பக்கங்கள்

சனி 10 2015

முனைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் கருத்துக்கள்......

முனைவர்
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்



அம்பேத்கர் கருத்துக்கள்[தொகு]

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை…

நாய்கள்பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர்  பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? 

இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். 

யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.



வெள்ளி 09 2015

கண்ணாடி அணிவதன் ரகசியம்....



படம்-adaleru.wordpress.com
உள்ளத்தின் கதவுகள்
கண்கள் என்றார்கள்

அதனால்தான் உங்கள்
கண்களில் தெரியும்

ஏக்கத்தையும் சோகத்தையும்
மற்றவர்கள்  தெரிந்துவிட

கூடாதென்று   தானே
கண்ணாடிஅணிந்துள்ளீர்கள் .

-கேட்டார் ஒரு நண்பர்.

வியாழன் 08 2015

நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

படம்-மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் 




Prpc Milton Jimraj உடன் Jim Raj Milton
நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் (தமிழில்)

நமது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.

இவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.

நமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.

கருத்துரிமை அழிக்கப்பட்டதென்றால், அரசமைப்புச் சட்டமே அழிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என்றார் டாக்டர் அம்பேத்கர். உயர் நீதிமன்றங்களின் மாட்சிமை தங்கிய நீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜெர்மனியில் அதுதான் நடந்தது. இவர்கள் அரசமைப்பு குறித்து கொண்டிருக்கும் புரிதலின்மையையே இது காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையிலும் காந்தியின் படம் பெருமையுடன் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க டர்பன் நீதிமன்றத்தின் நீதிபதி, காந்தியிடம் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியபோது காந்தி அகற்ற மறுத்தாரே, அது நீதிமன்றத்தில் அவர் நிகழ்த்திய கலமில்லையா?

கிறித்தவ முறைப்படி அல்லாத திருமணங்கள் செல்லத்தக்கவையல்ல என்று தென்ஆப்பிரிக்க தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தனது மனைவியுடன் காந்தி கைது ஆனாரே அது ஏன்?

ஒரு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி கைது ஆனது தவறு என்றால், அவரது படத்தை நீதிமன்ற அறைகளிலிருந்து அகற்றி விடலாமே.

trichy-lawyers-meeting-banners-16ஒரு தீர்ப்பை விமரிசிப்பது என்ன வகையில் சட்ட விரோதமானது?

மதுரா வல்லுறவு வழக்கில் மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும்  விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படவில்லையா?

வல்லுறவு தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 376A சேர்க்கப்பட்டதே அந்த விமரிசனத்தின் விளைவுதான் என்பது உண்மையில்லையா?

திரு.ஏ.கே ராமசாமிக்கும், தர்மராஜுக்கும் எதிராக எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

பகத் சிங் செய்த தவறென்ன? தமிழகத்தின் நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அறைக்குள்ளே மவுனமான முறையில் கோரி நின்றது பாவச்செயலா?

நீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார்? வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா?

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் அவர் கண்ணீர் விட்டு அழவில்லையா? அப்போதெல்லாம் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லையே ஏன்?

வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த அவதூறுகள் அவசியமற்றவை. வேறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் காத்து நின்றவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

அனைத்திந்திய பார் கவுன்சில் சட்ட விரோதமான தற்காலிக நீக்கங்களில் அவசரம் அவசரமாக ஏன் ஈடுபடுகிறது?

நீதிபதிகளுக்குச் சளி பிடித்துக் கொண்டால், அனைத்திந்திய பார் கவுன்சில் எதற்காகத் தும்முகிறது?

– மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.லஜபதி ராய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்.
நன்றி : வினவு

புதன் 07 2015

கொலையாளிகளை தேடும் குற்றவாளிகள்....!!!


படம்-Vijayakumar R

படம்--Vijayakumar R








Vijayakumar R 10 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

ஜாதியா?... நீதியா?.. இந்தியாவில் எது பெரியது ? எது ஜெயிக்கும் எனக்கேட்டால்  ஜாதிதான் ஜெயிக்கும்

 
அதற்கான ஆயிரம் உதாரணங்களில்  விஷ்ணுப்பிரியா மரணம் ஒரு ஆதாரம்

முதலில் ஒரு படுகொலையைப் பார்ப்போம்.

காதலுக்காக தலித் என்பதற்காக மர்ம மரணமடைந்த இளவரசனுக்குப் பிறகு கோகுல்ராஜ் தலித் என்பதற்காக கழுத்தறுத்து படுகொலை மரணம்.


கோகுல்ராஜும் அந்த பெண்ணும் கோயிலில் பேசிக்கொண்டிருக்கும் போது யுவராஜ் தலைமையில் நாலைந்து பேர் அவர்களை விசாரிக்கின்றனர் .கோகுல்ராஜ் தலித் என்பதை அறிந்ததும் அவரை மட்டும் தூக்கிக் கொண்டுபோய் 2நாள் சித்ரவதைக்குப் பிறகு கழுத்தையறுத்து
தண்டவாளத்தில் போட்டுவிடுகின்றனர்


இதைச் செய்தது யுவராஜ் நடத்தும் கொங்கு இளைஞர் பேரவை என்ற கவுண்ட ஜாதி வெறிநாய்கள் நடத்தும் சங்கம்.

இவனுக்குத் தொழிலே கவுண்டஜாதி பெண்களை மற்ற ஜாதியினர் குறிப்பாக தலித்துகள் காதலிப்பதை தடுப்பதுதான் வேலையாம்.

இது இந்த சம்பவத்தின் ஒருபகுதி.

அடுத்த பாதி, இந்த வழக்கு விஷ்ணுப்பிரியாவிடம் ஒப்படைக்கப் படுகிறது.

அந்த வழக்கின் நெருக்கடி தாங்க முடியாமல் நேர்மையான அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது பரவலான செய்தி.

ஆனால், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கொலையா, தற்கொலையா என்று ஆராய்ந்தால் கொலை என்று முடிவுக்கு வரத்தான் 70%வாய்ப்புள்ளது.


தற்கொலைக்கான வாய்ப்புக்கான காரணம் வலுவிழந்து கொண்டே வருகிறது.

சம்பவத்தை மறுபடியும் தொகுத்துப் பார்ப்போம், 1.30மணிக்கு டிரைவரோடு 5மணிக்கு வரவும் மீட்டிங் இருக்கிறது என்கிறார்.அதையே வேலைக்கார பெண்ணிடமும் சொல்லியிருக்கிறார்


5மணிக்கு ஓட்டுனரும், பணிப்பெண்ணும் வந்ததும் தூக்கில் தொங்குவதைப் பார்த்து பக்கத்திலுள்ள அதிகாரிகளிடம் சொல்கின்றனர்.

அதாவது அவரது வீடு காவலர் காலனிக்குள்ளே காவல் நிலைத்துக்கு அருகிலே உள்ளது.

ஓடிவந்த போலீசார் உடனே கதவைத் திறக்கவில்லை, வீடியோ, பத்திரிக்கையாளர், சாட்சிகள், எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொண்டே திறந்தனர் இதெல்லாம் மின்னல் வேகத்தில் தயாரானது

உடைப்பதற்கு சற்று முன் ஒரு போலீஸ் உள்ளே கடிதம் இருக்கும் அதில் ஏதாவது காரணம் எழுதி வைத்திருக்கும் என கூறியுள்ளார்.உள்ளே நுழைந்ததும் லேப்டாப், மொபைல் போன், கடிதத்தை போலீஸ் கைப்பற்றுகிறது.


இவர் 5.6அடி, அறையில் உள்ள ஒரே ஸ்டூல் 1.5அடி. தூக்கு மாட்டிக் கொண்ட சீலிங் உயரமோ 11அடி. 1.5மின்விசிறி என்றாலும் மீதி உயரம் இடிக்கிறது.

த்ருஷ்யம் படத்திலும் அதன் தமிழ் பாபநாசம் படத்திலும் ஒரு வசனம் வரும். "அவன் எல்லாத்தையுமே சரியாக வைத்திருக்கிறான்.அதுதான் சந்தேகமா இருக்கு"என்பார் அந்த போலீஸ் அதிகாரி.


அதே சந்தேகம்தான் நமக்கும்

தூக்கில் தொங்குவதை அறிந்ததும் ஒருவேளை உயிரிருக்க வாய்ப்புள்ளதென கதவைத்தான் முதலில் உடைப்பார்கள். ஆனால்,போலீஸோ நில்லுநில்லு எனசொல்லிவிட்டு கேமரா,நிருபர்,சாட்சிகளை வைத்து உடைத்ததும் அதன் பிறகு வேகமாக போஸ்ட் மார்டம் செய்து அவசர அவசரமாக அடக்கம் செய்யும்வரை போலீசின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே நிஜ ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்தான்.


அதன்பிறகு மீண்டும் ஜெயா போலீசு ஏவள்நாயாக மாறிவிட்டது.

அவரது தோழி மகேஸ்வரி  எவ்வளவுதான் நாங்க ஓடுறது ஒரு டீகூட வாங்கிக்குடிக்காதவள் அவள், நேர்மையா இருக்கக்கூடாதா? என்று டிவியில் கதறி அழுதார்.



நமது சந்தேகத்துக்கு இதுமட்டும் காரணமல்ல. தற்கொலை செய்து கொண்டவர்களை கவனித்தால் தெரியும்.2,3நாட்கள் அல்லது 1வாரமாவது யாருடனும் அதிகம் பேசமாட்டார்கள், தனிமையிலிருப்பார்கள், பேசுவதாக இருந்தால் எரிந்து எரிந்து விழுவார்கள்.

இந்த அறிகுறி ஒன்றும் விஷ்ணுப்பிரியாவிடம் இல்லை.1மணிவரைஒரு குடும்பப் பிரச்சனையை சமாதானமாகப் போகச் சொல்லி அறிவுரை கூறியுள்ளார்.


ஓட்டுனரிடம் SP ஆபிசில் மீட்டிங் 5மணிக்கு வரச் சொல்கிறார்.பணிப்பெண்ணிடம் 5மணிக்கு வரச் சொல்கிறார். 2மணிக்கு மதுரை வழக்கறிஞரிடம் பேசியுள்ளார்


அடுத்த 3மணி நேரத்துக்குள் தூக்கில் தொங்கியநிலை.அதுமட்டுமல்ல கடிதத்தில் சில பக்கங்களை போலீஸ் ஒளித்து வைத்துக் கொண்டு குட்டு வெளிப்பட்டதும் திருப்பித் தந்துள்ளனர்


அவரது குடும்பத்தினர் தற்கொலை என்பதை முற்றிலும் மறுக்கின்றனர்.லேப்டாப்,மொபைல் போன் ஆதாரத்தை போலீஸ் அழிக்க வாய்ப்புள்ளது என்றும் சிபிஐவிசாரணை வேண்டும்

தமிழக போலீஸ்மீது நம்பிக்கையில்லை என்கின்றனர். இதுதான் அவர் வேலை பார்த்த போலீசின் லட்சணம். இன்னும் கேள்விகள் மிச்சமிருக்கிறது.


போலீஸ் இதை தற்கொலையாக சித்தரிக்க அதீத ஆர்வம், பதட்டம் காட்டுகிறது, அவர் காதல் தோல்வியில் இறந்திருக்கலாம்,அவர் ஒரு கோழை, மன உளைச்சலில் இருந்தார் என ஊடகங்களில் கட்டுகதை திட்டமிட்டுப் பரப்பப் படுகிறது.

மதுரை வக்கீல் மாளவியா, அவருக்கு காதலர் இருந்தார் என சொல்லச் சொல்லி நிர்பந்தப் படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்.

கொலைக்கானக் காரணத்தை மகேஸ்வரியிடம் சொல்லிருக்கலாம்

அதனால்தான் அவரது போன் வண்டியிலே காணாமல் போய்விடுகிறது. அதை வழக்காக பதிவு செய்தும் போலீஸ் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை.

ஒரு அர்ச்சகரைக் காதலித்தார் என்று ஒரு கதாபாத்திரத்தை படைத்தனர் அவரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை, அவர்யார், அது நட்பா,காதலா? அவரது புகைப்படமெங்கே? பதிலில்லை.

அவரது முகத்திலுள்ள காயத்துக்கு பதிலென்ன?
அவருக்கு பயிற்சியளித்த அதிகாரி, அவர் மிகத் துணிச்சலானவர், எல்லா விசயத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமுடையவர் பயிற்சியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றவர் என்கிறார். அவர் கோழை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

யுவராஜை பிடிக்கவிடாமல் நெருக்கடி கொடுத்ததுதான் அவரது 'தற்கொலைக்கு' காரணம் என ஒரு தரப்பு கூறிவந்தது.

ஆனால், யுவராஜோ என்னைப் பிடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்ததால் அவர் 'தற்கொலை'செய்திருக்கலாம் அதற்கு SP செந்தில் குமார் மற்றும் சில உயரதிகாரிகள் பெயரைச் சொல்கிறான்.


ஒருவேளை மேலதிகாரிகளின் நெருக்கடியில் தற்கொலை செய்ததாக ஒப்புக் கொண்டாலும் அது கொலையாகத்தான் கருத முடியும்

ஒருவேளையாக கொலையாக இருந்தாலும் காரணங்கள் வேறாக இருக்கப் போவதில்லை.

சரி,கொலைக்கான காரணமென்ன?


கொல்லப்பட்டது தலித் கோகுல் கொன்றது கவுண்ட ஜாதிவெறியன்.


அதில் போலீஸ் உயரதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்தாகத் தெரிகிறது ஒரு குழு யுவராஜை பாதுகாத்துக் கொண்டே, என்ன இன்னும் கண்டு பிடிக்கலையா, நீயெல்லாம் வேஸ்ட்,

நீ இந்த வேலைக்கு சரிப்பட மாட்ட சீக்கிரம் கண்டுபிடி கண்டுபிடி என்று சொல்லிக் கொண்டே யுவராஜுக்கும் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கும்பல்


அடுத்தபிரிவு, இவர் தலித் என்பதாலும் 27வயதிலேயே முதல் கிரேடில் தேறி வந்ததாலும் அவர் பெண் என்பதாலும் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த கும்பலுக்கு யுவராஜைவிட இவர்தான் அவர்களுக்கு தொல்லையாக இருந்துள்ளார்.


தலித், அதுவும் ஒரு பெண் ADSP யாக இருப்பதா என்ற ஜாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் சேர்ந்து இவரை சூட்சுமமாக வேட்டையாடியுள்ளனர்.

இந்த கும்பலும் கேட்டது அதே கேள்வியைத்தான், யுவராஜை உன்னால் பிடிக்க முடியுமா,முடியாதா?
என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்


அதற்கு மேல் ஒரு பிரச்சனை அவர் 
"டீ கூட வாங்கிக் குடிக்காத" நேர்மையாளராக இருந்துள்ளார்.


முதலாளிக்கும் அரசியல்வாதிக்கும் ஏவல்நாயாக இருப்பதுதான் போலீஸ் வேலை, அதில் நேர்மையாக இருப்பது தேவையில்லாத தகுதி, அப்படியிருந்தால் அவருக்கு இதுதான் முடிவாக இருக்கும்.
இது அனுமானமல்ல இதற்கும் ஆதாரமுள்ளது. இவருக்கு உயரதிகாரியாக இருப்பவர் இவரை, யுவராஜ் கர்நாடகாவில் இருக்கிறான்,கோவாவில் இருக்கிறான் என பல நாட்கள் சும்மா அலைய விட்டுள்ளார், 

தினமும் யுவராஜ் கேசை முடிக்க முடியுமா, முடியாதா என தொல்லை கொடுத்துள்ளார்.


யுவராஜுக்கு தகவல் கொடுத்துக் கொண்டு அவரைப் பாதுகாக்கும்  அதிகாரிகளாலும் இவருக்கு தோல்வி.

ஜாதிவெறி,ஆணாதிக்கவெறி பிடித்த அதிககாரிகளலாலும் இவருக்கு தோல்வி. பொதுவாக ஒரு ADSPக்கு 6,7 காவல் நிலையம்தான் தருவார்கள்.ஆனால், புதிதாக பணிக்குவந்த 27வயதான இளம் அதிகாரியான இவருக்கு 11காவல் நிலைய பொறுப்பைக் கொடுத்துள்ளனர்

அதற்கிடையில் யுவராஜ் வழக்கு விசாரணை.

மேலும் தமிழ்நாட்டில் பெரும் முதலாளிகள் உள்ள கவுண்ட ஜாதியில் அதுவும் அந்த பகுதியில் கள்ள நோட்டு, ஸ்பிரிட் கடத்தல், தங்கம், செம்மர கடத்தல் மாபியாக்கள் அதிகம் புழங்குமிடம் 
இவரது 11காவல்துறை சரகப் பகுதியில் அப்படிப்பட்ட MLA,MPகள், அவரால் லாபமடையும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு இவரால் ஏதாவது ஒரு நெருக்கடி இருந்திருக்கலாம்
அல்லது மிகப்பெரிய உண்மையை கண்டறிந்திருக்கலாம்.


யுவராஜுக்கு காவல்துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து தகவல் அனுப்பிக்கொண்டுள்ளனர்.

இந்த நிமிடம்வரை அவர் தப்பித்திருப்பது போலீஸ் உதவியால்தான்.

இதில், யுவராஜ் SPக்கு அனுப்பிய கடிதத்தில் எனக்கு கொலையில் சம்மந்தமில்லை என்கிறான்


இந்த வழக்கில் அரசியல் புகுந்துவிட்டது என்கிறான்.

விஷ்ணுபிரியாவிடம், மேடம் இது என் நம்பர்தான், உங்க துறையில் எல்லோரிடமும் எனது நம்பர் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா என்கிறான்.நீங்க இதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறான்.

விஷ்ணுப்பிரியாவுடன் இருப்பவர்களே அவனுக்கு தொடர்ந்து தகவல் அனுப்புகின்றனர்.விஷ்ணுப்பிரியாவுக்கு யுவராஜைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.ஆனால்,யுவராஜுக்கு இவர் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்திருக்கிறது அதை அவன் அவரிமே சொல்கிறான்.இப்படி ஜாதிவெறி மதவெறி, ஆணாதிக்கத்தால், ஊழலால், நாறிக்கிடக்கிறது ஏவள் துறை.


ஏதாவது நல்லது செய்யலாமென அப்பாவித்தனமாக போலீஸ் துறைக்கு வருவோருக்கு பைத்தியப்பட்டமோ, இளிச்சவாயன் பட்டமோ,கொலையோ, தற்கொலையோ, இடமாறுதலோ, பணியிடை நீக்கமோ தயாராகக் காத்திருக்கிறது.


தலித் கோயிலுக்குள் நுழையமுடியாது தலித் படிக்கக்கூடாது, செருப்புப் போடக் கூடாது, ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போடக்கூடாது, பூசாரியாக முடியாது

காதலிக்கக் கூடாது, இடஒதுக்கீடு கேட்கக்கூடாது, என்ற வரிசையில் விஷ்ணுப்பிரியாவைப் போல் மிக இளம்வயதில் தலித் பெண் உயர்பதவிக்கு வரக்கூடாது போலும் நெருக்கடியால் தற்கொலையோ கொலையோ விஷ்ணுப்பிரியா சாவுக்கு காரணம் ஜாதிவெறி, ஆணாதிக்கம், 'நேர்மை' தான் காரணமாக இருக்க வேண்டும்.

அதை செயல்படுத்தியவர்கள் யாரார் என்பதை கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் விசாரிப்பதே குற்றவாளிகள்தானே.

செவ்வாய் 06 2015

“மரியா”...காமத்தின் புதிய தேவதை...


puka6_sex_oct_15_wrapper
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு

லகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015




திங்கள் 05 2015

மக்களும் விசித்தரமான இந்த நேரலையை பார்த்து கொண்டுதான் இருந்தார்கள்.

படம்-1

படம்-2







Govi Lenin 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.


பொதுமக்கள் இதுவரை பார்த்த நீதிமன்றக் ‘காட்சி’களில் வக்கீல்களின் வாதத்தில் அனல் பறக்கும். குற்றவாளியின் ஃப்ளாஷ்பேக் மனதை உருக்கும். சாட்சி சொல்பவரின் வார்த்தைகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும். 

நீதிபதி என்பவர் ‘யெஸ்..புரசீட்., கோர்ட் இஸ் அட்ஜர்ன்ட், ஆகவே, இ.பி.கோ செக் ஷன்படி தீர்ப்பளிக்கிறேன்’ என ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவராகக் காட்டப்பட்டு வந்தார். 

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பானபோதுதான், இத்தனை காலம் கண்ட காட்சிகளுக்கு நேர்மாறாக நீதிபதிகள் அதிக நேரம் பேசுபவர்களாகவும், வக்கீல்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரு சில வார்த்தைகளை வெளிப்படுத்தவே தயங்கக்கூடியவர்களாகவும் தெரிந்தனர்


. இரண்டு நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு் ஒருமித்த முடிவு ஏற்படாமல், தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான் திருப்பங்கள் நிறைந்த க்ளைமாக்ஸாக அமைந்தது. 


# நீதிமன்றம் மட்டுமல்ல, மக்களும் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.







                                                                 மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன் 


Shaji Chellan Lawyer
மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன் 
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. வன்னியர் ஜாதிக்கு நீதித் துறையில் அதிக ஒதுக்கீடு கேட்டுப் போராட என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். 


நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான் அடக்கம். 

இதில் யோக்கியர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அயோக்கியர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றேன்."

ஞாயிறு 04 2015

ஊத்திக் கொடுத்த உத்தமி - பாடல்..


ருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்
(ஊருக்கு ஊரு சாராயம்…)
இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா
(ஊருக்கு ஊரு சாராயம்…)
படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்
(சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான்
ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)
ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா
(ஊருக்கு ஊரு சாராயம்..)
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு
இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு
(ஊருக்கு ஊரு சாராயம்..)
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம்
போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்.





வினவு ஃபேஸ்புக் பக்க வீடியோ



"சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான், ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்" - மக்கள் அதிகாரம் வழங்கும் ம.க.இ.க.-வின் புதிய பாடல்





மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு
வீடியோ தயாரிப்பு : வினவு



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...