பக்கங்கள்

சனி 03 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -13

இதன் முன்கதையை படித்தால் விவரம் புரியும்.. படிப்பதும் படிக்காமல் இருப்பது தங்களின் விருப்பம்..

தொடர்ச்சி.....

இரவு ஏழு மணிக்கு காவல் நிலையம் சென்ற போது இரண்டு பேரும் எஸ்எஸ்அய்யிடம் அதாவது சிறப்பு எஸ்அய்யிடம் தங்கள் தரப்பு ஞாயத்தை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தனர். நான் விசாரித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்அய்யிடம் வந்து நின்றேன். அவர் அந்தப் பெண்களுக்கு ஆதரவாக என்னை சத்தம் போட்டார்.


ஆடு,மாடு, நாய், பூனை வளர்க்கிறவனலெல்லாம் கட்டிபோட்டு வளக்கனும்டா....அடுத்த வீட்டுக்கு போகவிடலாமா?? என்னை பார்த்து சொன்னார்.நான் பேச வாயெடுத்த போதெல்லாம் நீ..எதுவும் சொல்ல வேனாம்..நான் சொல்றத நீ கேளு....

“ அந்தப் பூனையை நீ வளத்தியோ...வளக்கலையோ  அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்று இரவு அந்தப் பூனையை பிடித்து எங்கிட்டாவது விட்டுறனும்.. அப்படி விடலைன்னா..நீ தண்டம்கட்டனும் ஆமா சொல்லிப்புட்டேன்... பூனையை பிடித்து விட்டுபுட்டு  நாளைக்கு வந்து சொல்லனும். ரைட்டர கூப்பிட்டு இவனிடம் எழுதி கையெழுத்து வாங்கு என்றார்.

 ரைட்டரிடம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது.. அந்த இரண்டு பேருக்கு ஆதரவாக   தெருவில் உள்ள சிலர் வந்திருந்தனர். புகார் கொடுத்த மற்றும் உதவிக்கு வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவர்களின் பேச்சிலும் நடையிலும் செய்கையிலும் தெரிந்தது... அன்றியிரவே.. கூலிக்கு  பேசி இரண்டு பேரைக் கொண்டு கறி திண்டதாக சொல்லப்பட்ட பூனையை பிடித்து மாடக்குளம் கன்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் விடப்பட்டது..

அப்படி விடப்பட்ட பூனை மறுநாள் காலையில் தீ கொளுத்தி மகளின் வீட்டில் உலாவிக்கொண்டு இருந்தது. என்னடா செய்வது என்ற யோசனையில் இன்று இரவு காவல் நிலையத்தில்  நடந்தவற்றை சொல்வது என்று முடிவெடுத்து  ஏழு மணிக்கு முன்னமே காவல் நிலையம் சென்று ரைட்டரிடம் விபரத்தை சொன்னோன்.

அந்த ரைட்டரோ சிரித்துக் கொண்டே... சரியான லூசுய்யா... ரெண்டு சிரிக்கிக..உம்மேல புகார் கொடுக்குதுன்னா என்னா அர்த்த்முன்னு தெரியாத ஆளா இருக்கியே.... அந்த ரெண்டு சிரிக்கிக ..உன்ன படுக்க கூப்பிடுறாளாக....நீ என்னமோ..உத்தம ராஜாவாட்டம் நியாயம் பேசிக்கிட்டு இருக்க.....  அவரு வந்த பிறகு சொல்லு...போ....


என்னடா..இது அவளுகளைவிட..இந்தாளு இப்படி குண்ட தூக்கி போடுறாரு... அவளுக நோக்கமே.. எதிலாவது என்னை மாட்ட வைத்து செலவ இழுத்துவிடுறதுதான்...இதுல இவளுக படுக்க கூப்பிடுகிறாள்களாம்..நல்ல இம்சையாகத்தான் இருக்கு........ இனி எஸ்எஸ்அய் நாம சொல்றத கேட்கவில்லையென்றால் இன்ஸ்பெக்டரை பார்த்து  முறையிட்டுட வேண்டியதுதான் என முடிவெடித்து  எஸ்.எஸ்.அய்..வருகைக்காக காத்திருந்தேன்.


புகார் கொடுத்த அவள்கள் தங்கள் பரிவாரத்துடன் ஆட்டோவில் வந்து இறங்கினாள்கள்.. இப்போது அவள்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு சிங்கார சீமாட்டிகளாக வந்தாள்கள்.

எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.. வாழைப்பழம் தின்னாத குரங்கு ஒன்று உண்டா? என்று கேட்ட கேள்வியைப்போல் சிங்காரிகளின் அழகுக்கு மயங்காத காவலர் உண்டா?? என்ற கேள்வியே... என் மனதில் ஓடியது... என்னநடந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் முறையிடுவது என்ற முடிவோடு இருந்தேன்.

நெடுநேர காத்திருப்புக்கு பின் விசாரித்த எஸ்எஸ்அய் வந்தார்.. காவல்நிலைய வாசலில் நுழையும்போதே..“ என்னய்யா..பூனையை புடுச்சு விட்டாச்சா.... என்று கேட்டுக் கொண்டே அவர் இருக்கையில் அமர்ந்தார். நானும் தன்னியல்பாக... புடுச்சு விட்டுட்டேன் சார், என்றேன்.

முதலில் என்னை விசாரித்தார்... விபரத்தை கூறினேன்.“ நீங்க  சொன்ன உத்தரவுப்படி  அன்றிரவே பூனையை புடுச்சு... மாடக்குளம் கன்மாய்க்கு அருகில் விட்டுட்டு வந்திட்டேன்... ஆனா..பூனை மாறுநாள் காலையில  வந்துவிட்டது. இவுக வீட்டுக்குள்ள இருந்து,அந்தப்பூனை வெளியே வந்ததைப்பார்த்தேன். நான் பூனையை வளர்க்கவில்லை.. எனக்கும் அந்தப்பூனைக்கும் எந்த சம்பந்தமில்லை.. தெருவில் திரிந்த பூனை பொய்யாக என் மேல் புகார் கொடுத்திருக்கங்க.... உங்க உத்தரவுக்கு கீழ்படிந்து கூலி ஆட்கள் மூலம் பூனையை பிடித்து வெகுதூரத்தில் விட்டு வந்தும்..அந்தப் பூனை திரும்பவந்துவிட்டது.. இனிநான் என்ன செய்யட்டும்.. நீங்கதான் சொல்லனும்.. நான் அந்தப் பூனையை பிடித்தது. ஆட்டோவில் கொண்டு சென்றது... எல்லாமே புகார் கொடுத்த இரண்டு பெண்களுக்குமே தெரியும் சார் என்றுவிட்டு  ஓரமாக நின்றேன்.


புகார் கொடுத்த இரண்டு பெண்களிடம் என்னம்மா பூனையை பிடித்தது உங்களுக்கு தெரியுமா..என்றார். தெரியும்சார்.. பூனையைின் கண்ணை பொத்திக் கொண்டு போகம...போனதால் அந்தப்பூனை திரும்பவும் அந்தாளு வீட்டுக்கே வந்திருச்சு சார்...

“ஏய்யய்யா...பூனை கண்ணபொத்தாம போயிட்ட.. சாக்குல கட்டி போய் விட்டுருந்தா...திரும்ப வந்திருக்குமாய்யா...??”

“ சார்..அரிசி சாக்குலதான்..ஒரு பூனைக்கு இரண்டு பூனையை புடுச்சு ஆட்டோவுல போயி விட்டுட்டு வந்தேன் சார்.. என்றேன்.

திரும்பி வந்த பூனை ..திரும்ப அவுங்க வீட்டு கறிய திங்காம்ம இருக்குமாய்யா...???

“சார்..என் பூனை இல்லையே சார்.? ”

எஸ்எஸ்.அய் என்னை வெளியே..நிற்கச் சொன்னார்... வந்து நின்றேன்

பத்தரைக்கு மணிக்கு மேல் என்னை அழைத்தார். உன் மெல் புகார் கொடுத்த பெண்களை சமாதனம் செய்து அனுப்பிவிட்டேன்.. இனிமே பூனை. நாய் எதுவும் வளக்காதே!.. அப்படியே வளத்தால் கட்டிப்போட்டு வளக்கனும் புரியுதா” என்றார்.

“சார், நான் வளக்கவே இல்லை..சார்.”

“ சொன்னா கேளுய்ய... ம்ம்ம்... நீ..எதுவுமே வளக்காமலா...அதுக..உன் பேர்ல புகார் கொடுக்குதுக..”..

“ என் இடத்த..பாதையாக பயன்படுத்திட்டு வராக...அதை எதிர்த்ததால்..இப்படி பொய்யா...புகார் செய்கிறார்கள்...”

“ உன் இடம் என்றால் வேலி போட்டுக்க...”

“ அந்த இடத்து உரிமை சம்பந்தமாக வழக்கு நடந்து வருது சார்”


“ சரிசரி....புலம்பாதே!....  செலவுக்கு கொடுத்துட்டு போய்யா”

“சார். பூனையை பிடிக்கிறதுக்கும், ஆட்டோவுக்கு இருந்த காசை செலவழித்துவிட்டேன். இப்போதைக்கு காசில்லை ...நாளபின்னக்கு இந்தப் பக்கம் வந்தால் தருகிறேன்.

“ஆமா.  இப்படித்தான் எல்லா பயல்களும்.. சொல்றான்... நாளைக்கு கண்டிப்பா வந்து தருவியா...???”

“ இல்ல..சார்..கண்டிப்பா வந்து தர்ரேன்... எவ்வளவு சார் வேணும்....”

“ ஒன்னு ரெண்டு வந்து கொடு..”.......

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபின் நான் புலம்பினேன்.. ஆயிரம் ரெண்டாயிரம்மா... வேணும்” முதல்ல உனக்கு கொடுத்துட்டுதான் மறு வேல பார்க்கனும்...”

“ நான் வீட்டுக்கு வந்தபிறகு ..ரெண்டு சிறுக்கிகளும் கைதட்டி. கும்மாளமிட்டு சிரித்துக் கொண்டு இருந்தனர்.  நல்லாயிருங்கடி என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டு...இரண்டு வாரத்துக்குமேல் அவள்கள் கண்ணில் எனது இடத்தில் எத்தகைய ஆக்கிரமிப்பும் செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவந்தேன்.

பூனை கதை முடிந்தது.


செவ்வாய் 30 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -12

 செனட் சபையில் கூடியிருந்த காதலர்களில் ஒருவர்.. நமக்கு தெரிந்தது. அறிந்தது போன்றவற்றை எல்லாரும் சொல்லிவிட்டோம். ஒருத்தர் மட்டும் எதுவும் சொல்ல வில்லை.. இந்த முறை அவரு அறிந்தது..தெரிந்தததை இந்த சபையின் முன்னே சொல்ல வேண்டும் என்றவுடன் எல்லோரும் என்னை பார்த்தார்கள். 

ஒருவாறு உடம்பை நெளித்து  எனக்கு எந்த அனுபவமும் இல்லையே என்று சொல்லி பார்த்தேன்.

அவர்கள் விடுவதாக இல்லை.. எந்தவொரு விசயத்திலும் அனுபவப்படாதவர்கள் யாருமே..இல்லை என்றார்கள் பலர்.  ஒருவர் சரி விடு அந்த அனுபம் இல்லை என்றால். உன் வீட்டு இடத்து பிரச்சினையில் என் தெருக்காரர்கள். உனக்கு கொடுத்த தொல்லைகளை கூறலாமே என்றார் . ஆமா சொல்லலாமே என்றார்கள் மற்றவர்கள்

சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. சற்று யொசிக்கிறேனே என்றேன்... உடனே ஒருவர் ஏ.ப்பா... தீ கொளுத்தி மக.. உன்ன டார்ச்சர் பன்னின பூனை கதை ஒன்னு இருக்குல்ல... ரெம்ப நல்லா இருக்கும் சொல்லுப்பா என்றார். உடனே நிணைவுக்கு வந்துவிட்டது  ...  சம்பவத்தை சொல்ல தொடங்கினேன்

 நான் இப்ப சொல்கிற கதையானது ..ஏற்கனவே தாங்கள் சொல்லிய, சொல்லப்போற சரடு கதையல்ல.... இது முழுக்க முழக்க உண்மை சம்பவம் என்ற முத்திரையுடன் ஆரம்பித்தேன். எல்லோரும் நான் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.


என் தெருவில் ஒரு நாட்டாமை அவனுக்கு ஒரு வைப்பாட்டி,  அவளுக்கு பெயர் தீ கொளுத்தீ... தீ கொளுத்தீ பெயர் எப்படி வந்தது என்றால் அவளுடைய காதலன் நாட்டாமைக்கும் அவளுக்கும் பணம் பிரச்சினையில் அவர்களுக்குள் முட்டல் மோதல் நடந்தது. அவளுடைய வப்பாட்டன் அவளிடம் பேச மறுத்தால்...இவள் அவனை வரவழைப்பதற்க்காக ..அவர்கள் சண்டையில் சம்பந்தமே இல்லாத பக்கத்து வீடுகளில் தீ வைத்துவிடுவாள்.  இப்படித்தான் அவளின் வப்பாட்டானை எதிர்த்த ஒரே காரணத்தக்காக என் வீட்டிற்கு இரண்டு தடவை தீவைத்து அவளின் வப்பாட்டனின் மனதை குளிர்வித்தால்...இதே மாதிரிதான் சில வீடுகளுக்கும் தீ வைத்ததால் அந்தத் தெருக்களில் உள்ள பொம்பளைகள் வைத்த பெயர்தான் தீ கொளுத்தீ என்பது...

அந்த தீ கொளுத்தீ ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதன் பலனாக சீக்கு பிடித்து குறுதி வழிந்து வீச்ச மெடுத்து நாறிப்போய் செத்தாள். அவள் செத்த பிறகு அவளுடைய மகளுக்கும் தீ கொளுத்தீ மகள்னு பேரு நிலைத்து விட்டது.

தீ கொளுத்தி மக  திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளையை பெற்றும் ஊதி விட்டாள் காற்றினிலே பற்ந்து போகும் அளவுக்கு அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்தால்..... என்ன மாயமோ ..அவளுடைய ஆத்தா செத்து ரெண்டு வருசத்துல   இல்லாத அளவுக்கு ரெம்ப குண்டாகி விட்டாள்.. மார்பகமே இல்லாது இருந்த அவள்..தமிழ் சினிமாவில் வரும் அரக்கிகளைப் போல் கொளுத்த மார்பகளுடன் காட்சியளித்தாள்.

ஆள் குண்டானவுடன் அவள் அம்மா விட்டுச் சென்ற  இடத்து பிரச்சினையில்  என்னுடன் போட்ட சண்டையை தீ கொளுத்தீ மகள் தொடர்ந்தாள்

அன்று ஞாயிற்று கிழமை எல்லா வீடுகளில் தொலைக்காட்சியில் படம் பாரத்துக் கொண்டுயிருந்ததால் தெருவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. நான் தொலைக்காட்சி பார்க்க விரும்பாமல் என் வீட்டு மேற்கு திண்ணையில் அமர்ந்திருந்தேன். எதிர்த்த வீட்டில் தீ கொளுத்தீ மக... என்னைக்கண்டதும் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு சுத்தமாக இருந்த தெருவை புழுதி பறக்க கூட்டினாள். அவளுடன் சண்டை போட மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து மெயின் ரோட்டிற்கு வந்து அடைத்திருந்த கடைகளின் திட்டில் அமர்திருந்து அரைமணிநேரம் கழித்து  திரும்பினேன். கூட்டியதால் பரவிய புழுதி மறைந்து விட்டது. அவள் கதவை அடைத்து இருந்தாள்.. அவள் வீட்டில் வாடகைக்கு இருந்தவள் மட்டும் வாசல் படியில் அமர்ந்து ..அவள் மார்பகம் முழு அளவில் காட்டியபடி தன் குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தாள் ... நான் அதை பார்க்காமல் சென்றது என் குத்தமாம்

என் வீட்டு திண்ணையில் நான்  அமர்ந்த சிறிது நேரத்தில்  மார்பகம் தெரிய குழந்தைக்கு பால்  கொடுத்து கொண்டிருந்தவாள்.. தீ கொளுத்தி மகளை கூப்பிட்டாள்.

கதவை திறந்து வெளியே வந்த தீ கொளுத்தி மகள்... அணிந்திருந்த சாக்கெட்டின் பட்டன்களை அவிழ்த்து விட்டு கொளுத்து தொங்கிய மார்பகங்களை  காட்டியபடி..குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தவளின் அருகில் அமர்திருந்தாள். சிறிது நேரத்தில் யாரையோ திட்டுவது மாதரி என்னை திட்டினாள்...


அவன் அம்பள இல்லடி..பொண்டுகன்டி... பொட்டப்பயதாண்டி இப்பிடி இருப்பாங்கே.....என்று திட்டினாள்.... எனக்கு புரிஞ்சு போச்சு ரெண்டு சிரிக்கிகளும் ஏதோ பிளான் பன்னுறாள்கள் என்று தோன்றியவுடன் எழுந்து வீட்டுக்குள் வந்து படுத்து தூங்கிவிட்டேன்.


மறு நாள் காலை பத்து மணிக்கு மேல் என்னை தேடி போலீஸ்காரர் வந்தார். என் பெயரைச் சொல்லி கேட்டு ஊறுதிபடுத்திக் கொண்டு விபரத்தை சொன்னார். தீ கொளுத்தி மக பெயரைச் சொல்லி மேகலா என்பவளும் தனம் என்பவளும்  என் விட்டுப் பூனை அவள் வீட்டில் வைத்திருந்த சிக்கன் கறியை தின்று விட்டதாக என்மீது புகார் கொடுத்து இருக்கிறாள் விசாரணைக்கு ஸ்டேசன் வரச் சொன்னார்


வந்த காவலரிடம் .அய்யா நான் வீட்டில் பூனை வளர்க்கவில்லை. சிக்கன் கறியை திண்டதாக சொல்லப்படும் பூனை என் வீட்டுப் பூனை இல்லை.என்றபோது ஸ்டேசன் வந்து சொல் என்றார். அவருடன் ஸ்டேசனுக்கு சென்றபோது  ரைட்டரிடம் இரண்டு பெண்களும் என்னை சுட்டிகாட்டி அடுக்காக புகார் கூறினார். அவர்கள் இருவரும் கூறியதை கேட்டுவிட்டு என்னிடம் விசாரித்தார்.

பூனை அவர்கள் வீட்டு கறியை தின்றது பொய், என் வீட்டில் பூனையை வளர்க்கவில்லை. அந்த பூனை எனது பூனை இல்லை என்றேன். இருவரது பேச்சை கேட்டுவிட்டு எஸ்ஐ  இரவுதான் வருவார் இரவு ஏழு மணிக்குத்தன் வருவார் அப்போது வாங்கன்னு இருவரும் சண்டை போடக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவைத்தார்.

அடுத்து இரவு ஏழு மணிக்கு தொடரும்.......................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...