பக்கங்கள்

சனி 27 2014

முதலாளிகள் இருக்கும் வரை இதுவும் இருக்கும்......

படம்--www.vinavu.com

முதலாளிகள் இருக்கும்
வரை இருப்பது எது?

காசு....

இல்ல...

பணம்.....

இல்ல...

பட்னி...

இல்ல..

சாவு....

இல்ல..

ம்.....ம்....ம்....சுன்டலுப்பா........

அட... சுண்டல் இல்லப்பா....

 அப்போ...சுன்டல் இல்லேன்னா
வேற..என்னப்பா..........???

அது சுரண்டல்...அப்பா..

.ஆ.....ஆ...சுரண்டலா.....

ஆமாப்பா.....

முதலாளிகள் இருக்கும்வரை
சுரண்டலும் இருக்குமப்பா...

நிசமாகவா........

நிசந்தானப்பா.....
அந்தச் சுரண்டலை
பாதுகாக்க தானப்பா..
ஆயுதம் தரித்த படையும்
சிறைச்சாலையும்.....









வெள்ளி 26 2014

பட்சி, கௌலி..எதுவும் சொல்லி...இருக்குமோ....


www.ananth-classroom.com

அண்ணாச்சி... என்னாது  இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி கடையில.. பூந்தி,லட்டு,மிக்சர் ஒன்த்தையும் காணோம் வெறும் அல்வா மட்டும்தான் இருக்கு என்ன விசேசம் அண்ணாச்சி


அட.ஒன்னுமில்லப்பா...... நாளைக்கு யாரோ விடு....தலை ஆகப் போறாங்களாம் அதை கொண்டாடுவதற்க்காக ஒரே கரை வேட்டி காரங்களா வந்து வாங்கிட்டு போறாங்கப்பா......

 அல்வா.அப்படியே   இருக்கே.அல்வா வ...வாங்கலையா...அண்ணாச்சி......

அவுக ஏற்கனவே..நிறைய பேருக்கு  அல்வா...வவ.. கொடுத்து  கொடுத்து இவுகளுக்கே சலிச்சு போச்சாம் ...அதான் அல்வா... வேண்டாமுனு சொல்லிட்டாங்க தம்பி..

திருநெல்வேலிக்கே அல்வா..கொடுத்தா சலிச்சுதானே போகும் ..அண்ணாச்சி..

........ஆமாப்பா.....

ஆமா......அண்ணாச்சி....யாரோ விடுதலை ஆகப்போற விசயம் இவுகளுக்கு எப்படி தெரிஞ்சதாம்.....

தெரியலைப்பா....... ஏற்கனவே.ஒரு ஆளு நான்  ஜோதிடம் எதுவும் சொல்லலைன்னு அடுக்கு மொழியில சொல்லிட்டாரு ....


ஒரு வேள .....பட்சி, கௌலி..எதுவும் சொல்லிருக்குமோ........

வியாழன் 25 2014

கோக்.பெப்சி பானங்களை குடிக்க வைக்க அச்சே யோசனை

தண்ணீர்-வெட்டு
படம்- வினவு-

கர்ர்நாடக மாநிலத்தில்  ஒருங்கிணைந்த உணவு பூங்காவின் திறப்பு விழாவின் போது... முன்னால் குஜராத் முதலமைச்சரும் இன்னால்  இந்தியப் பேரரசின் பிரதமரானவர்

கோக்..பெப்சி தயரிப்பு நிறுவனங்களுக்கு சூப்பரான அச்சே யோசனை ஒன்றைக் கூறினார்.

பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டும்  குளிர்பான தொழிலில் உள்ள நிறுவனங்கள்  விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களை கொள்முதல் செய்து  அதன் பழச்சாறுகளை தாங்கள் தயாரிக்கும் பானங்களில் ஐந்து சதவீதம் கலந்து விற்றால்...........

கோலா.பெப்சி பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள் என்ற கருத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்படும் கூடவே விவசாயிகளுக்கு உதவியதாக இருக்கும் என்றார்.

 ஆக...தாமிரபரணி முதல் நர்மதா வரை நீரை உறிஞ்சி வளர்வதற்கும்.  விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யவும்.. வாக்களித்த படி கோக்கோ ,பெப்சிக்கு அச்சே யோசனை கூறியுள்ளார்.


புதன் 24 2014

ஒரு ரூபா சம்பளம் வாங்கீன காலத்திலிருந்து....

முதலமைச்சர் ஜெயலலிதா
படம்- வினவு.http://www.vinavu.com/2014/09/24/power-tariff-hike-not-under-elected-government-control/



ஒரு ரூபா சமபளம் வாங்கின் காலத்திலிருந்து  குடும்பம், குட்டி,வாரிசுன்னு எதுவுமே இல்லாம இப்பவரைக்கும்... ஒரு தொறவியப் போல தமிழ்நாட்டு ஜனங்களுக்காக ஒழச்சு..ஒழச்சு ஓடா தேஞ்சி போயி இருக்கிற ஆத்தா........ உங்களப்    போயி.................

சொத்து குவிப்பு, அது இதுன்னு வழக்கு போட்டு பதினேழரை  வருசமா இந்த வழக்குக்காக மாதத்தில் ரெண்டு வாட்டி பொங்களுர்க்கும் சென்னைக்குமாக அலைஞ்சு ஓஞ்சு போன நேரத்தில.....................

நம்ம சர்க்காருல. ஆவின் பால்வளத்துல இருந்த வைத்தியநாதன் புத்திசாலித்தனமாக ஒழைச்சதனாலே..சாதாரண ஒப்பந்தராக இருந்து இன்னிக்கு 104 டேங்கர் லாரி வச்சிருக்காரு...

நாம... உருப்படியா ஒழச்சு இருந்தா..    இந்தியாவையே ஏலத்துக்கு எடுத்து இருந்திருப்போமே   ஆத்தா.....

நாம ஏலம் எடுத்த நாட்டிலே.. ஆத்தாவின் 110 விதியின் கீழ் அறிவிப்பு இல்லாமல், ஆத்தாவின் ஆணையில்லாமல்  “ தீய சக்தி”யான மின்சார ஒழுங்குமுறை ஆணையம்   இப்படி பாரின் குத்தாட்டம் ஆடவிட்டுயிருப்போமா.. ஆத்தா...........




செவ்வாய் 23 2014

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற லட்சணம்


Saranya Charu புதிய படமொன்றை இணைத்துள்ளார்.
்தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த வழக்குக்கு கர்நாடக
அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதோடு, கடந்த 10
ஆண்டுகளில்ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வராமல்
இருந்ததே பெரும் குற்றம் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நரசிம்ம மூர்த்தி: ''சட்டத்தின் முன்
அனைவரும் சமம். ஆனால்,
அரசாங்கத்தை ஏமாற்றி வருமானத்துக்கு அதிகமாக ரூ.66
கோடி சொத்துகள் சேர்த்ததாகக்
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா என்ற
ஒரு தனி மனிதருக்கு இந்த அரசாங்கம்
எவ்வளவு செலவு செய்கிறது என்ற
ஆதங்கத்தில்தான் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ்
வழக்குக்கு ஆன செலவுகளைப்பெற்றேன்.
இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்ட
பிறகு, 2004 முதல்
31.3.2014 வரை ஒவ்வோர் ஆண்டும்
ஆன செலவு விவரம்:
2004-05-ம்
ஆண்டு ரூ.20,57,318,
2005-06-ம்
ஆண்டு ரூ.35,07,489,
2006-07-ம்
ஆண்டு ரூ.11,02,878,
2007-08-ம்
ஆண்டு ரூ.16,62,143,
2008-09-ம்
ஆண்டு ரூ.9,99,542,
2009-10-ம்
ஆண்டு ரூ.8,68,891,
2010-11-ம்
ஆண்டு ரூ.19,92,031,
2011-12-ம்
ஆண்டு ரூ.38,96,828,
2012-13-ம்
ஆண்டு ரூ.39,61,506,
2013-14-ம்
ஆண்டு ரூ.86,50,990... என
கடந்த 10 ஆண்டுகளில்
ரூ.2,86,99,616
செலவாகி இருக்கிறது. இன்னும்
இந்த வருடம் மார்ச்
மாதத்திலிருந்து இன்றைய
தேதி வரை கடந்த 6
மாதங்களுக்கான செலவையும்,
சென்னையில் ஏழு ஆண்டுகள்
நடைபெற்றபோது ஆன செலவையும்
சேர்த்தால் ரூபாய் ஐந்து கோடியைத்
தாண்டும்.
கர்நாடகாவில் உள்ள பல
நீதிமன்றங்களில் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லை.
கர்நாடக ஏழை எளிய மக்கள் சட்ட
விழிப்பு உணர்வு, சட்ட உதவிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஓர்
அரசு துறையில் ஒரு விண்ணப்பப்
படிவம் கேட்டால்கூட, 'போய் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வா’
என்று ஜெராக்ஸ் எடுப்பதற்கான
ஒரு ரூபாயைக்கூட
மக்களுக்கு அரசாங்கம்
செலவு செய்யத் தயங்குகிறது. ஆனால், ஒரு தனி மனித
வழக்குக்கு அரசாங்கம்
இவ்வளவு பணம்
செலவு செய்திருப்பதை நினைக்கும்போது, ஜனநாயகத்தின்
மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அதனால் வழக்குக்கு ஆன மொத்த செலவுகளையும்
ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தின்
மூலமாகவே வசூலிக்கப்பட வேண்டும்.
மேலும் கர்நாடகாவில் உள்ள பல கீழ்
நீதிமன்றங்களிலும் உயர்
நீதிமன்றத்திலும் நீதிபதிகள்
பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான
வழக்குகள் விசாரணை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
ஆனால், இந்த வழக்குக்காக ஒரு தனி நீதிமன்றத்தையே ஒதுக்கி, அதற்கு ஒரு தனி நீதிபதியையும்
அரசு சிறப்பு வழக்கறிஞர்களையும்
நியமித்து நீதிமன்றத்தின்
முழு வேலை நேரத்தையும்
பயன்படுத்திக்கொள்ளாமல் பல நேரங்களில் 1/2 மணி நேரமும், ஒரு மணி நேரமும் நீதிமன்றம்
நடைபெற்றுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?
சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள தலைமை நீதிபதியின்
நீதிமன்றம்கூட சாதாரணமாகஇருக்கிறது
ஜெயலலிதா வழக்கு நடைபெறும்
சிறப்பு நீதிமன்றம் 50, 60
ஸ்பெஷல் இருக்கைகள்
போட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது
இதே மாநிலத்தின் முன்னாள் முதல்வர்
எடியூரப்பா மீது ஒரு நில
அபகரிப்பு புகார் நீதிமன்றத்தில்
நடைபெற்றபோது நீதிமன்றத்தின்
ஒவ்வொரு வாய்தாவுக்கும்
மக்களோடு மக்களாக வந்து வழக்கைச்
சந்தித்தார். முன்னாள் பாரத பிரதமர்
இந்திரா காந்தி மீது கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகச் சிறிய
சிக்கபல்லாபூர்
தாலுக்கா நீதிமன்றத்தில் எலெக்ஷன்
சம்பந்தமான புகார்
வழக்கு ஒன்று நடைபெற்றது. அந்த
வழக்குக்காக டெல்லியில் இருந்து வந்து ஆஜரானார்.
இப்படி எத்தனையோ தலைவர்கள்
நீதிமன்றங்களுக்குத்
தலைவணங்கி வருகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு இந்த நீதிமன்றம்
எந்த மூலையில்
இருக்கிறது என்றுகூட
தெரியாது. நீங்கள் நீதிமன்றத்துக்கு வராமல்
புறக்கணித்ததைப் பலரும்
பின்பற்றுவார்கள்''

திங்கள் 22 2014

கட்டெறும்பு வளர்ந்து கழுதையாச்சு.......




ஆலய பிரவேசத்தில் புளுகிய தினமணி..என்ற பதிவை படித்துவிட்டு நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார்.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் அஞ்சாத நெறிகள்” என்று தலையங்க கட்டுரை பக்கத்தில் அச்சடித்திருப்பதை பாத்தீங்களா என்று கேட்டார்.

நான் அதை பார்ப்பதுமில்லை படிப்பதுமில்லை .... அந்த எழுத்துக்கும் தினமணிக்கும் எந்த சம்பந்தமே இல்லீங்க....... அதிமுகவிக்கும் பெரியார் கொள்கைக்கும் ஏதாவது  சம்பந்தம் இருக்கா....... அதுமாதிரிதாங்க...என்றேன்

நீங்க  தினமணி வருட சந்தாவா...? என்று கேட்டார்.

என் நண்பர் ஒருவர் வருட சந்தாராக இருக்கிறார் அவர் இப்படிச் என்று அந்த விபரத்தை சொன்னேன்..

கருவாடு பத்தி செய்தி போட்ட திருவாளர் பத்திரிகை யால... தினமணி காரன் சர்குலேசன் படுத்து விட்டது என்றார்

எப்படி என்று கேட்டபோது .......சொன்னார்.

போன தடவை வருடம் சந்தா தொகை ஆயிரத்துக்கு கொஞ்சம் கம்மியா வாங்கினார்கள்... திருவாளர்  இந்து வந்த பிறகு   ஏழு நூறுக்குள்ள வருட சந்தாவ.. குறைச்சிட்டான். 

இதோடு இன்னொரு ரகசியத்தையும் அவர் சொன்னார்.. வரவர தினமணி  நடுநிலை யிலிருந்து பதவி உயர்வு பெற்று லேடிக்கும் மோடிக்கும் பழனி முருகனின் பக்தர்களை விட காவடி துாக்குறான். அய்யப்பன் பக்தர்களை முந்தி கொண்டு சரணம் போடுறான். அடுத்தத் தடவை தினமணி சந்தாவை நிறுத்திடப் போகிறேன் என்றார்.


நானும் ”ஆமா கட்டெறும்பு வளர்ந்து கழுதையா போச்சு....” கழுதைய வச்சு நீங்க சங்கீதத்தையா கேட்க முடியும்... என்றேன்..

நண்பரும்.. ஆமமா “கழுத கத்தல சகிக்க முடியல”.. நானும் அடுத்தத் தடவை சந்தாவிலிருந்து விலகிடப்போறேன் என்றார்.

ஞாயிறு 21 2014

ஆலயப் பிரவேசத்தில் புளுகிய தினமணி....

maruthadi.wordpress.com



ஆளுகின்ற செயலலிதாவிற்கு பாயிண்டுகள் எடுத்துக் கொடுத்து புவர் சர்குலேசன் என்று பெயர் பெற்ற தினமணி .

1939 ஆண்டு சூலை 8ம்நாள் வைத்தியநாத அய்யர் என்பவர் தலைமையில் தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சி கோயிலுக்குள் பிரவேசம் செய்தார் என்பதை “ எங்க சாதிக்காரருக்கு சாதிய உணர்வே கிடையாது” என்று ஆதிக்க சாதி வெறியர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது போல “ உயர் சாதிக்காரர்களும் “ ஆலய பிரவேசத்”தைத் பெருந்தன்மையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் ..நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற உயர் சாதி வெறியர்கள்.

2007ல் சூலை-8 தேதிய தினமணியில், தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சி கோயிலுக்குள் நுழைந்தார்கள் என்பதைவிட,அது ஒரு பிராமனர் தலைமையில் நடத்தப்பட்டது என்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது தினமணி.

பார்ப்பன சாதி வெறிபிடித்த ராசாசியின் ஆலோசனையோடும் அவரின் ஆதரவோடும் தான் அந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது.


சங்கரராமனை கொலை செய்த செயந்திரனை கைது செய்த செயலலிதாவை, பார்ப்பன எதிர்ப்பாளராக பார்க்க முடியாதோ..அது போலத்தான், மதுரை மீனாட்சி கோவில் பிரவேச மோசடியும், இதில் சாதி வெறியின் குல தெய்வமும்  வராமல் ஆதரவு அளித்தார் என்ற பித்தலாட்டமும்..

நடுநிலை நாளேடு என்று புளுகித் திரியும் தினமணி சந்தடி சாக்கில், மதுரை மீனாட்சி கோயில் நுழைவு பிரவேசம்தான் “முதல் ஆலய பிரவேசம்” என்று வரலாற்று புளுகு மூட்டையை கடை பரப்பிவிட்டது.

இந்த அய்யர்-அய்யங்கார் மற்றும் சாதி வெறி குல தெய்வத்தின் கூட்டுத் தயாரிப்பான  புளுகு மூட்டைகளுக்கு, பத்தாண்டுகளுக்கு முன் சுய மரியாதை இயக்கத்தின் ஆலய பிரவேசம் நடந்திருக்கிறது.

அது ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமியிட்டின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 4-4-1929- அன்று “ஈசுவரன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

அந்தத் திர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்று மாலையே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த அ. பொன்னம்பலவானரும்,குத்தூசி குரசாமியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தோழர்களான ஈரோடு, கச்சேரி வீதி ஈசுவரன்,மஞ்சை மேடு பசுபதி,கிருஷ்ணபாளையம் கருப்பன் ஆகியேரோடு  நுழைந்தனர்.

ஆத்திரமுற்ற ஆதிக்கச் சாதியினர், அவர்களை கோயிலுக்குள்ளே வைத்து பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் கோயிலுக்குள்ளே இருந்த அவர்களுக்கு பெரியாரின் துணைவியார் நாகம்மையார்தான் உணவு கொடுத்து அனுப்பியிருக்கிறார். வெளியூர் சென்றிருந்த பெரியார் திரும்பிய பிறகுதான் தோழர்கள் கோயில் சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.

இந்த உண்மைகளை வசதியாக மறைத்துவிட்டு , “மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசம்தான் முதல் அரிசன ஆலயப் பிரவேசம்” என்று வரலாற்று புளுகு மூட்டையை கடை பரப்பியது.

இந்தப் புளுகு மூட்டையைத்தான் அய்யர்களும்,அய்யங்கார்களும் சாதி வெறி குல தெய்வத்தின் சாதி வெறியர்களும், வரலாறு தெரியாத கூமுட்டைகளும் டாமரம் அடித்துக் கொண்டு திரிகிறார்கள்.


நன்றி!!!.... வே. மதிமாறன். வேர்டுபிரஸ்.காம்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...