடுத்தர வயதை உடைய ஒருவரும் என்னருகே வந்து நின்றார்.

எவ்வளவு வெயில் அடிச்சாலும் மக்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கிற சனங்க, ஒரு மழைக்கு சிட்டா ஓடி ஒளிஞ்சுருதுகளே!.

அவர் பேசியதைக்கேட்டு புன்னகைத்தேன். மழை சாரலாகத்தான் பெய்து கொண்டு இருந்தது.


பின்,அவராகவே பேசினார்.ஆமா,இன்னும் பஸ் வரலியே?

மழைக்கு ஒதுங்கியிருக்கும் .மழை நின்றவுடன் வந்துடும்.”

என்னை மேலும் கீழும் பார்த்தவர் சிரிக்க ஆரம்பித்தார். நான் அவரை பார்க்காமல் வானத்தை அன்னாந்து பார்த்தேன்.

ஆமாமா, சனங்களே! மழைக்கு ஒதுங்கயில்லே, பஸ்சும் ஒதுங்கத்தானே   செய்யும். கொஞசம் சத்தமிட்டு சிரித்தார்

அவரு மட்டும் சிரிக்கிறாறே.---பொறாமையில் அவரைப் பார்த்தேன்.

அப்போது,இளம் பென்னோருத்தி குடை பிடித்தபடி வந்து  நின்றார். எங்கள் இருவர் கண்களும் பார்த்தன.. இதே சமயத்தில் அந்தப் பொன்னும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு வெடுக்கென்று  தலையை திருப்பிக் கொண்டாள். எனக்கு புரிந்தது

நான் பார்ப்பதற்கு அழகாகயில்லை.அவரும் அப்படித்தான ஈரத்துடன் நின்றுயிருந்தோம்.

சிறிது இடைவெளிக்குப்பின் அழகான கதாநாயகன் ஒருவன் அந்தப் பெண்னருகே  வந்து   நின்றான்.  நாங்கள்   இருவரும் அவனைத்தான் கவனித்தோம்.

துாரத்தில் பஸ் வருகிறதா?ன்னு பார்த்தேன்.மழை கொஞ்சம்
பெரிய சொட்டாக பெய்ய ஆரம்பித்தது.யுவனும் யுவதியும் ஒரே
குடைக்குள் நின்றனர். எங்களுக்கு .ஒதுங்க இடமில்லாததால்
மழையில் நனைந்தவாரே நின்றோம்

அவரைக் கவனித்தபோது கண்கள் விரிய குடைக்குள் இருப்பவர்களை பார்த்துக் கொண்டு  இருந்தார். அப்படி என்னத்த  வாய திறந்து பார்க்கிறாரு -நானும் குடைக்குள் இருந்தவர்களைப் பார்த்தேன் எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.எப்படி சொல்வதென்று தெரியவில்லை.கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

அந்த பஸ் நிருத்தத்தில்  நான்கு பேரைத்தவிர யாருமில்லை முக்கால்வாசி நனைந்துவிட்டேன் மழை சிறிது குறைந்தது.

இந்த கூத்தத்தான் கண்டேங்களா! நாடு எங்க போகுதுன்னு பாத்தீங்களா!

நா......ன்....எங்க பாத்தேன்.நீங்கதான் கண்ண அசைக்காம பாத்தீங்க.....

அப்பவாச்சும்,ஒருத்தன் நம்மல பாக்குறானே ன்னு வெட்கப்படுவாங்கன்னு
பாத்தா,வெட்கம் என்னவிலன்னு கேட்பாங்க போலிறுக்கு.

“சின்னஞசிறுசுக,தைரியம் அதிகம்தான்”

“அதுக்காக இப்படி வெட்டவெளியிலா”.

இப்பவாச்சும் ,பரவாயில்லீங்க, பேருக்காக குடைய மறச்சுகிட்டு முத்தம்
குடுத்து கிட்டாங்க.நம்ம நாடு வல்லரசாக மாறியிடுச்சுன்னா குடையோ
முக்காடோ எதுவுமே தேவைப்படாது..எங்கெங்க சந்திக்கிறாங்களோ
அங்கங்கே உதடடோடு உதடாக முத்தம் கொடுத்துக்கலாம்..

நிஜமாகவா?......

பின்னே,பொய்யா சொல்றேன்.

எப்ப வல்லரசா மாறும்,,,,

அவசரப்படாதிங்க...இப்பத்தானே, பஸ் ஸ்டாப்புல பாத்துயிருக்கீங்க
சீக்கிரமாகவே வல்லரசாயிடும்.

மழை விட்டதும் பஸ்வருமுன்னு சொன்னமாதிரி பஸ் வந்து நின்றது
எங்களுடன்  யுவதியை முத்தமிட்ட யுவனும் பஸ்ஸில் ஏறினான்
பஸ் மறையும்வரை  முத்தமிட்ட பெண் முத்தமிட்ட இளைஞனுக்கு
காற்று முத்தமிட்டவாறே,கையை ஆட்டி விடைகொடுத்துகொண்டு
இருந்தாள்.

முத்தமிட்ட இருவரும் காதலர்களா? கனவன்மனைவியா? இப்பவரைக்கும்
எனக்கு தெரியவில்லை..

வியாழன் 07 2011

ஊரு நாட்டாமைய இல்ல.,உலக நாட்டாமைய...........

குற்றவாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில்  பத்து இலடசமாம்.


பின்னே,இருக்காதா! இதுவே கம்மியா இருக்குது.
இந்தியாவுல தெரு நாட்டாமையே மப்புல இருக்கும்
போது.ஊர்நாட்டாம,வட்டநாட்டாம,மாவட்டநாட்டாம
மாநிலநாட்டம,எல்லாம் கடந்து உலக நாட்டாமயா
இருக்கிறதுன்னா.சும்மாவா? உலக வாயை மூட புறப்பட்ட
உலக நாட்டாமை உள்ளுர் வாயை மூட முடியாம
அல்லாடுது.

அட ,மைக்கேலு, அதாங்க உலக நாட்டாமையின்
உலக டான்சர்......மைக்கேல் ஜாக்சனின் சட்டை
எட்டு கோடிக்கு ஏலம் போனதாம்.

அம்மாடியோவ்,சட்டயே.....எட்டுகோடிக்கு போனா
மைக்கேலுவின் ஜட்டி(உள்ளாடை) எத்தன கோடிக்கு
போகும்.  ஊர அடிச்சு உலயில  போடுறவன் நாட்டுல
இதுமட்டுமா? நடக்கும். பணக்கார நாடுன்னு மப்ப
காட்டவேணாமா? இந்தியாவுல  அடுத்தவன் கோவணத்த
உருவிட்டு மப்ப காட்டயிலே..பண்க்கார நாடு சும்மா
இருக்கலாமா?. காட்டுங்கப்பா! உங்க மப்ப காட்டுங்கப்பா!!!!!

செவ்வாய் 05 2011

சொன்னாங்க........சொன்னாங்க........நல்லவங்க.........சொன்னாங்க......

நாட்டின் எல்லையை காப்பது இராணுவம்.எதிரிகளிடமிருந்து
நாட்டை காப்பது இராணுவம்.இராணுவ சேவையே நாட்டின்
உயர்ந்த சேவை...இப்படி பள்ளிகூடத்திலிருந்து கல்லுாரி
வரை.சந்துலிருந்து பை-பாஸ் ரோடு வரை,மண்ணிலிருந்து
ஆகாயம்வரை, பாரத நாட்டின் தந்தையிலிருந்து,பாரதமாதா
மாதா வரைக்கும்  சொல்லிச் சொல்லி மண்டையில ஏத்தி
விட்டுட்டாங்க.

தப்பும்மா...தப்பு, இராணுவம் நாட்டைக்காக்ல, அது தோட்டத்தை
தான் காக்குது.இராணுவம் எதிரிய சுடல,அது சின்ன பையன
சுட்டுருக்கு.

நாட்டுக்கு நாடு வேறுபாடு இருந்தாலும். எல்லா நாட்டு இராணு
வத்துக்கும். திருடுவது ,கூத்தடிப்பது,போர-வார பொமபளகள 
கெடுப்பது.அப்பாவிகள ஓடிபிடிச்சு விளையாடி சுட்டுக் கொல்லு
வது.விடுதலை பெண்போராளிகளின் உயிரற்ற உடலை புனர்வது
தீவிரவாதிய தேடுறோம் என்று அடுத்த நாட்டுக்குள்ள புகுந்து
நாசம் பன்னுவது.அவர்களே,சொல்லக்கூடிய நீதி,நேர்மையை
குண்டி துடைத்த மலக்காகிதமா வீசுவது .இப்படிஒரு ஒற்றுமை 
இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.நீங்கள் ஒப்புக்
கொள்ளவில்லையென்றால் நீங்களே உண்மையான தேச
பக்தர் என்று சொல்லிக்கொல்லாம்.


இதுல,இந்திய இராணுவத்துக்கு கூடுதலாக ஒரு தகுதியும்
இருக்கிறது.இயற்கை பேரழிவில் தாழ்த்தப்பட்ட,தீண்டப்படாத
மக்கள் இறந்துவிட்டால், அந்த சடலத்தை துாக்க மறுக்கும்
சாதி பார்க்கும்.


ஆங்கிலேயன் இந்தியாவில் ஆண்ட காலத்தில் என்பில்டு 
என்ற துப்பாக்கியில் ஒட்டியிருக்கும்  மாட்டு கொழுப்ப
வாயால் கடித்து எடுக்க வேண்டியிருக்கும்.அந்த மாட்டு
கொழுப்பானது .கீழ்மட்ட மக்களின் உணவாக பயன்படுத்தப்
படுகின்றது என்ற காரணத்தால் ,அவனுக்கு அடிமையாக
வேலை செய்றது இழிவு என்பதை வசதியாக மறைத்து
விட்டு. கொழுப்பை கடிப்பது சாதிய இழுக்குன்னு இந்திய
இராணுவம்  (சிப்பாய்கள்) கலகம் பன்னுகிறது..சாதி சாயத்த
மறைக்க விடுதலை போராட்டம் என்று நாமகரணம்சூட்டி
சாதி வெறியை மறைத்துக் கொண்டது.

இந்திய ஊடகங்களைவிட பொய் சொல்வதிலாகட்டும்
பொய்யை மெய்யாய் புனைவதிலாகட்டும் இந்திய இராணுவம்
பலே கில்லாடி.இதற்கு உதாரணம்.காஷ்மீர்,அசாம்,மிஜோ
போன்ற வட மாநிலங்களே சாட்சிகள். சென்னை தீவுத்திடலில்
ராணுவகுடியிறுப்புக்குள் சிறுவன் சுடப்பட்டதை மறைத்து
எப்படி எப்படியெல்லாம் புளுகுகிறது.என்பதை தெரிந்து
கொள்ளலாம்.

இப்படி சாதிவெறியும்,அதிகார திமிரும்  வசதியும் புகழும்
இருப்பதினால்தான் தமிழ்நாட்டின் சாதிவெறி குலதெய்வம்
உயிரோடு இருந்த காலத்தில். தன்சாதிவெறி குலக் கொழுந்
துகளை இராணுவத்தில் சேருங்கள் என்றார்.அதிகாரத்துக்கு
அதிகாரம்.சாதிப்பற்றுக்கு பற்று. தேசப்பக்திக்கு பக்தியுமாச்சு
நாட்டுக்காக உழைத்தவர்கள் என்ற பேரும்மாச்சு.

இந்திய இராணுவத்திற்கோ,அதன் ஊழியர்களுக்கோ தேசப்
பற்று அல்லது நாட்டுப்பற்று என்ற புண்ணாக்கு எதுவும்
கிடையாது.சீனி என்று எழுதிவைத்து நக்கிப்பார்த்து
ஒருவேளை இனித்தால் தேசப்பற்று இருக்கிறது
என்று நம்பலாம். வரைமுறையற்ற அதிகாரமும்
சலுகைகளும். வேறு வேலைகள் கிடைக்க வழியில்லா
ததாலும் சேர்ந்தவர்கள்தான் பெரும்பகுதி.


உலகத்திலயே. அதிசியத்திலும் அதிசியமாக மக்களை
நேசித்த,மக்களை காத்த,உண்மையான நாட்டுப்பற்று
டனும் நேர்மையுடனும். தோழமையுடனும் நடந்துகாட்டி
தன்சுகபோகத்தை துறந்து மக்களுக்காகவாழ்ந்த ஒரு 
இராணுவம் இருந்ததெனறால் அது சோவியத் மக்கள்
இராணுவம்தான். தன் இன்னுயிரை இழந்து இட்லரின்
கொடுங்கோல் நாஜீப்படையை முற்றாக துடைத்து
ஒழித்த இராணுவம் சோவியத்தின் மக்கள்(செம்படை)
இராணுவம்தான்.மற்ற இராணுவங்கள் அனைத்தும் 
உழைக்கும் மக்களுக்கு எதிரானவைதான்

உலகத்திலயே,ஏழாவதாக வல்லமை பொருந்திய இராணு
வமாக கருதப்படுகிற இந்திய இராணுவத்திற்கும்
இண்டர் போல் போலீசுக்கு இணையாக பேசப்படுகிற
போலீசுக்கும். மனித உரிமை மீறல்களில் இராணுவமா?
போலீசா ?என்று கடும் அதிகார போட்டியே நடைபெறும்

அதில்,நான் பொதுவானவன்.சம்பந்தமில்லாதவன்.பார்வை
யாளன்.நான் போட்டிக்கே வரவில்லை என்று சொல்லி
இனி யாரும் தப்பிடத்துவிடமுடியாது.

ஞாயிறு 03 2011

சுத்த......கர்....ர்...நாடக..மாகவுல்ல இருக்குது.

முன்னால் முதல்வர் குமாரசாமி,

ஓ......ஓ....மஞ்சு....நாதா.....என் வாயை அடைக்க எடியுர்
ரப்பா ஒரு ஆளை அனுப்பினார். பேரம் கம்மியா......
இருந்துச்சு, அதனால ,நா...ன் ஒத்துக்கல!!. பேரம்
அதிகமாயிருந்சுச்சுன்னா,என் வாயை  நானே
அடைச்சுடுறேன்.பேரத்தில்ல  உன் கமிஷனையும்
முழுங்காம தந்துடுறேன்.இது சத்தியம் சத்தியம்

மஞ்சுநாதர் என்று பெயர் கொண்ட சிலை.
.......................................................................................................
.......................................................................................................
.....................................................................................................

இன்னால்முதல்வர் எடியுர்ரப்பா.
சாமி, அந்த கூமட்ட சாமி,என்னய இந்த ஆட்டு
ஆட்டுது. உனக்கு கொடுக்கிறத அந்த ஆசாமிக்கு
கொடுக்கலாம்முன்னு நெனெச்சேன்.தப்பு நாதா!
தப்பு உனக்கு நாமம் சாத்த நெனச்ச என்னய
மன்னிக்கனும் சாமி நாதா, நான்  அனைத்து
துறையிலும் கல்லா கட்ட அருள் புரிவாய்
மஞ்சுநாதா !

மஞ்சுநாதர் சிலை.
..............................................................................................
...............................................................................................
.............................................................................................
குறிப்பு-மஞ்சு நாதாரி . ரெண்டு பேருக்கும் என்ன
சொல்லியிருக்கும். ஒட்டு கேட்டவுக  சொல்லுங்களேன்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...